கடப்பாடு





(1975ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“நாங்கள் சிட்டுக்குருவிகளுக்கு நிச்சயம் கடமைப்பட்டவர்கள்,

அவற்றின் பணி தனித்துவமானது எங்களைப் போல வான வெளியிலும் தோப்புக் கூடலிலும் மட்டுமே அவை பறவை மொழியைப் பேசவில்லை. மனித இனத்தின் நடுவில் கூடப் பிரதேசங்களிலும், வீடுகளிலும் வாழ்ந்து கொண்டு, அவை எம் பறவை மொழியையும், பண்பாட்டையும் வளர்த்து வருகின்றன. அவற்றிற்கு நாம் நன்றி செலுத்துகிறோம்.”
என்று பறக்கிற பறவைகள் மாநாட்டில் பருந்து தீர்மானங் கொண்டு வந்தது.
“மனிதப் பிரதேசங்களில் பறவை மொழியையும், பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டிய தேவை என்ன? ஒரு விதத்தில், அதுகூட, ஆக்கிரமிப்பும் ஊடுருவலும் ஆகும் அல்லவா?”
கொக்கு குரலெழுப்பியது.
– ‘கடுகு’ குறுங்கதைத் தொகுதி, முதற் பதிப்பு: ஆடி 1975, ஐ.சாந்தன் வெளியீடு, மானிப்பாய்.
– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.