
அடிப்படையில் பாரததேவி ஒரு கதைசொல்லி. ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரன்…’ என்று அவர் ஆரம்பித்தால், அவரது சொக்கலிங்கபுரம் கிராமமே (ராஜபாளையம் அருகில் உள்ளது) வந்து கதை கேட்க உட்கார்ந்துவிடும். நாகரிகப் பூச்சு அறியாத வார்த்தைகளும் வர்ணனைகளும் பாரததேவியின் ஸ்பெஷாலிட்டி!
களத்துமேடுகளிலும், கண்மாய் கரைகளிலும் சொல்லப்படும் கிராமத்துக் கதைகள் காற்றோடு கரைந்துவிடாமல் சேகரித்து, 6 புத்தகங்கள் வெளியிட்டிருக்கும் பாரததேவி படித்தது, ஐந்தாம் வகுப்பு வரைதான்!
சிறுவயதில் மாடுமேய்க்கப் போனபோது கதை கேட்டு வளர்ந்தவர், இன்று வசதி வாய்ப்புகள் வந்துவிட்டாலும், கிராமத்து வேலைகளுக்கு போய்க் கொண்டிருக்கிறார்… கதைகள் சேகரிக்க!
கரிசல் காட்டு காதலை மட்டுமா சொல்றாங்க? அந்தப் பொண்ணுங்களோட புத்திசாலித்தனத்தையுமில்ல சொல்லி அசரவைக்கறாங்க!’’ & ‘கதைசொல்லி’ பாரததேவியை புகழ்ந்து தள்ளுகிறார்கள் வாசகிகள்.
கணவர் ராசு, ஓய்வு பெற்ற ஆசிரியர். ஒரே மகன் அருண்சதீஷ்குமார், அமெரிக்காவில் கெமிக்கல் இன்ஜினீயரிங் படிப்பில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்.
கரிசல் எழுத்தாளர்களின் முன்னோடியான கி.ராஜநாராயணனை குருவாக ஏற்றிருக்கும் பாரததேவியின் கிராமத்து விருந்து ஆரம்பமாகிறது. ரசிப்போம், வாருங்கள்!
பாரததேவி அம்மா உங்களுடைய அனைத்து கதைகளையும் நான் படித்தேன் அத்தனை அருமையான கதைகள் அம்மா..வாழ்த்துக்கள். தங்கள் பணி சிறக்க .. பெருமை, புகழ் வளர…
நமது மண்ணின் பெருமையை பறை சாற்றும் சிறுகதைகளை
இன்னும் அதிகமாக எழுத என் வாழ்த்துக்கள்.
சொக்கலிங்கபுரம் வாசகி
நமது மண்ணின் பெருமையை பறை சாற்றும் சிறுகதைகளை
இன்னும் அதிகமாக எழுத என் வாழ்த்துக்கள்.