ஒளஷதலாயம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 12, 2019
பார்வையிட்டோர்: 6,965
மாவட்ட நீதிமன்றம், காலை நேர பரபரப்பு,புதிய நீதிபதி திரு. ராமன், பதவியேற்று இன்று முதல் அமர்கிறார்,
வழக்கத்திற்கு மாறாக போலிஸ் பாதுகாப்பு,குழு குழு வாக வழக்கறிஞர்கள்,பல தாலுக்கா மாஜிஸ்ட்ரேட்கள்,முன்சீப்கள், வாழ்த்துச்சொல்ல கூடியிருந்தனர்.
நீதிபதி அவர்களின் சொந்த மாவட்டம் இது,இங்கேதான் பள்ளி ,மற்றும் இளங்கலை படிப்பை முடித்து சட்டம் படிக்க வெளியூர் சென்று ,பல வருடம் கழித்து மாவட்ட நீதிபதியாக இங்கே வந்துள்ளார்.
அனைத்து பிரமுகர்களையும் சந்தித்து வாழ்த்துப் பெற்று,காவல் துறை அதிகாரிகளை கூப்பிட்டு சட்டம் ஒழுங்கு,எப்படியுள்ளது?
அதிக அளவில் குற்றம் நடைபெறும் கிராமம் எது?,விபத்துகளின் தன்மை, ஆகியவற்றை எல்லாம் கேட்டறிந்தார். அனைவரும் விடை பெற்றுச் சென்றனர்.
கண்காணிப்பாளர் இன்றைய வழக்கு சம்மந்தமான கட்டுகளை வகை வகையாக வைத்துவிட்டுச் சென்றார்.
ஒவ்வொன்றாக தேதியிட்ட வழக்குக் கட்டுகளைப் பிரித்துப் படிக்கலானார், இரண்டையெடுத்து வைத்துக்கொண்டு மற்றதைத் தேதி கொடுத்து தள்ளி வைக்குமாறு உத்தரவிட்டார்,
இரண்டில் ஒரு கட்டு எடுத்து படித்தார், அதற்கு இன்று தீர்ப்பு தேதி போடப் பட்டிருந்த்தது. முன்னால் நீதிபதி அவர்கள் குற்றவாளி குமரனுக்கு சாகும் வரை தூக்கு விதித்து தீர்ப்பு எழுதி இருந்தார். அந்த நீதிபதி இவரின் சீனியர்,தற்போது ஓய்வு பெற்று சென்றுவிட்டார். அந்த கேஸ் கட்டை நன்கு ஆழமாய் படித்து பார்த்தபோது இவர் கண்களில் கண்ணீர் வழிய உணர்வுகளுக்கு ஆட்படாமல், ராமன் சீனியரிடம் நீண்ட நேரம் பேசினார்,
கண்கானிப்பாளாரைக் கூப்பிட்டு, இந்த கேஸ்ல ஆஜர் ஆக வந்து இருக்காங்களா, என்று கேட்டார்.
அவர் வெளியே போய் பார்த்து விட்டு, ஐயா,வந்து இருக்காங்க, திருச்சி மத்திய சிறையில் இருந்து காவலர் வந்து இருக்காங்க, என்றார்.
அவங்களை நாளைத் தீர்ப்பு வாசிக்கப்படும் என கூறி அனுப்பிடுங்க! அந்த குமரனையும் கூட இரண்டு காவலர்களையும் என்னோட குடியிருப்புக்கு அழைத்து வாங்க, இன்றைக்கு இங்கேயே தங்கி கொள்ளட்டும்,என உத்தரவிட்டார்.
ஜட்ஜ் குடியிருப்பு பகுதி.
வீட்டில்,
குமரா !உள்ளே வாங்க!
சாப்பிடுங்க! உங்க கேஸ் ஹிஸ்டரி பூரா படித்தேன்,அதனால் அதைப் பத்தியெல்லாம் கேட்கமாட்டேன்,
என்னை நண்பனாக நினைத்து, இங்க ஒருநாள் நீங்க தங்கனும்னு ஆசைப்பட்டேன்,அது தான் ,
அம்மா,பூரணி, அங்கிள் கிட்ட ஏ4 ஷீட் டும் கலர் ஸ்கெட்சுகள் எல்லாம் எடுத்து கொடு,என்றார்.
முதலில் மறுத்தான், பிறகு,என்ன நினைத்தானோ,அதில் சின்ன சின்ன ஓவியங்கள் வரையத் தொடங்கினான்,சிலது கொடுரமாகவும்,சிலது மெண்மையாகவும் வரையத் தொடங்கலனான்,இரவு மணி 11 மணியாகியும் வரைவது நிற்கவில்லை. அனைத்து பேப்பர்களும் அவனால் வரையப்பட்டது.மனது லேசனதுபோல உணர்ந்தான்.
எனக்கு ஓவியம் வரைய தெரியும்னு உங்களுக்கு எப்படி ஐயா தெரியும்? என தன்மையாக கேட்டான்.
கூட இருந்த காவல்காரர்கள் அவனை ஆச்சரியமாக பார்த்தனர்,இதுவரை அவன் பேசி இவர்களே பார்த்தது இல்லை.
இப்ப எப்படி பீல் பன்ற? என்றார். ராமன்.
ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் வாழனும்னு தோனுதுங்க,என்றான் வெள்ளந்தியாக.
சிரித்துக் கொண்டே படுக்கைக்கு போனார்.ராமன்.
என்னங்க இது, அவர் யார்? என்ன கேஸ் என்று கேட்டாள்,அவர் மனைவி நாளை சொல்வதாக கூறி தூங்கிப் போனார்.
கோர்ட் வளாகம்.
குமரன்,குமரன்,குமரன்,என அழைக்க,
கூண்டில் ஏறி நின்றான்.
குமரனாகிய நீங்கள் உங்கள் மணைவியை நடத்தையில் சந்தேகப்பட்டு கொன்று விட்டது ஊர்ஜிதமாகவும்,அதற்கு சாட்சியங்களும் இங்கே ஏற்கப்பட்டு நிருபிக்க பட்டுள்ளதாலும்,உங்களைக் குற்றவாளி என முடிவு செய்து,தங்களின் மன அழுத்த நோயை கருத்தில் கொண்டு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப் படவேண்டும் என நினைத்தேன்,
தங்களின் நோய் தற்காலிகமானது,பூர்ணமாக சரியாக கூடியது என உணர்ந்து,தங்களை அரசு முதியோர் காப்பகத்தில ஒரு மன நல மருத்துவ ஆலோசகர் துணையுடன் உங்களைப் பாதுகாத்து குணமானவுடன்,தங்களை அதே இடத்தில் ஓவிய ஆசிரியராக சர்வீஸ் செய்யுமாறும் உத்தரவிடுகிறேன்.எனக்கூறி வழக்கை முடித்துவைத்தார்.
நேற்றுவரை தூக்கு கிடைக்கும் என எதிர்பார்த்த காவல் துறை,மற்ற அனைவரும் இந்த தீர்ப்பில் ஆச்சரியமடைந்தனர்.
ஏங்க,என்னங்க! என்றாள் ராமனின் மனைவி.
குமரனும் நானும் 6ம் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்தோம். ஒன்றாகவே இருவரும் சைக்கிளில்தான் பள்ளிக்கு போவேம். 10 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவன்.
பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வு,
இருவரும் பள்ளி செல்லும் போது லாரி் ஒன்று பின்னே மோதியதில் இருவரும் கீழே விழுந்தோம்.எனக்கு கையில் காயம் ஏற்பட, அப்போது அவனுக்கு காயம் ஏதுமில்லை, ஆனால் மயக்கமடைந்தான்,சிறிது நேரத்தில் எழுந்தான்,எனக்கு ஊசி போடப்பட்டது,அவனுக்கும் சிகிச்சையளித்து பள்ளி சென்று இறுதியான தேர்வினை முடித்தோம்.
அவனுக்கு அம்மா மட்டும் தான், அவர்களுக்கும் அவ்வளவு விபரம் பத்தாது.அதனால் மேல் சிகிச்சை எடுக்கவில்லை.
பிறகு நான் கல்லூரி சேர,அவனும் வேறு ஒரு கல்லூரி சேர்ந்தான், அவன் உடல் நலம் இல்லாமல் இருக்கிறான் என வரும் செய்தி என்னை உறுத்திக்கொண்டே இருக்கும்.
அதற்கு பிறகு இருவரும் பார்த்துக் கொள்வதே அரிதானது.
அவனின் மெடிக்கல் ரிப்போர்ட்டில், சிறுவயதில் ஏற்பட்ட காயம்,சரியாக கவனிக்கப் படாததாலும், முறையான சிகிச்சை எடுக்காதலாலும் திடீர் திடீரென்று கோபமும்,அதனால் மூர்கத்தனமாக நடந்து பின்பு ஒன்றுமே அறியாதவன் போல தோன்றும்,இவனின் மனமும்,செய்யும் செயல்களும் முரன்பாடக இருக்கும்,எந்த விளைவுகளையும் அறியாது இருப்பான்.என கூறியிருந்தது.
அந்த மாதிரி ஒரு தருணத்தில்தான் தன் மனைவியை அவன் கொன்றிருக்கவேண்டும். என முடிவுக்கு வந்தேன். வெளியிலும் அவனுக்காக யாருமில்ல, அதனால் சீனியரிடம் பேசி தண்டனையை சிகிச்சையாக மாற்றச் சொன்னேன்.
அவரும் சம்மதித்தார்.
இவ்வளவு வருடங்களாக குற்ற உணர்ச்சியில் இருந்த எனக்கும் இப்போது மனதுக்கு ஆறுதலாக மருந்து இட்டது போலவும்,
அவன் செய்த கொலைக்குப் பதில் தூக்கு தண்டனை சரியான தீர்பாகாது, சிகிச்சையே அவசியம்.
அவனைச் சுற்றிலும் எப்போதும் ஆட்களும், அவன் திறமைக்கு வடிகாலாக ஓவியமும் இருந்தால், அவன் மனம் தவறை நாடாது.
எனக் கருதிதான் அவனை அரசு முதியோர் காப்பகத்தில் இருக்க சொன்னேன்,அதுதான் அவனுக்கு நான் அளித்த சிகிச்சை. என சொன்னார்.
குட் ஜாப்,
இப்ப, கோர்ட் , நீதிக்கான ஆலயம் மட்டுமில்லை ஔஷதலாயம் கூட. என பாராட்டினாள்.