கண்ணாடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 12, 2025
பார்வையிட்டோர்: 717 
 
 

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

பஸ் வளைந்து திரும்ப வைகை அணையின் வண்ண ஒளிச் சிமிட்டல்கள் தெரிந்தன. கடந்த முக்கால் மணி நேரமாகப் பெரியகுளத்திலிருந்து, ஊறுகாய் ஜாடிவில் குலுங்கும் நெல்லிகளைப் போல பஸ்ஸில் அடிபட்ட கோர்வு நீங்கி மாணவிகளை உற்சாகம் பற்றிக் கொண்டது. 

வாயிலில் டோக்கன் வாங்கி, பஸ் உள்ளே நுழைந்து அசந்து நிற்கும் முன்பே ‘தொப நொப’ என உதிர்ந்தார்கள். 

மாலைக்காற்று குளிர்வாய் தடவி விட்டது.. 

முதுகு வளைத்து, கை, கால்களை உதறி நடந்தனர்.

அகன்று சுருண்டோடிய நீரில் கால் நீட்டி, முகம் கழுவி, தலையைச் சீர்படுத்திக் கொண்டனர். 

சூடான வடை, சுண்டல் என வாங்கிக் கொறிக்க ஆரம்பித்தவர்களை மேடம் அவசரப்படுத்தினார்கள், 

”இப்பவே சுத்த ஆரம்பிச்சாதான் முழுகம் பார்க்கலாம். லைட்ஸ் எட்டரைக்கு அணைஞ்சிடும்.” 

அந்நேரம் அந்தப் பேருந்து சூறாவளியைப் போல நுழைந்தது. வண்ணக் கொத்துக்களாய் நின்றிருந்த மாணவிகளைப் பார்த்து சமுத்திரமாய் ஆர்ப்பரித்தது? 

‘இன்னும் என்ளை என்ன செய்யப் போகிறாம்… 
அன்பே… அன்பே… ஏ’ என்று ஸ்பீக்கர் அலறி உருகியது.

மாணவிகளில் அகிலா கடைசியாய், பிற மாணவிகளின் சுண்டல், முறுக்கு, கணக்குகளைத் தீர்த்துத் திரும்பிக் கொண்டிருந்தாள். உயரமும் வாளிப்புமான அவளைக் கண்ட புதுபஸ் மாணவனுக்கு சந்தோஷம் பிய்த்துக் கொள்ள – ஒரு கையால் சும்பியில் தொங்கி, மறுகை நீட்டி கையிலிருந்த பையால் அவள் முதுகைத் தட்டினான். 

பஸ்ஸின் வேகமோ, அடி பலமோ, அல்லது எதிர்பாராத அதிர்ச்சி என்பதாலோ அகிலா ‘ஓ’வெனக் சுந்தினாள். அவன் மூக்குக் கண்ணாடி எகிறிப் பறச்சு, ‘மளுக்’கென முன்னே சரிந்தாள். 

“என்ன… என்னாச்சு?” – தோழிகள் ஓடி வந்து தூக்க, பஸ்ஸின் ஆரவாரம் டக்கென்று அடங்கியது. 

அதனின்று யாரும் இறங்கவில்லை. 

“பாவிப் பய அடிச்சுச் சரிச்சுட்டானுவம்மா” கடலைக் கிழவர் விளக்கினார். 

செய்தி தவ்வித் தாண்டிய இரண்டாம் நிமிடம் அங்கு ஒரு போலீஸ்காரர் ஆஜராகி விட்டார். 

அகிலா அதற்குள் எழுந்து விட்டாள். 

உள்ளங்கைகள் கல் அழுந்திக் கன்றிக் கிடக்க, சிராய்த்த முழங்காலைத் தடவிக் கொண்டவளின் உடல் நடுங்கியது. 

“என்னம்மா, திக்க முடியுதார உதறி விடு” போலீஸ் விசாரித்தார். 

“ம்… ஒண்ணுமில்லை… கண்… கண்ணாடியத்தான் காணலை…” 

சில மாணவிகள் குளிந்து தேட ஆரம்பிக்க, பிறர் – 

“சார் – இப்பத்தான் துழைஞ்சாங்க சார், அதுக்குள்ள இந்த வேலை. விடாதீங்க நீங்க” என்று கைகாட்ட, சாட்சிக்கு சுண்டல் கிழவர் தயாராய் நின்றார். 

அதற்குள் புதுவீட்டினுள் நுழையும் நாய்க்குட்டி போல் இளைஞர்கள் தயக்கமாய் அரவமில்லாது இறங்கி நின்றனர். 

“யாருடா அது?” 

“சிகப்பும் வெள்ளையுமா சட்டை போட்ட பய சார்” 

முறுக்குப் பெண் முணகலில் கண்டுபிடிப்பது சுலபமாயிற்று. 

‘நாந்தான்’ ஒத்துக் கொண்டான். 

கொத்தாய் சட்டையைப் பற்றி போலீஸ் கை ஓங்க – அகிலா தடுத்தாள். 

“எப்பவும் இப்படியே லேசா போயிருமாம்மா?” என்றவரிடம்,

“வேணாம் சார், ப்ளீஸ் எனக்கொண்ணுமில்லையே… விட்டிருங்க. சுற்றுலான்னு வந்திருக்காங்க…” என்றாள். நாக்கைத் தெற்றியபடி இளைஞனை தெருங்கிளார். 

”என்னலே கையை நீட்டுற வேலை? ஸ்டேஷனுக்குப் போவலாமா?” 

இப்போது மேடமும், மறு பஸ்ஸின் ஆசிரியகும் தலையிட்டனர். 

“வந்த இடத்திலே பிரச்னையா ஆயிட வேண்டாம் சார். எச்சரிக்கைப் பண்ணி விட்டிருங்க”. 

இத்தனைக்கும் நாற்பது பேருக்குக் குறையாதிருந்த மாணவர்கள், எதிர்ப்பேயில்லாது அடங்கி நின்றது ஆச்சர்யம்தான். 

மூக்குக் கண்ணாடியைத் தொலைத்து விட்டு, சுலங்கலாய் விழித்தபடி அகிலா நின்றது. பேசியது, அவர்களைக் கட்டிப் போட்டிருந்தது போலும். 

“கண்ணாடி கிடைச்சுதாம்மா?” 

“காணலை சார். அவளுக்கு ரொம்ப கிட்டப் பார்வை”

“எவ்வளவு இருக்கும்மா?” 

“பவர்… மைனஸ் ஐஞ்சு” 

“அதில்லைம்மா-என்ன விலையிருக்கும்னு கேக்கறேன்”

“ம்… நானூறு இருக்கும்… “

“எடுங்கலே…” 

“இப்ப என்கிட்ட அத்தனைப் பணம்…”

“கூட்டுக்களவாணிங்கதானே, பிறகென்ன, வாங்கிக் கொடு… சரசரவென நோட்டுகள் கைமாறி எண்ணப்பட்டன. 

”வேணாங்க சார்…” 

“கேஸ் வேணாம் சரி. இது அபராதம் போல இருக்கட்டும்மா.. சரியா இருக்கான்னு பாத்துருங்க” – கற்றையை நீட்டினார். 

எண்ணிப் பார்த்த சிநேகிதி, 

“கூட பத்து ரூபா இருக்கு சார்” என்றாள். 

“இருக்கட்டும். கண்ணாடி கடைக்கு ஆட்டோவுல போகணுமில்லை?” லேசாகப் புன்னகைத்து விட்டு அவர் நகர, கூட்டமும் கலைந்தது. 

அகிலாவை ஐந்து நிமிடம் அமரச் செய்து, காபி வாங்கித் தந்த பின் கிளம்பினர். 

தண்ணீரும், கலர் பல்புமாய் மின்ன- 

அகிலாவின் அரை குருட்டுக் கண்களுக்கு ஈற்றிலும் மங்கலாய் வெளிச்சப் பொட்டுக்களும் நீரின் பளபளப்பும் தெரிந்தன. 

படியேறி நடக்க ஆரம்பித்தனர். 

”கண்ணன் ராதை சிலை அம்சமாயிருக்கு” 

‘பக்கத்திலே போய்ப் பார்ப்போம். அகிலாவுக்கும் தெரியணுமில்லை?” 

“நான் தடவித்தான் பார்க்கணும்”- அகிலா புன்னகைத்தாள்.

“பார்க்கறவங்க தப்பா எடுத்துக்கப் போறாங்க” – கிளம்பிய சிரிப்பு அலையில் சூழ்நிலை சகஜமாக ஆரம்பித்தது. 

“ஐயோ இதைப்பாரேன்” ஒருத்தி கூச்சலிட, சற்றே மறந்திருந்த பதட்டம் மீண்டும் பற்றிக் கொண்டது. 

“என்ன… என்னடீ?” பதறினார்கள்.

“கண்ணாடி- அகிலாவோட கண்ணாடி!” 

முக்கால் ஆள் உயரத்திற்கு சீராக வெட்டப்பட்டிருந்த வேலிப் புதரின் மேலாசு சுற்றிலுமிருந்த சிவப்பு விளக்கின் ஒளியை பிரதிபலித்தபடி கிடந்தது கண்ணாடி. 

“என்னதுதான். தேங்க் காட்…” 

“ஒரு கீறல் இல்லை” 

அகிலா விரல்கள் நடுங்க அதைப் போட்டுக் கொண்டாள். 

“ஒரு மணி நேரம் போடாது போனால் பயங்கரத் தலைவலி வந்திடும். என்ன பண்றதுன்னு பயந்தே போனேன்.”

“உங்குணத்துக்கு எதுவும் வராது அகில்”

சரசரவென்று மறுபடி பேச்சும் சிரிப்பும் பற்றிக் கொண்டன.

ஆசிரியைகளுக்கும் செய்தி போனது. 

திடீரெனத் திரும்பிய அகிலா விடுவிடுவென நடந்தாள். “… இந்தப் பக்கம் குழம்பிட்டியா?” “தெரியும்… தெரியும் சிரித்தாள் அகிலா. ‘பின்னே?’ 

“பணத்தைத் திரும்ப கொடுத்திடலாம்:” 

“இந்த கலாட்டாவுக்கு அபராதமா இருந்துட்டுப் போகுது.”

“சேச்சே… கண்ணாடி தாள் கிடைச்சுருச்சே..” 

“மேடம்கிட்டே சொல்லிடு.!” 

“விட மாட்டாங்க. நான் மட்டுமா போயிட்டு வரேன்” நழுவி விரைந்தாள். 

இரண்டு பேர் மட்டும் விடாது அவளைத் தொடர்ந்தனர்.

பஸ் அருகே மாணவர்களைக் காணவில்லை.

“தோ. அங்கே” பாதையின் மறுபுறம் நீரினுள் அணைத்தபடி நின்றிருந்தனர். பேச்சு, சிரிப்பு எதுவுமில்லை. 

“நம்ம பின்னால வந்தா வம்புன்னு நின்னுட்டாங்க போல…“

“இங்கேயே நில்லுங்க – மூணே நிமிஷம்.” 

அந்த சிவப்பு வெள்ளைச்சட்டைக்காரனை மீண்டும் எளிதில் கண்டுபிடிக்க முடிந்தது. 

இவள் நெருங்க, அவர்களின் கண்களில் மிரட்சி – இவளையும் தாண்டிப் பார்வை போலீஸ்காரருக்காய் துழாவியது. 

“கண்ணாடி கிடைச்சிருச்சு” அவளுக்கு விரைந்து நடந்ததிலும், அத்தனைப் பேரின் முன் தனியாய் நின்றதிலும் லேசாக மூச்சிரைத்தது. 

”உங்க பணத்தைக் கொடுத்திட்டுப் போக வந்தேன்”

நீரை விட்டு, சுரையில் நின்ற அவளை நெருங்கினார்.

“எ.. எங்கே கிடந்தது?” 

”ஏதோ மேஜை மேலே வச்சாற்போல ஒரு புதர் மேலே”

நோட்டுக்களை நீட்டினாள். 

ஒருவரையொருவர் பார்த்தபின், 

“நாங்க, நான் பண்ணினது தப்புதாங்க. அதனால இருக்கட்டும்” 

“…நோ..எனக்கென்ன செலவு? உங்க பணம்” 

பேச்சுடன் புள்னகையும் வந்தது. 

அவள் பரிவு, பேச்சில் அவர்கள் மனம் குறுகுறுத்தது. ‘ஏன் இவளைத் தொட, சீண்ட, தரந்தாழந்து போனோம்’ 

“ஸாரிங்க… ரொம்ப ஸாரி…” 

“பணம்…?” 

“தாங்க்ஸ்” பதில் முறுவலுடன் விரல் படாது பணத்தை வாங்கிக் கொண்டான். 

அவளின் இயல்பான சிநேக பாவம் கண்ணாடியாய் அவர்களிலும் நட்பைப் பிரதிபலிக்கச் செய்தது. 

“நாங்க திருச்சி… நீங்க…?” 

“மதுரை. எட்டரைக்கு லைட்ஸ் அணைஞ்சிடும். அதுக்குள்ளே சுற்றிப் பாருங்க. வரேன்”, 

“சரி'” புன்னகையில் அவர்கள் உதடுகளோடு, மனங்களும் விரிந்தன. 

– ராஜம் – நவம்பர் 1994.

– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *