உந்தன் நிழலாய் நானடி தோழி…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
இணைய வெளியீடு: November 10, 2026
முதற்பதிப்பு: 2026
பார்வைகள்: 317 
வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்


அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

அத்தியாயம் – 16

சாரு..

என்னம்மா?

காலேஜ்லேந்து எத்தன மணிக்கு வந்த?

ம்..ம்..நாலேமுக்கால் இருக்கும்.

சாப்பாடும் கொண்டு போகல..மத்தியான லன்ச்

என்ன சாப்ட்ட?..கேண்டீன்ல என்ன கெடச்சுது? சீக்கிரம் போணும்னு டிபனும் எடுத்துக்காம போன..

நெஜத்த சொல்லணும்னா ஒன்னும் சாப்டல.. கேண்டீன்ல மூணுமணிக்கு பஜ்ஜியும் போண்டாவும்தா கெடைக்கும். அதுவும் ஆறிப் போய்..ஒரே எண்ணையா..

அப்ப ஒண்ணுமே சாப்டல..ஆத்துக்கு வந்தாவது சாப்டியா?

ம்..ஹி ஹி..

சாப்டல சரியா? தட்டுல சாப்டலாம்னு தக்காளி சாதத்த எடுத்து வெச்சிண்ருக்க..அதுக்குள்ள என்ன தோணித்தோ..அப்டியே வெச்சுட்ட கரெக்ட்டா?

ஆமா..லோச்சும்மா..

பாத்தேளா சாருவ..காலேல ஏழுமணிக்கு ரெண்டு சப்பாத்தி சாப்ட்டது.. அதுக்கப்றம் இதுவர..தோ மணி ராத்திரி எட்டேகாலாருது ஒன்னும் சாப்டல.. இவள என்ன பண்ணாத் தேவலாம்?

சாருவ ஒன்னும் பண்ண வேண்டாம் லோச்சு..நாம ரெண்டு பேரும் இன்னி ராத்திரி வயத்த லங்கணம் போட்ருவோம். அதா இவ பகல் முழுக்க பட்னி கெடந்ததுக்கான தண்டன.

அதுவும் சரிதா..அப்டியே ராப் பட்னி கெடப்போம்.

லங்கணம் பரம ஔஷதம்பா..பட்னி கெடக்கறதும் நல்லதுதா.

சரி போய் படுக்கறேன் என்று லோச்சனி சொல்ல..

நானும்தா என்றார் தியாகு.

சிரித்துவிட்டாள் சாரு.

அப்ப சமையல் மேடையில பைல கமகமன்னு ஏதோ வாங்கிண்டு வந்து வெச்சி ருக்கிறதெல்லாம் யாருக்காம்?

வாசன மூக்க தொளைக்கிறது..பசிய தூண்டிவிட்டு சாப்டு சாப்டுங்கிறது. ஆனா நாம சாப்டப் போறதில்ல.. நாம மூணுபேருமே ராப்பட்னி அப்டித்தானே?

சிரித்தார்கள் லோச்சனியும் தியாகுவும்.

சாரு காலேஜ்ல நடந்த ப்ரோகிராம் பத்தி அதா.. ஈவன்ட் பத்தி எதுவுமே சொல்லல?..கவித கவுத்துடுச்சா? கேட்டுச் சிரித்தார் வோச்சனி.

ஓ..அந்த வருத்தத்துலதா சாப்டாம கெடந்தியா சாரும்மா..என்றார் தியாகு.

ஹோய்ஹோய்..யாரு கவுந்தா?இந்த சாரு மேடயேறி கவிதய சொன்னேனா?..

சொல்லி முடிக்கிறே..ஹால்ல இருந்த அத்தனபேரும் தட்டின கைதட்டல்ல..ஈவன்ட் நடந்த ஹாலே கலகலத்து விழுந்துடும் போல ஆச்சுன்னா பாத்துக் கோங்கோப்பா.. பாத்துக்கோங்கோம்மா..

எப்பிடி நெஜம்போலவே பொய்சொல்ற சாரும்மா?..

தியாகு கிண்டலடிக்க..

லோச்சனி அப்டி சொல்லுங் கோன்னா..சொன்னாலும் சொன்னேள் நூத்துல ஒருவார்த்த..  என்று சொல்லிச் சிரித்தாள்.

கிண்டல்?அப்டீன்னா நா மேடயேறி நின்னப்ப நடந்த ஒன்ன சொல்லமாட்டே.. விளையாட்டாய்ச் சிணுங்கினாள் சாரு.

சரிசரி..ரொம்ப பிகு பண்ணிக்காத..நடந்தத சொல்லு..

லோச்சும்மா..அப்பா..என்ன நடந்துது தெரியுமா? மேடையேறுர பொண்ணுங் கள்ள எந்தப்பொண்ணாவது ரொம்ப ப்யூட்டி கேர்ல்னு தோணிச்சினா..அத அங்கீகரிக்கிறாப்ல ஸ்டூடென்ஸ்லாம் ஒன்னாச் சேந்து ஒரேமாதிரி கைதட்டுவாங்க. அத தப்பா நெனைக்க மாட்டாங்க ஸ்டூடென்ஸா இல்லாத மத்தவங்க.. அப்டி கைதட்றது தப்புமில்ல காலேஜ பொருத்தவர..

நா கவித சொல்ல மேட ஏறினப்ப ஸ்டூடென்ஸ்லாம் ஒரே மாதிரி கைதட்டினாங்க.

அப்ப என்ன அர்த்தம்?

பத்தியா பத்தியா காலேல நா என்ன சொன்னே?சாரு அழக்காருக்க சாரு..அதுவும் இந்த சுடிதார் ஒனக்குப் பக்கப்பதிய இருக்குனு சொல்லல?

நீ கூட போங்கம்மா..மிச்சத்த சாயந்திரம் வந்து கேட்டுக்கி றேன்னு சொல்லி சிரிச் சிண்டே ஓடல?..

அதுக்கு நா என்ன சொன்னே?ஞாபகமிருக்கா?

நா சொன்னாப்லயே யாராவது சொல்லுவா பாரு..

அப்ப அம்மா சொன்னது நிஜம்னு நெனைப்பேன்னு சொன்னேல்ல?

லோச்சுவுக்கும் தியாவுக்கும் மகிழ்ச்சி பிடிபடவில்லை.

ப்ச்..என்றாள் சாரு.

என்ன சாரு..ஏ ப்ச்னு சொல்லி அலுத்துக்கற?

அம்மா..நா அழகான மாணவினு நெனச்சு கைதட்டிப்பாராட்டின பாராட்ட ஏத்துக்க எனக்கு எந்தத் தகுதியும் இல்லன்னுத் தோணுது.

சாரூ ..நிறுத்தறயா? நீ ஏ இப்டி சொல்றேன்னு புரியிது.

ஏ இந்த தாழ்வு மனப்பான்ம ஒனக்கு?

நீ ஒரு மெடிகல் ஸ்டூடென்ட்.வருங்கால மருத்துவர்.

எத்தனையோ நோயாளிங்க எத்தனையோ உடல் குறைபாட்டோட ஒங்கிட்ட வைத்தியம் பண்ணிக்க வருவா..

அப்பிடி உடல் குறைபாட்டோட வர்ரவங்கள நீ ஊனமுள்ள வங்களா பாப்பியா?.. குறைவா மதிப்பிடுவியா?

பதில் சொல்ல முடியாமல் அமர்ந்திருந்தாள் சாரு.

ஒனக்கு ரெண்டுகாலும் முடமா? நீ நடக்கவே முடியாதவளா? கால்களே இல்லாதங்கள்ளாம் பெரிய சாதனைகளையெல்லாம் செய்யல? வீல் சேர்ல காலத்த கழிக்கிறவங்ககூட எதாவது ஒரு துறைல சாதிக்கில?

ஒரு சின்ன குறைபாட்ட.. அப்பிடி குறைபாடுனு சொல்றதுகூட தப்பு..சின்ன விஷயத்தகூட பெரிசா நெனச்சு மனசுல சொமந்து கிட்டு..என்ன பொண்ணு நீ..

நீ வருங்கால டாக்டரா ஆகப்போறேன்னாலும் மனநல மருத்துவர்ட்ட அழச்சுண்டு போணும் போலருக்கு ஒன்ன..

நீ இப்டீல்லாம் ஒன்னையே தாழ்த்தி சிறுமபடுத்திக் கறதுக்குக் காரணம்..ஓ சித்திதான்னு தோணுது.

நீ..மூத்தா பொண்ணுங்கிற ஆத்திரத்திலும் புடிக்காமையாலும் ஒன்னோட கால்லருக்குற சின்ன பிரர்ச்சனைய பெரிதாக்கி..நொண்டி நொண்டினும்.. கால் வெளங்காதவள்னும்.. சப்பாணின்னும்.. ஒன்ன நோகடிக்கணும்னே.. சொல்லிச் சொல்லி ஒ மனசுல தாழ்வு மனப்பான்மைய உண்டாக்கி வெச்சிருக்கா..

சின்னப் பொண்ணாருந்த ஒம் மனசுல ஓ சித்தியோட வார்த்தைங்க பதிஞ்சி போய்டுத்து.. அது ஒன்ன விட்டுப் போகல.. அதா எப்பவும் நீயே ஒன்ன தாழ்வா நெனைக்கிற.. படிச்சா மட்டும் போதாது.. தவற திருத்திக்கவும் தெரியணும்.

படிச்சும் இப்டீல்லாம் இருக்கிறவா பேர் என்ன தெரியுமா? 

ம்..

சொல்லே..என்னனு..

படிச்ச முட்டாள்.

அந்த பேர் இங்க இப்ப யாருக்குப் பொருந்தும்?

ஹி..எனக்குதா..

தெரியறதில்ல..

சொல்லிவிட்டு வருத்தமுடன் எழுந்து சமயலறைக்குள் நுழைந்நார் லோச்சனி.

எப்பேர்ப்பட்ட அம்மா?.. எப்பேர்ப்பட்ட அப்பா  இவா?

பெத்த தாயயிழந்து பெத்த அப்பா வோட பாசமு கெடைக்காத.. சித்தி கொடுமய அனுபவிச் சிண்ருந்த நம்மள மீட்டு இதுமாதிரியான பாசமான அம்மா  அப்பாட்ட ஒப்படச்சிருக்குற ஆண்டனோட கருணைய அப்பப்ப மறந்து அவங் குடுத்த சின்னக் கொறைய பெரிசா நெனச்சு நாம வருத்தப்பட்டு..நாம வருத்தப்படறதப்பாத்து இவா வருத்தப்படறமாரி நடந்துக்கிறமே.. அது தப்பில்ல?

லோச்சம்மா சொல்றாப்ல..

காலே முடங்கிப் போனவா எத்தன பேர் இருக்கா ஒலகத்துல?

காலே இல்லாதவா இருக்க..

கால் இருக்கறவா காலுக்கு செருப்பில்லயேன்னு  அழறது தப்பில்ல?

போலியோ வந்து கால் சூம்பி நடக்கவே கஷ்ட்டப்படறவா எத்தனபேர் இல்ல..

இனிமே இப்டீல்லாம் நாமளே நம்மள தாழ்த்திக்கக் கூடாது.

ஒரு முடிவோடு..லோச்சம்மா என்று ஜாலிக்குரலில் அழைத்துக்கொண்டு கிச்சனுக்குச் சென்றாள் சாரு.

காலை மணி எட்டு.மெட்ராஸ் மெஸ் என்ற போர்டு தொங்கிய அந்த நீண்ட ஹாலைக் கொண்டிருந்த கொஞ்சம் பழமையான  கட்டிடம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.

இட்லி பொங்கல் மெதுவடை மாவுதோசை சாம்பார் சட்னி என அனைத்து பதார்த்தங்க ளிலுமிருந்தும் வெளிவந்த கதம்பமான வாசனையோடு மெட்ராஸில்  மயிலாப்பூர் ஹோட்டலொன்றில் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்திக் கொண்டிருந்தது மெட்ராஸ் மெஸ்.

அதனுள்ளே நுழைந்தான்

முரளி கிருஷ்ணா.

அட முரளி..வா..வா..என்ன இன்னிக்கு எட்டுமணிக்கே வந்துட்ட?வழக்கமா எட்டே முக்காலாகும்? 

வாயெல்லாம் பல்லாய் வரவேற்றார் கல்லாவிலி ருந்தவர்.நிஜமான அக்கறை யோடான வரவேற்பு.

இல்ல மாமா..நேத்து காலேஜ்லேந்து வரும்போது வண்டி மக்கர் பண்ணிடுத்து..

வர வழீலருந்த கடேல ரிப்பேருக்கு குடுத்துட்டு வந்தே..ரெண்டு நாளாகும் ஒக்க பண்ணிக்குடுக்கன் னான்.. இன்னிக்கே குடுக்கச் சொல்லி கெஞ்சிக் கூத்தாடிட்டு வந்துருக்கேன்.

ரெண்டு பங்கு சார்ஜ் போடுவே ஓகே வாங்க றாப்ல..சரின்னுட்டு வந்தே.. நமக்குனா வயத்தவலி.. வேற என்ன பண்றது சொல்லுங்கோ..

அதா சீக்கரமாபோய் வண்டிய வாங்கிண்டு காலேஜுக்குப்போணும்.கடவரைக்கும் நடந்துன்னா போணும்.

ஏ..ஆட்டோலயோ..பஸ்லயோ போய் கட வாசல்ல எறங்கிக் லாமே?நடந்தேம்போணும்.

ஆட்டோ பஸ்னு போனா.. செலவுன்னா ஆகும்? அப்பறம். மெட்ராஸ் மெஸ்ல சாப்டதுக்கு காசு எப்பிடி குடுக்கறது?

ஏய்..அம்பி..விசாலம் பாரே மில்ட்ரி கிருஷ்ணமுர்த்தி அய்யர்வாள் பேரன் பேசறத..

கெக்கெக்கெக்..உடம்பு மேலும்கீழும் அசைய குலுங்கிச் சிரித்தார் கல்லாக்காரர் முத்துசாமி.

டேபிள்களில் பரிமாறிக் கொண்டிருந் அம்பியும் விசாலம் மாமியும் முரளியைப் பார்த்து செல்லமாய்ச் சிரித்தார்கள்.

அத்தியாயம் – 17

லைட்டாய் டிபன் சாப்பிட்டு விட்டு  மெட்ராஸ் மெஸ்ஸிலிருந்து வெளியே வந்தவன் வாட்சில் மணிபார்த்தபோது எட்டுநாற்பது ஆகியிருந்தது நேரம்.

வண்டிய.. ஒக்கப்பண்ணக் குடுத்த கடேலேந்து வாங்கிண்டு.. நேரா காலேஜ் போக சரியாருக்கும்  என்று நினைத்தவனாய்..தன்னைக்கடந்து சென்ற ஆட்டோவைக் கைதட்டி அழைத்தான்.

ஏறி அமர்ந்து கொண்டு போகவேண்டிய இடம் சொன்னான்..

பத்தே நிமிடத்தில் ஒர்க் ஷாப் வாசலில் இறங்கியாயிற்று.

கடை திறந்திருக்கவில்லை.

மணி ஒன்பதே கால்..

பட்பட்டென்று அடுத்தடுத்த கடைகளின் ஷட்டர்கள் திறக்க ஆரம்பித்தன.

பொறுமையிழந்துபோனான் முரளிகிருஷ்ணா.

வெய்யில் வெளுத்து வாங்கியது.

தலையில் சூடு இறங்கியது.

கர்ச்சீப்பை எடுத்து தலையில் பரப்பி அதன் இரு நுனிகளை இருகாதுக்குப் பின்னால் செருகிக் கொண்டான்.

தேமேனென்று.. திறக்காத கடை வாசலில் அங்கு மிங்கும் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.

கடும் டிராஃபிக்ஜாம்.மெல்ல மெல்ல வண்டியை நகர்த்த வேண்டியிருந்தது.

அதென்னமோ குறிப்பா இந்த எடம் வந்தா மட்டும் ஊர் ஒலகத்துல இருக்குற அத்தன வெகிக்கிளும் இப்டீதா போக வேண்டிய எடத்துக்குப் போறாப்ல ஒரே நேரத்துல வந்து குமிஞ்சிக்கிறது..

அரையடி நகரவே அஞ்சு நிமிஷம் ஆறுது..

கடுப்பாருக்கு என்று சலிப்போடு இன்ச் பை இன்ச்சாய் வண்டியோடு நகர்ந்து கொண்டிருந்தாள் சாரு.

முரளிகிருஷ்ணா நிற்குமிடம்.

என்ன காரணமோ அந்த இடத்தில் வந்து டிராஃபிக் ஸ்தம்பித்து நின்றது.

மேற்கொண்டு ஒரு இன்ச்கூட வண்டியை நகர்த்த முடியாமல் வண்டி நின்றது.

சாலையோரத்தில் நின்றிருந்த முரளி கிருஷ்ணா கொஞ்சம் உள்ளடங்கி.. கிட்டத்தட்ட திறக்கப்படாத அந்த ஒர்க் ஷாப்பின் படியேறி ஷட்டரின் முன்னால் நின்றான்.என்ன இன்னிக்கு இப்பிடியோரு டிராஃபிக் என்று நினைத்துக் கொண்டான்.

கிருஷ்ணா நின்ற கடைவாசலில் மேற்கொண்டு முன்னேறமுடியாமல் சாரு வின் வண்டி வந்து நின்றது.

உஸ் அப்பாடி..என்னமா வெயிலடிக்குது..கசகசனு கழுத்தெல்லாம் வேக்குது என்று மனதுக்குள் சொல்லியபடி துப்பட்டாவைக் பின்கழுத்தில் வைத்து கழுத்தை அப்படியும் இப்படியும் அசைத்து வியர்வையைத் துடைத்து விட்டு முகத்தை உயர்த்தி எதேச்சையாய் இடப்புற மிருந்த கடைகளைப் பார்த்தாள். 

அனில், சஞ்ஜய், வின்சென்ட், அகிலேஷ் எவனாவது கண்ணுல பட்டாக்கூட அவுனுங்களோட தொத்திண்டு போயிடலாம்னு பாத்தா ஒரு பயலயும் காணும்..எல்லாருமே டிராஃபிக்ல மாட்டிருப் பானுங்க போலருக்கு  இன்னிக்கு காலேஜ் ஹோகயாதா..நினைத்துக் கொண்டவன் பார்வையைத் திருப்பினான்.

சாருவின் வண்டி நகராமல் நின்ற இடத்திலிருந்து கிருஷ்ணா நின்ற இடம் ஐந்தாறடிக்குள் தான் இருக்கும் என்பதால்  சாரு முகத்தை உயர்த்தி இடது பக்கக் கடைகளைப் பார்த்த அதே நேரம்.. சாருவின் வண்டி நிற்கும் இந்தப் பக்கம் பார்வையைத் திருப்பினான் கிருஷ்ணா.

இவள் அவன் கண்ணிலும் அவன் இவள்  கண்ணிலும் படும்படியாயிற்று.

இவ அவனில்ல..அதா அவ..

என்னபேரு கிருஷ்ணான்னு முடியுமே?ஆமா ஆமா முரளி கிருஷ்ணா..முரளிகிருஷ்ணா..திமிரு புடிச்சவன்ல.. சாருவின் மனம்  நினைத்து முடிப்பதற்குள்  பார்வை முரளி கிருஷ்ணாவின் கர்சீப் முக்காடைப்பார்த்து விட்டுச் சட்டென நகர்ந்தது.

பாரே தலேல போட்டுருக்குற முக்காட்ட..ஊர்ல எதுத்தாத்து பிச்சம்மா பாட்டி இப்பிடித்தா நார்பட்டுப் பொடவய கட்டிண்டு.. பொடவய  தலேல முக்காடு போட்டுண்டு.. காதமறைக்கிற துணிய ரெண்டு காதுக்குப் பின்னாடியும் இழுத்துவிட்டு சொருகிருப்பா..  

தோ..இந்தாளும் பிச்சம்மா பாட்டி மாரியே..ஹையோ..

அழகு..கடவுளே..காலேஜ் வராம கண்ட எடத்துலயும் இப்பிடிதா முட்டாக்கும் கிட்டாக்கும் போட்டுண்டு நிக்கிறது வழக்கம் போலருக்கு..

இந்தாளுகிடப்போயி ஸாரிகேட்டேம் பாரு என்னச்சொல்லணும்.. ஹ்கும்..விலுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அவனைப் பார்க்காததுபோல் நடித்தாள்.

அய்யோ கடவுளே..இது அந்தப் பொண்ணுல்ல..

அதா சாருலதா..சாருலதா..

என்னமோ வயசுக்கோளாறு..

இவுங்கமாரி அழகான பொண்ணுங்க தள்ளிவிட்டா எத்தன தண்ணிப்பள்ளத்து லன்னாலும் விழுந்து விழுந்து எழுந்துக்கலாம்னு சொல்லிட்டேன். வாத்சவந்தா.

அதுக்குதா..வார்த்தையால பதிலடி குடுத்து அர்ச்சன மண்டகப்படில்லாம் செஞ்சாச்சே..அப்றமென்ன?

இப்பவும் கோவமா விலுக்குனு மூஞ்சிய திருப்பிக்கிறாங்க..சரியான சண்டக்கோழிபோல..

அவுங்க என்ன பாத்தப்ப அவுங்க பார்வ எந்ததலய பாத்துதில்ல?

முக்காட்டப் பாத்துக் கேவலமா நெனச்சிருப் பாங்க..கடவுளே..பரக்கென தலைமீதிருந்த கர்ச்சீப்பை எடுத்தான்.தலையைக் கோதிவிட்டுக்கொண்டான்.

டிராஃபிக் சீராகிவிட இவனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் பார்த்ததாகவே காட்டிக்கொள்ளாமல் வண்டியை ஓட்டிக்கொண்டு விர்ரெனப் பறந்தாள் சாரு. 

அடுத்துவந்த ஒருவாரம் சாரு கல்லூரிக்கு வண்டியில் செல்லும்போது இந்த இடத்தை இத்தனை மணிக்குக் கடந்து செல்வா ளெனக் கணித்துக் கொண்டு சற்று முன்னதாகவே வந்து அந்த இடத்தில் அவளின் கண்ணில் படுமாறு நின்று கொண்டான்.

இவன் தனக்காகத்தான் தன் கண்ணில் படவேண்டு மென்பதற்காகத்தான் தினமும் வந்து நிற்பது அவளுக்குப் புரிந்தது.

ஹலோ சார்..இதெல்லாம் பழைய டெக்னிக்.

ஒல்டு சினிமா ஃபார்முலா.

இதெல்லாம் செல்லுபடி யாகாது.

யார்கிட்ட? நினைத்தவள் குறிப்பிட்ட அந்த இடம் வரும்போதெல்லாம் கழுத்தை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் அசைக்காமல் விர்ரெனப்பறந்தாள்.

ஆனாலும் தூரத்தில் வரும்போதே அவன் நிற்பது கண்ணில் படும்.

ஓஹோ..நா இங்க நிக்கிறேன்னு ஒங்குளுக்குத் தெரியும்.ஆனாலும் பாத்தா கௌரவம் கொறஞ்சிடும்னு விர்ருனு வண்டீல பறந்துடுறீங்க..மாத்து யோஜன தேவ..

அடுத்துவந்த நான்கு நாட்கள் சாருவின் கண்கள் படாத இடத்தில் நின்றான்.

ஆனால்  அவனால் சாருவைப் பார்க்கமுடியும்.

நான்கு நாட்களில் முதல்நாள்.. 

வண்டியில் வரும் போதே தூரத்திலிருந்து பார்க்கும் போதே தெரியுமவன் இப்போது கண்ணில் படவில்லை.

பத்தியா.. நா திரும்பியே பாக்கலன்னதும் முயற்சிய கைவிட்டுட்டுப் போயாச்சு..

நீ பாத்ததும் நா பல்லக்காமிப் பேனா என்ன?

ஹ்ஹும்..யாருகிட்ட? இந்த சாருண்டையா?

விர்ரென வண்டியில் பறந்தாள்.

மறைவாய் நிற்கும் முரளிகிருஷ்ணா சிரித்துக் கொண்டான்.

போங்க..போங்க..மிஸ் சாருலதா..இந்த வீராப்பும் வெறைப்பும் எத்தனநாள் நீடிக்கும்னு பாக்கறேன்.

அடுத்துவந்த இரண்டு நாட்களும் இப்படியே கண்ணாமூச்சி ஆட்டமாய் போயிற்று.

நான்காம் நாள்.வண்டியில் தூரத்தில் வரும்போதே..

முரளி கிருஷ்ணா வழக்கமான இடத்தில் நிற்கிறானா என்று அவளையுமறியாமல் கண்கள் பார்த்தன.

ம்ஹும்..நிக்கல..என்னவாருக்கும்?..

என்ன என்னவாருக்கும்?

நம்ம டிராமால்லாம்..அந்த பொண்ணுகிட்ட நடக்காதுன்னு புரிஞ்சி பேருக்கும்..அதா எடத்த காலிபண்ணியாச்சு வேறேன்ன?நா சாருவாக்கும்..சாருலதாவாக்கும்.

தன்னைத்தானே மனம் உயர்த்தி சொல்லிக் கொண்டாலும் கொஞ்சம் ஸ்ருதி குறைந்தாற்போல் தோன்றியது சாருவுக்கு.

அதெல்லாம் ஒன்னுமில்ல..

லூஸு..தன்னைத்தானே அதட்டிக் கொண்டாள்.

மேலும் இரண்டுநாள் ஆட்டம் காட்டினான் முரளி கிருஷ்ணா.

அந்த இரண்டுநாளும் சாருவின் கண்கள் வழக்கமாய் முரளி கிருஷ்ணா நிற்குமிடத்தில் அவன் நிற்கிறானா என்றும்..

அதேபகுதியில் வேறு எங்காவது நிற்கிறானா என்றும் தேடி அலைந்தன.

சாருலதா நா நிக்கறேனானு தேடறாங்க..நன்னா புரியறுது..சிரித்துக் கொண்டான் முரளி.

மனதைக் கல்லாக்கிக் கொண்டு சாருவின் கண்களில் படாமல் மேலும் இரண்டு நாட்கள் ஒதுங்கிக் கொண்டான் முரளி கிருஷ்ணா.

காலை மணி பதினொன்று.

மருத்துக்கல்லூரியின் பிரம்மாண்ட நூலகம்.

பெரிய பெரிய ரேக்குகளில் மருத்தும் பற்றியதான நூல்கள் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

நிறைய இருக்கைகள்.

நீண்ட மேஜைகள்.

மாணவ மாணவியர் தனியாய் அமர்ந்து படிக்கவும் குறிப்பெடுத்துக் கொள்வதற்குமான வசதிகள்.

க்ரூப்பாய் அமர்ந்து படிக்கும் வசதி.

அமைதியான சூழல். யாருடைய தொந்தரவும் தலையீடுமில்லாமல் தேவையான மருத்துவப் புத்தகங்களை எடுத்துக் கையாளும் வசதி.

தனது இரண்டாம் வருடப் படிப்பிற்கான சில முக்கியக் குறிப்புகளை அதற்கான மருத்துவப் புத்தகத்தி லிருந்து எடுத்து தனக் கெதிரில் மேஜை மீதிருந்த நோட்டில் எழுதிக் கொண்டிருந்த சாரு.. புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டி தேவையான குறிப் பொன்றைத் தேடிக் கொண்டிருந்தாள். பார்வை புத்தகத்தில் பதிந்திருந்தது.

தான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு எதிர் நாற்காலி இழுக்கப்படுவதும்.. மேஜை மீது தொப்பென்று புத்தக மொன்று வைக்கப்படும் சப்தமும்..லேசான கனைப் பொலியும் கேட்க..நிமிர்ந்து பார்த்தாள் சாரு.

நா இங்க ஒங்காரருதுல தங்களுக்கு ஏதும் ஆட்சேபணை உள்ளதா மிஸ்.சாருலதா என்று குறும்பும்.. விளையாட்டும் கொப்பளிக்கக் கேட்டபடி நின்றிருந்தான் முரளி கிருஷ்ணா. முகத்தில் வசீகரப் புன்னகை.

அதிர்ந்துபோனாள் சாரு..சாருலதா.

அத்தியாயம் – 18

வசீகரப்புன்னகையோடு எதிரில் நிற்கும் முரளி கிருஷ்ணாவைப்பார்த்து அதிர்ந்து போனாள் சாரு.

சட்டென அதிர்ச்சியை மறைத்துக்கொண்டாள்.

இந்த லைப்ரரி இங்க படிக்கிற எல்லா ஸ்டூடென்சுக்கும் பொதுவானது.யார் வேணா எங்க வேணா ஒக்காரலாம். நீங்க உட்காரரத ஆட்சேபிக்க நா யாரு?

ஆனா எனக்கு அது அனீசியா இருக்குறதா தோணினா நா வேற எடத்துல போய் உட்கார்ரது எ விருப்பம்.. அதுனால..

கையிலிருந்த புக்கையும் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த நோட்டையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள் சாரு.

ஸாரி..ஸாரி..ஒங்களுக்குத் தொந்தரவா நா இருக்க விரும்பல..நா போயிடறேன்..

அதுக்கு முன்னாடி.. அன்னிக்கி நா..அழகான பொண்ணுங்க தள்ளிவிட்டா.. எத்தன தண்ணிப்பளத்துல வேணாலும் விழுந்து விழுந்து எழுந்திருக்கலாம்னு முணுமுணுத்த வார்த்தைங்கள திரும்ப வாங்கிக்கிறேன். ஸாரி கேட்டுக்கிறேன்.

பொதுவா சின்ன வயசுப் பசங்க வேடிக்க வெளையாட்டா அப்பிடி சொல்றது நார்மல்தா.

நானும் வேடிக்கயாதா சொன்னே.. அது ஒங்கமனச இப்பிடி கோவப்படுத்தும்.. காயப்படுத்தும்னு நா நெனைக்கல..

அப்பவே ஸாரி கேக்க நெனச்சே..நீங்க முடிஞ்சவர என்ன கழுவி ஊத்திட்டு வண்டீல வேகமா போய்ட்டீங்க..

அதா இப்ப ஸாரி கேக்குறே..ஸா..ரீ..சரியா? நீங்க என்ன ரொம்ப கெட்ட பையனா நெனச்சிருப்பீங்க..நா அப்டீல்லா இல்ல.. ராணுவ அதிகாரியா இருந்து ஓய்வு பெற்ற தாத்தாவால கட்டுப்பாடோட வளக்கப் பட்டவ நா.. நா..முரளி கிருஷ்ணா.. நாலாவது வருஷம் மெடிகல் படிக்கிறே.. தாயுமில்லாத..அப்பாவோட பாசமு கெடைக்காம.. தாத்தா காட்டின அன்பாலையும்.. கட்டுப்பாட்டுலையும் வளந்தவ நா.. தாயுமில்லாத..அப்பாவோட பாசமு கெடைக்காத..

அவன் வாயிலிருந்து வந்த இந்த வார்த்தைகள் சாருவை அதிரவைத்தது.

சட்டென அவன் முகம் பார்த்தாள்.

ஸாரி..ஸாரி கேக்க வந்துட்டு  ஒங்குளுக்குத் தேவையில்லாத ஏதேதோ சொல்லிட்டே.. அபிவாதயே சொல்லின்னா மன்னிப்புக்கேக்கவா?

இரு கைகனையும் இருகாதிலும் வைத்துக் கொண்டு லேசாய்க்.. குனிவதுபோல் முதுகை வளைத்து..

அபிவாதயே ஆங்கீரச.. பார்ஹஸ்பத்ய பாரத்வாஜ ப்ரவராந்த்வித பாரத்வாஜ கோத்ர..ஆபஸ் தம்ப சூத்ர..யஜுஸாகா..அத்யாயி முரளிகிருஷ்ண சர்மா..மெதுவாய்ச் சொல்ல ஆரம்பித்தான்..

கடவுளே..கடவுளே..என்ன இது? பொம்னாட்டிக்கிப்போய் அபிவாதயே சொல்லுவாளா?

கடவுளே சட்டென ரெண்டடி இடப்பக்கம் நகர்ந்து சென்றாள்.வாயைப்பொத்தி சிரித்து விட்டாள் சாரு.

கண்ராவி.. லேசாய்த்தலையில் தட்டிக்கொண்டாள்.ஒங் காத்து சாஸ்த்திரிகள் மாமா இப்பிடித்தான் பொம்னாட்டிக்கும் அபிவாதயே சொல்லணும்னு சொல்லிக் குடுத்தாரா?மீண்டும் லேசாய்ச் சிரித்தாள்.

சிரிச்சீங்க..சிரிச்சீங்க..சிரிச்சிட்டீங்க..அப்டீன்னா எனக்கு மன்னிப்புக் கெடச்சாச்சு..இத இத இதத்தா நா எதிர்பாத்தே..ரொம்ப நன்றி மிஸ்..

வரேன்..சொல்லிவிட்டு நொடிநேரம் கூட நிற்காமல் அவ்விடம் விட்டு வேகமாய் நடந்தான் முரளி கிருஷ்ணா..

வேகமாய் நடந்து செல்லும் அவனையே பார்த்தபடி சிலையாய் நின்றாள் சாரு..

சாரு..நா ஆபீஸ் விட்டு வந்ததுலேந்து பாக்கறே..நீ

சரியாவே பேசல..ஏதோ யோஜனேலயே இருக்கறா மாரி இருக்கு? லோச்சனி கேட்டபோது என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை சாருவுக்கு.

லோச்சம்மா கேக்குறது கரெக்ட்தா..வழக்கம்போல் லோசம்மாவோடு.. தான் சகஜமாய் தாராளமாய்ப் பேசவில்லை என்று தெரிந்தேதான் இருந்தது சாருவுக்கு.

அதெல்லாம் இல்லம்மா..

படிக்க வேண்டியது ரொம்ப இருக்கு..நாளைக்கு லேப் ப்ராக்டிகல் வேற இருக்கு..

சரியா செய்யணுமேன்னு.. 

கவலையா இருக்க அதானே?

ஆமா..அதா..

சரிசரி..நைட்டு சீக்கிரமா சாப்ட்டுட்டு போய்ப்படி..

சரிம்மா..

நைட் படுக்கையில் படுத்து புரண்டபோது லைப்ரரியும்..

முரளி கிருஷ்ணா சொன்ன வார்த்தைகளுமே மனதில் வந்து வந்து மோதின.

பாவம்ல முரளி கிருஷ்ணா..

தாயுமில்லாத.. அப்பாவோட பாசமு கெடைக்காதனுனா சொன்னாரு.. அப்டியே சொரேர்னு வயறு கலங்கிப் போச்சில்ல..

அப்ப அவரும் நம்மளாட்டம் தா..ஸெய்லிங் இன் த ஸேம் போட்..

நமக்காவது லோச்சு அம்மாவும் தியாகு அப்பாவும் கெடச்சாச்சு..அம்மாவோட அன்பும் அப்பாவோட பாசமும் இப்பிடிதா இருக்கும்கிறது இவா ரெண்டுபேரும் காட்ற நிஜமான அன்பால நா உணர்றே..அனுபவிக்கிறே..

ஆனா..முரளி கிருஷ்ணாக்கு?

தாயோட அன்புமில்லாத அப்பாவோட பாசமு கெடைக்காதனு..இப்பிடி சொல்லும் போது அவர் கொரல்ல எத்தன வருத்தமு வேதனையும் தெரிஞ்சிது?

பெத்த தாயில்லா கொடும எத்தனாம் பெரிய கொடுமன்னு அணுஅணுவா அனுபவிச்சவ நா..

பெத்த தகப்ப உயிரோட இருந்தும் அவரோட பாசம் கெடைக்காத தவிச்சவ நா..

பத்துவயசுவர நா பட்ட வேதனையும் கொடுமையும்?..

ரேவி மட்டும் இல்லேன்னா..

கண்கள் கலங்கிப்போயிற்று.

எனக்காவது பாசத்த அள்ளி அள்ளி கொடுக்கற லோச்சு அம்மாவு.. தியாகு அப்பாவு கெடச்சாச்சு..ஆனா முரளிகிருஷ்ணாக்கு?..

தாத்தா பாசம் மட்டுந்தா போலருக்கு..பாவம்ல..நல்லவரர்தா போலருக்கு..

பாரே..அபிவாதயே சொல்லி ஸாரி கேக்குறத..அப்ப சந்தியாவந்தனம்..பரிசேஷணம் எல்லா உண்டுபோல..

சரியான அக்மார்க்…..பைய லேசாய் வாய்விட்டுச் சிரித்தாள் சாரு.

அடுத்து வந்த நாட்களில்..

எதேச்சயாய் பார்த்துக் கொள்ள நேர்ந்தால் லேசானா புன்னகை..காலை நேரமெனில் குட்மார்னிங்..

மாலை கல்லூரி விட்டு வீடுதிரும்பும் போது வண்டியை ஸ்லோ செய்து  குட்டீவினிங்.. கெளம்பியாச்சா? பை..என்று சிலநொடிகள் மட்டுமே நீடித்த பேச்சு.. நாளடைவில் சில நிமிடங்களுக்கு நீண்டு..

மதியம் லைப்ரரிக்கு வரீங்களா என்று கேட்டுக் கொள்ளபட்டு லைப்ரரியில் அரைமணிநேரம் நீடித்தெனப் படிப்படியாய் வளர்ந்தது..

முரளி கிருஷ்ணாவை மிஸ்டர் போட்டு சாரு அழைப்பதும்..சாருவை மிஸ் சாருலதா என்று மிஸ் போட்டு முரளிகிருஷ்ணா  அழைப்ப தும் மிஸ்ஸாகி..

நேரடியாய் சாருலதா என்றும் முரளி கிருஷ்ணாவென்றும் மாறிப்போய் கடைசியாய் சாரு என்றும் முரளி என்று மாய் சுருங்கிப் போனது.

சாருவின் அழகும் அறிவும் பேச்சும் அமைதியான மெது வான சிரிப்பும் அடக்கமும் முரளிகிருஷ்ணாவின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இல்லை.

மெல்ல தன் இதயத்தில்  காதல் எட்டிப்பார்ப்பதை உணரமுடிந்தது.

ஆனால் சாருவின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் எதையாவது சொல்லப் போய்.. அப்புறம் சாரு.. அதானே பாத்தே.. கடசீல ஆம்பளைங்க புத்திய காட்டியாச்சா? நா ஃப்ரெண்டா நெனச்சுதா பழகினேன்.. அப்டீன்னு சொல்லி மூஞ்சியத் திருப்பிண்டு போய்ட்டா?

சாருவிடம் தன் காதலைச் சொல்ல தயக்கமும் பயமுமாய் இருந்தது முரளிகிருஷ்ணாவுக்கு.

அதற்காக எத்தனை நாட்கள்தான் மனதின் காதலை மூடி மறைப்பது?

சுடிதாரை அயர்ன் செய்து கொண்டிருந்தாள் சாரு.

மனம் இப்போதெல்லாம் அடிக்கடி முரளியை நினைக்கிறது..அது ஏன்?

நாமதா முரளியை அடிக்கடி நெனைக்கறோமோ?

முரளி நம்மள அடிக்கடி நெனச்சுப்பாரா?

அவள் நினைப்பு அவளுக்கே வெட்கத்தைத் தந்தது. சீ..என்ன இப்டீல்லாம் நெனச்சுண்டு?

தலையை உலுக்கிக் கொண்டாள்.

நெனச்சுப்பார்..நெனச்சுப் பார்..

இப்போதெல்லாம் முரளி தன்னிடம்  எதையோ சொல்லத் தவிப்பதும்.. தயங்குவதுமாய் இருப்பது புரிந்தது.அது என்னவாய் இருக்குமென்று அவளுக்குப் புரியாமலில்லை.

சாருவுக்கும் முரளியின் பண்பும் டீசன்ட்டான பேச்சும் நடத்தையும் தோழமை என்பதைத் தாண்டி நெஞ்சுக்குள் ஏதோ ஒரு உணர்வை அலையடிக் கத்தான் வைத்தது.

ஆனாலும் நெஞ்சுக்குள் நெருடலாய் அந்தக் கேள்வியை மனம் கேட்டுக் கேட்டு பயமுறுத்தியது.

சாரு.. முரளிய ஓம் மனசு விரும்பறதா?அதுல தப்பு ஒன்னுமில்ல..ஆனா..மனம் என்ன சொல்ல வருகிறதென்று அவளுக்குத் தெரியா என்ன?

மனசே..நீ என்ன சொல்ல வரேன்னு எனக்குப் புரியிது. இந்தமாரி நெட்டையும் குட்டையுமா காலவெச்சுண்டு காதல்லா ஒனக்குத் தேவையா?அப்டீங்கற.. அதானே?

மனம்  அதற்குமேல் எதையும் கேட்காமல் மௌனமானது.

சுடிதாரை அயர்ன் செய்து கொண்டிருந்தவளின் கை சட்டென அயர்ன் பாக்ஸை  நகர்த்தாமல் துணிமீது அப்படியே நின்றது.

ப்ச்..என்று சொல்லிக் கொண்டாள் சாரு.

அதானே..முரளி திடீர்னு ஒரு நாள் சாரு நா ஒங்கள விரும்பறேன்னு பட்டுனு சொல்லிட்டா? என்னத்த பதில் சொல்றது?

வெட்கப்பட்டு தலயகுனிஞ்சா முரளியோட காதல ஏத்துக்கிறாமாரி ஆகிடாது?

ம்ஹும்..ம்ஹும்..வேண்டா..வேண்டா..நெஜத்த மறச்சு காதல வளக்கக்கூடாது.

எப்பிடியும் உண்ம தெரியாம போகாது..அப்ப கால்லருக்குற கொறபாட்ட சொல்லாம மறச்ச நீங்க இன்னும் என்னவெல்லாம் சொல்லாம மறைக்கிறீங் களோ..அப்பிடீன்னு கேவலமா பேசிட்டுப் போய்ட்டா?அது நமக்கு அவமானமில்ல?..கேவல மில்ல?

நமக்கு காதலு வேண்டா ஒன்னு வேண்டா..முரளி லவ்வு கிவ்வுனு எதுவும் சொன்னா..த..பாருங்க முரளி..நாம ஃப்ரெண்டாவே இருப்போம்..அதுமுடியாதுனு ஒங்குளுக்குத் தோணினா இனிமே நாம சந்திக்க வேண்டாம்னு சொல்லிடு வோம்.அதவிட்டா வேற வழியில்ல..

மனம் வலித்தது சாருவுக்கு.

கல்லூரிப் பேராசியர் ஒருவர்இறந்து போய் விட்டதால் அன்று கல்லூரி பதிளோரு மணியோடு முடிந்துபோனது.

வண்டியில் சாரு வீடு திரும்பும வழியில் நின்று கொண்டிருந்தான் முரளி.

இவன் தனக்காகத்தான் நிற்கிறான் எனப்புரிந்ததால்  வண்டியை அவனருகில் மெதுவாக்கி நிறுத்தினாள்.

சாரு அதோ அந்த பார்க்ல கொஞ்ச நாழி ஒக்காந்து பேசலாமா? வீட்ல எதுவும் வேலாருக்கா?.. ஒடனே வீட்டுக்குப் போகணுமா?

இல்ல முரளி எதுக்கு பார்க்குக்கெல்லாம்? தயங்கினாள்.

தனியா வரபயமான்ன?

சிரித்தான் முரளி.

அதில்ல..தனியால்லாம்..

அய்ய..மெடிகல் படிக்கிற பொண்ணு..இப்பிடியா பயப்படுவீங்க..

ம்..அதுக்கு?..யாரோடையும் எங்கையும் போய் பழக்கமில்ல..

சரி..வேண்டாம்..நீங்க கெளம்புங்க.. வண்டியிலேறியமர்ந்து ஸ்டார்ட் செய்தான்.

சரி..வரேன்..பத்துநிமிஷந்தான் ஒக்காந்திருப்பேன்.

ஹை..ஓகே..ஓகே..சிரித்தான்

பத்து நிமிஷந்தா ஒக்காந்திருப்பேன்ட்டு ஆறுநிமிஷமா எதுவும் பேசாம அமைதியா இருந்தா?

என்ன பேசறது?

பேசலாமே..அமெரிக்க ஜானாதிபதி பத்தி..இந்திய பொருளாதாரம் பத்தி.. சமாதானத்துக்காக யாருக்கு நோபல் பரிசு குடுக்கலாம்கிறது பத்தி..

சிரித்துவிட்டாள் சாரு.

சாரு..

ம்..சொல்லுங்க முரளி..

நாம இதுவர பொதுவான விஷயம் மட்டும்தா பேசிருக்கோம்..சொந்த வாழ்க்கையப் பத்தி பேசினதில்ல..

நா என்னப்பத்தி சொல்ல நினைக்கிறே..சொல்ல லாமா? ஏந்தேவன்னு நெனைக்கிறீங்களா?

அப்டீல்லாம் நெனைக்கில..

என்னோட பிறந்த ஊர் மாயவரம்.எ ஒன்ர வயசுல அம்மா இறந்துட்டாங்க..

ஒலகத்துல எதுவெல்லாம் கெட்ட பழக்கம்னு சொல்வாங்களோ அத்தன கெட்டபழக்கமும் கொண்ட ஒருத்தர காட்ட முடியுமான்னு கேட்டா..எ அப்பாவ வெரல் நீட்டி காட்டலாம்.எங்கிட்ட பாசங்காட்ட அவருக்கு நேரமே இல்லாதமாதிரி..

என்னத்தொட்டுத் தூக்கிக் கொஞ்சினதே இல்ல அவர்.

ஆக அம்மாவோட அன்பும் அப்பாவோட பாசமும் எப்பிடி இருக்கும்னு தெரியாமையே நா வளந்தே.

அப்பாவோட அப்பா மில்ட்ரில பெரிய அதிகாரி. நேர்மை யான..ஒழுக்கமான ஒருத்தர  உதாரணமா காட்டணும்னா எங்க தாத்தாவ காட்டலாம்.

அவருக்கு எங்கப்பா மாதிரி ஒரு கேடுகெட்ட புள்ள. பாட்டி இல்ல..

அம்மாவும் இல்லாத அப்பாவோட கவனிப்பு மில்லாத ஒன்ர வயசு கொழந்தையான என்ன வளர்க்கிறது எந் தாத்தாக்கு பெரும் சவாலா இருந்துது.

ராணுவ வேலய ஒதறிட்டுவரவும் மனசு எடங்குடுக்கல..என்ன வளக்கவும் முடியல..

மாயவரத்துல வீடு நெலம் தோப்புதொறவுன்னு ஏகத்துக்கும் சொத்து இருந்துது.அதுலேந்து வர வருமானம் எ அப்பாவ ஒழைக்காமயே அவரிஷ்டத்துக்கு வாழப் போதுமானதா இருந்து..

தாத்தா மனம் நொந்துபோய் என்ன வளக்க வயசான பாட்டிய நியமிச்சிட்டு ராணுவத்துக்குப் போயிட்டார்.

லீவு கெடச்சு வரும் போதெல்லாம் என்னத் தூக்கிவெச்சுக்கொஞ்சுவார் அழுவார்.ரொம்ப பாசம் எம்மேல.

சாரு எனக்கு எத்தன வயசிருக்கும் சொல்லுங்களேன்.

தீடீரென முரளி கேட்ட கேள்வி சாருவை குழப்பியது.

நீங்க நாலாவது வருஷம் படிக்கிறீங்க..அப்ப..ப்ளஸ்டூ..னா பதினேழு..மெடிகல்ல நாலாவது வருஷம்.. அப்டீன்னா பதினேழும் நாலும் இருவதொன்னு..அப்பிடியில்லாட்டி இருவத்திரெண்டு..இருவத்திரெண்டு வயசிருக்கும்.கரெக்ட்டா?

அதா இல்ல..எனக்கு இருவத்திநாலு வயசு முடியப்போறது.

என்னது?அதெப்டி? இருவத்நாலு முடியப்போறுதா?ஆச்சரியமா இருக்கு..ஏ..லேட்டா படிக்கிறீங்க..

சிரித்தான் முரளி.அதுக்காக ஸ்கூல்ல படிக்கும்போது எந்த க்ளாஸ்லயும் கோட் லாம் அடிக்கல..நாந்தா முதல் மார்க் வாங்குற மாணவன்.

அப்ப எப்பிடி?..

எல்லா கொழைந்தைகளும் அஞ்சு வயசுக்கு ஒன்னாங் க்ளாஸ் சேருவாங்க..ஆனா நா ஏழுவயசுக்குதா சேந்தே.

என்னது?

ஆமா சாரு..என்ன என்னோட தாத்தா தான் வேல பாக்கற ராணுவ கேந்திரம் இருக்குற பூனாவுக்கு அழசிண்டு வந்து மிலிட்டரி ஸ்கூல்ல ஃபர்ஸ்டேண்டர்ட் சேத்து விட்டுட்டாரு.அப்ப எனக்கு ஏழு வயசு.

அதா நா மெடிக்கல் நாலாம் வருஷத்த இருவத்ரெண்டு வயசுல படிக்க வேண்டியத..

இருவத்தி நாலு வயசு முடியப்போற வயசுல படிக்கிறே..

சாருலதா..நா ரொம்ப வயசானவன்னு தோணுதோ ஒங்குளுக்கு? சிரித்தான்.

என்னது இருவத்னாலு வயசு வயசான வயசா?

அப்பா பொழச்சே..நெஞ்சில் கைவைத்துக்கொண்டு சிரித்தான்.

ஏ..இப்பிடி அப்பா பொழச்சேன்னு ஃபீல் பண்ணனும்?

பின்ன..நீங்க என்ன வயசானவன்னு நெனச்சுடக்கூடாதில்ல..சிரித்தான்.

அடகடவுளே..உங்க வயசுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?படபடப்பை மறைத்துக்கொண்டு இயல்பாய் கேட்பதுபோல் கேட்டாள் சாரு..

பின்ன?..தங்கிட்ட வயசான ஒருத்தன் வந்து..நா ஒங்கள விரும்பறேன்னு சொன்னா எந்த பொண்ணுதா அத ஏத்துப்பாங்க? அதா கேட்டேன்..என்றபடி சாருவின் முகத்தை ஆர்வமும்.. எதிர்பார்ப்பும்..சற்று கவலையோடும் பார்த்தான் முரளி.

முரளீ..என்ன சொல்றீங்க?

எதிர்பார்த்த கேள்விதா னென்றாலும்..நெஞ்சு படபடத்தது சாருவுக்கு.

சாரு..நா..நா ஒங்கள விரும்பறேன்..குரல் நெகிழ்ந்துபோயிருந்தது.

முரளி தன்னிடம் ஒருநாள்  தன்காதலைச் சொல்லுவான் என்று தெரிந்தே இருந்த நெஞ்சுதானென்றாலும்..

தனக்கும் அவன்மீது அப்படியான உணர்வு இருந்தாலும் தன் காலின் குறைபாடு சாருவை..

வேண்டா..வேண்டா முரளி.. நாம ஃப்ரெண்டாவே இருந்துடுவோம்..நீங்க என்ன விரும்புற அளவுக்கு நா ஒங்குளுக்குத் தகுதியானவ இல்ல..சட்டென அவனைப் பார்ப்பதைத் தவிற்கத் தலையைக் குனிந்து கொண்டாள் சாரு.

சாருவின் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் அவளின் மடியில் வீழ்ந்தன.

– தொடரும்…

காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் பெயர்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன். ஊர்: காஞ்சிபுரம். காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் எனும் நான் ஓர் பெண். தங்கமணி எனும் பெயர் ஆண்/பெண் இருபாலருக்கும் பொருந்துவதால் வாசகர்கள் குழம்பிப்போகிறார்கள். அதனால் தான் விளக்கம் தந்துள்ளேன். நிறைய சிறுகதைகள், தொடர்கதைகள், ஆன்மிகக் கதைகள், சிறார்களுக்கான கதைகள், கவிதைகள் வாராந்திர அச்சு ஊடகங்கள், மின்னிதழ்களில் காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் என்ற பெயரில் எழுதியுள்ளேன்..தற்போதும் எழுதிவருகிறேன். கதைகள்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *