கலையின் சக்தி
(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அன்று மறுத்தாயே! இன்று எனது மனைவியும் ஒரு குழந்தை யின் தாயுமாய் விட்டாய் பார்த்தாயா? வெற்றி பெற்றது யார்? நீயா நானா?” என்று திரை மறை விலிருந்து தனேஸ்வரன் தாழ்ந்த சூரலில் கூறுவதுபோன்று அவளுக்குக் கேட்டது.
“இன்று இரவு சில இறுதி வேலைகள். பின்பு படம் உருப்பெற்றுவிடும்; உயிர்பெற்றுவிடும்.” இவ்வாறு கூறியவண்ணம் தனேஸ்வரன் படத்தை நன்றாகப் பார்க்கிறான். தனது கரங்களில் படத்தை ஏந்திக்கொண்டு தனது கண் இமைகளை அங்குமிங்குமாகச் செலுத்தி படத்தைப் பார்த்து ஆனந்திக்கிறான். இவ்வளவு அழகு பொருந்தியதொரு உருவத்தைத் தீட்டிய தனது பொற்கைகளைப் பார்த்துப் பார்த்து இன்புற்றான். பின் வர்ணக் கோலை எடுத்துப் படத்திலுள்ள பாவையின் ஒரு கண்ணைத் திறந்தான். “ஆஹா! என்ன அழகான கண்? ஏனம்மா ஒரு கண்ணை அடைத்துக் கொண்டு மறு கண்ணால் பார்க்கிறாய்? இரண்டு கண்களையும் காட்டி விட்டால் உன்னிடம் நான் மயங்கிவிடுவேன் என்று நினைக்கிறீயோ! அதெல்லாம் நம்மிடத்தில் முடியாது’ என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே மற்றொரு கண்ணைத் திறந்தான். உயிர் வந்துவிட்டது! அழகுத் தெய்வம்தான். அமைதி கலந்த நகையொன்று தனேஸ்வரனின் வதனத்தில் தோன்றி மறைந்தது.
தனேஸ்வரன் திருச்சினாப்பள்ளியில் வாழ்ந்து வந்த பிரபல ஓவியக் கலைஞன், அவன் விரும்பும் அழகு அவ்வூரிலுள்ள பெண்களிடமில்லையென்பது அவனது கருத்து. ஆகவே புதுப்புது அழகு அப் படத்தில்தான் இருக்கிறதென்று எண்ணி மகிழ்வதில் அவனுக்கு ஒரு தனி ஆசை, புற அழகில் மயங்கும் இக்கலைஞன் அழிவற்ற ஆத்ம கமலத்தினின்றெழும் நறுமணத் தென்றல்கள் புது புது அழகைக்கொடுக் கும் தன்மையனவென்பதை அறியான்.
மேற்கூறிய படத்தை வரைந்து முடிக்க நெடு நேரம் ஆய்விட்டதால், தனேஸ்வரன் நடுநிசி தாண்டி படுக்கைக்குச் சென்றான். ஆகவே, காலையில் தபால் காரன் ஜன்னலின் வழியாக அறைக்குள் ஒரு கடி தத்தை போட்டதையும்கூட அவன் கண்டு கொள்ள வில்லை. கொஞ்ச நேரம் கழித்து விழித்ததும் கடி தத்தைக் கண்டு கொண்டான். அதைக் கையிலெடுத் துப்பார்த்ததில் அது இரண்டு நாட்களுக்குப் பின்பு அவ்வூரில் நடைபெறப்போகும் மாதர் மகாநாட்டிற் கும் அதற்குமுன் நடைபெறவிருக்கும் தேநீர் விருந் துக்குமான அழைப்பிதழ்களென்பதை அறிந்தான்.
குறித்த நாள் சுமார் 4 மணிக்கு மகாநாடு மண் டபத்தை அடைந்தான் தனேஸ்வரன். வரவேற்புக் கமிற்றித் தலைவியான லீலாவதி வணக்கம்கூறி அவனை வரவேற்றாள். அவ்வூர் பெண்களைப் பற்றிய அவனது கருத்து உலகப் பிரசித்தமென்றாலும் கலை ஞன் என்ற நிலையில் எல்லோருக்கும் அவன்மேல் ஒரு தனி மதிப்பு. தேநீர் மண்டபத்தில் ஒரு தனி யிடத்தில் உட்கார்ந்திருந்தான் தனேஸ்வரன். அம் மண்டபத்தில் கூடிய பெண்கள்கூட்டம், சிறப்பாக மணமாகாத பெண்களெல்லாம் தனேஸ்வரனைப் பார்ப் பதும் தங்களுக்குள்ளே ஏதேதோ பேசிக்கொள்வ துமாகக் காணப்பட்டனர். அவர்கள் என்னதுதான் பேசுவார்களென்பது தனேஸ்வரனுக்கு நன்றாகத் தெரியும்.
தேநீர் விருந்திற்கான நேரம் வந்துவிட்டது. தேநீர் விருந்துக் கமிற்றி அங்கத்தினர்கள் பதார்த் தங்களை விளம்ப ஆரம்பித்து விட்டனர். கிளாஸில் காப்பியை ஊற்றின கமலா கலைஞனைக் கடைக் கண்ணால் பார்த்ததினால் கிளாஸ் நிறைந்து மறிந் தும் பாய்ந்துவிட்டது காப்பி. பண்டங்களைப் பார்த் துக்கொண்டே தின்று கொண்டிருந்த தனேஸ்வரன் முகத்தில் மேஜையிலிருந்து இரண்டு மூன்று துளி கள் தெறித்தன. திடீரென்று நிமிர்த்து பார்த்தான். கமலா சிரித்துக்கொண்டே அடுத்த மேஜைக்குச் சென்று விட்டள். ‘மௌனமாக இருந்தாலும் சனியன்கள் விடுவதில்லை” என்று தனேஸ்வரன் தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்.
சிற்றுண்டி தீர்ந்ததும் எல்லோரும் மண்டபத் தில் போய்க் குழுமினர். நிகழ்ச்சி நிரலில் முதலில் சங்கீதமென்று இடப்பட்டிருந்தது. தமிழ் நாட்டுக் குயில் குஞ்சிதத்தின் பாட்டு என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனால் பெண்கள் மத்தியில் ஒரு பர பரப்பு, முகவாட்டம். பக்க மேளங்களெல்லாம் தயாராய் விட்டன. குஞ்சிதம் வரவில்லை. அவளிடமி ருந்து ஒரு தந்தி மட்டுமே கிடைத்தது. “கமலா! குஞ்சிதம் வரவில்லை. முதல் நிகழ்ச்சி இல்லாது போனால் முற்றும் கோணலாய் விடும். நீதான் அதை நிறைவேற்றவேண்டும்” என்று லீலாவதி கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். ”பாடுவதற்குத் தயாராகவில்லை” என்று கமலா மறுக்கத் தொடங்கியும் ஒருவரும் அவளை விடவில்லை.
“கழுதை! ஆளில் அழகு. இப்பொழுது சங்கீத மும்கூடவா கர்ணகடூரம்” என்று தனக்குள்ளே கூறிக்கொண்டு இழிநகையொன்று புரிந்தான் தனேஸ் வரன். சபையில் எங்கும் நிசப்தம். ‘உலகிலுள்ளவ ரில் உத்தமப் பெண்மணியார்” என்ற பாடலை ஹம் சத்துவனி ராகத்தில் பாடினாள். குயிலினுமினிய அவளது குரலொலி அலை அலையாக ஆகாயத்தில் பிரயாணம் செய்து தனேஸ்வரனின் இதயகமலத்தை யடைந்து அதை அங்குமிங்குமாக அசைத்தது. வெளியே உள்ள ஒரு பூந்தோட்டத்தின் எழிலை ஜன்னல் வழியாகக் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்த தனேன்வரனின் முகம் சற்று திரும்ப ஆரம்பித் தது. பெண்டிரும் ஆடவரும் பாட்டின் இனிமையைச் சுவைத்துச் சுவைத்து இன்புற்றனர். சங்கீதத் தில் ஆழ்ந்த தனேஸ்வரன் தன்னையே மறந்து கீதத் தில் ஒன்றுபடும் நிலையை அடைந்துவிட்டான். சங் கீத சாகரத்தில் பொங்கியெழுந்த அமுதத்தினுடைய சுவையில் சொக்கிய தனேஸ்வரன் கண்களைத்திறந்து கமலாவின் கமல வதனத்தைக் கண்டான். அவளது முகத்தில் ஒரு சோபை!
இகயத்திலிருந்து எழுந்த ஒலி ஒளியாக மாறி அருள்நிறைந்த அவளது முகத்தை இன்னும் சோபிக் கச் செய்தது. அவள் தெய்விக ஒளிபெற்றிலங்கி ஓவியத்தில் எழுதவொண்ணா உருப்பெற்றுத் தோன் றுவதாக உணர்ந்தான் தனேஸ்வரன். கமலா அவ னது இதயத்தில் புகுந்து விட்டாள்; அவளிடம் தன்னை ஏதோ ஒரு சக்தி இழுத்துச் செல்லுவதாக அவன் உணர்ந்தான்.
வரவேற்புப் பிரசங்கம், மற்று சொற்பொழி வுகள், கரகோஷம் இதெல்லாம் தனேஸ்வரன் காதில் நுழையவில்லை. எல்லோரும் பேசப்படும் விஷயங் களை மௌனமாக இருந்து கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். வெளியே நல்ல இருள். “ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானம்” என்னும் பொருள் பற்றிப் பேசும் பண்டிதை தனலக்ஷிமி அம்மாளின் பிரசங்கமே கடைசிப் பிரசங்கம். ஆகையால் நன்றி கூறும்போது தலைவர், சொற்பொழிவாளர்கள் முதலியோருக்கு சூட்டவேண்டிய பூமாலைகளை எடுத் துவர கமலா அடுத்த கட்டிடத்திற்குச் சென்றதைத் தனேஸ்வரன் கண்டான். உடனே வெளிக் கிளம்பி னான். மாலையை எடுத்துக்கொண்டு வெளிக்கதவைப் பூட்டினாள் கமலா. பூட்டி விட்டுத் திரும்பியதும் அவள் முன் நின்றான் தனேஸ்வரன். கமலா தலை குனிந்து மலர்களைப் பார்த்தவண்ணமே நின்றுவிட் டாள். “கமலா என்னை நீ மன்னிக்கவேண்டும்’ அது வும் பெண்ணுலகச் சார்பில் மன்னிக்கவும். அழகு, பற்றி நான் கொண்ட கருத்துக்கள் அர்த்தமற்றவை என அறிந்து கொண்டேன். அழகு தெய்வீகமா னது. உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் உனது சங் கீதக் கலை அதை அறிவித்துவிட்டது. எனது இத யத்தில் புகுந்து விட்டாய்! உன்னையே காதலிக்கி றேன்.” “ஐயோ! நேரமாய்விட்டதே! ஐயோ நான் என்ன செய்வேன்!’ என்று சற்று உரப்பாகச் சொன் னாள். ”ஒன்றும் செய்யவேண்டாம். சப்தமிடாதே. யாராவது வந்துவிடுவார்கள்” என்று கூறி தனேஸ் வரன் ஆட்கள் வருகிறார்களா என்று அங்குமிங்கும் பார்க்க, கமலா புள்ளிமானைப்போல் துள்ளி மறைந்து விட்டாள். மங்களமாக மகாநாடு முற்றுப்பெற்றது.
மறுநாள் காலையில் ஒரு பையன் கமலாவிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து மறைந்தான். திறந்தாள் கடிதத்தை.
சரஸ்வதி நிலையம்,
8-10-1941.
எனது அன்பின் கனியே!
புறத்தோற்றமட்டும் அழகை அமைப்பதற்குப் போதாது. அகத் தூய்மையும், கலா ஞானமும், அழ குக்கு இன்றியமையாதது எனக் கண்டுகொள்ளத் துணையாயிருந்த உனக்கு பெரும் கடமைப்பட்டுள் ளேன். இனி நான் கலா ஞானமும், ஆத்மீக ஒளியும் காட்டும் சித்திரங்கள் பல தீட்டித் தருவேன். அப் பணி நடைபெறவேண்டுமானால் கலைமணம் பெற்ற உனது இதய கமலம் எனது உள்ளத் தடத்தினில் மலரவேண்டும். அன்று இரவில் நான் கேட்டதற்குப் பதில் கூறவேண்டும். மறுத்தால் என்ன நேருமென்று அறியேன், உனது காதலைப் பெற்றால் உலகம் உயர்ந்த ஓவியத் திரவியத்தை என்னிடமிருந்து பெறும்.
‘மனம் தெளிந்த தனேஸ்வரன்’
“நேற்று வரையிலும் பெண்களை மதியாது பேசித் திரிந்த பேர்வழிக்கு இன்று புத்தி உதயமாம்! காதலாம், கலாஞானமாம். சீ! இவனுடைய அன்பின் ஆழம் எவ்வளவுதான் இருக்கமுடியும்! இவனுடைய பேச்சை பெண்ணுலகம் கேட்டால் நகைக்கும். காப்பி கிளாஸில் விட்டுக்கொண்டே நான் பார்த்தபோது அவன்……சீ! வேண்டாம்.
கோபத்தோடு கமலா மேஜையில் உள்ள புத்தகங்களை அங்குமிங்கும் புரட்டி கடைசியில் பவுண்டன் பேனாவைக்கண்டு பிடித்தாள். ஒரு பழைய நோட் புக்கிலிருந்து ஒரு தாளைக்கீறி இவ்வாறு எழுதத் தொடங்கினாள்.
“நண்பர் தனேஸ்வரன் அவர்களுக்கு நமஸ்கா ரம். உமது கருத்தில் ஏற்பட்டிருப்பதாக நீர் கூறும் மாற்றத்தைக் கண்டு பெண்ணுலகம் நகைக்கிறது. இவ்வளவோடு விஷயம் முற்றிற்று.”
கமலா.
கவரிலுள்ள மேல்விலாஸ எழுத்துக்களை ஏற இறங்கப் பார்த்து ஆனந்தித்தான் தனேஸ்வரன். அவ்வெழுத்துக்களை எழுதிய பொற்கைகளைப் போற் றினான். பதில் சாதகமாக இருக்க வேண்டுமென்று கடவுளைத் தியானித்துக்கொண்டே கவரைக் கிழித் தான். ‘நண்பர்’ ஆஹா! அது சரிதான். அடுத்தபடி தானே காதலர். ‘விஷயம் முற்றிற்று! அப்படியா! பின் எனது வாழ்வும் முற்றிற்று”
எழுத்தைக்கீறிஎறிந்தான். மேல் செய்யவேண்டிய தைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்கலானான். யுத்தகாலமென் பதைக்கூட கவனியாது திருச்சினாப்பள்ளியை விட்டு சென்னைக்குப் போய் விடுவதென்று தனேஸ்வரன் தீர்மானித்தான்.
சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள ஒரு ஹோட் டலின் தட்டிலுள்ள நாலாம் நம்பர் அறை. அவ் வறையில் சரஸ்வதி நிலையம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது ஒரு தடவையாவது கமலாவின் உருவமும், அவள் அன்று பாடிய கீதமும் அவன் மனதில் தோன்றி மறையாத நாளே கிடையாது. அவளைப் பற்றிய நினைவு வேகமாய்த் தாக்கும் மாலை நேரத்தில் எட்டு மணி வரையிலாவது கடற்கரையில் இருக்கலாமென் றால் யுத்த காரணமாக எங்கும் விளக்கணைப்பு. ஆட் கள் நடமாட்டமில்லை. இருள் வந்துவிட்டால் ரோட் டில் நடந்து செல்லுவதே அபாயகரமானதாய் விட் டது. ஆகவே அவனது உள்ளத்தை உடைக்கும் அச்சிந்தனை கூடியதேதவிர அதனைத் தணிக்க வழி யொன்றும் கிடைக்கவில்லை.
தனேஸ்வரன் சென்னைக்கு வந்து ஆறுமாதங் களாய்விட்டன. வெளியே செல்லுவதை அநேகமாய் நிறுத்திவிட்டு சில நாட்களாகத் தனேஸ்வரன் இரண்டு சித்திரங்களைத் தீட்டுவதில் பெரும் கவனமெடுத்து உழைத்துவந்தான்.
சித்திரங்கள் முற்றுப்பெற்ற அந்நாள் ஒரு நந்நாளாகவே தனேஸ்வரனுக்குத் தோன்றியது. அப் படங்கள் கவலைகொண்ட அவனது மனத்திற்கு மன அமைதியையும, திருப்தியையும் அளித்தன. ஒரு படத்தை மார்போடு அணைத்து மகிழும் போது கணவன் என்ற உணர்ச்சி பொங்கியது; மற்றொரு படத்தை அணைத்து மகிழும்போது தந்தை என்ற உணர்ச்சி ததும்பியது. அடைதற்கரிய இன்பத்தை அடைந்து விட்டதாக எண்ணி சாந்தியடைந்தான். ‘விஷயம் முற்றிற்று’ எனக் கூறிக்கொண்டு வெளியே புறப்பட்டான் இரவில்.
இருள் நீங்கி இரவி தோன்றிவிட்டது. காலை தினசரிப் பத்திரிகைகள் வெளிவந்துவிட்டன. அதில் ஒரு முக்கியமான செய்தி. இரவில் மவுண்ட் ரோடு வழியாக சென்றுகொண்டிருந்த தனேஸ்வரன் என்ற பிரபல ஓவியக் கலைஞர் மோட்டார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். அவர் அணிந்திருந்த கண் ணாடியின் சில்கள் நொறுங்கியதன் காரணமாக அவ ரது கண்களுக்குப் பெரும் அபாயம் நேரிட்டிருக் கிறது. அவர் ஜெனரல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்பது செய்தியின் சுருக்கம்.
இப்பொழுது கமலா எங்கிருக்கிறாள்? தனேஸ் வரனது கலாஞானத்தில் வியப்பும் மதிப்பும்கொண்ட கமலாவுக்கு அவனது மறைவு மன அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது. கலைஞன் ஒருவனின் வாழ்க்கை யைத் தொலைத்த கமலாவுக்கு வாழ்க்கையில் வெறுப் புத் தோன்றிவிட்டது. கலை பிரேமையால் காதல் உணர்ச்சிபெற்ற தனேஸ்வரனின் மனம் தூய்மையு டையதென்ற எண்ணம் அவளைப் புண்படுத்தியது. அவள் உள்ளம் உடைந்தவளாய் இருந்த நிலையில் ஒரு நாள் பத்திரிகையில் யுத்த சேவையில் மருத்துவ சிகில் சைப் பகுதிக்கு நர்ஸ்கள் அவசியமென்ற பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பம் அனுப்பினாள். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதால் இது சமயத்தில் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் கமலா நர்ஸ் பயிற் சியைப் பூர்த்தி செய்திருக்கிறாள்.
தனேஸ்வரன் ஒரு பிரபல ஓவியக் கலைஞன் என்பதை ஆஸ்பத்திரி அதிகாரிகள் அறிந்திருந்த தால் அவனுக்கு ஒரு தனி அறைகொடுத்து நல்ல முறையில் மருத்துவ சிகில்சை கொடுத்து வந்தனர்.
காலையில் கிடைக்கும் தினசரிப் பத்திரிகையின் தலைப்புகளையும் செய்திச் சுருக்கத்தையும் கிடைத்த வுடன் பார்த்துவிடுவது கமலாவின் வழக்கம். மாலை யில் செய்தி முழுமையும் படித்துவிடுவாள். அன்று வெளியான தனேஸ்வரனைப் பற்றிய திடுக்கிடும் செய் திகேட்டு மனம் கலங்கினாள். மாதர் மகாநாட்டன்று அவனது கருத்துக் கிசைந்திருந்தால் இப்பரிதாப நிலை அவனுக்கு ஏற்பட்டிருக்குமாவென்பதை எண் ணியதும் அவள் மனமுடைந்தது. உடையை மாற்றி விட்டு விரைந்து சென்றாள் கமலா. ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு. நகரத்திலுள்ள கலைஞர்களும் கலைரசிகர்களும் கூட்டம் கூட்டமாக வந்து தனேஸ் வரனைப் பார்த்துச் சென்றனர். மிஸ் எல்ஸி யென்ற ஆங்கிலோ – இந்திய நார்ஸிடமிருந்து விப ரங்களை அறிந்துகொண்டாள். தனேஸ்வரன் காயப் பட்டு, கண்கள் கட்டப்பட்டு கட்டிலில் கிடக்கும் பரிதாபக் கோலத்தைக்கண்ட கமலா கண்ணீர் தாரை தாரையாக வடித்திருப்பாள் அந்த அறையில் பட்டும் ஆட்கள் இல்லாதிருந்தால். தனேஸ்வரனுக்கு நர்ஸ் செய்ய வேண்டுமென்பது அவளது பேரவா. தனேஸ்வரனுக்கு நர்ஸ் செய்யும் மிஸ் எல்ஸியின் துணையாக கமலா நியமிக்கப்பட்டிருப்பதாக அன்று மாலை அறிந்ததும் கமலா அடைந்த களிப்புக்கு எல்லையில்லை.
“அம்மா! என்ன அன்போடு என்னை கவனித்து வருகிறீர்கள் கழிந்த ஒருவாரமாக என்னிடம் நீங்கள் காட்டும் இரக்கம் வெறும் வார்த்தைகளால் கூறுந்தரம ல்ல. உங்களது உதவியை என்றும் மறக்கமாட்டேன்'”
‘அம்மா’வென்ற சொல் கமலாவுக்குச் சிரிப்பை உண்டுபண்ணி விட்டது. ஆனால் அதைச் அடக்கிக் கொண்டா டாள். “அம்மா மீண்டும் எனக்குப் பார்வை கிடைக்குமானால் உங்கள் உருவத்தை ஒரு அழகிய சித்திரமாக வரைந்து கைம்மாறு செய்வேன். கிடை யாதுபோனால் அடுத்த ஜென்மத்தில் ஓவியக்கலைஞ ஞ னாகப் பிறந்து அதை முடிப்பேன்.ஆ!என்ன வேதனை யாக இருக்கிறது. கடவுள் மனுஷனை என்ன விதத் திலெல்லாம் சோதிக்கிறார்! நினைத்தது கைகூடியிருந் தால் உலகம் எவ்வளவு உயிர்ததும்பும் ஓவியங்க ளைப் பெற்றிருக்கும்” என்று கூறியதும் இரு கன்னங் கள் வழியாய் நீர் வடிய ஆரம்பித்துவிட்டது.
“ஐயா! அழாதீர்கள். கண் சிசில்சை பெற்று கட் டுண்டிருக்கும் போது அழக்கூடாது. உங்களைப் போன்ற கலைஞர்களுக்குத் தொண்டு செய்வதே எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். கவலைப்பட வேண்டாம்” என்று கூறி தனது கண்களை தொடைத் துக்கொண்டாள் கமலா.
“அம்மா! நீங்கள் எனக்கு ஒரு பெரும் உதவி செய்யவேண்டும். இனிமேல் சித்திரங்கள் வரைய முடியுமோ என்னமோ தெரியாது. நான் வரைந்த வைகளாவது பிரயோஜனமுள்ளதாக இருக்கவேண் டும். திருவல்லிக்கேணியிலிருக்கும் சரஸ்வதி நிலையத் திற்குச் சென்று பல பக்கங்களில் சிதறிக்கிடக்கும் வரைந்த படங்களைப் பெட்டியில் கவனமாக வைத்துப் பூட்டி வரவேண்டும். கதவைத் திறந்ததும் நேரே ர இரு புதிய படங்களைக் காண்பீர்கள். அவை களைச் சற்று கவனமாக எடுத்து வையுங்கள். என் னுடைய நிலையம் உங்களுக்கு கண்விருந்தளிக்கும். இவ்வுதவிக்கு நான் ரொம்ப நன்றியுடையவனாக இருப்பேன் என்று இரக்கமான குரலில் கூறினான். கமலா இசைந்தாள்.
அன்று மாலை, சந்தி நேரம். கமலா தனேஸ் வானிடமிருந்து சாவிக்கொத்தை வாங்கிக்கொண்டு, தனது பேட்டரி விளக்குடன் திருவல்லிக்கேணியை நோக்கிச் சென்றாள்.
கமலா தனேஸ்வரனின் நிலையத்தை நண்ணும் போது நல்ல இருட்டாய்விட்டது. அவன் கூறிய அடையாளங்களை வைத்துக்கொண்டு இடத்தைக் கண்டுகொண்டாள். கதவைத் திறந்து தனது பேட் டரிலயிட்டைக் கொளுத்தினாள் நேரே வெளிச்சம் ஒரு படத்தின் மேல் பட்டது. கையைச் சற்று திருப் பியதும் மற்றொரு படத்தில் வெளிச்சம் படிந்தது.
அப்படங்கள் பெண்ணின் படமென்று அறியமுடிந் ததேதவிர வேறொன்றும் அவளுக்குத் தெரியவில்லை. அறையின் உள்ளே சென்று லாம்பைக்கண்டுபிடித்து விளக்கேற்றினாள். அறையிலுள்ள வர்ணக்குழம்பு கொண்ட சிறு டப்பிகளையும், எழுதுகோல்களையும் கண்டாள். அறையினுள் நுழைந்ததிலிருந்து ஏதோ தனக்குச் சொந்தமான இடத்தில் இருப்பதாகவும் அங்கு காணப்படும் பொருள்கள் தனக்குச் சொந்த ப மானதென்றும் எண்ணும்படியான ஒரு உணர்ச்சி அவளுக்கு எற்பட்டது.
சில்லறை சாமானங்களை ஒரு பக்கமாக வைத்த தும், கவனமாக வைக்கவேண்டுமென்று அவன் கூறிய படங்களைப் பார்க்க விளக்குடன் சென்றாள்- முதல் படம் அவளுக்குச் சிரிப்பை உண்டுபண்ணிவிட்டது. இதுதான் கமலாவை மணக்கோலத்தில் காட்டும் சித் திரம். இரண்டாவது படம் அவளது மனதில் சிறு அதிர்ச்சியை உண்டுபண்ணியது. தாயின் அன்பு நிறைந்த வதனத்தையும், சேயின் மாசற்ற புன் முறுவலையும் பார்த்தாள்; மனங்குழைந்தாள். தன் னைத் தாயாக சித்ரித்துக் காட்டும் இப்படம் அவளது தாய்மை உணர்ச்சியைக் கிளப்பியது. இச் சித்திரத் தை வரைந்த பொற்கைகளை நினைத்தாள்! அதனை பார்த்து வரைந்த கண்களை நினைத்தபோது அழ ஆரம் பித்துவிட்டாள். “அன்று மறுத்தாயே! இன்று எனது மனைவியும், ஒரு குழந்தையின் தாயுமாய்விட்டாய் பார்த்தாயா? வெற்றிபெற்றது யார்? நீயா? நானா என்று திரை மறைவிலிருந்து தனேஸ்வரன் தாழ்ந்த குரலில் கூறுவதுபோன்று அவளுக்குக் கேட்டது. சுவரில் சாய்ந்து ஏங்கி ஏங்கி அழுதாள் கமலா; ஏந் தித் தேற்றுவார் யாருமில்லை. சில நிமிடங்களுக் குப் பின்பு தெளிந்த கமலா படங்களைப் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டு மேஜைக்கு வந்தாள். தனேஸ் வரனுக்கு ஒருமுக்கியமான கடிதத்தை எழுதி, மேல் விலாசத்தில் ‘அந்தரங்கம்’ என்றும் குறித்தாள். ரூமின் வெளியே வந்து எழுத்தை ஆஸ்பத்ரிமேல் விலாஸத்துக்கு போஸ்ட் செய்து விட்டுதிரும்பினாள்.
“ஐயா! உங்களுக்கு ஒரு எழுத்து வந்திருக் கிறதே’ என்றாள் கமலா. “எனக்கு வரும் எவ்வள வோ கடிகங்களை நீங்கள் தானே வாசித்துக் காட்டுகி றீர்கள்,இதையும் வாசியுங்கள் கேட்கட்டும்” என்று ஆவலோடு கூறினான் தனேஸ்வரன். ‘ஆனால் இன்றை ய எழுத்தில் ‘அந்தரங்கம்’ என்று எழுதப்பட்டிருக்கி றது. ஆகையால்தான் சிறிது தயங்குகிறேன்.” என்று கூறிக்கொண்டே கமலா புன்முறுவல் பூத்தாள். ‘அம்மா! என்ன சொல்லுகிறீர்கள். இப்பொழுது எனது கண்கள் நீங்களல்லவா? நீங்கள் வாசிப்பது பற்றி எனக்கு ஒரு ஆட்சேபனையுமில்லை” என்று கூறிமுடிந்ததும் தனேஸ்வரன் நெற்றியைச் சுளித்த தைக்கண்ட கமலா, தனேஸ்வரன் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்பதாக உணர்ந்தாள்.
“ஓவியக்கலைஞருக்கு உள்ளம் உடைந்த கமலா எழுதுவது. சமீபத்தில் சென்னையில் வைத்து உங்களுக்கு நேரிட்ட விபததையறிந்து திடுக்கிட்டேன்த ன் று நான் உங்களது கருத்துக் கிசைந்திருந்தால். இந்தக் கொடும் விபத்து ஏற்பட்டிருக்குமா வென்பதை எண்ணியதும் எனதி உள்ளம் உடைந்துவிட்டது. மன்னியுங்கள். கர்வத்தில் கடிந்து கூறிய இப்பேதை யின் சொற்களைப் பொறுங்கள். கண்கள் ஊறுபட்ட தால் கவலையிலிருக்கும் உங்களது நிலையை எண்ணி எனது மனம் துடிக்கிறது. மன்னித்தேனென்று உங்களது திருக்கையால் எழுதி அனுப்புங்கள். மனச் சர்ந்திபெறுவேன். விரைந்து வந் து எனது உடல் பொருள் ஆவி மூன்றையும் உங்களுக்குப் பணியாற்றி அர்ப்பணம் செய்வேன். இல்லையேல் உயிர்தரியேன்.
“அம்மா! நீங்கள் ஏங்கியும், விட்டு விட்டும் வாசிப்பதைப் பார்த்தால் கமலாவின் பிரலாபத்தைக் கண்டு என்னை விட நீங்கள் ரொம்ப இரக்கம் கொள்வதாகத் தெரிகிறது! என்னுடைய சுக துக்கங்களில் நீங்கள் இவ்வளவு அபிமானம் காட்டுவதற்கு நான் என்ன கைமாறு செய்வேன்!
கன்னங்களில் நீர் தோயப்பெற்ற கமலாவும், பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக மனத்திரையில் வந்து வந்து மறைய மனங்கலங்கும் தனேஸ்வரனும் சில நிமிடங்கள் ஒன்றுமே பேசாதிருந்தனர். முகத் தில் ஒவ்வொரு நிமிடமும் தோன்றி மறையும் சோ கக் குறிகளின் பரிதாபக் காட்சி கமலாவின் கவலைத் தீக்கு காற்றுக் கொடுப்பதுபோலிருந்தது. நிசப்தமாயிருந்ததால் நர்ஸ் ஏதோ தன்மீது கோபித்துக் கொண்டு சென்றுவிட்டாளென்று பயந்த தனேஸ் வரன் “இங்கே ஒருவருமில்லையா?” என்று ஏக்கமுடன் கேட்டான். “நான்தான் இருக்கிறேனே” என்று பதறிக்கூறினாள் கமலா. “அம்மா இவ்வெ ழுத்து எனது வாழ்ககையிலுள்ள ஒரு அத்தியா யத்தைக் குறிக்கிறது. என்னைப்பற்றி சந்தேகம் கொண்டு என்னை வெறுத்துத் தள்ளாது காப்பாற்ற வேண்டும். மன்னிக்கவும்” எழுத்திற்கு என்ன பதி லென்பதை ஆவலோடு எதிர்பார்க்கும கமலாவின் செவிகளில் மேற்கூறிய சொற்கள் விழவே இல்லை. அம்மா! எனக்கு ஒரு கடுதாஸியும் பவுண்டன்பே னாவும் தாருங்கள்” என்று சொல்ல உடனேயே கமலா ஒரு நாற்காலியைக் கட்டிலின் முன் கொண்டுவந்தாள். ழுந்திருந்து சிறிது நேரம் யோசித்தான் தனேஸ் வரன். கமலா, அவன் கைகளைப் பிடித்து காகிதத் தின்மேல் வைத்தாள். மனநிறைவுடன் தனேஸ்வரன் “கமலா ப மனப்பூர்வமாக மன்னிததேன் என்று கையொப்பமிட்டான். கமலாவின் மேல்விலாசத்தில் திருச்சிக்குக் கடிதத்தை போஸ்ட் செய்யும்படி நர்ஸை வேண்டிக்கொண்டு கட்டிலில் படுத்துக்கொண்டான்.
ஒவ்வொரு எழுத்தும் எழுத எழுத கமலாவின் உள்ளம் இரவியைக் கண்ட கமலத்தின் இதழ்கள் விரிவதுபோல் விரிந்து பூரிப்படைந்தது. இருள் நிறைந்துவிட்டது அறையில். கமலா எலக்ட்ரிக் லையிட் டைக் கொளுத்த ஸ்விச்சைத் தட்டினாள். இருள் மறைந்தது. எங்கும் பிரகாசம். தாழ்ந்தகுரலில் இனி மைகுறையாது “உலகிலுள்ளவர்களில் உத்தமப் பெண்மணி யார்?” என்ற பாடலைப் பாடினாள், பாட்டைக் கேட்ட தனேஸ்வரனுக்கு மகாராடு ஞாபகம் வந்தது. பாடலின் இனிமையும் குரலின் கன்மையும் நர்ஸ் கமலா தனது காதலி கமலா வென்பதை உறுதிப் படுத்தியது. பாடல் பாதியானதும் “கமலா! என்ன நாடகம் நடத்திவிட்டாய்” என்று வலது கரத்தால் அவளைத் தட்டினான்.
– கவிக்குயில் நிலையக் கதைத்தொகுதி, முதற் பதிப்பு: ஏப்ரல் 1944, கவிக்குயில் நிலையம், கோட்டாறு.