கதையாசிரியர் தொகுப்பு: தமயந்தி
பீஃப் பிரியாணி
சென்னையின் நெருக்கமான தெருக்கள், எங்களுக்கு மிக அந்நியமாக இருந்தன. நாங்கள் என்பது நான்கு பேர். லோகநாதன், செந்தில், ஜார்ஜ், நான். எங்கள் கம்பெனியின் போர்டு மீட்டீங் சைதாப்பேட்டை ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட இருந்ததால் வந்தோம். பீஃப் பிரியாணி கிண்டியில் ஒரு லாட்ஜில் எங்களுக்கு இரண்டு அறைகள் போடப்பட்டிருந்தன. மூட்டைப்பூச்சி நசுக்கிய சுவடுகளோடு, ஓர் அழுக்குப் போர்வையும் மாடிப்படி முக்கில் துப்பிய எச்சில் கறைகளுமாக இருந்த லாட்ஜ். குடிக்கும் தண்ணீரில் செத்து மிதந்த பூச்சியைப் பார்த்து லோகநாதன் டென்ஷன்
பிரட்சிநாதனும் பிராண்டட் ஷர்ட்டும்
ஹேமாக்கா அதைச் சொல்றப்ப, நியாயமா மெல்லிய விளக்கு ஒளி சிந்துற ஓர் இடமா இருந்திருக்கணும். இளையராஜா, அவரோட ட்ரூப்போட ஓர் அடி தள்ளி நின்னு, ‘என் இனிய பொன் நிலாவே…’ பாட்டை வாசிச்சிருக்கணும். ஆனா, இவை ஏதும் இல்லாமத் திண்ணையில உக்காந்து, கடலையை நங்குநங்குனு அடிச்சு உடைக்கிற மாதிரி சொன்னா… ‘நான் நாதனைக் கல்யாணம் கட்டிக்கலாம்னு இருக்கேன்!’ பச்சக் கடலை வாசம் எப்பவும் அலாதியானது. லேசா மண்வாசனையும் எப்பவோ பெய்த மழையோட வாசனையும் நிறைஞ்சுகிடக்கும் அதுல. அதெல்லாம்
ஒரு கனவும் பாதி ஃபலூடாவும்
க்ருபா சித்தி காலை ஆறரை பஸ்ஸுக்கே வந்து இறங்கியபோது வெளிச்சம் முற்றாக வரவில்லை. பாதி வெளிச்சத்தில் உற்றுப்பார்த்து ”இப்படி மெலிஞ்சிட்டியே ஜெனி… சாப்பிடுதியா, இல்லியா?” என்றாள். அறையில் என்னோடு தங்கியிருந்த சத்யா, போர்வையை விலக்கிப் பார்த்துவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டாள். ”எத்தன பேரு இங்ஙன இருக்கியல?” ஊருக்குப் போய் எட்டு மாசம் இருக்கும். சித்தி பேசும்போது ரத வீதியில் ஈரத் தரையில் நடந்து போவது மாதிரியே இருந்தது எனக்கு. ”மூணு பேரு சித்தி. ஒரு பொண்ணு ஊருக்குப் போயிருக்கு.”
முள்வீடு
வெளியே ஊரே அடங்கி விட்டாச்சு. அம்மணி மட்டும் பாப்பு தூங்கலனு தொட்டில் ஆட்டிக்கிட்டு இருக்கிறாள்.இன்னும் கணேசன் வரல.அம்மணி முகத்துல தூக்க கலக்கத்தோட இருந்தா கூட, தொட்டில ஆட்டுற கை மட்டும் எதேச்சையா இயங்குற மாதிரி இருக்கு. பர்வதம் இருந்த வரைக்கும் இப்படி என்னை அநாதரவா விட்டதில்லை. வெள்ளிக்கிழமைனா மஞ்சள் தெளிச்சு வாசல்ல பெரிசா இழைக் கோலம்லாம் போடுவா. நீள் நீளமா செதுக்கி பிழிஞ்ச கைமுறுக்கா இழையும் கோலம். சாத்தான்குளத்துலருந்து வர்ற ராசுமாமா பாம்பு நெளிஞ்சாப்ல இருக்கு நம்ம
36,பெருமாள்புரம்.
ஊருக்குப் போக வேண்டும் என்று தோன்றியவுடனே இவனுக்கு எப்படியாவது பெருமாள்புரம் போய் வசித்த வீட்டைப் பார்த்து விட்டு வந்து விட வேண்டுமென தோன்றியது.கம்பெனியில் மீட்டீங் வைத்து அவன் சந்திக்க வேண்டிய வியாபார நபர்களைக் குறித்துக் கொடுத்தார்கள். எதுவுமே மனசில் இல்லை.வீட்டுக்கு அருகாமையில் உள்ள ரவுண்டானாவும் செல்லப்பா பரோட்டா கடையும் இப்போது இருக்குமா என்று தோன்றிற்று. அந்த ரவுண்டானவை சுற்றி தான் இவன் தொட்டு பிடித்து விளையாடியிருக்கிறான்.அப்போதெல்லாம் மணி வீடு தான் பக்கத்து வீடு. ஒருதடவை அப்படி ஓடி