என் பொருள்; அதை என்ன செய்தால் என்ன?




(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குடியானவன் ஒருவன் ஓர் எருதை நையப் புடைத்துக் கொண்டிருந்தான். மாற்றுருவில் நாடு சுற்றிப் பார்வையிட்டு வந்த அந்நாட்டு இளவர சன் எருதின் மேல் மனமிரங்கிக் குடியானவனைப் பார்த்து, “ஏனப்பா இந்த எருதை இப்படி வருத் துகிறாய்,” என்று கேட்டான்.
குடியானவன் அவனை அசட்டையாகப் பார்த்து “ஏன் ஐயா, உம் வேலையைப் பார்த்துக் கொண்டு போகிறதுதானே! எருது என் பொருள், அதை நான் என்ன செய்தால் உமக்கென்ன?” என்றான்.
இளவரசன் மனம் மிகவும் புண்பட்டது. உடனே அவன் தன் இடுப்பில் மறைத்து வைத் திருந்த நீண்ட சவுக்கை எடுத்துக் குடியானவன் முதுகில் விளாசினான். குடியானவன், “ஐயோ, அப்பா ! ஏன் என்னை இப்படி முறையின்றி அடிக் கிறாய்?” என்றான்.
இளவரசன், “அடே, சவுக்கு என் பொருள். அதை நான் என்ன செய்தால் உனக்கென்ன ?” என்றான்.
குடியானவன் தன் பிழையறிந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.
– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.