அன்பால் இணைவர்




பெங்களூரில் இருந்து கோவை செல்லும் ஐலன்ட்எக்ஸ்பிரஸ்,நாலாவது பிளாட்பாமில் வந்து நிற்கும் என கன்னாடவிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறி ஒலித்துக்கொண்டிருந்தது. வைதேகி,பேரன் அங்கித்த எடுத்துக்கொண்டும் ,மன பாரத்தோடும்,படிகளில் மூச்சுத் திணற ஏறிக் கொண்டு இருந்தாள். லீவு நாள் என்பதாலோ கூட்டம் அதிகமாகவே இருந்தது.
பிள்ளை, ரமணனும்,மன பாரத்துடன், சாமானின் பாரத்தையும் தூக்கிக் கொண்டு ஏறிக் கொண்டு இருந்தான்.

பெஞ்சை பார்த்ததும்,”அம்மா, இங்கேயே உட்காருங்கோ,அங்கித்தும் தூங்கறான், நான் போகிப் பார்த்து, இடம் பார்த்ததுண்டு வரேன், இந்தபேகை நீங்க பார்த்துக்கோங்கோ”என்று சொல்லி விட்டு ரமணன் ஒரு சூட்கேஸை எடுத்து கொண்டு சென்றான். வைதேகி வந்து ஒரு வாரம் ஒடிப்போனதே தெரியவில்லை. வைதேகிக்கு, துக்கம் தொண்டையை அடைத்ததுக் கொண்டு வந்தது.பிள்ளை ரமணனை கட்டிக் கொண்டு அழ வேண்டும் போல் இருந்தது.மற்றவர்கள் முன்னால் அழக் கூடாது என அடக்கிக் கொண்டு இருந்தாள்.ரமணனுக்கும் அதே மன நிலை தான்.
வண்டி வந்து நிற்கவே,ரமணன் போகியை பார்த்து, சீட்டில் பெட்டியை வைத்து விட்டு, பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்லி விட்டு, வந்தான். குழந்தையையும் தூக்கிக் கொண்டு முன்னால் செல்ல,வைதேகி பின்னால் சென்றாள்.சிறிது நேரம் வைதேகிகூட உட்காந்து இருந்தவன்,”அம்மா,நான் கிழே இறங்கி நிற்கறேன், ரயில் கிளம்ப போறது, உடம்பை பார்த்துகோங்கோ, அப்பாவை கேட்டதாச்சொல்லுங்கோ,ராமுசித்தப்பா பையன் கோபால் ஸ்டேஷனில் வந்து கூட்டிண்டு போவான்.நான் காலைல போன் பண்றேன்.” என்றான். வைதேகி,கையை பிடித்துக் கொண்டு”, ரமணா,நீயும்,உன்னையும் குழந்தையையும், பார்த்துக்கோ” என்றவளின் கண்களில் கண்ணிர் தேங்கி நின்றது. இரயில் நகர ஆரம்பித்தது. தான் கொண்டு வந்த தயிர் சாதத்தை பிரித்து,எலுமிச்சை ஊறுகாயுடன் சாப்பிட்டு விட்டு, படுத்துக் கொண்டாள். தூக்கம் வரவில்லை.
கோதண்ட ராமனுக்கும், வைதேகி, இருவருக்கும்,வெகு நாட்களுக்கு பிறகு ரமணன் பிறந்ததில் அளவில்லா ஆனந்தம். ரமணன் இப்போது பெரிய நிலையில் இருப்பதற்கு வைதேகியை கண்டிப்பாக சொல்லவேண்டும். அவனின் படிப்பில் மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டாள். தன்பிள்ளை படித்து, முன்னுக்கு வர வேண்டும் என எண்ணினாள்.எத்தனை தடங்கள் வந்த போதும், எதிர் கொண்டு அவனை ஒரு பெரிய மனிதன் ஆக்கினாள்.
பெங்களூரில் பெரிய வேலையில் ,அவன் அமர்ந்த போது இருவரும் சந்தோஷப் பட்டனர். சில வருடங்களில்,ரமணன் விருந்தாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுவதை தெரிவித்த போது இருவரும் சம்மதிக்க, கல்யாணம் அமர்க்களமாக நடந்தது.
விருந்தாவும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாள். “என்ன மாமி, மருமகள் வந்தாளா”? என பக்கத்து வீட்டு வத்சலா கேட்ட போது, “இல்லை, வத்சலா,எனக்கு பெண் கிடைத்தாள்” என்று பெருமையாக
சொல்லிக் கொண்டாள்.கல்யாணம் ஆன மறு மாதமே, இருவரும் பெங்களூர் சென்றனர்.
சிலநாட்களில் வருந்தாவிடத்தில், மாறுதல்கள் தெரிய வந்தது.அதை பெரியதாக பொருட் படுத்த வில்லை.ஒரு விடுமுறை அன்று, பூஜைக்கு வேண்டிய சில சாமன்கள், நைவேத்தியம், செய்ய வேண்டும் என்று சொன்ன போது, செய்தவள்,பின்னர், ரமணனிடம்,இந்த மாதிரி எப்பவும் என்னால பண்ண முடியாது. இப்படி எல்லாம் வேணும்னா, ஊரிலே இருக்க வேண்டியது தான்.”என்று சொன்ன போது ரமணனுக்கு தூக்கி வாரிப் போட்டது.”அப்படி எலலாம் சொல்லாதே , விருந்தா, அவா காதிலே விழுந்தா ரொம்ப வருத்தப்படுவா” என்று ரமணன் சொன்னது இருவரின் காதிலும் விழுந்தது. அதில் இருந்து கோதண்ட ராமன் ரமணன் வீட்டிற்க்கு வருவதே இல்லை.வைதேகி,பத்து மாதம் சுமந்து பெற்றவள் ஆயிற்றே.அவள் மட்டும் வந்து போய் கொண்டு இருந்தாள்.முடிந்த போது ரமணன் வந்து போய் கொண்டு இருந்தான்.இம்முறை வேலை அதிகமாகவே,வைதேகி போய் பார்த்து வர எண்ணினாள்.
“ரமணா, அம்மாவுக்கு, உன்னையும் குழந்தையயும்,பார்க்கணும் என்று சொல்றா,”என கோதண்டராமன் ஃபோனில் பேசுவது விருந்தாவின் காதில் விழ, அவளுக்கு கோபமாய் வந்தது.
“நான், அரை மணி நேரத்தில் போன் பண்றேன் அப்பா” என்று சொல்லி போனை வைத்து விட்டு வந்தான்.”இப்ப எதுக்கு வரணும்,இங்க ஒன்னும் பண்டிகை எதுவும் இல்லை, வராத இருந்தால்,ஒரு வாரத்துக்கு மேல் இருக்க வேண்டாம்.திரும்பி போவதுக்கும் சேர்த்து டிக்கெட் வாங்குங்கோ” என்று விருந்தா சொல்ல, ஏதோ இது மட்டும் அம்மாவை வர சொல்கிறாள் என உடனே டிக்கெட் புக் பண்ணி அனுப்பினான்.வந்த ஒரு வாரம் ஓடிப் போனதே தெரியவில்லை.
நாள்கள் சென்றன. “அம்மா நீங்க, மறுபடியும் பாட்டி ஆகப் போகிறேள்”என்று ரமணன் சொன்னது இருவருக்கும் மனதுக்கு சந்தோஷமாய் இருந்தது. வருந்தாவின் அம்மா பிள்ளைப் பேறுக்கு, வருவாள் என வைதேகி பேசாமல் இருந்தாள்.ரமணன், குழந்தை, அங்கித்து, அவ்வப்போது ஃபோனில் பேசுவது உண்டு. நாள்கள் நெருங்க நெருங்க, விருந்தாவின் அம்மாவால் வர முடியாமல் போனது. ரமணன் ஃபோனில் சொன்ன போது, “நான் வரேன் ரமணா”, வைதேகி சொன்னாள்.”
“வேண்டாம் அம்மா, நான் ஆள் போட்டு பார்த்துக்கறேன். வருந்தாவும் பேசமாட்டா, அப்பாவும் வரமாட்டா, உங்களுக்கு தான் எல்லா கஷ்டமும், என்று சொன்ன ரமணனை கோபித்துக் கொண்டாள் வைதேகி.
“நன்னா சொன்னே, ரமணா, நம்மாத்துக்கு வாரிசு வரது, விருந்தா பேசாட்டா, என்ன?நான் வரேன்,நீ,எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று அதட்டினாள். கோதண்ட ராமனும்,”அம்மா வருவா,நான் பார்த்துக்கறேன்
ரமணா,”என்று சொன்ன போது, வைதேகி,என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
வைதேகி, துணிகளை எடுத்து வைத்துக் கொள்ள ஆரம்பித்தாள்.பிரசவ மருந்து பொடிகள் வாங்கிக் கொண்டு வரச் சொல்லி,லேகியம் செய்தாள். நல்ல நாள் பார்த்து டிக்கெட் புக் செய்ய சொன்னாள்.வருந்தாவுக்கு, இனிப்பும்,காரமும் செய்தாள். பேரனுக்கு,துணி வாங்கி வரச் சொன்னாள். விருந்தாவிடம்,அம்மாவின் வருகைப் பற்றி சொன்ன போது, எந்த பதிலும் சொல்ல வில்லை. வேண்டாம் என்றும் சொல்ல வில்லை வைதேகி வந்து சேர்ந்தாள்.
தினமும், காலை எழுந்து வேலைகளை செய்து, விருந்தா ஆசை பட்டதை, வாய்க்கு பிடித்ததை பண்ணிக் கொடுத்தாள். அங்கித்தும், பாட்டி, பாட்டி என்று சுற்றி வந்தான். ரமணன், பிரசவ நேரத்தில் கூட இருந்து அம்மாவுக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்று முன்னால் ஒரு வாரம்,பின்னால் ஒரு வாரம் விடுமுறை எடுத்து இருந்தான். வந்து பத்து நாட்களில், மதியம் ஒரு நாள் பிரசவ வலி வரவே, வைதேகி, “ரமணா, கவலைப் படாதே, பாஸ்கெட்ல, சர்க்கரை துணி, வெந்நீர் போட்டு எடுத்துண்டு இருக்கேன். என்று சொன்னவள், சமையல் அறை சென்று, வாணலியில் சிறிது சீரகத்தை,பட படவென வறுத்து,கஷாயம் செய்து,நெய்யை விட்டு விருந்தாவிடம் குடிக்க கொடுத்தாள்.
சுவாமி விளக்கை ஏற்றி, விபூதியை இட்டு, “தாயுமானவா,பிரசவம்,நல்ல படியா நடக்கணும்,தாயும், சேயும் நலமாக இருக்கனும்”, என்று வேண்டிக் கொண்டாள். வேப்பிலையை தலையில் வைத்து விட்டு, பயப்படாதே, விருந்தா,எல்லாம் பகவான் பார்த்துப் பார்” என்று சொல்லி அங்கித்தை தூக்கிக் கொண்டு “மெதுவா வாம்மா,”என்று கையை பிடித்துக் கூட்டிக் கொண்டு போனாள். விருந்தா ஒரு வார்த்தை கூட பேசவில்லை.நல்ல படியாக பிரசவம் முடிந்து ,பெண் குழந்தை பிறந்தது.அப்படியே ரமணன் மாதிரி இருந்தாள்.சுகப் பிரசவம் தான்.கோதண்ட ராமனுக்கும்,விருந்தா அவளின் அம்மாவுக்கும் போன் செய்து நல்ல செய்தி சொன்னான்.
தினமும் காலை எழுந்து கிடு கிடுவென வேலைகளை முடித்து, சாப்பாட்டை ரமணினிடம் அனுப்பி வைத்தாள். சாயங்காலம், பேரனோடு, பார்க் போவது, இரவு சாப்பாடு என ஒரு வாரம் ஓடிப் போனது. பகல் நேரத்தில் ஆஸ்பத்தரி சென்று குழந்தை, விருந்தாவையும் பார்த்து வந்தாள்.ஒரு வாரம் ஓடிப் போக,ரமணன், குழந்தை, விருந்தா இருவரையும் கூட்டி வந்தான். அரத்தி எடுத்து, குழந்தையை கையில் வாங்கிக் கொண்டவள், விருந்தா இருவரையும் கூட்டி உள்ளே வந்தாள்.
இத்தனை நாளிலும், விருந்தா ஒரு வார்த்தை கூட பேசவில்லை.அவளை பார்க்க வந்த அனைவருக்கும்,காஃபி போட்டு, இனிப்பு,காரம் கொடுத்து, அனைவரிடமும் சிரித்துப் பேசி,எல்லா வேலைகளையும் செய்து வந்தாள். வைதேகி. கூட இருந்து குழந்தைக்கு, குளிக்க வைத்து,
விருந்தாவுக்கு,பத்திய சாப்பாடு போட்டு, எண்ணை தேயத்து குளிக்க எடுத்து வைத்து, சாம்பிராணி போட்டு, என ஒவ்வொரு நாளும் எல்லாவற்றையும் செய்து வந்தாள் வைதேகி.அங்கித்தின் தங்கை அனுஷ்காவும், பாட்டியிடம் சமர்த்தாக இருந்தாள்.
ஆயிற்று, 45 நாள்களும். மறு நாள் வைதேகி கோவை செல்ல வேண்டும்.விருந்தா அம்மாவின் உடல் தேவலை என்பதால் ,இனி அவர்கள் வந்து பார்த்துக் கொள்ள போகிறார்கள். வைதேகி,எல்லா துணிகளயும் எடுத்து மடித்து பெட்டியில் வைத்து கொண்டு இருந்தாள்.ரமணன் பேப்பர் படித்துக்கொண்டு இருந்தான். பேரனும் விளையாடிக் கொண்டிருந்தான்.
“அம்மா, என்னை மன்னிக்கணும், என வைதேகி காலை கட்டிக் கொண்டு விருந்தா விக்கி விக்கி அழஆரம்பித்தாள்.விக்கித்துப் போனாள் வைதேகி.”என்னம்மா இது,கையை பிடித்து எழுப்பியவள், வருந்தாவை கட்டிக் கொண்டாள்.
நான் எவ்வளவு தப்பு பண்ணிட விட்டேன் அம்மா,உங்களுக்கும் அப்பாவுக்கும் துரோகம் பண்ணிட்டேன்,எத்தனையோ மனதில் இருந்தும்,நீங்கள், அன்பை ஒன்றை மனதில் கொண்டு,அத்தனையும் தூக்கி எரிந்து விட்டு, குழந்தை, இருவருக்காகவும்,உங்க பிள்ளை, ரமணனுக்கும் வந்து என்னை உங்க பெண்ணுக்கு மேலாக பார்த்துண்டு இருந்தேள். என்னை மன்னிசுட்டேன் ஒரு வார்த்தைசொல்லுங்கோ. நீங்க போக வேண்டாம்,அப்பாவை கூட்டிண்டு வர ரமணன் போகட்டும் என அழுதாள். ரமணின் மனம் திருப்தி அடைந்தது.
இருக்கட்டும் விருந்தா, அம்மா வரட்டும், நானும் போயிட்டு,அப்பாவோட கண்டிப்பா வரேன், பிள்ளை பெற்றவள், அழக் கூடாது” என தேற்றினாள். அம்மாவை கண்கள் மல்க கட்டி அணைத்தான் ரமணன். அடுத்த நாள்,வைதேகி,கோவை செல்ல கிள்ம்பி வெளியில் வந்தாள். விருந்தா, “அம்மா, இனி அப்பாவோட வந்து இங்கு தான் இருக்கணும். என்று சொன்ன போது,வைதேகி, அன்பினால் ஜெயித்தது நிச்சயமே.
அன்று முதல், ரமணனுக்கு மேலாக, விருந்தா,அவர்கள் வரும் நாள் பார்த்து காத்திருந்தாள்.