கச்சணன் கண்ணாடி வாங்கப்போன கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 16, 2025
பார்வையிட்டோர்: 29 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கச்சணன் என்பவன் கல்வியில்லாதவன். அவன் ஒரு செல்வன் வீட்டில் தோட்டக்காரனா யிருந்தான். செல்வனுக்கு சற்றே வெள்ளெழுத்து. ஆகையால் அவன் கண்ணாடி போடாமல் வாசிக்க முடியாது. அதைக் கவனித்த கச்சணன், ‘கண்ணாடி யிருப்பதனால் தான் இவர் வாசிக்கிறார்; ஆகவே நாமும் கண்ணாடி அணிந்து கொண் டால் வாசிக்கலாம், என்று எண்ணினான். 

அதுமுதல் அவன், கடைத்தெரு வழியாகப் போகும்போதெல்லாம் கண்ணாடிக் கடைகளில் நுழைந்து பல கண்ணாடிகளையும் போட்டுப் போட் டுப் பார்த்து வருவான். ஒரு கண்ணாடியும் அவ னுக்குப் பிடிக்காதது கண்டு சலிப்படைந்த கடைக் காரர், “என்ன ஐயா, உமக்கு ஒன்றும் பிடிக்க வில்லையா?” என்று கேட்டால் அவன், “ஒன்றா வது நல்லதாயில்லை; ஒன்றாலும் எழுத்துக்கள் வாசிக்க வரவில்லையே?” என்பான். 

பல தடவையும் இப்படிச் சொல்வது கண்டு கடையிலிருந்த ஒரு பெரியவர், “உங்களுக்கென்ன வாசிக்கவே தெரியாதோ?’ என்றார். அப்போது தான் வந்தது கச்சணனுக்கு உண்மையான சீற் றம்! அவன் அவரை முறைத்துப் பார்த்து, “பெரி யவராயிருக்கிறீரே, உமக்கு இவ்வளவு தெரியாதா? வாசிக்கத் தெரிந்திருந்தால் நான் ஏன் கண்ணாடி வாங்கவர வேண்டும்?” என்றான். 

அனைவரும் கொல்லென்று சிரித்து விட்டனர். 

‘தன் கேள்வி சரியான கேள்வி; அதனாலே தான் எல்லோரும் சிரித்தார்கள்,’ என்று எண்ணிக் கொண்டு திரும்பி விட்டான் கச்சணன். 

– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *