அடக்குமுறைக் கேடு




(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
உலகின்கண் ஒவ்வொருவனும் தன்தன் விருப்பப் படி நடந்து கொள்வது பிறப்புரிமை யாகும். பிறர்க்கு மனவெறுப்பும் தீங்கும் உண்டாக்காத எதனையும் செய்வ தற்கு ஒவ்வொருவனுக்கும் உரிமையுண்டு. நாட்டமை திக்கு இடர்சாராவண்ணம் எவனுக்கும் தன் விருப்பப்படி ஒரு பொருளைப்பற்றித் தன் மனத்தில் எண்ணிப் பார்க்க வும், அதனால் ஏற்பட்ட தன் கருத்துக்களை வாய்ப்பேச்சி னால் பலறிய வெளியிடவும் உரிமையுண்டு. எவனுக்குந் தீங் கிழைக்காத ஒருவனை இன்னொருவன் அடிமைப்படுத்துத லும், அவன் எண்ணங்களையும் செயல்களையும் அடக்கு முறை செய்தலும் அவனுடைய சொத்துக்களைப் பறிப் பதுபோலவே அவனுடைய உரிமைக்குக் கேடு விளைப்பதாகும்.

மக்களை ஆட்சிசெய்யும் அரசரும், அவர்கள் மேல் தலைமையேற்குங் குலமக்களும், மற்றுமுள்ள செல்வர்க ளும் தம் வல்லமையையும் செல்வாக்கையும் பொறுமை யோடும் நேர்மையோடும் செலுத்தவேண்டும். அவர்கள் அதற்கு மாறுபடுவாராயின் பேரச்சப் பெருந் தீங்குகள் விளையும். ஏனெனில் மக்கள் நன்மைக்கும் நேர்மைக்குங் கட்டுப்படுவார்களே தவிர, வன்மைக்கும் வலுக்கட்டாயத் துக்கும் அடங்கமாட்டார்கள்; மேலும் அவர்கள் சின மூண்டு செய்யாதனவெல்லாஞ் செய்வார்கள்.
1. உழவர் உருப்பட்டது
ஐந்தாறு நூற்றாண்டுகளுக்குமுன் பிரான்சில் ஒரு தடவை பெருங்கலகமுங் கலக்கமு முண்டாயின. அஃதெவ்வாறெனில் அந்நாட்டில்மக்களெல்லோரும் உழவர்களுக்கு இல்லாத இடுக்கண் களெல்லாம் இழைத்து இகழ்ச்சியுங்கொடுத்துப் படாதபாடுபடுத்தி னர். அம் மேன்மக்கள், உழவர் தமக்கு அடிமைகளென்றம், அவர்க ளையும் அவர்களின் சொத்துக்களையும் தாங்கள் என்ன வேண்டுமா னாலும் செய்யலாம் என்ற கொள்கையும் கொண்டிருந்தனர். அவ் வுழவர்களுக்கு அரசன்சார்பும் அற்றுப்போயிற்று. ஏனெனில் அரசனும் அவர்களால் சிறையில் வைக்கப்பட்டான்.
இதனால் நாடுமுழுவதிலுமே குழப்பமுண்டாய்விட்டது. அந் காட்டுழவர்கள் எல்லோரும் மூர்க்கங்கொண்டு தங்கள் கையிலுள்ள அரிவாள், கோடரி, மண்வெட்டிமுதலிய கருவிகளின் உதவியினால் அங்கங்கே கும்பல் கும்பலாகக் கூடிக்கொண்டு, எல்லோரையும் வேரோடு களைந்துவிடவேண்டுமென்றே தீர்மானித்துவிட்டனர்.
அதனால் விளைந்த கொடுந்தீமைகள் பற்பல :-மாட மாளிகை கள் மண்ணோடு மண்ணாயின; அரண்மனைகள் முற்றுகை செய்யப் பட்டன; பெருமக்களின் பெண்டிரும் குழந்தைகளும் இழிவுபட்டு உயிரும் இழந்தனர்; இன்னும் அந்நாட்டில் அச்செவ்வியில்நடந்த அநீதிகளை யெல்லாம் எடுத்துச்சொல்வது மானக்கேடும் மன மொவ்வாததுமாகும்.
அந்நாட்டில் உழவர் உற்ற துன்பங்கள் அடிமைத்தன்மைக்கும் அப்பாற்பட்டன. அமருக்குப்பின் அமைதியேற்பட வேண்டுமல் லவா? சிலநாட்களில் உழவர்களின் ஊறுபாடுகள் நீங்கிப்பெருமக் களுடன் ஒருமைகொண்டு வாழ்ந்துவந்தனர்.
2. அடிமை அந்தகன்
பதினெட்டாவது நூற்றாண்டுக்குமுன் அடிமை வாணிபம் மக்களெல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு நடந்தேறிவந்தது. அக்காலத்தில் அடிமைகளை ஏற்றுமதி இறக்குமதியுஞ் செய்துவந் தார்கள். அதற்குப் பிறகுதான், “மக்கள் விருப்பத்துக்கு மாறாக அவர்களை அடிமைகளாக்குவது தகுமா?” என்கிற கேள்வி பிரிட் டன் நாட்டிற் பிறந்தது. இச் செவ்வியில் கேம்பிரிட்ஜ கலாசாலை யொன்றில் கிளார்க்சன் என்ற மாணவனொருவனிருந்தான். அவன் அப்பொருள்பற்றி ஆராய்ந்து நீண்டதொரு கட்டுரை யெழுதி வெளிப்படுத்தினான். அதன்சிறப்புநோக்கிப்பல்கலைக்கழகத்தாரும் அவனுக்குப் பெரும்பரிசு அளித்தனர். அடிமைத்தன்மை யொழிவ தற்குக் கட்டுரை மாத்திரம்போதுமா? அதற்காக உழைப்பெடுத்துக் கொண்டாலன்றோ அஃது ஒழிந்து உலகமும் ஒழுங்குபடும்.
அக்காலத்தில் அடிமைவாணிபம் பிரிட்டனில் மிகுதியாகத் தலைகாட்டிக் கொண்டிருந்தது. முதன்முதல் தன்னாட்டு அடிமை வாணிபத்தை அறவொழிக்கக்கிளார்க்சன் கங்கணம் கட்டிக்கொண் டான். அவன் இலண்டன் நகர் சென்று ஆங்கு, அடிமை வாணிப ஒழிப்புக்கழகம் என்ற பெயருடன் ஓர் அவை ஏற்படுத்தி, அதன் மூலம் அவ்வறவினை செய்யத்தொடங்கினான். அக்கழகத்தார் அங்கங்கே மக்கட் கூட்டங்கள்கூட்டிப் பேசி, அதன் இழிவுகளை யெல்லாம் அவர்கட்குத் தெள்ளத்தெளிய எடுத்துக்காட்டி வந்தார் கள். அக்கழகம் அந்நற்பணியில் ஐந்தாறாண்டுகள் உழைத்து வந்தது.
கடைசியாக 1807 ஆம் ஆண்டில், பிரிட்டன்நாட்டுப் பாராளு மன்றத்தில் அடிமை வாணிப ஒழிப்புக்கென்று ஒரு சட்டம் நிறை வேற்றப்பட்டது. அதுமுதல் சில்லாண்டுகளிலேயே ஆங்கிலநாடு களில் அடிமை வாணிபம் என்பது ஒழிந்தேபோயிற்று. ஆங்கில நாட்டைப் பின்பற்றி அனைத்து நாடுகளிலும் அவ் வாணிபம் இப் போது இல்லாது போயிற்றென்னலாம். மக்களிடம் காணப்பட்டு வந்த இத்தீவினை இருந்தவிடந் தெரியாமலே ஒழிந்து போன தற்கு மூலகாரணம் ஒருபெருமகனே! கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாண வனாகிய கிளார்க்சனை எந்நாளும் உலகம் ஏத்திப் போற்றும்.
க. வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின் மெலியார்மேற் செல்லு மிடத்து.
உ. என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்.
ங. கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம் அஃதின் புண்ணெண் றுணரப் படும். [றேல்
ச. அல்லற்பட் டாற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை.
ரு. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்.
சு. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயா தடியுறைந் தற்று. -திருவள்ளுவர்.
– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.
![]() |
சேலை சகதேவ முதலியார் (1874 - ஜூலை 28, 1953) தமிழ்ப் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த மணி திருநாவுக்கரசு கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான கழகத் தமிழ்ப்பாட வரிசையில் ஆறு நூல்களை சேலை சகதேவ முதலியார் செம்மை படுத்திக் கொடுத்தார். அந்நிறுவனம் வெளியிட்ட…மேலும் படிக்க... |