Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: உதயகுமாரி கிருஷ்ணன்

6 கதைகள் கிடைத்துள்ளன.

நந்தியாவட்டைப் பூக்கள்

 

  நந்தியாவட்டை பூக்கள் நதியா டீச்சருக்கு மிகவும் பிடித்தமானவை.காவியாதான் பறித்து வந்து கொடுப்பாள்.அவற்றைப் பார்த்தவுடன் நதியா டீச்சரின் முகமும் மலர்ந்துவிடும்.அப்பூக்களை நதியா டீச்சர் ஆராதிக்கும் விதமே தனி.தன் நீண்ட விரல்களில் மென்மையாய் தொட்டு,தன் கன்னத்தில் வைத்து,கண்கள் மூடி,அதன் மென்மையை உணர்வாள். நதியா டீச்சர் பட்டணத்திலேயே பிறந்து வளர்ந்த நாகரீக பெண்மணி.ஆனால் அவரது கூந்தல் மட்டும் இடையைத் தாண்டி நீண்டு வளர்ந்திருக்கும்.பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு காவியா வசித்த தோட்டப்புற பள்ளிக்கு தற்காலிக ஆசிரியையாக பணியாற்ற வந்தவர்தான் நதியா டீச்சர்.காவியாவுக்கு


வளையல் பெண்ணின் வளையல் கதை

 

  மிரளாவுக்கு ‘வளையல் பெண்’ என்ற பெயர் முகநூலில்தான் சூட்டப்பட்டது.வளையல்களின் மீது அதீத மோகம் கொண்டிருந்த அவளுக்கு அந்தப் பெயர் பிடித்துப்போகவே தன் புனைப்பெயராக வைத்துக்கொண்டாள்.வளையல்களின் மீதான கிறக்கம் எப்போது அவளை ஆட்கொண்டது என்பதை மிகத்துல்லியமாக கணிக்கமுடியாவிடினும் அநேகமாக தன் அம்மாவின் வளையல்களைத்தான் அவள் முதன் முதலில் பார்த்து இரசித்திருக்கக்கூடும். அவளுடைய அம்மாவுக்கு வளையல் மீது கொள்ளை ஆசை அதிலும் குறிப்பாக கண்ணாடி வளையல்கள் என்றால் அதீத ஆசை.அவளுடைய வீட்டில் ஊனமுற்றிருந்த மர அலமாரி ஒன்று இருந்தது.


அம்மாவின் சமையலறை பறவைகளின் சரணாலயம்

 

  “பண்டைக்காலத்தில் பறவைகள் அனைத்தும் வெள்ளை நிறத்தில்தான் இருந்தனவாம்.தங்கள் இனத்தவரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டதால் அவை தங்கள் அரசனான கழுகாரை கடவுளிடம் அனுப்பி முறையிட வைத்தனவாம்.கழுகாரின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட கடவுள் மறுநாள் காலையில் அனைத்துப் பறவைகளையும் ஓரிடத்தில் கூடியிருக்க சொல்லி தேவதைகளிடம் வண்ணம் கொடுத்து அனுப்பினாராம்.முதலில் வந்து சேர்ந்த கிளிக்கூட்டத்திற்கு தேவதைகள் பச்சை,மஞ்சள்,நீலம்,சிவப்பு என பல வண்ணங்களைப் பூசினவாம்.கடலில் மீன் பிடிக்க சென்ற கொக்குகள் தாமதமாக வந்து சேர்ந்ததால் வண்ணம் தீர்ந்து போய்,அதனால்தான் அவை இன்றுவரையில்


அப்பா

 

  ஒருநாள் இரவு யாரும் எதிர்பாராத வேளையில் அவளுடைய அப்பா திடீரென இறந்துபோனார்.சடங்குகள் செய்து.தர்ப்பணம் கொடுத்து எல்லாம் முடிந்துவிட்டது.ஆனாலும் அவளுடைய அப்பா இன்னமும் எங்கோ ஓரிடத்தில் உயிரோடு இருப்பதாகவும்.எல்லாரும் வீட்டில் பத்திரமாக இருக்கும்போது அப்பா மட்டும் பாதுகாப்பின்றி தனியாக இருப்பதாகவும் அதீத கற்பனை அவளுக்குள்.கனத்த மழை பெய்யும் வேளைகளில் வெளியே இருக்கும் அப்பா மழையில் நனைந்து அல்லல்படுவதாக கற்பனையில் மருகுவதை இன்னும் நிறுத்தியபாடில்லை அவள்.சில வேளைகளில் அவளுடைய கற்பனை கருவுற்று கண்ணீரைப் பிரசவிப்பதும் உண்டு. அவளுக்கு நினைவு


கனவில் வந்த நரிகள்

 

  சமீப காலமாய் என் கனவில் அடிக்கடி வந்துபோகும் நரிகள் இன்றிரவும் வருமோ என்ற பயத்தோடு போர்வைக்குள் ஒளித்திருந்தேன் என்னை.தடித்தும்,மெலிந்தும்,நீண்டும்,குறுகியும் பல பரிமாணங்களைக் கொண்டிருந்த அந்நரிகள் தொடர்ந்து வருவதன் நோக்கம் எனக்குப் புலப்படவேயில்லை.ஏதேனும் விட்டகுறை தொட்டகுறையாக இருக்குமா என யோசிப்பதும் ஏற்புடையதாக தோன்றவில்லை.காரணம் நரிகளுடன் ஒருபோதும் கொஞ்சிக் குலவி உறவாடியதில்லை நான்.கதைகளில் கூட வடையைத் திருடிக் கொண்டு போன திருட்டுத்தனம் நிறைந்த நரிகளையும்,கொக்கை ஏமாற்றி அகலமான பாத்திரத்தில் சுவையான பாயாசத்தை ஊற்றிக் கொடுத்து குடிக்கமுடியாமல் தவித்த அதன்