கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 10, 2025
பார்வையிட்டோர்: 2,725 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

18 வயது சுமதி தன்னைக் கண்ணாடியில் உற்றுப் பார்த்தாள். ம் வெகு சுமார்… குளித்து நறுவிசாய் உடுத்தியிருக்க சுமார். கல்லூரியிலிருந்து களைத்துத் திரும்பிய பின்னோ, தூங்கி எழுந்த கையோடோ பார்க்க, ஏறக்குறைய மோசம் என்னுமளவில்தான் அவள் தோற்றம் இருந்தது. இப்போது ஏன் இந்த ஆராய்ச்சி?! 

அடுத்த வீட்டு வத்சலாவிற்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது. 25 வயது வத்சலாவும் இவனைத் போலத்தான் பெரும்பாலும் யாரும் மறுமுறை திரும்பிப் பார்ப்பதில்லையே! அவளுக்குச் சிறப்பான சம்பந்தம் எனப் பேசிக் கொண்டார்கள். 

வத்சலாவின் குரல்… குயில்தான். 

சாரீரம் சுத்தமாயிருப்பினும் வயலினும் கற்றவள், அதனோடு இழைந்து பாடுகையில், கேட்சுப் பரவசமாயிருக்கும். சிறு கச்சேரிகள் போக நாலு பாட்டு ட்யூஷன்கூட அவளுக்கு உண்டு. 

அது சரி. அத்தனைப் பெண்களுமா ரதி? 

ஏநோ ஒரு மகுடம் அவளை ராணியாக்கிக் காட்டும். நல்ல மாப்பிள்ளை தேடி வருவது ஒருபுறம் இருக்க, பெண் தலை நிமிர்ந்து நிற்க, தெம்பாய் சிரிக்க, உற்சாகமாய் வாழ ஒரு கிரீடம் அவசியம். 

குணம், கலை, காசு, வேலை, அழகு, படிப்பு… தனக்கு எது ? சுமதி யோசித்தாள். 

உட்கார்ந்து படிக்கும் பாய் தேய்ந்து நைந்தும் படிப்பு சுமார் ரகத்தில்தான் சேர்த்தி! 

கலை, காத தூரம்! 

கிழிசலைக் கொடூரமாய் புழு போலத் தோன்றும் விதமாய்த் தைப்பதோடு தையல் சரி. 

குணம் கூட பிடிவாதம், தாழ்வுணர்ச்சி என்று பெருமைப் படும்படியில்லை. பிரத்யேக ஆர்வம் எதிலுமில்லை. ஆர்வமில்லாத துறையில் சாதனை எப்படி…? அம்மா ரசம் தாளித்த மணம் வீடு முழுக்கப் பரவியதில், வயிறு குழைய, கத்தினாள். 

“அம்மா சாப்பாடு ஆச்சா?”

“இன்னும் பத்தே நிமிஷம்” 

பனிரெண்டாவது நிமிடம், அன்னாசி ரசம், துவையல், வெண்டைக்காய் பொரியல் என ருசித்து சாப்பிடுகையில் நுனி நூல் சிக்கியது! 

சமையல் ஒரு கலையில்லையா என்ன? 

குருவாக வீட்டிலேயே தாய் இருக்கச் சுலபமாகக் கற்கக் கூடியது; அன்றாடம் பயன்படும், பாராட்டப்படும் கலை. புதுசு புதுசாய்க் கிளறிக் கரைத்து. பத்திரிகைகளுக்குக் குறிப்புகள் அனுப்பலாம். 

‘சுமதியின் சுவைமிகு சமையல்’ எனப் புத்தகம் கட வெளியிடலாம். அடடே, சாதனை கூட சாத்தியம்! 

அவளுள் உற்சாகம் கிளம்பியது. 

அன்று தன்னுடன் நின்று பாத்திரங்களைக் கழுவிக் கலிழ்த்த மகளை ஆச்சரியமாய்ப் பார்த்தாள் அம்மா, 

“என்னடீ புதுசா?” 

“தட்சணைம்மா. குரு தட்சணை” 

காய்களை வெட்டுவதிலிருந்து பயிற்சி ஆரம்பமாயிற்று. அடுத்து, தாளிக்க, பொரிக்க என்று வளர்ந்து சாம்பார் வைக்க அவளைத் தயாராக்கியது. இப்போது சுமதிக்குப் பார்த்த மாத்திரத்தில் காய்கறி முற்றலா, சொத்தையா என்பது பிடிபட்டது.

“சாம்பார் புது மணமா ஜோராயிருக்குது” பாராட்டலில், “அம்மா… அடுத்ததா இனிப்பு செய்யலாம்!” என்று குதித்தாள். 

“ரவா லட்டு செய்.” 

“சே. எனக்கு மைசூர்பாகுதாம்மா பிடிக்கும்.” 

“பதம் சரியா வரணும்.” 

“அதெல்லாம் வரும்” 

காசைக் கொட்டி, நெய்யையும் கொட்டிக் கிளறியும் பாகு பதம் வரத்தானில்லை. 

உதிர்ந்து பொடியாகவே கிடந்ததை அள்ளி ஒரு டப்பாவில் போட்டு மூடினாள். 

“இது பேரென்ன சுமதி?” என்று வீட்டார் சிரித்தபடி அள்ளி வாயிலிட்டுக் கொண்டனர். 

சமையல் அப்படியொன்றும் சுலபமில்லை என்பது புரிந்தது. மாமா ஊரிலிருந்து கொண்டு வந்த தேங்காயில் மிட்டாய் செய்தாள். இம்முறை துண்டு போட வந்தாலும், தேங்காய் தனியாய், நொறுதொறுவென சீனி தனியாய், நாக்கில் தட்டுப்பட்டன. மறுமுறை அவற்றைச் சற்றுத் தட்டி, சிறிது பாலும் சேர்க்க, 

“ம்… பிரமாதம் சுமி!” என்று சான்றிதழ் வந்தது. 

அம்பாசமுத்திரத்து சின்ன பாட்டியிடம் ‘அந்த கால’ மணம், ருசி மாறாத தேன்குழலும், அதிரசமும் செய்யக் கற்றுக் கொண்டாள். குவ்நாரிடம் சிநேகமாகி, நான் ரொட்டி, ரசகுல்லா, பட்டர் பனீர், என்று கலையை விஸ்தரித்தாள். 

‘இத்தனைச் சிரமப்பட்டுத் தயாரிப்பவற்றை அசிரத்தையாகப் பரிமாறுவதா’ எனத் தோன்ற மேஜையில் அலங்காரமாய் வைத்தாள். 

“நீ கொண்டு வரச்சேயே நாக்கில் எச்சில் ஊறுதக்கா” என்றான் தம்பி.

சாப்பாட்டு அறையைத் தொடர்ந்து வீடு முழுக்க அவள் பராமரிப்பின் கீழ் வந்தது. 

அந்தத் தெருப் பெரியவர்களும், 

“இன்னைக்கு மைசூர்பாகு போடணும் சுமதி. ஒரு எட்டு வந்து பார்க்கறியா?” என வேண்டினர். 

‘நெய் வேண்டாம். வெண்ணெய் வாங்கிடுங்க. உருக்கிச் சூடா கலந்தா சரியாயிருக்கும்’ என்றாள். 

தினம் காலை சமையலறையில் இருந்ததால் பால் பாத்திரத்து ஆடையை எலுமிச்சச்சாறுடன் கலந்து, உடல், முகம் எனத் தடவி ஊறவிட்டாள். தலைக்குத் தயிர் தடவினான். சனி ஞாயிறில் காரட் சாறு, வெள்ளரி என முகத்தில் அப்பினாள். 

சருமம் பளீரெனப் பொலிய, அவன் தலைமுடி கைக்குள் அடங்காது மின்னியது. விடுவிடுவென வேலை செய்ததில் இடுப்பு சிறுத்து ஒடுங்கியது. 

எல்லாவற்றையும் விட அவன் சிரிப்பில், தோள் திமிர்வில் தெறித்த தன்னம்பிக்கையும், நிறைவும் அவளைப் பேரழகியாக்கிக் காட்டின. 

அன்று டாக்டர் சித்தி வந்திருந்தார்கள், “கமதி அவ சித்தியைச் கொண்டு பிறந்திருக்கா” எனக் குடும்பத்தார் சொல்கையில் முன்பு எரிச்சலாயிருக்கும். 

சித்தி அழகில்லை. ஆனால் படிப்பு கொடுத்த களை, கம்பீரம் உண்டு. 

சாப்பாடு முடிந்து அனைவரும் ஹாலில் வந்து அமர்த்தனர். சாப்பாட்டு மேஜையை ஒதுங்க வைத்த சுமதி, ஆளுக்கொரு இனிப்பு பீடா சுருட்டி நீட்டினாள். சித்தி, தன் நோயாளி ஒருத்தியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். 

“தற்கொலைக்கு அந்தப் பெண் சொல்ற ‘காரணம் என்னான்றீங்க! 

“ஊர் மிராசு பொண்ணுன்ற, பண்ணையாளைச் காதலிச்சுட்டாளா?” 

“ரொம்ப சினிமா பார்க்கறீங்க அத்தான். அவ பார்க்க அழகாயில்லையாம்.” 

“அடக் கடவுளே!” 

“படிக்க அனுப்பலை. வீட்டு வேவையும் செய்யறதில்லை. சாப்பிட்டு, தூங்கி தடிச்சிட்டா. முகம் அத்தனை லட்சணமில்லை.” 

“ஆனா, இது ஒரு காரணமாக பறவை எல்வாம் பறக்குதா என்ன?” அம்மா சொன்னார்கள். 

“நம்ப அத்தை சொல்ற அதையேதான் நானும் அவளுக்குச் சொன்னேள். பென்குவின் பறக்காது போளாலும் அபாரமா நீந்தும். கோழி ஏதோ எம்பி சிறகடிச்சுக்கும். 

வான்கோழிக்கு அதுவும் முடியாது. மூளையும் மட்டு. ஆனா அது பறவைகளிலேயே பெரிசு, மானாட்டம் ஓடும். ஒண்ணில்லாட்டா இன்னொண்ணு என்று சொன்னேன்” 

“புத்தி வந்துதா?” 

“வந்தா நல்லது. அவங்க வீட்டாருக்கும் வரணும்.”

முடிச்சிட்டிருந்த முடியை விரித்துக் கோதியபடி சுமதி பேசினாள். 

“ம்? முதல்ல அந்தப் பொண்ணுக்காத் தோணணும் சித்தி. மற்றதெல்லாம் பிறகு,” 

வெற்றிலை மென்றதில் அவள் உதடுகள் சிவந்து, முகம் தனி சோபையாயிருந்தது. 

“அதும் சரிதான். முன்னே நீ என்னைப் போலன்னு வாங்க. இப்ப நீ அழகு கூடிப் போயிட்ட பெண்ணே”

சிரித்தார்கள் சித்தி. 

“பறவையெல்லாமா பறக்குது? சரி நாம ஓடுவோம்னு ஓடினேன். அப்படியே கொஞ்சம் சிறகடிக்க, பறக்கவும். வந்திடுச்சு,” சந்தோஷமாய் சுமதி சிரித்தாள். அவள் அழகு சிரிப்பில் மேலும் கூடித் தெரிய, மொத்த குடும்பமும் அவளைப் பெருமையாய்ப் பார்த்தது! 

(மங்கையர் மலர்)

– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *