முல்லை அமுதன்

 

எழுத்தாளர் முல்லை அமுதன் கல்லியங்காடு, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முல்லைஅமுதன் எனும் பேயரில் 80களில் இருந்து எழுதி வருகிறார். அவர் திருகோணமலை பெருந்தெரு தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்/செங்குந்தா இந்துக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆகியவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்தார்.புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகிறார். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் எனப் பல தளங்களிலும் கால் பதித்தவர். வருடந்தோரும் இங்கிலாந்தில் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களுக்கான கண்காட்சி ஒன்றினை நடத்திவருவதோடு, ஈழத்து நூல்களை ஆவணப்படுத்தியும் வருவதுடன், காற்றுவெளி என்ற சஞ்சிகையையும் வெளியீட்டு வருகிறார்.இவருக்கு இங்கிலாந்து ரூட்டிங் முத்துமாரியம்மன் கோவில் அறங்காவர் குழுவினரால் முதமிழ் விழாவில் (14/04/2012) ‘பைந்தமிழ்க் காவலர்’ எனும் பட்டமளித்துக் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

படைப்புக்களை:
சிரித்திரன்,மேகம்(யாழ்ப்பாணம்),தினக்குரல்,வீரகேசரி,கிழக்கு,இலக்கு,மகாகவி,இனிய நந்தவனம்,பொதியவெற்பன் மலர்,தாரகை(இலங்கை),நான்காவது பரிமாணம்(கனடா),கண்ணில் தெரியுது வானம்(தொகுப்பு),இன்னுமொரு காலடி(தொகுப்பு),யுகம் மாறும்(தொகுப்பு), கவிதை(யாழ்ப்பாணம்), ஈழநாடு(பிரான்ஸ்), ஈழமுரசு(பிரான்ஸ்). புதினம்(லண்டன்),ஈழகேசரி(லண்டன்), நவமணி(இலங்கை),தாய்வீடு(கனடா),மண், ஜீவநதி, ஞானம், மேகம்(லண்டன்), அருவி

இணையங்கள்:
திண்னை,பதிவுகள், அக்கினிக்குஞ்சு, வணக்கம் லண்டன், தமிழ்விசை, வார்ப்பு, வல்லமை,

நூல்கள்:

  • நித்யகல்யாணி (கவிதை)(1981)(கவின் அச்சகம்/சிரித்திரன்)
  • விடியத்துடிக்கும் ராத்திரிகள் (கவிதை),
  • புதிய அடிமைகள் (கவிதை),(மேகம் வெளியீடு)
  • விழுதுகள் மண்ணைத் தொடும் (கவிதை), காந்தளகம்
  • ஆத்மா(நாவல்), காந்தளகம்
  • ஸ்நேகம் (நாவல்), காந்தளகம்
  • யுத்த காண்டம் (கவிதை),
  • பட்டங்கள் சுமக்கின்றான் (நாவல்),ரிஷபம் பதிப்பகம்
  • முடிந்த கதை தொடர்வதில்லை(நாவல்) காந்தளகம்
  • யாகம் (நாவல்) ,ரிஷபம் பதிப்பகம்
  • இசைக்குள் அடங்காத பாடல்கள்(கவிதை)இலங்கை தேசிய கலை இலக்கியப்பேரவை
  • எழுத்தாளர் விபரத்திரட்டு(ஆவணம்) (ஓவியா பதிப்பகம்)
  • விமோசனம் நாளை (நாவல்),
  • இலக்கியப்பூக்கள்(கட்டுரைகளின் தொகுப்பு/தொகுதி 1&2)
  • இன்று என் வீடு அழகாய் இல்லை(கவிதை) (ஓவியா பதிப்பகம்)

பிற:

  • மொழிநூறு,
  • சுதந்திரன் கவிதைகள் (ஓவியா பதிப்பகம்)
  • A pilgrimage to the Holy Land(by kaarthika.mahendran) (ஓவியா பதிப்பகம்)
  • Subramaniya Bharathi and other Legends of Carnatic music (by kaarthika.mahendran)
  • ஐரோப்பிய தமிழ் அறிஞர்கள்,எழுத்தாளர்கள்,கலைஞர்கள் வளர்ச்சி சம்மேளனம்(2006)

விருது:

  • பைந்தமிழ்க்காவலர்(இங்கிலாந்து டூட்டிங் முத்துமாரியம்மன் கோவில் அறக்கட்டளை (14/04/2012)
  • தமிழினி விருது 2013

இதழாசிரியர்:

  • காற்றுவெளி(சிற்றிதழ்)
  • நெய்தல்(கவி இதழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *