கதையாசிரியர் தொகுப்பு: அ.முத்துலிங்கம்

84 கதைகள் கிடைத்துள்ளன.

பீஃனிக்ஸ் பறவை

 

  நான் திருகோணமலை சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிக்கிட்டு அர்லாண்டா விமான நிலையத்தில் வந்திறங்கினேன். இதற்குமுன் நான் வெளிநாட்டுக்கு பிரயாணம் செய்தவளல்ல. விமானக் கூடத்தில் இருந்த ஜனத்திரளில் என் மகனுடைய முகத்தைத் தேடியபோது எனக்கு பயம் பிடித்துக்கொண்டது. ஸ்டோக்ஹோமில் நான் வந்திறங்கிய வருடம் 2018. என் மகன் என்னை விட்டு பிரிந்து ஸ்வீடனுக்கு படிக்கப்போன வரும் 1998. அப்ப அவனுகு வயது 15. என்னால் நம்பவே முடியவில்லை. இருபது வருடங்கள் என் ஒரே மகனைப் பிரிந்து வாழ்ந்திருக்கிறேன்.


கிரகணம்

 

  நான் மணமுடித்து லண்டனுக்கு குடிவந்து ஐந்து வருடங்கள் பறந்து விட்டன. அப்போதுதான் ஒரு வசந்தகாலத்து காலைப்போதில் அபூர்வமாக வரும் சூரியகிரகணத்தை பார்ப்பதற்காக என் கணவர் என்னை கூப்பிட்டார். நான் போகவில்லை; என் கணவர் மிகவும் வற்புறுத்தினார்; முடியவில்லை. சனங்கள் கும்பல் கும்பலாக எதிர் இருக்கும் ‘பார்க்’ புல்வெளியில் நின்று பாதுகாக்கப்பட்ட கறுப்பு நிற கண்ணாடியின் ஊடாக மேல்நோக்கி பார்த்த வண்ணம் இருந்தார்கள். நான் பார்க்காத கிரகணமா? ஒரு முறை பார்த்தால் போதாதா? இருபது வருடங்களாக அல்லவா


துரி

 

  நான் வழக்கம்போல என் கதிரையிலே சாய்ந்திருந்தேன். அந்த இலையுதிர் பருவத்தின் மௌனமான மாலை வேளையில் மின்கணப்பு மெதுவாக எரிந்து கொண்டிருந்தது. துரி என் காலடியில் படுத்திருந்தது. அன்று முழுக்க அது சாப்பிடவில்லை. சாப்பாட்டை போய் முகர்வதும், மறுபடியும் வந்து படுப்பதுமாக இருந்தது. என்னுடைய மகன் கல்லூரிக்கு போன நாள் தொடங்கி இப்படித்தான். இரண்டு நாள் முன்பு நானும் என் மனைவியும் காரிலேபோய் எங்கள் மகனை அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் இருக்கும் பேர்க்லி கல்லூரியிலே சேர்த்துவிட்டு வந்திருந்தோம்.


ஒரு சாதம்

 

  பாதையை நிறைத்து பனி மூடியிருந்தது. கனடாவின் அன்றைய வெட்பநிலை மைனஸ் 20 டிகரி. டாக்சி மெதுவாக ஊர்ந்து 32ம் நம்பர் வீட்டு வாசலில் போய் நின்றது. வீட்டின் பெயர் ‘ஒரு சாதம்’ என்று போட்டிருந்தது. ஹோட்டலில் இருந்து அங்கே வர பரமனாதனுக்கு இருபது டொலர் ஆகிவிட்டது. காசைக் கொடுத்துவிட்டு ஓவர் கோட், மப்ளர், தொப்பி, பூட்ஸ் என்ற சம்பிரமங்களுடன் கையிலே பையையும் தூக்கிக்கொண்டு டாக்சியில் இருந்து பனி சறுக்காத இடமாக காலை வைத்து சிவதாண்டவம் செய்து


விசா

 

  இரண்டாவது முறையும் அவருக்கு விசா மறுத்துவிட்டார்கள். எவ்வளவு பெரிய அதிர்ச்சி! இந்தத் தடவை அவர் எவ்வளவோ கவனமாகத்தான் விண்ணப்ப பாரங்களைப் பூர்த்தி செய்தார். சுயசரிதை எழுதுவதுபோல நீண்ட பதில்களைக் கொடுத்திருந்தார். இருந்தும் இப்படி நடந்துவிட்டதே! முதன்முறை அவர் விண்ணப்பம் அனுப்பியபோது மிகவும் யோக்கியமாகத்தான் நடந்துகொண்டார். அப்போதெல்லாம் இப்படியான கெடுபிடிகள் இல்லை. விண்ணப்பத்தை நீட்டியவுடன் அமெரிக்க விசாவை தட்டிலே வைத்து தந்து விடுவார்கள் என்றுதான் எதிர்பார்த்தார். ஆனால் நடந்தது வேறு. எதற்காகப் பயணம் என்ற கேள்விக்கு ‘வண்ணப்பூச்சிகளைப்