ஆன்ம கன்னக்கோல் திருடர்கள்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 186 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இப்படியும் திருடுகிற கூட்டத்தாருண்டா? சுவரில் துளையிட்டு வீட்டினுள் போய்த் திருடுகிறார்களே அவர்கள் தாம் கன்னக்கோல் வைத்துத திருடுகிறவர் கள். ஆத்துமக் கன்னக்கோல் திருடர்கள யார்? கள்ளப் போதனை, கள்ள உபதேசங்களைக் கொடுத்து விசுவாசி களை அவிசுவாசிகளாக்குகிறார்களே அவர்கள் தாம் ஆத்துமக் கன்னக்கோல் திருடர்கள்.

இயேசு கிறிஸ்து தேவனல்லவென்று சொல்லுகிற வர்கள் அவருடைய தெயவிகத்தை மறுக்கிறா கள்.

‘பைபிளில் அநேகக் கட்டுக் கதைகள் இருக்கின் றன. யோனாவின் சரித்திரம் கட்டுக்கதை, ஆகையால் பைபிள் நமக்கு வழிகாட்டியல்ல. இவை போன்றவை களே கள்ள உபதேசங்கள், கள்ளப் போதனைகள்.

ஒன்று உங்கள் நினைவிலிருக்கட்டும். திருட்டுச் சொத்தை விற்கிறவர்களும், வாங்குகிறவர்களும் சர்க்காரால் தண்டிக்கப்படுகிறார்கள்.

அவ்வாறே கள்ளப் போதனை. கள்ள உபதேசத்தைப் போதிக்கிறவர்களும், கேட்கிறவர்களும் தண்டனை அடைவார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

“மாறுபாடுள்ள இருதயமுடைவர்கள் கர்த்தருக்கு அருவருப் பானவர்கள்; உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள்” [நீதிமொழிகள் 11:20]

“சீர்கேடான வீண் பேச்சுகளுக்கு விலகியிரு” [II தீமோத்தேயு 2:16]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *