கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 24, 2024
பார்வையிட்டோர்: 2,007 
 
 

தீயா தன் பெண்ணை வளர்க்க நினைத்த பெற்றோர் அவளுக்கு “தியா” னு பேர் வச்சாங்க. தியா பிறந்த முதலே துணிச்சலுடன் வீரமாகவும் நேர்மையாகவும் மட்டுமே வளர பழகி கொண்டாள். சுற்றிலும் நேர்மறை எண்ணங்களால் மட்டுமே சூழ வாய்க்க பெற்றாள். அதற்கு காரணமாக தங்கள் ஒரே பெண்ணை பல வண்ணங்களில் வளர்த்த பெற்றோரை கூறினாலும், சிறு வயது முதல் தைரியமாகவும் வீரமாகவும் வளர்த்தவர்கள், ஒரு குறிப்பிட்ட பருவ வயது வந்தவுடன் அவளிடம் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பை எதிர்பார்த்தவர்களின் இயலாமையை கையாளும் தியாவின் அறிவுக்கே அனைத்து பெருமையும் சேரும்.

தன்னோட பெயர் “சேனாபதி” அப்டிங்கிறதால மட்டுமில்ல, இந்தியன் படம் ரிலீஸ் ஆனா அன்னைக்கு பிறந்ததால் தன் மகனுக்கு சந்த்ருனு பேரு வெச்சார். ஆனா அந்த குணமும் அப்டியே வரும்னு எதிர்பாக்கல. எல்லாத்துலயும் குறுக்குவழியை தேடும் பேர்வழி சந்த்ரு. அம்மா ஒரு அருக்காணி, அதனால எந்த பொண்ணும் கிடைக்கல. சந்த்ருக்கு பொண்ணு பாக்குறது மட்டும்தான் இப்போதைக்கு அந்த குடும்பத்துக்கு ஒரே தீவிர வேல. சந்த்ருவின் அம்மா “டேய் சந்துரு, போன மாசம் சொந்தகாரங்க கல்யாணத்துக்கு ஊட்டி போனியே, அங்க எதாச்சும் கரெக்ட் பண்ணியாடா?. திடுக்கிட்டு சந்த்ரு “நீயெல்லாம் ஒரு தாயா? பெத்த புள்ளைகிட்ட இப்டிதான் கேப்பியா?” அம்மா “சும்மா சொல்லுடா ஓவரா பண்ணாம,” யதார்த்தமாகி சந்துரு “அட போமா நானும் எவ்வளவோ ட்ரை பண்ணிதான் பாக்குறேன், கடைசியா குடும்பத்த பத்தி பேசுறப்ப, ஒன்னைய பத்தி சொன்னாலே எல்லாம் ஓடிருதுமா, அவ்ளோ பேமஸ் நீ…”. அம்மா “ஒனக்கும் உங்க அப்பனுக்கும் என்னைய குறை சொல்றதுதான் நல்லா வரும், வேற ஒண்ணுக்கும் லாயக்கு இல்ல”னு பேசிகிட்டே உள்ள போய்டாங்க. சந்துருவும் தன் அம்மாவோட மாமியார் கேரக்டர் பத்தி கற்பனையில் யோசிச்சி பயந்து சிலுத்துகொண்டான்.

தியாவின் அப்பா “யம்மாடி, இன்னைக்கு உன்னைய பொண்ணு பாக்க வர சொல்லிருக்கோம்,”. பாதி தூங்கியபடி தியா “ஏன்பா… திடீர்னு..,” தியா அம்மா “என்னைக்கு சொன்னாலும் உனக்கு திடீர்னுதான் இருக்கும், அதனால இன்ணைக்கு எங்கயும், போலிஸ் ட்ரைனிங்… கோச்சிங்…னு வெளில சுத்தாம, ஒழுங்க பொண்ணு மாறி ரெடியாகி வீட்லயே இரு”. தியா எழுந்து சோம்பல் முறித்தவாறு “பொண்ணு மாறியா… அப்ப நான் பொண்ணே இல்லன்னு முடிவு பண்ணிடீங்களா?”. தியாப்பா “அப்டிலாம் ஒண்ணுமில்லமா நீதானே எங்களுக்கு எல்லாமே..” தியா “இப்டிதான் பொத்தாம் பொதுவா சொல்லிடுங்க.. அப்புறம் நாங்க எப்டி எல்லாவுமா இருக்குறதுன்னு தெரியாம, கடைசியா என்ன மாறி இருப்போம்..” ஒன்னும் புரியாம பெத்தவங்க முழிக்க, அவங்க தோளில் கை வைத்து தியா “அம்மா .. அப்பா.. ஒன்னும் கவல படாதீங்க.. உங்க பேர கெடுக்க மாட்டேன், பொண்ணு பாக்க வர சொல்லி ஏற்பாடு பண்ணீட்டீங்க, பரவால்ல வந்துட்டு போகட்டும் நானும் இன்முகத்துடன் வரவேற்று உபசரிக்கிறேன், அவங்கள ஒன்னும் தொந்தரவு செய்ய வேணாம்.. ஆனா கல்யாணம் மட்டும் இப்ப வேணாம், எப்பன்னு நானே சொல்றேன்.., அப்புறம் உங்களுக்கு மாப்ள பாக்குற கவல எல்லாம் வேணாம் ஓகே வா?”. வழக்கம்போல் செய்வதறியாமல் பெற்றோர் முழித்தனர்.

அன்று மாலை சந்த்ரு குடும்பம், தியா வீட்டிற்கு வந்து பெண் பார்க்கும் சம்பிரதாயம் நடந்து கொண்டிருந்தது. அந்த பட்டுபுடவை தியா அணிருந்தது, பட்டுபூச்சிகளே தியாவை கட்டி பிடித்திருந்ததுபோல் இருந்தது. பெரியவர்களின் அந்த அறிமுக வெட்டி பேச்சுக்கள் ஆரம்பத்திலேயே தியா குறுக்கிட்டு “நானும் அவரும் கொஞ்சம் தனியா பேசிக்கலாமா ஆன்டி? னு சந்த்ரு அம்மாவை மற்றும் தன் அப்பாவையும் பார்த்து கேட்க அனைவரும் திகைத்தனர். ஒரே நிசப்தம். சட்டென சந்த்ரு “ஓ எஸ்.. வாங்க போகலாம்”னு எழுந்தான். அப்டி செய்யலன்னா அவன் கேரக்டர் வீக் ஆயிடும்னு அவனுக்கு தெரிந்திருந்தது. தியா வணங்கியபடி “ரெஸ்பெக்டிவ் பேரன்ஸ், வித் யுவர் பர்மிசன்…” னு சொல்லிட்டு சந்த்ருவும் தியாவும் மாடிக்கு சென்றனர். அதிர்ச்சியான அந்த பெருசுங்க “இந்த காலத்து பசங்க……”னு நீட்டி முழக்கி சமாளித்து சம்மதித்து கதைத்து கொண்டிருந்தனர்.

அந்த மொட்டை மாடியில் தலையும் புரியாமல் காலும் புரியாமல் சந்த்ரு நிற்க, தியா புரிந்தவாறு “அப்புறம் சந்த்ரு சொல்லுங்க?” சுதாரித்து சந்த்ரு “நான் கூட நீங்க சேல கட்டி இருந்ததையும் கூந்தல் நீளத்தையும் பாத்து ரொம்ப அடக்க ஒடுக்கமான பொண்ணோன்னு பயந்துட்டேன்..” னு ஒப்பனா பேசுறதா நினைச்சு ஏதோ உளறினான். தியா ஒரு மாறி பார்க்க, சந்த்ரு “நோ… நோ.. ஐ மீன்… ஐ லவ் யூ”… தியா என்ன ரியாக்ட் பண்றதுன்னே தெரியாம சிரிச்சிட்டாள். இருவரும் புன்னகைத்தனர். சந்த்ரு அண்ட் தியா கோரசாக “உங்கள ஏற்கனவே பாத்து பழகுன மாதிரி தோணுது” இன்ப அதிர்ச்சியுடன் சந்த்ரு “ஐயோ… வேணாம்… வேணாம் அப்புறம் பூர்வ ஜென்ம பந்தம் அப்டி இப்டின்னு ரெண்டு பேரும் ப்ளேடு ஆகிடுவோம்.”னு சொல்ல இருவரும் கோரசாக மீண்டும் சிரித்தனர்.

தியா “உங்களுக்கு ஒன்னும் அவ்ளோ வயசாகலேயே, என் வயசுதான் இருக்கும் போல. அப்புறம் ஏன் கல்யாணத்துக்கு இவ்ளோ நாளா அலையுறீங்களாம்?” சந்த்ரு ஒரு மாறி பாக்க, தியா “ஐ மீன்..”னு இழுக்க… தலையாட்டியபடி சந்த்ரு “புரியுது புரியுது… எங்கள பத்தி உங்களுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு, அது நல்லதுதான். எல்லாம் எங்க அம்மா அப்பாவோட பாவங்கள், சுருக்கமா சொன்னா அவ்ளோதான்”.

தியா “இட்ஸ் ஓகே விடுங்க, பாத்துக்கலாம்” அந்த வார்த்தையே சந்த்ருக்கு சம்மதம் சொன்னதுபோல் இருந்தது. சந்த்ரு “தேங்க்ஸ் யா, அப்போ உனக்கு ஓகேவா ”. தியா “ஒரு நிமிசம்.,, வெயிட் ..வெயிட் .. அதுக்குள்ள முடிவு எடுக்க வேணாம், நாம நெறைய தெரிஞ்சிக்கணும் அப்றம்தான் அதெல்லாம்” சந்த்ரு “தியா சுத்தி வளைச்சு பேச வேணாம், ஓப்பனா சொல்லிடுங்க அதான் எல்லாருக்குமே நல்லது”. தியா “எஸ் கரெக்ட். நானும் அதேதான் சொல்றேன்”. சந்த்ரு “அப்புறம் என்ன நானே பர்ஸ்டு சொல்லிடுறேன், எனக்கு உங்கள ரொம்ப…?. அவ்ளோ எதுக்கு? நான் ஒன்ன என் பொண்டாட்டியா நினைக்க ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு, இதுக்கு மேல ஒப்பனா சொல்ல முடியாது ஓகே வா?”

வியந்த தியா “அப்டியா அப்ப நானும் பட்டுன்னு சொல்றேன், ஒரு முக்கியமான விசியம்.. அது வந்து …நான்… நான்….”. சந்த்ரு “என்ன திடீர்னு வெக்கமெல்லாம்… சும்மா சொல்லு … நீ…நீ.. தியா “வெக்கமா? அதெல்லாம் இல்ல சின்ன தயக்கம் அவ்ளோதான்.. சரி ஓகே.. டப்னு சொல்லிடுறேன் .. நான் கன்சிவ் ஆகிருக்கேன், இன்ணைக்குதான் எனக்கே தெரியும்… சந்துரு தலை சுற்றி “சாரி எனக்கு எதோ தப்பா காதுல விழுந்துடிச்சி, இன்னொரு தடவ … குறுக்கிட்டு தியா “இல்ல… இல்ல சந்துரு உனக்கு சரியாதான் கேட்டுருக்கு, அதேதான் நான் சொன்னேன்” கன்பார்ம் பன்னாள் தியா. சந்துருக்கு ஒரு நொடி உலகம் இருண்டது… சூன்யமானது.. நிதானிக்க நேரம் ஆனது. அதற்குள் மாடிபடியில் சந்த்ரு அம்மா “தியா.. சந்த்ரு .. பசங்களா நெறையா கல்யாணத்துக்கு அப்புறம் பேசிக்கலாம்… இப்போ ரெண்டு பேரும் கீழ வாங்க, முதல்ல சீக்கிரம் பேசி முடிப்போம்..”னு கத்துனாங்க.

சில நிமிடம் சந்துரு சிலையானான். தியா அவனை தொட முயல, சந்துரு தள்ளி போனான். திடுக்கிட்ட தியா “ஒ… குட் ரெஸ்பான்ஸ்… அண்ட் குட் ரிப்ளே.. குட் ரிசல்ட் அண்ட் தென் குட் பை ” னு சொல்லிட்டு கீழே போனாள் தியா. சந்த்ரு சற்று முன் கிடைத்த காதல் மனைவி கனவு இவ்வளவு சீக்கிரம் களையும் என்பதை எதிர்பாரததால் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய மனம் வற்புறுத்தியது. நடைபிணமாக கீழே வந்தான். சந்த்ரு அம்மா “என்னடா மருமக என்ன சொல்றா?” சொல்லுடா ஓகே தானே?” சந்த்ருக்கு வாயில் ஏதேதோ வந்தது ஆனால் எதும் கூறாமல் வீட்டை விட்டு வெளியே வந்தான். அதேபோல் தியா பெற்றோரும் அவளிடம் கேட்டு பார்த்துவிட்டு சரியான பதில் இல்லாததால், சம்மந்திகள் சமாதானமாக பிறகு பேசிக்கொள்ளலாம் என சுமூகமாக பேசி பிரிந்தனர்.

வீட்டிற்கு திரும்பும் பயணத்தில் சந்த்ரு முழுதும் தியா நினைவுகள் வாட்டியது. ஏகப்பட்ட கேள்விகள் சந்தேகங்கள் அவனை சூழ்ந்து கொண்டன. இருப்பினும் தியாவை பார்த்த மாத்திரத்தில் இருந்த விருப்பத்தின் வியப்பைவிட, அவள் ஏன் தனக்கில்லை என்ற உணர்வு அவளை அறிய ஆர்வமும் காதலும் கொண்டது. தியா, பிடிக்கவில்லை என்பதால் பொய் கூறி இருக்க கூடாதா?, இல்லை விளையாட்டாக கூறி இருக்க கூடாதா? இல்லை அது மட்டும் கனவா இருக்க கூடாதா? என சந்த்ரு தன் பல எண்ணங்களுடன் தத்தளிக்கிறான். அம்மாவின் கேள்விகளும் ஏச்சுகளும் அவன் காதில் விழவே இல்லை.

தியா தன் வீட்டில் அப்டி ஒரு சம்பவம் நடந்ததற்கு அடையாளமே இல்லாததுபோல், அவள் அன்றாட வாழ்வில் தொடர்ந்தாள். அவள் ஆடை களைந்து அவள் எப்போதும் உடுத்தும் அவளுக்கே உரித்தான ஏதுவான உடையில் வெளியே கிளம்பினாள். தியா அப்பா “நில்லு தியா”. தியா வாசலில் நிற்க அருகே வந்து அப்பா “என்ன நடந்துச்சி, என்ன சொன்ன, மாப்ள ஏன் அப்டி போனாரு? சொல்லு தியா சொல்லு?”. தியா மௌனம் சாதிக்க அவள் அம்மா கோவமாக “என்னமோ காலைல உங்க பேர கெடுக்க மாட்டேன் அது இதுன்னு டயலாக் பேசுன இப்போ என்ன ஆச்சு?”. தொடர்ந்து அப்பா “அந்த பையன பிடிக்கலையா ? இல்ல அந்த குடும்பத்த பிடிக்கலையா? தயவுசெய்து பதில் சொல்லு தியா?” இருவரும் கெஞ்சினார்கள். கடுப்பாகி தியா “எனக்கு சந்துருவை பிடிக்கலன்னு சொன்னனா? இல்ல கல்யாணமே வேணாம்னு சொன்னனா? ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தோம், முடிவ கொஞ்சம் யோசிச்சு எடுப்போம்னு இருந்தேன்….. சரி ஓகே… இனி நீங்க எடுக்குற முடிவுதான் நான் எதிலும் தலையிடல. ஆனா எதுக்காகவும் என் ஆம்பிசன விட மாட்டேன்” னு சொன்னபடி ஸ்கூட்டரில் பறந்தாள். புரிந்தும் புரியாமலும் பெற்றோர் நின்றனர்.

சந்த்ருவை அவன் அம்மா அப்பா திட்டி தீர்க்கிறாங்க. சந்த்ரு அம்மா “அந்த பொண்ணுக்கு என்னடா குறைச்ச நீ கெட்ட கேடுக்கு அவங்க பொண்ணு தரதே பெருசு, இதுல நீங்க வேணாம்னு சொல்ற அளவுக்கு போய்டீன்களோ? சந்த்ரு அப்பா “டேய் சந்த்ரு, எதையும் அரைகுறையா புரிஞ்சிட்டு முடிவு எடுக்காத, நல்லா யோசி. அந்த பொன்னோடு நல்லா டிஸ்கஸ் பண்ணு புரிஞ்சிக்க முயற்சி பண்ணு, பஸ்ட் மீட்டிங்க்லையே கேரக்டர் ஜட்ஜ் பண்ணாதே.” சந்த்ருக்கு எதோ புத்தியில் உரைத்த மாதிரி இருந்தது.

இரவு பதினொரு மணிக்கு தியா வீட்டிற்கு திரும்ப வந்தாள். அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வாசலில் சந்த்ரு நின்றான். தியா திணறி நின்றாள். தியா “வாங்க… இல்ல எப்போ வந்தீங்க.?. சந்த்ரு “ஓகே ஓகே கூல் டோன்ட் பேணிக் வாங்க உள்ள போய் பேசலாம்..”. தியா “அம்மா … அப்பா..” கூப்பிட்டு பார்த்தாள். யாரும் வரல. நிதானமாக சந்த்ரு “எல்லாரும் சாப்பிட்டு தூங்கிட்டாங்க.. நீங்க சாப்பிடீங்களா?” தியாவுக்கு ஒன்னும் புரியல. குழப்பமாக தியா “வாட்..? என்ன நடக்குது இங்க? இது தியா வீடுதானே? சந்த்ரு “புரியுது… புரியுது.. அப்டிதான் இருக்கும், என்னால முடியல அதான் திரும்பி வந்துட்டேன்”. தியா “ஒ எவ்ளோ நேரம் ஆச்சு நீங்க வந்து?” சந்த்ரு “ஒரு நிமிஷம்… இந்த மரியாத எல்லாம் வேணாம், அப்புறம் நாம ரெண்டு பேரும் மாடிக்கு போய் அந்த பேச்சுவார்த்தையை தொடரலாம்.. அப்புறம் மத்தத பேசிக்கலாம், நீ ரெப்ரெஷ் ஆயிட்டு வா, நான் மேல போறேன்” சந்த்ருவோட நிதானம் தியாவை வெகுவாக கவர்ந்தது.

கிட்டத்தட்ட மிட் நைட் வித் காபியுடன் சந்த்ருவும் தியாவும் மாடியில். இருவருக்கும் ஒரே ஆச்சர்யம்தான். இருந்தாலும் அது நிகழ்ந்து கொண்டிருந்தது. தியா எதோ சொல்ல வர,.. சந்த்ரு “ஆல் செட்.., எனக்கு உன்ன பத்தி முழுசா தெரிஞ்சிக்கணும் அவ்ளோதான் இப்போதைக்கு.. பட் ஐ லவ் யூ அல்ரெடி ஓகே, சோ நீ சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லு, நான் குறுக்க பேச மாட்டேன், என் மண்டையே வெடிக்குற மாறி இருக்கு.. சோ ப்ளீஸ்…” பணித்தான்.

ஒரு சிறிய மௌன உரையாடலுக்கு பிறகு .. பெருமூச்சுடன் தியா “ஆல் ஓகே.. ஆமாம் நான் கன்சீவ் ஆகிருக்கேன்.. சந்த்ரு எதோ கேட்க வர தியா கையமர்த்தி “ஆனா எப்டி, யார்ன்னு எனக்கே தெரியல, இத சொன்னா யாருமே நம்ப மாட்டீங்கன்னு தெரியும், பட், நான் இப்டி பொய் சொல்ல தேவையில்லன்னு புரிஞ்சிட்டு இப்போ வந்திருக்கீங்க தட்ஸ் குட். பட் அவன் யாருன்னு கண்டுபுடிச்சி அவன் பிறப்புறுப்பை சிதைக்காம விட மாட்டேன். ஈசியா இத கலைச்சிட்டு எதுமே நடக்காத மாதிரி இன்னொருத்தன கட்டிட்டு போக நான் நார்மல் பொண்ணு இல்ல, அப்புறம் நான் போலீஸ் ட்ரைனிங் முடிச்சு போஸ்டிங்க்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். அவன மட்டும் நான் கண்டுபிடிக்கலன்னா நான் போலிஸ் ஆகவே மாட்டேன். இதான் எனக்கு உண்மையான டெஸ்ட்… இந்த சமுதாயத்தில் நடக்குற தீங்கில் இருந்து என்னையே நான் காப்பாத்திக்க முடியலேன்னா, அப்புறம் போலிஸ் ஆகி பொது மக்களை எப்டி காப்பத்துவேன்?.. அவன எவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிக்கிறனோ அதான் என் உயிருக்கும் என் குடும்ப மானத்துக்கும் அவ்ளோ நல்லது. அப்டி அவன மட்டும் கண்டுபிடிக்க முடியல்லனா அந்த கருவை குழந்தையா பெத்தாவது கண்டு பிடிக்க முயற்சிப்பேன். எப்டியும் அவன விட மாட்டேன்.” வெறியோடு பெசிகொண்டிருந்தவளை வெறித்து பார்த்தபடி சந்த்ரு.

நீண்ட நேர மௌன கற்பனைக்கு பிறகு, தெளிவாக சந்த்ரு “சோ இத யார்கிட்டையுமே சொல்லாம என்கிட்டே சொன்னதுக்கே, நீ எனக்கு கணவன் ஸ்தானம் கொடுத்திட்டே அப்புறம் என்ன வேண்டிருக்கு எனக்கு, லெட்ஸ் கோ தியா ஐ ஆம் வித் யூ வித் லவ் அண்ட் சப்போர்ட்”.னு சொல்லி கட்டி பிடித்தான். தியா ஒரு நிமிஷம் திகைத்து அவன் புரிதலை புரிந்து வாழ்வில் முதல்முறை காதலை உணர்ந்தாள்.

அடுத்த காபியுடன் அந்த இரவில் சந்த்ரு “நாம இப்போ என்ன செய்ய போறோம்? னு பிரிஸ்கா கேக்க, கொட்டாவியுடன் தியா “ தூங்குவோம்… அப்புறம் மானிங் பேசிக்கலாம்..” சந்த்ரு “நோ நோ இது என் வாழ்க்கை பிரச்சனை எவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிக்கிறோமோ, அவ்ளோ சீக்கிரம் எனக்குதான் நல்லது, என் பொண்டாட்டி உயிரும் மானமும்தான் என் வாழ்க்கை”. மறுபடி மறுபடி வியந்த தியா “ஓகே. நான் அது சம்மந்தமா இப்போ டாக்டர் பாத்துட்டுதான் வரேன், சம்பவம் நடந்த டையத்த கரெக்ட்ஆ லாக் பண்ண முடில ஆன நவம்பர் பஸ்டு வீக்தான் மே பீ.”

சந்த்ரு “தயவு செஞ்சு தப்பா நெனசிக்காதே, அதெப்படி கொஞ்சம்கூடவா அந்த உணர்வு இல்லாமையா இருந்திருப்ப.. சாரி வேற எப்டி கேக்குரதுன்னே தெரில” . தியா “டோன்ட் ஹெசிடேட் சந்த்ரு, என்ன டவுட் இருந்தாலும் கேளு, பெத்தவங்க கூட என்ன நம்புவாங்கலான்னா தெரில ஆனா நீங்க ரொம்ப மெச்சூர். சோ டோன்ட் .. தயவுசெய்து கேளுங்க”. சந்த்ரு “எனிவே தேங்க்ஸ்.. அதான்.. உனக்கு கொஞ்சம் கூட நெருடலா இல்ல அசௌகரியமா அந்த டையத்துல இருந்த ஞாபகம் கூட இல்லையா? தியா “இட்ஸ் கரெக்ட்.. பட் எனக்கு வொர்க்அவுட் பண்ணி பண்ணி நெறைய நாள் அப்டி இருந்திருக்கு.. உங்களுக்கு போக போக புரியும் சந்த்ரு.. சொல்றேன் அப்புறம் நான் சுயநினைவுல இருந்திருந்தா அவனுக்கு இந்நேரம் கருமாதி நடந்திருக்கும்.. பட்… அந்த மாதிரி ட்ரக்ஸ் எல்லாம் இப்போ சாதரணமாகவே மெடிக்கல்ல கிடைக்குதாம், அத பத்தி முழுசா தெரியாம செக்ஸவள் சேட்டிஷ்பேக்சனுக்காக தம்பதிகள் அத பயன்படுத்திட்டுதான் இருக்காங்க.. அப்புறம் ” சந்த்ரு குறுக்கிட்டு “நோ மோர் கிலாரிபிகேசன்ஸ்.. நவம்பர் பஸ்ட் வீக் எங்கிருந்த? தியா “ரெண்டு இடத்துல நடந்திருக்க வாய்பிருக்கு, போலிஸ் ட்ரைனிங் கேம்ப் கேரளா அண்ட் ஒரு மேரஜ் ரிசப்ஷன்.” சந்த்ரு “அப்ப இப்பவே கேரளா போலாம் வா கிளம்பலாம்” தியா “கொஞ்சம் பொறுங்க விடியட்டும்” சந்த்ரு “அங்க போனாதான் எனக்கு விடியும் சீக்கிரம் கிளம்பு”னு இழுத்துட்டு ஓடினான்.

காரில் இருவரும் கேரளா கிளம்பினர். பயணத்தில் சந்த்ரு “ஹனிமூன் போக வேண்டிய இடத்துக்கு, பொண்ணு பாத்த அன்னைக்கு போற கப்புள்ஸ் உலகத்துலேயே பஸ்டு நாமதான்” ன்னு சிரிச்சான். தியா ஒரு மாதிரி இருக்க, சந்த்ரு “ஏதும் தப்பா சொல்லிட்டேனா சாரிடி பியுச்சர் பொண்டாட்டி” ன்னான். தியா புன்னகைத்தாள். அப்புறம் அதையே பெரிது படுத்தி இருவரும் சிரித்துகொண்டனர். பயணம் பல்வேறு கோணத்த்தில் பரபரத்தது. கார் தாறுமாறாக சென்றது. நள்ளிரவு பயணம் வேறு தியா மீண்டும் எச்சரித்தாள். ஆனால் தனித்திருந்த சந்த்ருக்கு அந்த ஜோடி கேரளா பயணம் காரணத்தை மீறி குதுகலமூட்டியது. தியா எதோ ச்கேட்ச்ஜ் போட்டு கொண்டு இருந்ததால், சந்த்ரு டூயட்க்கு போனான்.

நீண்ட நேரத்திற்கு பிறகு சந்த்ரு “அப்புறம் தியா கேரள போலிஸ் எல்லாம் கொஞ்சம் மோசம்தான் போல,” தியா “அதென்ன கேரள போலிஸ் மட்டும்.. அடுத்து போலிஸ் மட்டும்.., இங்க எல்லா இடத்துலயும் எல்லாரும் இருக்காங்க, அந்த குறிப்பீடு எல்லாம் சில ரைட்டர்ஸ் சுவாரஸ்யதிற்காக சொன்னது …” சந்த்ரு “ஓகே ஓகே விடு விடு.. அடுத்த போலிஸ குறை சொல்ல போறேன்னு தெரிஞ்சு முன்னாடியே கணிச்சிட்ட”. ஏதோ ஞாபகம் வந்தவளாய் … தியா “நிறுத்து நிறுத்து .. ஒரு நிமிஷம்”. கார் சற்று மெதுவாகவே நின்றது. சந்துரு “என்னாச்சு தியா?… ம்? தியா “அதென்ன சொன்ன உடனே நேரா போலிஸ் கேரளா னு அங்கயே நம்ம சந்தேகம் போகுது..,” சந்த்ரு ஜாலியா “வேற எங்க போகனும்கிற?” தியா சீரியசாக “அதே வீக்ல ஊட்டில ஒரு மேரேஜ் போனேன்னு சொன்னேன்ல.., அத ஏன் யோசிக்கவே இல்ல?”.. தடுமாறி தயங்கி சந்த்ரு “நீ என்ன சொல்ற ஊட்டில மேரஜ்ஜா ?” தியா “ஆமா .. ஏன் நீ தயங்குற?” சந்த்ரு “யார் வீட்டு பங்க்ஷன்?” தியா யோசித்து .. “அது வந்து நம்ம சொந்தகாரங்க மேரஜ் தான்” சந்த்ரு “ராம்குமார் – லலிதா வெட்டிங்கா?” தியா “எக்ஸ்காட்லி .. கரெக்ட் அதெப்படி உனக்கு தெரியும்? சந்த்ரு “நான் .. நானும் அந்த மேரஜுக்கு வந்திருந்தேனே…” தயங்கி தியா “என்ன சொல்ல வர்ற ?” சந்த்ரு “நாம ரெண்டு பேரும் ஏற்கனவே மீட் பண்ணிருக்கோம்” சற்றும் தயக்கம் இல்லாமல், தியா “எஸ் கரெக்ட்… அப்ப நீதான் பன்னியா?” சந்த்ரு “ஹே.. சீ .. நான் ஒன்னும் உன்ன மாறி இல்ல..” தியா “வாட் என்ன உன்ன மாறி… புரியல எனக்கு இதான் வேலையா என்னடா சொல்ல வர்ற” னு ஓங்கி அறைந்தாள்.

சந்த்ரு காரை விட்டு இறங்கி வெளியே வந்தான். தியா காருக்குள்ளேயே இருந்து ஏதோ யோசித்தாள். சிறிது நேரம் ஆனது. இருவருக்குள்ளும் எதோ புத்திக்குள் உரைத்தது. ஊட்டி மேரஜ் நினைவுகள் நிழலாடியது. அந்த வேட்டிங்கில் மாலையில் ஒரு வித போதையுடன் அனைவரும் சுற்றியதும் அந்த வீடியோ எடுப்பவருடன் சண்டை நடந்த ஞாபகங்கள் வந்து போனது. சட்டென அண்ட் தியா சந்த்ரு “FREEZE MEMORIES HALL அண்ட் STUDIOS” கோரசாக கூவினர்.

கார் வேகமெடுத்து ஊட்டியை நோக்கி. யாருக்கோ போன் ட்ரை பண்ணிட்டே இருந்தான் சந்த்ரு வண்டியை ஒட்டி கொண்டே. தியா “சரி சாரி விடு ,” சந்த்ரு “இரு அவசரப்படாதே” தியா “என்ன சொல்ல வர்ற” சந்த்ரு “நீ சந்தேகப்பட்டது மாதிரி நானா கூட இருக்கலாம் சோ வெயிட் பண்ணு” தியா “ஹே என்னடா சொல்ற ?”. சந்த்ரு “நாம ஏன் சந்திக்கணும்.. இப்போ இவ்ளோ தூரம் சேந்து ட்ராவல் பண்ணனும் எல்லாம் யோசிச்சு பாரு,” தியா “இப்போ என் மண்டை வெடிக்குது சீக்கிரம் சொல்லி தொலை” சந்த்ரு “கமல் சார் சொல்ற மாதிரி உலக நிகழ்வுகள் ஒன்றுகொன்று தொடர்புடையது, அப்டி பாத்த உன்ன உன் சூழ்நிலையை என்னால மட்டும் ஏன் புரிஞ்சிக்க முடிஞ்சது? அத பஸ்ட் மீட்டிங்க்லயே ஏன் உனக்கு சொல்ல தோணிச்சு? என பல கேள்விக்கு ஒரே பதில் நாம ஒன்னு சேர்றதுதான்.

தியா “ஐயோ ஐயோ அதெப்டிடா? நான்தான் மயக்கத்துல இருந்தேன் அப்போ நீ … நீ என்ன சொல்ல வர்ற இது ஆக்சிடென்ட்ண்ணா? சந்த்ரு “வேற எப்டி சொல்ல சொல்ற? அப்டியே முடிச்சுட்டு போறதுதான் எல்லாருக்கும் நல்லது”. தியா “ம்ஹூம் என்னால ஏத்துக்க முடில .. இன்னும் பெட்டரா என்ன கன்வீன்ஸ் பண்ணு ப்ளிஸ்” சந்த்ரு “நீ கன்வீன்ஸ் பண்ண சொல்லும்போதே கன்வீன்ஸ் ஆயிட்ட பேசாம… அமைதியா யோசி… அப்புறம் சொல்றேன்”.

சந்த்ருவின் மூளையில் தியாவோட முழுசா வாழ நாம இந்த பழியை ஏற்றுகொள்ள வேண்டியதுதான் என முடிவு செய்து அதற்கு ஏற்ப காய் நகர்த்தினான். தியாவும் அவள் மனதில் சந்த்ருவின் திட்டம் முழுதாய் புரிந்தது. ஆனால் அதற்கு காரணம் தன்மீதான அதீத காதலா இல்லை அவனுக்கு வேற ஏதும் குற்ற பின்னணியா இருக்குமா என சந்தேகம் எழுந்தது. ஆனாலும் இருவரும் அண்டர்ப்ளே செய்ய ஆரம்பித்தனர். ஒரே விசியம் தியாவை பொறுத்தவரை சந்த்ரு அப்பழுக்கற்ற நல்லவன் அல்லது மிகுந்த நடிப்பு திறமைகொண்ட ஏமாற்றுக்காரன். தியாவின் போலிஸ் புத்தி அவளை பரபரக்க செய்தது.

சந்த்ரு மற்றும் தியா வேறு வேறு பணியில் சிந்தனை பயணத்தை தொடர்ந்தனர். நீண்ட தூரம் பயணித்த பிறகு ஓர் இடத்தில் காரை நிப்பாட்டிவிட்டு டீ சாப்பிட்டனர். அவ்வவ்போது சந்த்ரு யாருக்கோ போன் ட்ரை பண்றான். ஆனா பேச முடில. அனைத்தையும் கவனித்து கொண்டிருந்த தியாவுக்கு சந்தேகம் அதிகமானது. தியா “சந்த்ரு யாருக்கு கால் பண்ற” சந்த்ரு “உங்க மாமியாருக்குதான் நான் ஊட்டி வந்தத சொல்லல, அப்புறம் கத்தும் அதுக்குதான்”னு சொல்லிட்டே திரும்ப பண்ணான். தியா “சந்த்ரு, ஒரு மாதிரி இருக்கு, பக்கத்துல ஏதாவது ஹோட்டல்ல குளிச்சிட்டு சாப்பிட்டு போலாமா?” சந்த்ரு “எனக்கு ஒன்னு தோணுது கேப்பியா? தியா மனதுக்குள் அவன் வீட்டுக்கு திரும்ப போலாம்னு சொல்ல போறான்னு யூகித்தபடி “சொல்லு சந்த்ரு கண்டிப்பா கேப்பேன் ரெண்டு காது இருக்குல்ல” னு லேசாய் போலியாய் சிரித்தாள்.

சந்த்ரு “சிரிப்பே வரல” தியா “சரி சொல்லு” சந்த்ரு “நாம ஏன் திரும்பி போக கூடாது? தியா வெற்றி பெற்றவளாய் “அது என்ன சந்த்ரு கேரளா போறப்ப இருந்த வேகம், ஊட்டி போறப்ப இல்லயே,” சந்த்ரு “அது கரக்ட் தான், நான் கேரளா போனதே இல்ல ஆனா ஊட்டி நெறைய முறை வந்துருக்கேன் அதான்” தியா “mr. சந்த்ரு நாம டூர் போகல, உனக்கும் அந்த ஊட்டி மரேஜ் ஹாலுக்கும் எதோ சம்மந்தம் இருக்கு, அத பத்தி பேச்சு எடுத்ததும் நீ மாறிட்ட உண்மைய சொல்லு ” சந்த்ருக்கு நடுக்கம் வர தொடங்கியது உளற ஆரம்பித்தான். சந்த்ரு “நான்தானே அந்த மேரஜ் ஹால் பத்தி சொன்னேன், அப்புறம் எப்டி சந்தேக படற? னு சொல்லும்போதே சந்த்ரு போன் ஒலித்தது. சந்தரு பதறி போன் எடுக்க போன் தவற அதை கேட்ச் பிடித்து தியா அட்டென்ட் செய்தாள், போனில் “என்னயா எப்போ பாத்தாலும் போட்டோ போட்டோ உயிர எடுக்குற, எந்த போட்டாயா வேணும் சொல்லுயா” னு கத்துறான். சந்த்ரு போனை பிடுங்கி கட் பண்றான். சந்த்ரு “இது ஏதோ ரான்க் நம்பர்” தியா “சந்த்ரு தயவுசெஞ்சு சொல்லுடா உன்னைய பாத்தாலே எனக்கு பயமா இருக்கு, நீ எதோ தப்பு பண்ற சொல்லிடு, உண்மைய சொல்லனும்னா நான் உன்ன லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன், என்னைய முழுசா புரிஞ்சிகிட்டேன்னு என்னோட ஆம்பிசனுக்கு நீ தடையா இருக்க மாட்டேன்னு உன்ன கணவனவே நெனச்சிட்டேன் சில நிமிடம், ஆனா இப்போ சந்தேகம் அதிகமாகி நானே உன்ன எதாவது பண்ணிடுவேன்போல தயவுசெய்து சொல்லிடு, நீ சொல்ற பதில் உண்மையா இல்லன்னா நீ கண்டிப்பா கம்பி என்ன வேண்டி வரும்” சந்த்ரு அகமகிழ்ந்து “அடி பாவி நீ சந்தேகப்பட்டு இவ்ளோ தூரம் போய்டியா, இங்க வா காருல உக்காரு, இதுக்கு மேல நான் பேசி எந்த ப்ரோயசனமும் இல்ல,” காரில் ஏறி விரைந்தனர்.

அந்த பிரீஜிங் ஹால் வந்தடைந்தது. சந்துரு தியாவை அழச்சிட்டு மேனேஜர்கிட்ட போனான். எல்லா விவரத்தையும் விளக்கமாய் தெரியபடுத்தினான். அந்த ஹாலில் நடக்கும் எல்லா திருமணத்திலும் இடம்பெற்ற பொண்ணுங்க போட்டோ மற்றும் வீடியோவை பார்த்து தொடர்ந்து தனக்கு பெண் தேடினான் சந்த்ரு. ஆனால் நாளடைவில் அதுவே அவனுக்கு நோய் மாதிரி ஆகி விட்டது. எல்லா பொண்ணுங்க போட்டோ வீடியோவையும் சேகரிக்க ஆரம்பித்தான். இதற்காக அந்த மேனேஜருக்கு தேவைப்படும்போது பணம் கொடுத்து சரி செய்து வந்தான். இது தியாவுக்கு தெரிய கூடாது என்பதால் சந்துரு மறைத்ததை தெரியபடுத்தி விட்டான். அந்த பொண்ணுங்க ப்ரோபயல் வைத்து மேற்றிமோனியல் சர்வீஸ் செய்து சம்பாதித்து கொண்டிருந்ததையும் கூறி தலைகுனிந்து நின்றான்.

சந்த்ருவின் குறுக்குபுத்தியை நினைத்து ஒரு நிமிடம் சிரித்தவள், பின் சீரியஸ் ஆகி “ஹே புருசா அத விடு.. அப்போ உனக்கு இங்க அக்செஸ் இருக்கு, அப்போ வேல ஈசி,” சந்த்ரு அதிர்ந்து “ஹே தியா என்ன சொல்ற என் மேல கோவம் இல்லையா ? என்ன இவ்ளோ ஈசியா எடுத்துகிட்ட ? இதுக்கா நான் இவ்ளோ பயந்தேன்? தியா “ சேரி அத விடு, அந்த தேதில என்னோட ரூமுல cctv காமெராவா செக் பண்ண சொல்லு வா குயிக் பாஸ்ட்…” சந்துருவே மேனேஜர் ரூம் போயிட்டே “தியா ரூம் வாசல்லதான் யார் வர போரா னு பாக்கலாம், ரூம் உள்ள கேமரா இல்ல ஓகே வா ? ன்னு கம்ப்யூட்டர்ஐ தட்டினான்.

சிறிது நேர ஆர்வ தேடலுக்கு பிறகு தியாவுடன் நான்கு பெண்கள் தங்கி இருந்தனர். அதில் இருவர் தியாவின் தோழிகள். அவர்களுக்கு போன் செய்து சம்மந்தம் இல்லாமல் பேசி பார்த்தாள், பலனில்லை சலனமில்லாமல் பேசினார்கள். பின் மீதி இரண்டு பெண்கள் லலிதாவின் உறவினர்கள். அவர்களின் நம்பர் வாங்க தியா சிரமப்பட்டு கிடைக்காமல் போக, சந்த்ரு “தியா… கடைசியா என் தொழில்தான் நமக்கு கை கொடுத்திருக்கு”..ன்னு அவன் ஒரு ஆப்ல அந்த ஒரு பொண்ணு போட்டாவை கட்டினான் மொபைல நம்பரோடு. அதை டயல் பண்ணிக்கொண்டே தியா “இன்னொரு பொண்ணு போட்டோவும் நம்பரும் வச்சிருப்ப சீக்கிரம் எடு ன்னு அதட்டினாள். அதற்கு முன்னரே அதை தேடிகொண்டிருந்தான் சந்த்ரு. அது மட்டும் கிடைக்கல. தியா முறைக்கிறாள்.

அந்த முதல் பெண்ணிற்கு கால் போகிறது… தியா “ஹலோ ரஞ்சனி.. திஸ் இஸ் தியா பிரோம் ஊட்டி பிரீஜிங் மெமொரீஸ் ன்னு சொன்னதுதான் தாமதம்.. போன் கட் ஆனது.. சட்டென சந்தேகம் ரஞ்சனி மேல தாவியது. திரும்ப திரும்ப ட்ரை பண்ணிக்கொண்டே தியா, அவள் காலை கட் செய்ய,.. தியா “சந்த்ரு ஷி இஸ் தே கீ.. அவளுக்கு என்னமோ தெரிஞ்சிருக்கு, வா… அவ அட்றஸ் எடு சீக்கிரம்.. பறந்தாள். சந்த்ரு “அப்போ அந்த நாலாவது பொண்ணு….” அவளா இருக்காது வா இவள பஸ்டு பிடிப்போம். சந்த்ரு “இந்த பொண்ணு பக்கம்தான் வா உடனே போயிறலாம்” எதோ யூகித்தவளாய் தியா “பக்கமா அப்புறம் ஏன் ரூமுல தங்குனா? சம்திங் இஸ் ராங்… வா … வா.. அவ அலெர்ட் அகுரதுகுள்ள போலாம்… கையை பிடித்து இழுக்கிறாள்.

சந்துரு காரில் போய்கொண்டே “தியா ஒருவேல அவன் என்னைவிட பெட்டரா இருந்தா என்ன பண்ணுவ” தியா “ஹே ச் சீ ஆம்புல புத்திய காமிக்குது பாரு…” அவன் எவனா இருந்தாலும் நீதான் முதல் அடி அடிக்கனும்னு நான் நினைச்சிகிட்டு இருக்கேன்.. பேசுறத பாரு மெண்டல் ஒழுங்கா வண்டிய ஒட்டு” னு சொல்லி முடிக்குறதுக்குள்ள ஒரு பெரிய வளைவுல “டம்”னு ஒரு சவுண்டோட இவங்க கார எதிர வேகமா வந்த காரு மோதியது. எல்லாருக்கும் மிதமான காயம். சந்துருக்கு லேசான அடி, அவன் கொஞ்சம் பரவால்ல தடுமாறி எழும்பி , தியாவை பார்க்க தலையில் பலத்த அடி சுயநினைவு இல்லை. அதிக காயப்படாத சந்துரு பதறினான். ஆம்புலென்ஸ் போல் அலறினான்.

அருகே இருந்தவர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் வரவழைக்க பட்டது. அந்த எதிரி காரை கோவமாக திறந்தவனுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது.ஆமாம் அது வேற யாருமில்ல ரஞ்சனிதான். அவளையும் ஆம்புலேன்சில் அள்ளிபோட்டு அனைவரையும் அருகிருக்கும் ஆஸ்பிடலில் சேர்த்தது ஆம்புலென்ஸ். சந்துருவும் மயங்கிட்டான். நேரம் ஆஸ்பிடலில் அமைதி காத்தது.

ரெண்டு மூணு நாட்கள் ஆனது. சந்துரு ஓரளவுக்கு ரெடி ஆகிட்டான். அடுத்ததா ரஞ்சனி டிஸ்சார்ஜ் ஆனாள். சந்துரு அண்ட் தியா குடும்பம் ஆஸ்பிடலில் ஒன்று பட்டது தியாவால். தியா மெல்ல கண் திறந்தாள், மிகுந்த ஆர்வத்துடன் தியா “ரஞ்சனிக்கு என்னாச்சு சந்துரு”. சந்துரு யூகித்தவனாய் தடுமாறி நிதானித்து “இரு இரு தியா ஸ்ட்ரைன் பண்ணிக்காதே நான்தான் இருக்கேன்ல, வீட்ல எல்லாரும் வந்து இருக்காங்க அவங்கள பாரு, பிரண்ட் முக்கியம்தான் அவ நல்லா இருக்கா, நேத்தே வீட்டுக்கு போய்ட்டா, மீதத்த அப்புறம் சொல்றேன் அமைதியா இரு நான்தான் நல்லா இருக்கேன்ல” னு சமாதனபடுத்த முயற்சித்தான். தியா “அதில்லடா..” சந்துரு அம்மா “ஏம்மா மருமகளே நல்லா இருக்கியாமா?” ஆரம்பிச்சு ஆளாளுக்கு நலம் விசாரிச்சி சோகமானங்க. சுதாரித்து சந்த்ரு “தலையில் அடிபட்டு எல்லாத்தையும் மறந்திருந்த்தா நல்லா இருக்கும்னு நெனச்சேன் , இவ இன்னும் சார்ப் ஆயிட்டா ”னு காமெடி பண்ணுவதாக நினைத்து வழக்கம்போல் உளறினான். தியாவும் சூழ்நிலை காரணமா அமைதி காத்தாள். டிச்சார்ஜ் ஆகுவதற்கு முன் டாக்டரை தனியாக தியா சந்திக்க விரும்பினாள் சந்துரு அழைத்து சென்றான். டாக்டர் “ஹாய் தியா யூ பெர்பெக்ட்லி அல்ரைட் நொவ், இப்போ கேளுங்க என்ன டவுட்?. தியா சந்துருவை பார்க்க சந்துரு “டாக்டர் இவ மாசமா இருந்தா, அதான் அத பத்திதான்,…” டாக்டர் “அதான் சொன்னனே சந்துரு “இவங்க உயிர் பிழைச்சத பெரிய விசியம், டோன்ட் வொர்ரி நீங்க ரெண்டு பேரும், தாராளமா இன்னும் எதுனா குழந்த வேணா இனி பெத்துக்கலாம்,” தியா எதோ கேக்க வர சந்துரு தடுத்து “போலாம் தியா வா சொல்றேன்” தியா ஒரு மாதிரி ஆயிட்டாள்.

அடுத்ததா கார்ல வீட்டுக்கு போயிட்டு இருக்கும்போது, தியா வழக்கம்போல் விடாம ரஞ்சனியை பத்தி தொன தொன னு பேச ஆரம்பிசுட்டாள். சந்துரு “ப்ளிஸ் தியா உன் புருஷன் சொல்றேன், நம்பு” தியா “சரி சொல்லு” சந்துரு “சொல்றேன் நான் இப்போ உன் புருஷன் ஆகல, ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஆயிட்டேன்,” தியா “ஹே சந்துரு எதாவது சொல்லி என்னை சமாளிக்கத,” சந்துரு கடுப்பாகி “நீ எதையுமே நம்ப மாட்ட, உன் சந்தேக புத்திதான் உன் பலம்னு நெனச்சிட்டு இருக்க, அதான் உன் பலவீனமும் கூட, வா ரஞ்சனி வீட்டுக்கு போவம்னு காரை அழுத்தினான்.

ரஞ்சனி வீட்டுக்கு கார் வந்தது. மீண்டும் அதிர்ச்சி அங்க யாருமே இல்ல. தியா ஏமாற்றதுடன் சந்துருவை பாவமாக பார்க்க சந்துரு “இப்டி எதாவது நடக்கும்னு தெரிஞ்சிதான்… இரு வரேன்”னு காரை அருகிருந்த பார்க்கில் பார்க் பண்ணிட்டு, தன் புது போனை எடுத்து ஒரு வீடியோ காண்பித்தான். சந்துரு “உன்னைய இந்த உண்மை மட்டும்தான் காப்பாத்தும்னு நன்புறேன்”னு காரை விட்டு இறங்கினான். தியா அந்த வீடியோவில் ரஞ்சனி பேசுவதை ஆர்வமாக பார்த்தாள். அதில் ரஞ்சனி அன்றிரவு நடந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பு அவள்தான் என்பதை உறுதி படுத்தினாள். அதேபோல் சந்துருதான் அந்த ஐந்தாம் நபர் என்பதையும், தியாவும் சந்துருவும் இருவரும் விருப்பமான முறையில் கலவியில் ஈடுபட்டதாகவும் ஆணித்தரமாகவும் கூறினாள். தியா ஒரு மாதிரி திருப்தி ஆனாள். ஆனாலும் எதோ இடிக்குதே ன்னு யோசித்தாள்.

சந்துரு காரில் ஏறி “நொவ் ஆர் யூ ஓகே பொண்டாட்டி?னு தலையில் கிஸ் பண்ணான். அவ அந்த ஸ்பரிசத்தில் லேசாக மயங்கி மனம் மாறினாள். சந்துரு “சரி வா செகண்டு நைட்டுக்கு ரெடியாவோம்” ன்னான். அவள் செல்லமாக அடிக்க கார் மீண்டும் உறுமியது. திருமணம் இன்னும் இரு நாளில் ஆனால் அன்று இரவே சந்த்ருவும் தியாவும் சந்தியாவுக்கு தயாராகிட்டாங்க. ஒருவழியாக தியா வாழ்வில் நிம்மதியை விதைத்து விட்டான் சந்துரு. ஆனால் உண்மை ….

ஆனால் மிகபெரிய ரகசியம் அந்த டாக்டர், ரஞ்சனி மற்றும் சந்துருவால் மறைக்கபட்டு மறுக்கப்பட்டு மாற்றபட்டது என்பதே உண்மை. உண்மையில் ரஞ்சனி முழு பெண் இல்லை. அவள்தான் தியாவின் கற்பத்திற்கு காரணம். அதை சந்துரு டாக்டர் மூலம் தெரிந்து கொண்டான். தியாவுடன் சேர்ந்து வாழ தேவையான காரணிகளை மட்டும் தெரியபடுத்தி உண்மையான காதலுடன் சந்த்ரு தியாவை பத்திரமாக பார்த்துகொண்டான். ஆனால் அந்த CCTV மற்றும் ரஞ்சனியின் போதை ஏனைய சந்தேகங்கள் தியாவுக்கு என்று வந்தாலும் சந்துரு பொழப்பு மீண்டும் அவஸ்தைதான். சில இவ்வாறான குற்றவுணர்ச்சியுடன் காலத்தை கடந்தான் காதலுடன். மீத முற்றிய உண்மை அந்த இருட்டுக்கு மட்டுமே வெளிச்சம். தீர்மானிக்கப்பட்ட உண்மை என்று இங்கு ஏதுமில்லை. ஒரு விபத்து இன்னொரு விபத்தில் விபத்தாய் கடந்தது.

“உலக நிழ்வுகள் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லையென்றாலும்கூட, தொடர்பு படுத்திக்கொள்ள நிச்சயமாக ஏதுவானது”

“விபத்து, நேர்மறை மற்றும் எதிர்மறைக்கு அப்பாற்பட்டது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *