அபாட்மெண்ட் 2-6-11
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 4, 2024
பார்வையிட்டோர்: 7,058
“அவள் வர இன்னும் நேரம் இருக்கிறது, இன்னிக்கும் எப்படியாவது அவளை பார்த்துவிட்டு இந்த மோதிரத்தை கொடுத்து விட்டு தான் செல்ல வேண்டும்’’, என்று சுவருக்குப் பின்னால் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தேன்.
வழக்கம் போல தன் வீட்டுக் கதவை மூடி விட்டு தன் நடையை வேகமாக எடுத்து வைத்தாள். கைப்பேசியில் யாரோ ஒருவருடன் அழைப்பில் இருந்தாள்.
“இன்னிக்கும் நான் வேலைக்கு லெட், சாரி சார்“ என்று பேசியவாறு விரைவாக ஒடினாள்.
அவள் பெயர் டியா. அரசாங்க மருத்துவமனையில் தாதியாகப் பணியாற்றுகிறாள். தன் வீட்டை விட்டு தனியாக வாடகை வீட்டில் தங்கியிருக்கிறாள். ஒவ்வொறு நாளும் காலையில் அவளை வெள்ளை தாதி ஆடையிலும் , முகத்தில் அவளின் வெளிபடாத சிரிப்பைப் பார்த்து ரசிப்பதையே என்னுடைய அன்றாட கடமையாக வைத்திருப்பேன்.
‘இப்படியே ஒவ்வொரு நாளும் நான் மட்டும் தான் அவளைப் பார்க்கிறேன் அவளுக்கு என்னை யாருனு கூட அடையாளம் தெரியாது, ஒவ்வொரு தடவையும் அவளை பார்க்கும் போது அவள்கிட்ட பேச தயாராக இருப்பேன், ஆனால் அவள் வரும் போது மட்டும் இந்த பயம் வந்து என்னை அவளிடம் நெருங்க விட மாட்டுது….செ….’ என முனைகியவாரு மோட்டார் வண்டியை எடுத்துக் கொண்டு என் அலுவகத்திற்குக் கிளம்பினேன். அலுவகம் செல்லும் வழி முழுவதும் என் மனம்,
“அம்மா வேற வீட்டுல பொண்ணுப் பார்க்கத் தொடாங்கிட்டாங்க. வீட்டுல அம்மாக்கிட்ட போய் அபாட்மெண்ட் 2-6-11-ல் இருக்கும் டியாவை எனக்கு பிடித்திருக்குச் சொன்னா என்ன நினைப்பாங்க. நாங்கள் இருவரும் காதலித்தால் பரவாவில்லை, ஆனால் அவளுக்கு என்னை யாருனு கூட தெரியாது, இப்படியே சில மாதமாக அவளை ஒரமாக நின்று பார்த்துக் கொண்டு மட்டும்தான் இருக்கிறேன். கூடவே இந்த மோதிரம் வேறே…. எப்போவாவது. ஒரு தடவையாவது அவள் என்னை திரும்பி பார்ப்பாளா என்று ஏக்கத்துடன் அவள் வீட்டில் இருந்து தூரமாகச் சுவருக்கு பின் மறைந்து நிற்ப்பேன், அவள் என்னைக் காணாததைப் போல செல்வாள். இப்படியே 1 ஆண்டுகள் கடந்து விட்டன. கல்யாணம் வயதும் ஆகி விட்டது. மனம் முழுவதும் அவளை நினைத்துக் கொண்டு இருக்கும் எனக்கு வேறு பெண்களைக் கூட பார்க்க தோன்றவில்லை. என்ன வாழ்க்கை இது…. இதையெல்லாம் நினைத்துக் கொண்டு வந்ததுல அலுவலகத்துக்கு வந்தது கூட தெரியவில்லை” என்று முனகியவாரு அலுவலகத்தை நோக்கி சென்றேன்.
“என்ன அகாஷ், இன்னிக்கு ஆச்சும் அவள்கிட்ட பேசி மோதிரத்தைக் கொடுத்தியா? இல்லை வழக்கம் போல சுவரு பின்னாடி நின்னுக்கிட்டு அவள் முகத்தை மட்டும் பார்த்து விட்டு வந்தியா… ஹா… ஹா…ஹா” என சிரித்துக் கொண்டு கேளியும் கிண்டலுமாகக் கேட்டான் சுரேன்.
நானும் அதுக்கு எதிர்மறையாக “சிரிடா… நீ சிரி. யானைக்கு ஒரு காலம் போல பூனைக்கும் ஒரு காலம் பிறக்காதானு சும்மாவா சொன்னாங்க.. ஒரு நாள் இல்லை ஒரு நாள் கண்டிப்பா அவள் கிட்ட சென்று என்னுடையக் காதலைச் சொல்லி மோதிரத்தைக் கொடுத்து கல்யாணம் பண்ணுவேன். அப்போ நீ எங்க உன் முகத்தை வெச்சிப்பேனு நான் பார்க்கிறேன்” என்றேன்.
சுரேன் என்னுடன் அலுவகத்தில் பணிப்புரியும் என்னுடைய நெருங்கிய நண்பன். இவனிடம் நான் சொல்லாதக் கதையே இல்லை எனலாம். என் விஷயம் அனைத்துமே சுரேன் நன்கு அறிந்திருப்பான். அப்படி தான் அவன் டியாவை நன்கு அறிவான். நான் டியாவை ஓரு தலையாகக் காதல் கொள்வதை கேட்டு ஆரம்பத்தில் நிறைய உதவிகள் செய்திருக்கிறான். ஆனால், அவன் கூறியதற்கு எல்லாம் நான் பின்போகதாதால் கைவிட்டு விட்டான். அதனால் தான் அலுவகத்திற்க்குச் செல்லும் போதேல்லாம் என்னை தினமும் கேலிச் செய்து கொண்டிருப்பான்.
“காலையிலே இப்படி ஆச்சே…. சே…. இன்னிக்குனு பார்த்து ஏன் எனக்கு இவ்வளவு வேலைகளைக் கொடுத்து இருக்கிறார்கள்…. இதையெல்லாம் இன்னிக்கு செய்து அனுப்ப வேண்டும் எனப் போட்டு இருக்கு… இதை அனைத்தையும் செய்து முடிக்கக் கண்டிப்பா நள்ளிரவாகி விடும் போல……”
வேலைகளைச் செய்து முடிக்க இரவு ஆனது. கணினியின் வெளிச்சத்தையைப் பார்த்துச் செய்ததில் கண்கள் எறிய தொடங்கின. சிறிது நேரம் உறங்கலாம் எனக் கண்ணை இருக்க மூடினேன். திடிரென, கைப்பேசி மணி ஒலித்தது.
“டேய், அகாஷ் எங்கடா போன்ன? மணி 12.00 ஆச்சி இன்னும் ஆபிசுல என்னடா பண்ணுற? இப்போ வீட்டுக்கு வரியா இல்லையா?’’ என கத்திவிட்டு வேகமாகக் கைப்பேசியை வைத்தார் அம்மா.
“கண் எறிச்சலில் கண்ணைக் சிறிது நேரம் சாத்தியதில் நேரம் போனதே தெரியவில்லை. சிக்கிராமாக வீட்டுக்கு செல்ல வேண்டும் இல்லயேனில் அம்மா மறுபடியும் எறிந்துக் கொட்டுவார்” என கூறிக் கொண்டு வேகமாகக் கைப்பையை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன். வீட்டுக்கு செல்லும் பாதையில் டியா வேலை செய்யும் மருத்துவமனை இருந்தது. அப்போது தான் எனக்கு நினைவுக்கு வந்தது. “இன்று 24 ஜுன் ஆச்சே, இதை எப்படி நான் மறந்தேன், டியாவின் பிறந்தநாள் ஆச்சே..”
“இன்று அவளைச் சரியாகக் கூட பார்க்க முடியவில்லை. ஆமா, இப்படி தூங்கினா எங்க டியாவைப் பார்க்க, ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்லும் போதும், வரும் போது அவளின் முகத்தைப் பார்ப்பது வழக்கம். இன்றைக்கு என்ன இப்படி ஆகிடிச்சு….” புலம்பிக் கொண்டு அபாட்மெண்ட் வந்தேன்.
“அகாஷ் இதை விட்ட வேறே நாள் இல்லை, இன்னிக்கு எப்படியாவது இந்த மோதிரத்தை அவள்கிட்ட கொடுத்து காதலை சொல்லிடனும் “ என மனதில் நினைத்தவாரு மோட்டாரை ஒரு ஒரமாக நிறுத்திவிட்டு வந்தேன்.
அபாட்மெண்ட் லிஃப்டில் ஏறி வீட்டுக்கு செல்லும் வழியில் யாரோ ஒரு ஆடவர் கையில் பூங்கொத்துகளோடு வேகமாக என்னை தள்ளி விட்டு சென்றார். வேகமாக மோதியதில் பட்டேன கீழே விழுந்தேன்.
“சாரி… சாரி ப்ரொ!” என்று அந்த ஆடவன் என்னை தூக்கிவிட்டான்.
கையில் இருந்த பூக்கள் கீழே விழுந்தது, அதை எடுக்கும் போது அந்த பூக்களோடு இருந்த பிறந்தநாள் அட்டையில் டியாவின் பெயரை இருப்பதை கண்டேன். ஒரு வேளை டியாவின் பிறந்த நாளுக்காக யாரோ நண்பர்கள் பரிசாகக் கொடுத்திருப்பார்கள் போல, அதை இந்த ஆடவன் டெலிவரி செய்ய இடித்து தள்ளி விட்டான் என்று நினைத்துக் கொண்டு அந்த பூங்கொத்துகளை அந்த ஆடவனிடம் திருப்பிக் கொடுத்தேன்.
“டெலிவரி செய்ய போகிறிர்களா சார்?” என்று கேள்வியை அந்த ஆடவனிடம் எழுப்பினேன்.
உடனே அந்த ஆடவன் என்னை பார்த்து முறைத்தான். சரி இதுக்கு பின்பு அவனிடம் நமக்கு என்ன உரையாடல் என்று நானும் சென்றேன். கையில் மோதிரத்துடன் டியாவின் வீட்டுக்கு சென்றேன். அந்த ஆடவன் டியாவின் வீட்டுக்கு முன்னாடி சென்று நின்றான். நானும் அவனை விட்டு தூரமாக ஒலிந்துக் கொண்டு பார்த்தேன். அந்த ஆடவன் யாரோ ஒருவரிடம் “பேபி காம் ஓளட்” எனக் கூறி அழைப்பை துண்டித்தான். சரியாக டியாவும் வீட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்தாள். அவளைப் பார்த்தவுடன் அந்த ஆடவன் அவளை அணைத்துவிட்டு பூங்கோத்துகளை அவளிடம் கொடுத்தான். டியா அவனைக் கட்டி அணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள்.
இதை பார்த்த எனக்கு உலகமே நின்றதாக உண்ர்ந்தேன். கண்ணில் ஒரு புறம் கண்ணிர் வழிந்தோடியது. இது என்ன கனவா இல்லை நினைவா என்று என்னை கிள்ளிக் கொண்டு பார்த்தேன். மனம் ஒரு புறம்…
“இவ்வளவு நாளாக ஆண்களே வராத அவளின் வீட்டுக்கு, இப்போது ஒரு ஆடவன் அவளைக் கட்டி அணைத்து முத்தமிடுவதைப் பார்த்தால் டியாவும் அந்த ஆடவனும் காதல் கொள்கிறார்கள் போல….” என்று ஒரு புறம் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது
அவர்கள் சிறிது நேரம் கழித்து வீட்டின் உள்ளே சென்றார்கள்.
“ஐயோ கடவுளை…. ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது… நான் என்ன தவறு செய்தேன், டியாவை எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா.. இப்போ அவளை வேறு ஒருவனுடன் பார்க்க என் மனம் ஏற்க மாட்டேன் என்றது…” என கதறி அழுதேன்.
கதறி அழுததில் கண்கள் சிவந்தன. ஒரு புறம் என் அம்மா எனக்கு அழைத்துக் கொண்டே இருக்கிறார். கலங்கிய கண்களை சரி செய்து விட்டு முகத்தை எப்போதும் போல வைத்து விட்டு வீட்டுக்கு சென்றேன். ஒரு புறம் கண்களில் என்னையே அறியாமல் கண்ணிர் வழிந்தோட தொடங்கின… இன்னும் ஒரு புறம் என் அம்மா என்னை இந்த கோளத்தில் பார்த்தால் கண்டிப்பாகக் கேள்விகளைக் கேட்பார். அதனால், எதுவும் ஆகாததைப் போல வீட்டுக்கு உள்ளே நுழைந்தேன்.
“என்னடா உனக்கு அப்படி ஆபிசுல வேலை, உனக்கு மட்டும் என்ன இத்தனை மணி வரைக்கும் வேலை, உண்மையா வேலைக்குப் போனியா இல்லை எங்கயாவது ஊரு சுத்திட்டு வந்தியா? போய் குளிப் போ… அம்மா சாப்பாடு செய்து வைத்திருக்கேன்…” என்று கூறினார் அம்மா.
அம்மாவிடம் சரியாக முகம் கூட கொடுத்து பேசாமல்.
“ம்ம்… எனக்கு சாப்பாடுலாம் ஒன்னும் வேணா!” என்று கூறிவிட்டு பட்டென அறைக்குள் புகுந்து கதவைச் சாத்தினேன்.
“இல்லாத காதலுக்கு மோதிரம் வேறே சே….” என கையில் இருந்த மோதிரத்தை தூக்கி வீசினேன்.
அறைக்குள் சென்றவுடன் என்னை அறியாமல் கண்ணிர் மல்க அழுகத் தொடங்கினேன். தலையணையை வைத்து முகத்தை மூடி விட்டு யாருக்கும் கேட்காததைப் போல கதறி அழுதேன். எனக்கு கிடைக்காத டியா இப்போது யாரோ ஒருவனோடு அணைத்துக் கொண்டு பேசியது என் கண் முன்னே வந்து வந்துப் போக தொடங்கின. அழுது அழுது கண்கள் இரண்டும் வீங்கியது. தூக்கம் கூட சரியாக இல்லாமல் யோசனையோடு இருந்தேன். மறுநாள் காலையில் அவள் வீட்டை விட்டு வெளியேறும் வரை நான் காத்திருந்தேன். ஆனால், இப்போது அவள் தனியாக வருவதை விட அவனோடு வருவதுதான் அதிகம். இருவரும் கைகொர்த்தப்படி ஒன்றாக வீட்டை விட்டு வெளியேறினார்கள். இப்படியே ஒவ்வொரு நாளும் நான் அவளை அவனோடு அதிகம் காண தொடங்கினேன். என்ன செய்வது என்று தெரியாமல் இரண்டு வாரம் பித்துப் பிடித்தவன் போல கிடந்தேன். வீட்டில் அனைவரும் எனக்கு பேய்தான் பிடித்து விட்டது என்று மந்திரிக்க தொடங்கி விட்டார்கள். அவர்களுக்கு தெரியுமா எனக்கு பிடித்தது காதல் பித்து என்று? நான் இந்த நிலைமைக்குத் தள்ளப்படுவேன் என்று யாருக்கு தெரியும். இப்படியே நாட்கள் நகர்ந்தது.
ஒரு நாள் வேலை முடிந்து விட்டு வீடு திரும்பிய போது லிப்ட்டில் நான் டியாவை கண்டேன். அவளைப் பார்த்ததும் மனதில் ஒரு இனம் புரியாத ஆனந்தம். கூட அவனும் அவளுடன் இருந்தான். அந்த ஆடவன் என்னை பார்த்ததும் ,
“ஹெய் ப்ரோ..” என்றான்.
நானும் அவனிடம் தலையை மட்டும் ஆட்டிவிட்டு அமைதியாக நின்றேன். டியா அவன் என்னிடம் பேசியதைப் பார்த்ததும், அவளும் என்னைப் பார்த்தால். இருவரும் லிப்டு என்றுக் கூட பார்க்காமல் தலையை ஒருவருக்கு ஒருவர் மேல் சாய்ந்தவாரு நின்றுக் கொண்டிருந்தனர். நாளுக்கு நாள் அவர்களைக் காண எனக்கு வலிகள் அதிகமாக தொடங்கின. இருப்பினும், அதை அனைத்தையும் சில நாளில் மறந்து இருக்க தொடங்கினேன்.
இப்படியே ஒரு மாதம் கழிந்தன, ஒரு நாள் நான் என் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் அந்த ஆடவனைப் பார்த்தேன். அவன் என்னிக்கும் இல்லாமல் என்னிடம் வந்து,
“ஹெய் ப்ரொ, எனக்கு அடுத்த மாதம் கல்யாணம் கண்டிப்பா வந்துடுங்க.” என்று அவன் என்னிடம் கல்யான பத்திரிக்கையை நீட்டினான்.
“சரி ப்ரொ…” என்று கூறிவிட்டு வீட்டுக்கு வந்தேன்.
மணி ஒரு நள்ளிரவு 3.00, வீட்டுக்கு முன்பு ஒரே சத்தம். யார் என்று எட்டிப் பார்த்தேன். நிறைய பேர் கூட்டமாக நின்றுக் கொண்டு பேசி கொண்டு இருந்தார்கள்.
“இத்தனை மணிக்கு அபாட்மெண்ட்ல என்ன? யாரு” என்ற கேள்வியோடு அறையை விட்டு வெளியேறினேன். அம்மா சரியாக வீட்டினுல் நுழைந்தார்.
“டேய்…. அகாஷ்… அந்த 2-6-11 வீட்டுல ஒரு பொண்ணு இருக்கும்ல… அந்த பொண்ணை யாரோ கொலைப் பண்ணிட்டாங்களா டா! பாவம் பார்க்கவே அவ்வளவு சாதுவா அழகா இருக்கும், மரியாதையான பொண்ணு. இப்படி பண்ணிட்டாங்களே! ம்ம்ம்ம்….” என்று தலையை ஆட்டியவாரு சோகமாக அம்மா கூறினார்.
மனதில் ஒரு புறம் டியா இறந்துவிட்டாள் என்ற வருத்தமும், இன்னும் ஒரு புறம் இனி நான் டியாவைப் பார்க்க முடியாதா என்ற தவிப்பும் ஏற்பட வேகமாக டியாவின் வீட்டிற்கு விரைந்தேன். டியாவை வீட்டின் வெளியே வெள்ளை துணியால் முகத்தை மூடியவாறு வைத்திருந்தனர். இறுதியாக அவளின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஒரு தவிப்பு எனக்குள்ளே இருந்து கொண்டே இருந்தது.
போலீஸ் மோப்ப நாய்களோடு அவளின் வீட்டை அலசிப் பார்த்துக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அவளின் வீட்டின் வெளியே நின்றவுடன் போலிஸ் மோப்ப நாய்கள் நிறுத்தாமல் என்னைப் பார்த்து குரைத்துக் கொண்டு இருந்தன.
“இதுங்க என்ன என்னையே பார்த்து இப்படி குரைக்குதுங்க… போலீஸ் வேறே பார்க்கிறாரே” என்று மனதில் ஒரு புறம் பயம் வந்தது. என்னிடம் ஒரு போலீஸ்காரர்,
“டியாவை உங்களுக்கு தெரியுமா? யார் மேலாவது உங்களுக்கு சந்தேகம் உள்ளதா சார்” என்றார். சற்றும் யோசிக்காமல் ,
“ஆம், ஐயா சில நாட்களாகவே டியாவை பார்க்க ஒரு ஆடவன் இங்கே வருவான், மேலும் நேற்று அவர் என்னிடம் வந்து கல்யாணம் பத்திரிக்கைக் கொடுத்து தனக்கும் டியாவுக்கும் அடுத்த மாதம் கல்யாணம் எனவும் மறக்காமல் வர சொல்லி கூறினான், அதோட இரவு போல என்னனு தெரியவில்லை அவர்களின் வீட்டில் ஒரே தகராறு சத்தமாக இருந்தது… அதான் சொல்கிறேன் அவன் மீது தான் சந்தேகம் உள்ளது ஐயா” என்றேன்.
நான் மட்டும் இல்லாமல் என்னுடன் இருந்த அனைத்து அபாட்மெண்ட் குடியிருப்பாளர்களும் அந்த ஆடவனின் மேல் புகார் செய்தனர்.
அதில் இருந்த ஒருவர்,
“ஆம், ஐயா நான் கூட அன்னிக்கு வேலை முடிந்து வரும் போது இருவரும் சண்டை போட்டுக் கொண்டே லிப்டில் ஏறினார்கள், அதோட அந்த ஆடவன் அந்த பொண்னை அறைவதற்க்கு கைகளை ஓங்கினான். எனக்கும் அந்த ஆடவன் மேல் தான் சந்தேகமா இருக்கு”
போலீஸ் அதிகாரி அனைவரின் புகாரை எடுத்துக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் “டியா!” எனக் கத்திக் கொண்டு அந்த ஆடவன் ஓடி வந்தான்.
“இவன் தான் சார், நான் சொன்னது” என்று காவல் அதிகாரியிடம் கூறினேன்.
காவல் அதிகாரிகள் விரைந்து அவன் கையில் விலங்கைப் போட்டு விட்டு விசாரனைக்காக அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்தில் அம்புலன்சு வந்து டியாவை தூக்கிச் சென்றது. டியா தங்கிய வீட்டை போலீஸ் விசாரணைக்காக மூடி வைத்தார்கள். நானும் வருத்தமாக வீட்டுக்குச் சென்று அறையினுள் நுழைந்தேன். மேசையில் இருந்த மோதிரத்தை எடுத்து அதை பார்த்தவாரு,
“டியா… நான் நினைத்ததைச் சாதித்துவிட்டேன். எனக்கு கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்க கூடாது…. நேற்று நான் உன்னை காதலிக்கிறேன்னு சொன்னதும் என்னை பார்த்து சீ… என்ற ஒரு வார்த்தை சொன்னலே… அதுதான்… அதனால தான் கொலைப் பண்னேன்டி… எனக்கு கிடைக்காதது, நான் எப்படி அவனுக்கு விட்டு குடுப்பேன்….பாய் டியா…”