இன்றைக்கு நீங்கள் சொன்னபடி செய்தேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 16, 2025
பார்வையிட்டோர்: 131 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு செல்வனிடத்தில் ஒரு வேலையாள் இருந் தான். அவ்வேலையாள் கூர்மையான அறிவுள்ள வன் அல்லன். ஒரு வகையான மடையன். செல் வன் அவனை அடிக்கடி கண்டித்து அறிவுரைகள் கூறுவான். ஒருநாள் அவனைப் பார்த்து, “எக் காரியத்தைச் செய்தாலும் அக்காரியத்திற்குப் பின் ஏற்படக்கூடிய பலனையும் ஆராய்ந்து பார்த்து அதற்குத் தக்கபடியாகக் காரியங்களைச் செய்வது தான் அறிவாளிக்கு அழகு” என்று அறிவுரைகள் கூறினான். 

பிறகு அவ்வாளைப் பார்த்து, “எனக்குச் சில நோய்கள் இருக்கின்றன. அதற்கு ஆட்டு ஊனைத் தின்றால் நோய் நீங்கிவிடும் என்று மருத்துவர் சொல்லுகிறார். நான் ஊன் உண்ணாத சைவன் என்பது உனக்குத்தான் தெரியுமே, நீ மிக மறை முகமாக ஆட்டுக்கறி வாங்கிக் கறியாக்கு” என்று சொன்னார். 

அந்த மடையன், அவ்வாறே செய்வதாகச் சொல்லிவிட்டுச் சந்தைக்குச் சென்றான். அங்குப் பலரை ஓரிடத்திற்குக் கூப்பிட்டு ஒன்றாகச் சேர்த்து அவர்களைப் பார்த்து, ” என் வீட்டுத் தலை வரை நீங்கள் யாவரும் அறிவீர்களன்றோ? அவர் சைவர் என்பதுதான் உங்களுக்கெல்லாந் தெரி யுமே. அவர் ஒரு நோயின் பொருட்டு இன்று ஆட் டுக்கறி சாப்பிடப் போகிறார். இச்செய்தி மிக மறை முகமாக இருக்கவேண்டும். ஆட்டுக்கறி தின்றால் அதன்மேல் செய்ய வேண்டியதென்ன? ஒரு காரி யத்தைச் செய்தால் அதன் பிறகு ஏற்படக்கூடிய நிலைமையையுந் தெரிந்து காரியத்தைச் செய்ய வேண்டும் என்பது என்னுடைய தலைவர் கட் டளை” என்று சொன்னான். 

கூட்டத்தில் இருந்த ஒருவன், “ஆட்டுக்கறி எளிதில் செரிக்கமாட்டாது. செரிப்பதற்குச் சாரா யம் சாப்பிட வேண்டும், சாராயமும் ஒரு புட்டி வாங்கிக்கொண்டு போ” என்றான். 

மற்றொருவன், “ஆட்டுக்கறி சாராயம் முதலி யன சாப்பிட்டால் காமவெறி உண்டாகும். விலை மாதரையும் அழைத்துப்போ” என்றான். 

வேறொருவன், “விலைமாதர் கூட்டுறவால் நோயுண்டாகலாம், அப்பொழுது நோய் தீர்ப்ப தற்கு மருத்துவர் உதவி வேண்டும் மருத்துவரை யும் அழைத்துப்போ” என்றான். 

இன்னொருவன், “மருத்துவர் மருத்துவத்தால் ஆள் பிழைக்காமல் எமலோகப் பயணம் ஆனா லும் ஆகக்கூடும். ஆகவே பிணம் எடுப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளையுஞ்செய்து கொண்டுபோ” என்றான். 

அவ்வளவில் வேலையாள், ஆட்டுக்கறியும் சாராயமும் வாங்கிக்கொண்டு, விலைமாதர், மருத் துவர் ஆகியோரிடஞ்சென்று, “தலைவர் வரச் சொன்னார்” என்று கூறிவிட்டுப் பிணமெடுப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாவற்றையுஞ்செய்து கொண்டு சென்றான். 

வேலையாள் வீட்டிற்குச்சென்ற சிறிது நேரத் தில் எல்லோரும் செல்வர் வீட்டை அடைந்தார் கள். விலைமாது போய்ச் செல்வரைக் கண்டு கும்பிட்டாள். மருத்துவர் வந்து செல்வரைப் பார்த்து, “உடம்புக்கு என்ன?” என்று கேட்டார். பறையர், வண்ணார், நாவிதர் முதலியவர்களும் வீட்டு வாசலுக்கு வந்தார்கள். 

இவர்களையெல்லாம் காணவே செல்வனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. எல்லோரையும் பார்த்து, “என்ன செய்தி?” என்று கேட்டான். எல்லோரும் வேலையாள் வரச்சொன்னதாகத் தெரிவித்தார்கள். வேலையாளைக் கூப்பிட்டு, “எதற்காக வரச்சொன்னாய்?” என்று கேட்டான். 

அதற்கு வேலையாள், “இன்றைக்கு நீங்கள் சொன்னபடியே செய்தேன். ஒரு காரியத்தைச் செய்தால் அதற்குப் பிறகு ஏற்படக்கூடிய பலன் களையுந் தெரிந்து காரியஞ் செய்யச்சொன்னீர்கள் அல்லவோ,” என்று சொல்லிவிட்டுச் சந்தையில் பலருஞ் சொன்ன செய்தியைத் தெரிவித்தான். வந்து கூடியிருந்த அவ்வளவுபேரும் நகைக்கச் செல்வனுஞ் சேர்ந்து நகைத்தான். நகைக்காமல் வேறு என்ன செய்கிறது? 

– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *