அழுகைக்குக் காரணம்




(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நீதி மன்றத்திலே ஒரு வழக்கு நடைபெற்றது. வழக்காளியாக ஏற்பட்டது ஒரு நான்கு வயதுக் குழந்தை. குழந்தையின் பக்கமாகச் சொற்போ ரிட்டுக் கொண்டிருந்த வழக்கறிஞரானவர் நீதிமன் றத் தலைவருடைய மனத்தை மாற்ற எண்ணினார். அவர் நீதிமன்றத் தலைவரைப்பார்த்து, “இச்சிறு குழந்தையைப் பாருங்கள். இன்னுங் கண் திற வாத பச்சிளங் குழந்தை. தாய் தந்தையர் இருவருமே இறந்துபோய்விட்டபடியினால் திக்கற்ற வனாய் இறக்கை யில்லாத பறவையைப்போல் இருக்கிறான். இவன் மீது நீங்கள் இரக்கங் காட்டாமலிருப்பீர்களாயின் எதற்கும் பயனற்றவனாகப் போய்விடுவான்” என்று பலவாறு பேசியதோடு குழந்தையைக் கையிலே தூக்கிக் காட்டி உருக்கமாகப் பேசினார்.
அப்போது வழக்கறிஞருடைய கையிலே இருந்த குழந்தை கூச்சலிட்டு அழுதான். அதைப் பார்த்து நீதிமன்றத் தலைவர் மனஇரக்கத்தோடு எண்ணமிட்டுக் கொண்டிருந்தார்.
இதனைக் குறிப்பாக உணர்ந்துகொண்ட எதிர் வழக்காளியின் வழக்கறிஞரானவர் எழுந்து, ”குழந்தாய்! நீ யேன் இப்படிக் கதறியழுகிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு அச்சிறுவன், “எவனோ என் பின் பக் கத்திலே அடிக்கடி கிள்ளுகிறான்” என்று சொல்லிக்கொண்டே, மேலும் அழுதான்.
– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.