எல்லாரிடத்தும் ஒழுகும் முறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2024
பார்வையிட்டோர்: 107 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மக்களின் தொழில், திறமை, கல்வி முதலியவற்றால் அவர்களுக்கு உயர்வு தாழ்வு நிலைமைகள் ஏற்படுகின்றன. சிலர் வழக்கறிஞர்களாகவும் சிலர் மருத்துவர்களாகவும் இருக்கிறார்கள் இவர்கட்குப் பேரறிவும் பெருங்கல்வியும் இருக்கவேண்டும். சிலர் வணிகர்களாய் இருக்கின்றார்கள். இவர் கட்கு அவ்வளவு பேரறிவும் பெருங்கல்வியும் வேண் டியதில்லை. வணிகாகளுக்குத் தாழ்ந்தவர்கள் உழைப்பாளி கள்; இவர்கட்கு உடல்வன்மை இருந்தாற்போதும். வாணிபர்களிலும், தொழிற்சாலை வைத்து நடத்துவோர் களிலும், மிக்குச் செல்வம் படைத்தவர்கள் இருக்கிறார்கள். இன்னும் நிலச்செல்வம் படைத்தவர்கள் இருக்கின்றார்கள். மேலும் குருமார்கள், முறைமன்றத் தலைவர்கள், அரசியலா ளர்களும் இருக்கின்றார்கள். இவ்வாறு மக்கள் நிலைமை களில் வரிசைப்படிகள் ஏற்பட்டிருக்கின்றன. 

திறமை,குணம், அலுவல் இவைகளினால் மேற்பட்ட மக்களுக்குத் தாழ்நிலையுடையார் மரியாதை கொடுத்தே தீரவேண்டும்; வீண்புகழ்ச்சி செய்வதும் அடிமைத்தன்மை காட்டுவதும் இதன் பொருள் அன்று. தன் உரிமை யென்பது ஒவ்வொருவருக்கும் உண்டு; தன் உரிமை யென் பது எக்காரணத்திலும் இச்சகம் பேசுவதும் கெஞ்சுவதும் ஆகாது. 

உயர்நிலையுடையார், தாழ்நிலையுடையவர்களிடம் நேர் மையான வேலை வாங்கி அன்புகாட்டவேண்டும். தாழ் நிலை உடையார், உடன்பிறந்த மக்கள் போன்றவரே; அவ்வவர் நிலைக்குத் தக்க பெருமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆகவே, இவ்விருவகையாரும் ஒருவருக்கொருவர் காட்டவேண்டிய உயர்வுப் படிமுறைகள் இருக்கவே செய் கின்றன. தான் உயர்நிலையாளன் என்று எண்ணுகின் ஒருவன் தாழ் நிலையான் என்று தான் எண்ணுகின்ற ஒரு வனுக்கு இழிவு செய்வானாயின் அவன் தானே அவ்வுய நிலைக்குத் தகாதவனாகின்றான். 

ஒரு தலைவனிடம் கூலிக்காக வேலை செய்ய ஒப்புக் கொள்கின்றவன், அவ்வேலையை அவன் செம்மையாகச் செய்யவேண்டியதுமல்லாமல், அத்தலைவனிடம் தாழ்மை யாகவும் நடந்து கொள்ளவேண்டும். மேலும் வேலை வாங்கு ன்ற தலைவனும் வேலையாளிடம் நல்லெண்ணமாகவும், அன்பாகவும் இருக்கவேண்டும். வேலைக்காரன் இவ்வாறு நடத்கட்பட்டால், அவன் அவ்வேலையைக் கருத்துவைத்து நன்றாச் செய்து முடிப்பான். தலைவன் அன்பற்றவனானால் வேலையாள், எந்த வேலையையும் அரைகுறையாகவே முடித் துக்காட்டுவான். உண்மையான வேலையாள் கூலிப் பணத்தை விரும்புவதுபோலவே, வேலையையும் தலைவனை யும் விரும்புவான். முதலாளிக்காக உயிரையும் விடத் துணியும் வேலையாட்களும் உண்டு. 

ஊழியர்களை அடிமைகளைப்போல் நடத்துதல், நேர் மையா சாது. அடிமைகளைக்கூட ஆதிகாலத்தில் சில ஆன் றோர்கள் அன்போடும் ஆசையோடும் நடத்திக்கொண்டு வந்திருக்கின்றார்கள். அடிமைகளில் ஆண்டானிடம் அன்பு கொண்டு தந்நலம் பாராட்டாமல் உழைத்து அவனுக்காக உயிர் விட்டவர்களும் உண்டு. 

1. ஆல்பான்சோ 

ஆல்பான்சோ சிசிலித் தீவின் அரசன்; குடிகளிடம் அன்பு காட்டி அருள் செய்பவன். அவன் சிசிலியில் பகைவரோடு போர் புரிந்துகொண்டிருக்கையில், தன் சேனையோடு ஓர் ஆற்றைத் தாண்ட வேண்டியதாக இருந்தது. ஆனால், அவன் பகைவரோ அவ் வாறு செய்யவொட்டாமல் தடுத்துக்கொண்டிருந்தனர் ஆகையால் அவன் ஒருநாளெல்லாம் அக்கரையிலேயே தங்கியிருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. கையில் உணவுப் பொருள்கள் ஒன்று மில்லை விளக்கு வைக்கும் நேரத்தில் ஒரு போர்வீரன் ஓர் அப் பத்துண்டையும் சிறிது வெண்ணெயையும் கொண்டுவந்து அவனுக்கு உண்ணக்கொடுத்தான். ஆனால், அரசனோ அதனை ஏற்றுக் கொள்ளாமல் அவ்வீரனை நோக்கித் “தம்பி, நீ கொண்டுவந்த கல்லதே. என்னைப்போலும் போர்வீரர்களெல்லாம் பட்டினிகிடக் கும்போது நான்மாத்திரம் பசியாறலாமோ!” என்றான். 

இன்னொரு பொழுது ஆல்பான்சோ ஒரு மைதானத்தில் த னியாகப் போய்க்கொண்டிருந்தான். வழியில் சிறிது தொலைவில் ஒரு கோவேறு கழுதையானது தன் கால் சேற்றில் புதைந்து போய்நகரக்கூடாமல் இருக்க, அதை ஓட்டுவோன் தன்னாற் கூடிய வரையில் முயன்றும் அக்காலைப்பிடுங்க அவனால் முடியாமல் தவித் துத் தள்ளாடிக்கொண்டிருந்தான். அவன் போவார் வருவாரைத் தனக்கு உதவிசெய்யக் கேட்டும் பயன்படவில்லை அப்படியே ஆல் பான்சோவையும் அவன் இன்னானென்றறியாமலே உதவிக்குவேண் டினான். அரசனோ குதிரையைவிட்டு இறங்கிவந்து, அப்பாகனுக்கு உதவிசெய்யத் தொடங்கி, அக்கோவேறு கழுதையின் காலைச்சேற் றினின்றும் பிடுங்கித் தூக்கி அதனைச் சேறில்லாத இடத்துக்குக் கொண்டுபோய்விட்டான். பாகன் எவ்வாறோ உதவியாளன் அரசு னென்றறிந்துகொண்டு முழங்காற்படியிட்டு மன்னனை மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். அரசன், “உன்மேல் ஒரு குற்றமுமில் லையே!” என்று சொல்விட்டுப் போய்விட்டான். ஆல்பான்சோ வின் இந்நற்குணம் அவன் பகைவரையெல்லாம் நண்பர்களாக்கியது. 

2. ஆன்சனும் அவன் வேலையாளும் 

ஆன்சன் என்பவர் சிறந்த நாடு காணும் ஒரு பயணக்காரர். அவர் பல நாடுகள் திரிந்து காணவேண்டியதை யெல்லாம் கண்டு வீட்டுக்குத் திரும்பினார். அப்பயணங்களில் வேலைக்காரன் ஒருவனை உடன்கொண்டுபோ யிருந்தனர். அவர் வீடுவந்து சேர்ந்தவுடன் அவ் வேலைக்காரன் அவரிடம் வந்து, “ஐயா! எனக்கு விடுதலை வேண்டும்,” என்றான். அவர் காரணம் கேட்டதற்கு அவன் “ஐயா கு ஒரு குறைபாடுமில்லை; தங்கள் பயணத்தில் எல்லாம் யான் உழைப்பிலும் இடுக்கணிலும் உடனிருந்து வருந்தி வந்தேன்; அப் போது செருக்கோடு எனக்குக் கட்டளைகள் கொடுத்துக்கொண்டு வந்தீரேதவிர, ஒரு நேரத்திலாவது அன்புடன் வாய்திறந்து என் னோடு பேசவில்லையே!” என்றான். 

3. உண்மை வேலைக்காரி 

உவேல்ஸ் மாகாணத்தில் உயர்நிலைப் பெண்கள் இருவர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அயர்லாந்துதேசத்திற் பிறந்தவர்கள். அப் பெண்மணிகள் தங்கள் நாட்டைவீட்டு உவேல்ஸுக்கு வந்த போது மேரி என்னும் வேலைக்காரப் பெண் ஒருத்தியை உடன் கொண்டு வந்திருந்தனர். அப்பெண் உண்மையுள்ளவளாயிருந் தாள்; அதுவுமன்றி, நம்பிக்கையுடையவளாகவும் அன்புள்ளவளா கவும் இருந்தாள். அவள் இளமை முதல் இப்பெண்மணிகளிடமே தொழில் புரிந்துவந்தாள். பின் மூவரும் மூத்துக் கிழவிகளாய் விட்டனர். இம் மூவர்க்கும் வயது முதிர முதிர ஒவ்வொருவருக்கும் அன்பும் முதிர்ந்துவந்தது. அவ்விரு பெண்மணிகளும் உவேல்ஸில் தாங்கள் இருந்த இடத்தில் இடுகாட்டில் முக்கோணமான ஒருகல் லறைமுன்னமேயேகட்டிவைத்துக்கொண்டனர். முதலில் வேலைக் காரி இறந்தாள். அவளை ஒரு பக்கத்தில் புதைத்து. அப்பக்கத்துக் கல்லறையின்மேல்-மேரி, உண்மையன்புள்ள வேலைக்காரி – என்று எழுதிவைத்தனர். பிறகு சில நாட்களில் ஒருவர்பின் ஒருவராக அவ்விரு பெண்களும் இறந்துபோயினர். அவ்விருவரையும் அக் கல்லறையின் மற்றிரண்டு பக்கங்களில் புதைத்தனர். தக்க நினைவுக் குரிய மொழிகளும் அவரவர்கள் கல்லறைப்பக்கங்களில் எழுதப்பட் டன. இம் மூவரும் நிலைமையில் வேறுபட்டவர்கள். ஒருவருக் கொருவர் அன்பிலும் மரியாதையிலும் ஒன்றுபட்டவர்கள். இம் மூவரும் ஒருநிலைப் பெண்களாகவே மதிக்கப்பட்டு, ஒருவர் பக்கத் தில் ஒருவராக, வேறுபாடு ஒன்றும் காட்டப்படாமல் அடக்கஞ் செய்யப்பட்டனர். 

4. ஜியார்ஜின் வேலைக்காரி 

இங்கிலாந்து நாட்டில் மூன்றாவது ஜியார்ஜ் என்னும் அரச னிடம் ஒரு வேலைக்காரி இருந்தாள். அவ்வரசன் குடும்பத்திலேயே அவள் தன் வாழ்நாளைக் கழித்துவந்தாள். அந்நாட்களிலெல்லாம் அரசகுடும்பத்தில் அவள் தவறாத நம்பிக்கையும், அன்பும்கொண்ட வளாக ஊழியம் செய்துவந்தாள். அவள் இறந்தபோது அவ்வர சன் அரச குடும்பத்து இடுகாட்டிலேயே அவளைப் புதைத்துக் கல்லறையின்மேல் புகழ்மொழிகள் பொறித்துவைத்தான். 

5. ஆண்டானும் அடிமைகளும் 

உரோமாபுரியில் ஆக்டேவியஸ் ஆட்சிபுரியப் பெற்றபோது, அவனுக்கு முன்னிருந்த பிளான்கஸ் என்பவன் உயிர் தப்ப வேறிடம் ஓடிவிடவேண்டியதாயிற்று. அவனுடைய அடிமைகளை எவ்வளவோ கொடுமையாக வருத்தி ஆக்டேவியஸ் பிளான்கஸ் இருப்பிடத்தைத் தெரிவிக்கக் கேட்டான். பிளான்கஸ் அடிமை கள் அவனுக்கு அதனை வெளியிட்டார்களில்லை. ஆனாலும் ஆக்டே வியஸ் அவ்வடிமைகளை இன்னுங் கொடுமையாக நடத்திக் கொண்டே வந்தான். தன்னுடைய அடிமைகளின் துன்பத்தைக் காதால் கேட்டுப் பொறுக்கமாட்டாமல் பிளான்கஸ் வெளிப். பட்டுப் பகைவர் வாளுக்கிரையாகத்துணிந்து அவர்கள் முன்வந்து நின்றான். அவன்மேலிருந்த அடிமைகளின் அன்புக்கு மெச்சி ஆக்டேவியஸ் பிளான்கசை மன்னித்து உயிரோடு விட்டுவிட்டான். ஆண்டானுக்குத் தக்க அடிமைகளையும் அடிமைகளுக்குத் தக்க ஆண்டானையும் கண்டு கொண்டீர்களா? 

6. தன்னலம் பாரா வேலைக்காரன் 

இத்தாலிநாட்டில் போதசாகி என்னும் செல்வனொருவன்தன், மனைவியோடு குதிரை வண்டியிலேறி மலைப்பக்கமாகப் போய்க் கொண்டிருந்தான். அவர்கள் வேலைக்காரனும் குதிரைமேல் சவாரி செய்துகொண்டு வந்தான். அவ்விருவர்களும் முன்னும் பின்னுமா கப் போய்க்கொண்டிருந்தனர். அங்கு ஓநாய்கள் கூட்டங்கூட்ட மாக ழ்ந்திருந்தன. அவர்கள் போய்ச்சேரவேண்டிய சத்தார் என்னும் ஊர் மூன்றுகல் தொலைவில் இருந்தது. நடுவழியில் ஓநாய்கள் கடித்துக்கொல்லப் பின்தொடர்ந்து ஓடி வந்துகொண் டிருந்தன. இவ்விடுக்கணில் கணவன் மனைவியருக்கு இன்னது செய்வதென்று தோன்றவில்லை. அப்போது சவாரிசெய்து கொண்டுவந்த வேலையாள் இதனைக் கண்டறிந்து தலைவனிடம் வந்து, “ஐயா! என துகுதிரையை இங்கேயே கட்டிப்போட்டுவிட்டு நான் வண்டியின் பின்னால் நின்றுகொள்கிறேன். நீங்கள் விரைவாய் வண்டியைச் செலுத்திக்கொண்டுபோனால், அவ்ஓநாய் கள் குதிரையைப்பிடித்துக்கொன்று பசியாற்றிக்கொண்டிருக்கும். அதற்குள்ளாக நாம் சத்தார் போய்ச் சேர்ந்துவிடலாம்,” என் சொல்லிக் குதிரையை அங்கேயே விட்டுவிட்டு வண்டியின்பின்  ஏறிக்கொண்டான். வண்டியோ விரைவாய்ப் பறந்துகொண்டு போயிற்று. ஓநாய்கள் அக்குதிரையைக் கொன்று தின்றுவிட்டுக் குருதி வெறிகொண்டு பின்னும் வண்டியை விரைந்து தொடர லாயின. அப்போது சத்தார் ஒருகல் தொலைவிலேயே இருந்தது. ஆனாலும், ஓநாய்கள் வண்டியைக் கிட்டி வந்துவிட்டன. பார்த் தான் வேலையாள்; வேறு வழிகாணாமல் செல்வர்களிடம் வந்து, ‘ஐயா அம்மா! இப்போது முன்னும் பின்னும் விழிப்பதிற் பயனில்லை, யான் கீழே குதித்து நின்றுவிடுகின்றேன்; என்னை ஓநாய்கள் வந்து கிட்டிக் கொன்று தின்னுமளவில் நீங்கள் ஊர் போய்ச் சேர்ந்து விடலாம்; என் பெண்டு பிள்ளைகளை மாத்திரம் நீங்கள் பாதுகாத்துக்கொள்ளுங்கள்,” என்றான். மனைவியும் கணவனும் அந்நேரத்தில் வேறொன்றுஞ் சொல்வதற்கில்லாமல் “அப்படியே அப்படியே,” என்றார்கள். வேலையாள் தன் தலைவர் கள் மீது முழுநம்பிக்கை வைத்துக்கொண்டு வண்டியை விட்டி றங்கி அங்கேயே நின்று கொண்டான். ஓநாய்கள் ஓடிவந்து அவன் மேல் விழுந்து அவனைக்கொன்று தின்னத்தொடங்கின. அது முடியுமுன் செல்வர் சத்தார்போய்ச்சேர்ந்துவிட்டனர். அவ்வேலை யாள் துணிவுகொண்டு அவ்வாறு செய்திராவிட்டால் எல்லோரும். ஓநாய்களுக்கு இரையாக வேண்டியது தானே! 

செல்வர்கள் நலமாக வீடுபோய்ச்சேர்ந்து வாழ்ந்து வந்தனர். தம் உயிருள்ளவரையில் வேலைக்காரன் மனைவி மக்களைப் பாது காத்துக் கொண்டுவந்ததும் தவிர, அக்குடும்பத்துக்கு எதிர்கால வாழ்க்கைக்கும் வேண்டியவைகளைச் செய்துவைத்துவிட்டனர். 

க. பணக்காரர் களைப் படைத்தவரும் ஏழைகளைப் படைத்தவரும் கடவுளே; அவர் முன்னிலையில் இருதிறத் தோரும் ஒரு திறத்தவரே. ஏழைகளை வருத்துகிறவன் கடவுளை நிந்திக்கின்றான்; 

உ. ஆனால், அவர்களுக்கும் பெருமை கொடுப்ப வனோ அவர்களிடம் தயையுடையவன் ஆகின்றான்; 
-பழமொழிகள். 

௩. தலைவர்களுக்கு மாறுபட்டுப் பேசாமல் பணிவு காட்டி எல்லா வழிகளிலும் அவர்களை மகிழ்கூரச் செய்ய கவேலைக்காரர்களுக்கு அறிவுறுத்துங்கள்; அது கடவுள் கட்டளையை நிறைவேற்றுவதாகும். 

ச. தலைவர்களே ! நீங்களும் வேலைக்காரர்களை எச் சரிக்கை செய்து வைத்துக்கொண்டு அவர்கள் குற்றங்களைப் பொறுத்துக்கொள்ளுங்கள்; நம் கடவுள்மேல் உலகத்தில் இருக்கின்றார்; அங்கே அவருக்கு உயர்ந்தோர் தாழ்ந் தோர் என்பது கிடையாது. 

ரு. ஏழைகளாகிய கூலிக்காரர் நம்மவரிடமாவது அயலாரிடமாவது இருந்தாலும் அவர்களை வருத்தி வேலை வாங்காதே. அவர் கட்கு அன்றாடக் கூலியை அன்றாடம் கொடுத்துவிடு; இன்றேல் அவன் முறைப்பாடு கடவுளுக்கு எட்டும் அஃது உனக்குத் தீமையே தரும். -பவுல். 

– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *