சௌ.முரளிதரன்

 

முரளிதMuralidharanரன் எனும் எனது இயற்பெயரில் நான் 2012 அக்டோபர் முதல் சிறுகதை எழுதி வருகிறேன்.

நான் அரசுடைமை வங்கியில், பணி புரிந்து விருப்ப ஒய்வு பெற்றவன். கோவன்சிஸ், மற்றும் வெளி நாட்டு வங்கிகளில், ரிஸ்க் ஹெட் மற்றும் ஆடிட்டராக பணி புரிந்த அனுபவம் உண்டு. மன வளம், கணிணி மற்றும் வணிக சம்பந்த கதை எழுத ஆவல். நல்ல கருத்து கூற விருப்பம்.

குங்குமம், குமுதம் போன்ற பத்திரிகைகளில் எனது சில படைப்புகள் வெளி வந்துள்ளன. இப்போது இணைய தளங்களில் எழுதி வருகிறேன்.

இப்போது இணைய தளங்களில் எழுதி வருகிறேன். எனது வலைப்பூவில் http://sourirajanmuralidharan.blog.com/archives/

எனது கதைகளை காணலாம். முக நூலிலும், சற்று இயங்கி வருகிறேன்.

https://www.facebook.com/pages/Muralidharan/354325064711079

எனது முகவரி : muralidharan2012@gmail.com

நான் இதுவரை முப்பத்தி ஐந்து சிறுகதைகள் எழுதி இருக்கிறேன் (எனது பெயரிலும், மாதவ் எனும் புனைபெயரிலும்).

கதைகளின் குறிப்புக்கள்:

1. சந்தேகம் : பின் தொடரும் முரட்டு கட்டை குட்டையான ஆள் :விறுவிறுப்பான திகில் சம்பவங்கள் நிறைந்தது

2. அவன் வழி தனி வழி : வங்கி திருட்டு : விழிப்புணர்வு கதை: சஸ்பென்ஸ்

3. என்னைப் போல் எவன்? வாக்கிங் போகும் பார்க்கில் நடக்கும் கூத்துக்கள். நகைச்சுவை

4. திருடனுக்கு ஜே ! ஹெமொக்ரோமொடோசிஸ் நோய், எப்படி திருடன் நோயாளியை காப்பாற்றினான், ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு.

5. வள்ளுவனுடன் விஜயன்: கதை எழுதுவதெப்படி? ஒரு நகைச்சுவை கற்பனை

6. விளங்கவில்லை விமலாவிற்கு: பாவம் புண்ணியம், பிறப்பு இறப்பு பற்றிய சிந்தனை –உயிரியல் ஆசிரியைக்கு எழும் தத்துவ சிந்தனை

7. மாற்றம் எங்கே? :ஒரு நான்கு வயது குழந்தையின் குறும்பு,அவனை திட்டும் சுற்றியுள்ள மக்கள் மனம் மாறி அவனை கொஞ்சுவது எப்படி?

8. வேறென்ன வேண்டும் ?: அம்மாவை இழந்த 4ம் வகுப்பு பையன் மற்றும் அவனது ஆசிரியையின் இணைப்பு. ஒரு உளவியல் சார்ந்த கதை.

9. எங்கே நிம்மதி? : ஸ்டேடஸ் அங்க்சைடி”(status anxiety) பற்றிய கதை. நம் நிலை தாழ்ந்து விடுமோ, நம்ம வீட்டிலே , நமது நண்பர்கள், உறவுகள் நம்மை அவமதிப்பார்களோ என்ற பயமே தற்கொலைக்கு ஒரு முக்கிய காரணம் இதை எப்படி போக்குவது என்பது பற்றி ஒரு கற்பனை .

10. வேண்டாத வேலை: கோபி அனுவிற்கு உதவி செய்ய நினைத்தான். அவனுக்கு மத்தவங்க விஷயத்திலே மூக்கை நீட்ட பிடிக்கும். தான் கொஞ்சம் புத்திசாலி என நினைப்பு. வேண்டாத வேலையில் ஈடுபட்டதனால் ஏற்படும் பிரச்னைகள். அவன் இறுதியில் எடுத்த முடிவென்ன என்பது பற்றிய கதை கொஞ்சம் நகைச்சுவையோடு. உளவியல் சம்பந்த பட்டது.

11. மணி மாலா: (எனக்கு வேண்டாம்): மணி ஒரு தற்பெருமை அதிகமுள்ளவன்.கல்யாணத்திற்கு பெண் தேடிக் கொண்டிருகிறார்கள். மாலாஎம்.பி.ஏ. உளவியல் பட்டம் வேறு. மணியும் மாலாவும் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டெலில். சந்திப்பு. அவள் அவனை விரும்பினாளா?அவனுக்கும்அவளுக்கும் ஏற்பட்ட பிரச்னைகள் என்ன? முடிவு -சஸ்பென்ஸ்

12. இறைவா ! இது நியாயமா?ஆன்மிகம் பற்றிய கதை. மன நிலை பாதிக்க பட்ட ஒரு தாய், விபத்தில் உயிரிழந்த மகள், தனித்து விடப்பட்ட இரண்டாம் மகள், அயோக்கிய அப்பா பற்றிய கதை.

13. அவள் அப்படித்தான் !
தனம்! அவள் பாவம். தன்னிலை உணராத பரிதாபம். அவள் சோம்பி இருந்தே சுகம் கண்டவள். அவள் அப்படித்தான். சிலரை கடைசி வரை மாற்றமுடியாது. கஷ்டம் தான்! கூட இருப்பவருக்கு !

14. சாதனையாளர் :
கல்லூரியில் படித்த, ஐந்து சிறந்த சாதனையாளருக்கு கெளரவ விருது. நடிகனுக்கு ஏன்?

15. மறதி by முரளி
தேவையில்லாத சந்தேகங்கள், மனக் குழப்பங்கள் மீண்டும் மீண்டும் தோன்றி ஒரே காரியத்தை செய்ய தூண்டினால், அது ஒ.சி.டி. மீனாவின் பிரச்னை அதுதான்.

16. பொய்கள்:
மனோவிற்கு வயது ஏழு. அவனுக்கு குழப்பம். பாட்டி பொய் சொல்றாங்களே.’நாம்ப பொய் சொல்லலாமா கூடாதா? அது தப்பில்லையா ? எந்தவிஷயத்திற்கு பொய் சொல்லலாம் ? எதுக்கெல்லாம் சொல்லக் கூடாது? ‘

17. யமனுடன் ஒரு சந்திப்பு:
மார்கண்டேயன் விபத்தில் செத்து புழைச்சிருக்கான். யமலோக பட்டணம் வரை போயிட்டு வந்திருக்கான். யமலோகத்திலே அவன் பாத்ததுதான். கரு : விதி. மாற்ற யாராலும் முடியாது.

18. பார்வைகள் பலவிதம் ! – by முரளி (கதை எண் 19)பேருந்தில் நடக்கும் ஒரு சிறு நிகழ்ச்சியை யார் எவ்விதம் பார்க்கிறார்கள் ?

19. சோம்பேறி – ஒரு சோம்பேறியின் வாழ்வில் முன்னேற வழி காட்டும் இன்னொரு சோம்பேறி.

20. சங்கர ராமன்
வாழ்க்கையில் முன்னேற காரணம் (ங்கள்) என்ன?ஜீனா, வளர்ப்பா,பெற்றோரா, வசதியா, சந்தர்ப்பங்களா?
ஒருவேளை, பகுத்தறிவு, நடைமுறை அறிவாற்றல், ஆக்கபூர்வ அறிவு இவைகளில் சிலவோ ?அல்லது எல்லாம் சேர்ந்ததா?

21. நன்றே செய், அதுவும் இன்றே செய்
கண்ணன் தள்ளிப் போடுவதில் கில்லாடி. மாணவர் அனைவரும்,தனித்தனியாக கணினி சம்பந்தமாக ஒரு ப்ராஜக்ட் பண்ண வேண்டும். பாத்துக்கலாம். இப்பத்திக்கு ப்ராஜக்டை ஓரம் கட்டிவிட்டான்.
கண்ணன் மட்டும் பெயில். மிக குறைந்த மதிப்பெண். இன்னொரு வாய்ப்பு கிடைத்தது. இப்போது வெற்றி. எப்படி?

22. சிடுமூஞ்சி(முன்கோபி):கோபி ஒரு முன்கோபி. அவனுக்கு தொட்டதெற்கெல்லாம் ஒரு கோபம். ஒரு ஆத்திரம் வரும்.
தான் சொல்படி மற்றவர் நடக்காவிட்டாலோ அல்லது தான் நினைத்தது நடக்கா விட்டாலோ அவனுக்கு கோபம் தலைக்கேறிவிடும். அவன் மாறியது எப்படி? எப்போது?

23. எனக்கினி கவலை என்றுமே இல்லை!நேற்று என்பது சரித்திரம். நாளை என்பது மர்மம். இன்று என்பது இயற்கை நமக்களித்த வரம். அதனாலே தான் அதை ஆங்கிலத்திலே பிரசன்ட் அப்படின்னு சொல்லறாங்க. பிரச்சனை இல்லாம யாருமே இருக்க முடியாது.பிரச்னைகளை கண்டு பயப்படாமே, வொர்ரி பண்ணிக்காம, சந்தோஷமா வாழ கற்றுக் கொள்வது எப்படி என்பதை விளக்கும் கதை.

24. அ- வசிய கொலை – by முரளி ஹிப்னாடிசம் – கொலை – பழி வாங்கல் – த்ரில்லர்

25. இழுபறி – பெண்களிடமிருந்து தங்க சங்கிலி பறிக்கும் காதல்பைத்தியங்கள் கதை – சஸ்பென்ஸ்

26 நகை – நகைக் கடையில் நூதன மோதிர திருட்டு. த்ரில்லர் சஸ்பென்ஸ்

27 .துப்பு ! கொடுத்தது தப்பு !! 10th Aug 2013- ஒரு வங்கி அதிகாரி, கொள்ளைக்காரன் என சந்தேகப்பட்டு போலீசில் சொல்ல, போலீஸ் ஒரு தீவிரவாதியை பிடித்து விடுகிறது. தீவிரவாதி இரண்டு வருடம் கழித்து, வங்கி அதிகாரியின் ஊருக்கே வர, வங்கி அதிகாரி மீண்டும் போலீசுக்கு தகவல் கொடுக்கிறார். என்ன ஆனது : சஸ்பென்ஸ்

28. எண்ணத்தில் கவனம் -vivegam- சில நிமிட நிதானம்….பெரிய பலனைத் தரும். கோபமும் வெறுப்பும், ஒரு எரியற தணல் மாதிரி. கையில் கிடைச்சதை எடுத்து மற்றவர் பேரில் எறியலாம்னு நினைப்போம். ஆனால் நம்ப கையை அது முதல்லே சுட்டுடும். – இந்த கருத்தை விளக்கும் கதை.

29. ஊதாரி : இன்சூரன்ஸ் திருட்டு – சஸ்பென்ஸ் த்ரில்லர்

30. மாத்தி யோசி – சிறுகதை எண் 31 – 11th Sep 2013

முத்து. சென்னையில் ஐந்து சிறிய ஸ்டேஷனரி கடைகளின் சொந்தக்காரன். கடுமையான உழைப்பாளி. இந்த தொழிலின் நெளிவு சுளிவு தெரிந்தவன். கடைகள் வைத்து ஐந்து வருடம் ஆகிறது. ஆனாலும், கடை லாபம் என்னமோ கம்மிதான். காரணம் என்ன? எப்படி சரி செய்தான்? எவ்விதம் வியாபாரத்தை மேம்படுத்தினான்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *