ஆத்தா…. நான் பாஸ் பண்ணீட்டேன்..!
கதையாசிரியர்: வளர்கவி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
இணைய வெளியீடு: November 10, 2026 முதற்பதிப்பு: 2026
பார்வைகள்: 104

காலை 9 மணிக்கே அந்த நெட் சென்டர் கடை வாசலில் உட்கார்ந்திருந்தான் உமாகாந்த். அன்றைக்குத்தான் அவனுக்குப் பரீட்சை ரிசல்ட் வருகிறது.
அவனைப்போலவே பலபேர் வரிசை அமர்ந்து காத்திருக்க இவன் இருப்புக் கொள்ளாமல் வீற்றிருந்தான். 9.30க்கு ரிலீஸ் ரிலீஸ் பண்ணிவிடுவார்கள்.
ஆர்வம் பலபேர் மத்தியிலும், இவன் முகத்தில் பீதியும் பீறிட வீற்றிருந்த அந்த நெட்செண்டர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
அவன் ஒரு பாடம் சரியாய் எழுதவில்லை என்பதால் அவனுக்குத் தவிப்பும் பயமும் பற்றியிருந்தது. ஆனால் யார்கிட்டயும் தான் சரியாய்ச் செய்யவில்லை என்பதைச் சொல்லவில்லை.
கம்ப்யூட்டரை ஆன் பண்ண, செக்கு மாடாய் அது சுற்றிசுற்றி வந்தது நெட் ஒர்க் பிராப்ளம் என்றார். நெட் செண்டர் காரர்.
“வந்துடுச்சு வந்துடுச்சு..! அலறினான் பார்த்துக் கொண்டிருந்த ஒருத்தன். ‘முட்டிட்டு வந்த ‘சுச்சூ’வை அடக்கமாட்டாதவன் அலறினா மாதிரி இருந்தது அவன் அலறல்!!.
“அய்யா….! பாஸ்.!பாஸ்!. மார்க் பாரு! மார்க் பாரு.!. ஆர்வத்தில் இவன் தன் நம்பர் அடித்துத் தேட, நானூற்றி எண்பத்தி ஒன்பது என்றது! எல்லா வற்றிலும் தொண்ணூறுக்கு மேலே…!
ஒன்றே ஒன்றில் மட்டும் எழுபத்தி சொச்சம். வாட்டத்தோடு செண்டரைவிட்டு பிரண்ட் அவுட் எடுத்த கையோடு வெளியேறினான்.
வீட்டுக்குள் நுழைகையில் வாசலிலேயே அவன் வரவுக்காக ஆர்வமாக வசற்படியிலேயே உட்கார்ந்திருந்தாள் வடிவம்மை. அவன் பாட்டி. பிரிண்ட் அவுட்டைக் அவள் திணித்தபடி உமாகாந்த் உற்சாகமாகச் சொன்னான்.
“ஆத்தா…. நான் பாஸ் பண்ணீட்டேன்!”
மதிப்பெண் விவரத்தைப் பார்த்தவள் சந்தோஷப்படாமல் சங்கடப்பட்டு நீண்ட பெருமூச்சு விட்டபடி பொருமினாள்.
ம்ம்ம்ம்… எந்த சண்டாளன் திருத்தினானோ அந்த ஒரு பேப்பரை?! படிக்காமலே திருத்தி இருப்பான் போல.. இன்னைக்கெல்லாம் எவன் ஒழுங்கா படிச்சுத் திருத்தறான்.?!இவனுகளுக்கெல்லாம் கொடுக்கற சம்பளமே வேஸ்ட்!.
‘எக்ஸாம் ரிசல்ட்’ வந்தாலும் சரி, ‘எலக்ஷன் ரிசல்ட்’ வந்தாலும் சரி, வெற்றி பெற்றதை பெருமையா நினைக்காம தோல்வி அடைந்தததற்கு மட்டும் அடுத்தவனை குறை சொல்ற அந்த குணம் நமக்குள் எப்படி வந்தது? அது, என்னைக்குத்தான் மாறுமோ? தெரியவில்லை!!
ஆத்தா பேரனை ஆறுதல் படுத்துவதாக நினைத்துச் சொன்னாள் “ ரீடோட்டலுக்கு அப்ளை பண்ணலாம். ரீ டோட்டல் என்ன ரீடோட்டல்? ரீ வேல்யூவேஷ்னுக்கே அப்ளை பண்ணலாம். நீ கவலைப்படாதே!” என்றாள் அந்த பேப்பர் திருத்தினவனை உண்டு இல்லைனு ஆக்கீடறதுன்னு பொருமினாள்.
கேட்டுக் கொண்டிருந்த அவள் கணவர் நிதானமாய் சொன்னார். “ஏய்… என்ன பேசறே நீ??? நீயும் ஒரு காலத்தில அதே பாடம் நடத்தும் டீச்சராத்தானே இருந்து பல ஆயிரக் கணக்கான பேரின் பேப்பர் திருத்தினே?? அன்னைக்கு நீ திருத்தினா மாதிரிதானே இன்னைக்கு உன் பேரன் பேப்பரையும் திருத்தி இருப்பாங்க?!
எல்லாத்துல தொண்ணூறுக்கு மேல வந்தது மட்டும் படிச்சுத் திருத்த வந்ததுன்னும்., இதை மட்டும் படிக்காம திருத்தி வந்ததுன்னும் சொல்றது அபத்தமா இல்லை உனக்கு????
ஏன் எதுலயும் அவன் செண்டம் வாங்கலைனு யோசி..! அப்ப குறை எழதினதைத் திருத்தினவங்ககிட்ட இல்லை..! பரீட்சை எழுதின உன் பேரன் கிட்ட, அவன் மத்ததுலெல்லாம் குறைவாத் தப்பும் தவறும் பண்ணி, அந்த ஒரு பேப்பர்ல மட்டும் அதிக தப்புகள் பண்ணியிருக்கக் கூடும் புரிஞ்சுக்க!.
ஒருத்தர் திருத்தின பேப்பரை எஸ்ஸோனு ஒருத்தர் செக் பண்ணுவார் சீஃப் மறு முறை அதைச் செக் பண்ணிதான் மார்க் சீட்ட்டே தயார் பண்ண அனுமதிப்பாங்க். இதெல்லாம் தெரியாதவங்க சொன்னா சரி!.. எல்லாம் தெரிஞ்ச டீச்சரா வேலை பார்த்த நீ யே அப்படிச் சொல்றது நியாயமில்லை.
பேரன் நாளைக்கு தன் தப்புக்கெல்லாம் அடுத்தவனைக் குறை சொல்ற குணத்தோட வளர்ந்துடுவான்னு சொல்ல ஆத்தா… அமைதியானாள்.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். கதைகள்: வளர்கவி வெளியிட்ட நால்கள் -…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
மலரும் சுமைதானடி
இரஜகை நிலவன்
November 10, 2026
உந்தன் நிழலாய் நானடி தோழி…
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
November 10, 2026
வாசல் தேடி வந்த வசந்தம்
கல்பனா ராஜகோபால்
November 10, 2026
