அறிவும் அறியாமையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 16, 2025
பார்வையிட்டோர்: 33 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாகரிகம் மிக்க நாடுகளில்கூடக் கல்வியறிவு குறைந்த மக்கள் தம் அறிவுக்கெட்டாதவற்றை மாயம் என்றும், மந்திரம் என்றும், தெய்வீகமென் றும் நம்பி அல்லலுறுகின்றனர். இந்நம்பிக்கை யால் புதிய பொருள்களை அறியும் ஆராய்ச்சி யறி வைப் பெறாது அவர்கள் அறியாமைச் சேற்றி லேயே அழுந்திக்கிடக்க நேருகிறது. 

உலக நாகரிகப்படியில் இன்னும் மிகத்தாழ்ந்த படியிலேயே இருக்கும் தென்கடல் பகுதியி லுள்ள மக்களைப் பற்றிய கீழ்வரும் கதை இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். 

சமயப் பணியி லீடுபட்ட ஆங்கிலப் பெரியார் ஒருவர், அப்பணியை முன்னிட்டு மேற்குறிப்பிட்ட தென்கடல் தீவுகளுள் ஒன்றில் மனைவியாருடன் சென்று தங்கியிருந்தார். 

ஒருநாள் பக்கத்தூருக்கு வேலையாகச் செல்லும் போது அவர் தம்முடன் தம் பணப்பையை எடுத்து வர மறந்துவிட்டார். அது நினைவிற்கு வந்ததும், அவர் அங்கே கிடந்த ஓட்டுத் துண்டொன்றை எடுத்துச் சுண்ணாம்புக் கட்டியால் ம னை விக்கு அதன்மீது ஒரு குறிப்பெழுதி அங்கிருந்த ஒரு குடி யானவனை அழைத்து, ” இதனை என் மனையாட்டி யிடம் கொடுத்து, அவள் தருவதை வாங்கிவா,” என்றார். 

குடியானவன்: “என்ன வேண்டுமென்று அவ ளிடம் சொல்லவேண்டாமா?” என்றான். 

பெரியார் : நீ ஒன்றும் சொல்ல வேண்டிய தில்லை. அவள் தருவதை வாங்கிவா. 

எழுத்தறிவு அந்நாட்டார் அறிவெல்லைக்கு அப்பாற்பட்டதாயிருந்தது. ஆகவே, குடியான வன், “இது என்ன? வேண்டா வேலையாயிருக் கிறது! ஓர் ஓட்டை இத்தனை தொலை வீணில் சுமந்து செல்லச் சொல்லுகிறாரே இவர்!” என்று எண்ணினான். 

ஆனால், வீட்டில் பெரியாரின் மனையாட்டி யிடம் அவ்வோட்டுத் துண்டைத் தந்ததே அவள் அதைப் பார்த்துவிட்டு விரும்பிய பொருளை எடுத் துக் கொடுத்துவிட்டாள். வியப்புடன் அவன், “அம்மா, ஐயாவுக்கு வேண்டிய பொருள் இன்ன தென்று நான் சொல்லாமல் நீங்கள் எப்படி அறிந் தீர்கள்?” என்றான். 

அவள் சிரித்துக்கொண்டே, “நீ சொல்லா விட்டாலும் ஓடுதான் சொல்லிற்றே!” என்றாள். 

குடியானவன் அவள் சொல்லை அப்படியே நம்பிவிட்டான். அம்மையார் எறிந்த ஓட்டை அவன் தலைமேற்கொண்டு எல்லாரிடமும், “ஆங் கிலேயர் எப்படி உலகை ஆளுகிறார்கள் தெரியுமா? அவர்களிடம் தெய்வசித்து இருக்கிறது. அவர் கள் அச்சித்தினால் ஓட்டைக்கூடப் பேச வைக் கிறார்கள்,” என்று கூறினான். 

அந்நாட்டு மக்கள் அவ்வோட்டை ஒரு தெய் வமாக்கி அதற்குக் கோயில் கட்டினர். சமயப்பணி யாளர் எவ்வளவு முயன்றும் இப்புதிய தெய்வ வணக்கத்தைத் தடுக்க முடியவில்லை. அவர் சித் தாகிய கல்விப் பயிற்சி முறையை அவர்கள் ஏற்கச் செய்யவும் இப்புதிய தெய்வ வணக்கம் பெருந் தடையாயிற்று. ஏனெனில் அவர் எழுதிய எதனை யும் அவர்கள் தெய்வமாகக் கொண்டு கும்பிடத் தொடங்கினரேயன்றி அதனைக் கற்றுக்கொள்ள முயன்றார்களில்லை. 

– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *