Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 17, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

கார்காலக் கதை

 

 (1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முன்னுரை ஷேக்ஸ்பியர் உலகறிந்த புலவர் என்பது யாவரும் அறிவர். அவர்தம் நாடகங்கள் நவில்தொறும் நயம் பயப்பன. ஆங்கிலத்தில் சார்லஸ் லாம் (Charles Lamb) எழுதிய ஷேக்ஸ்பியர் கதைகளைத் தழுவியே தமிழில் கதைகளும் எழுதப்பெற்றுள்ளன. இப்போது மூன்றாம் புத்தகமாக நடுவேனிற் கனவு (A Midsummer Night’s Dream), சிம்பலின் (Cymbeline), கார்காலக் கதை (The Winter’s Tale), ஒதெல்லோ (Othello) ஆகிய நான்கு கதைகளும்


உள்ளங்களும் உணர்ச்சிகளும்

 

 ரவின் அமைதியைக் குலைப்பதுபோல ஒரு பறவை இனிமையாக அலறிக் கொண்டு சென்றது. சில இரவுகளில் இப் படி அந்தப் பறவை பாடிக்கொண்டு செல்வது வழக்கம். அதன் கூவலில் சத்தியன் சுய உணர்வுக்கு வந்தான். ஏதோ அவலத்தைக் கண்டு குரல் கொடுப்பது போல அப்பறவை அலறிக் கொண்டு சென்றாலும்…. அதிலும் ஓர் இனிமை இருந்தது. இரவு உறங்கிக் கொண்டிருக்கிறது – சத்தியன் கட்டிலிற் புரண்டு படுத்தான். நேரத்தைப் பார்த்துவிட்டு, இனி உறங்க வேண்டும் என நினைத்தான். உறக்கம் வரமறுத்ததால்


பல்லக்கு

 

 (1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நோக்கும் திசையெல்லாம் கூப்பிய கரங்கள், கசகசவென வியர்வை வடித்தது ஜனக்கூட்டம். “அப்பனே! என்னை ஆண்டவனே!” என்ற பிரார்த்தனைகள். “என் கஷ்டத்தை நீக்கு! காணிக்கைச் செலுத்துகிறேன்” என்ற இறைஞ்சல்கள். “ஆகட்டும். ஆகட்டும்!” என்று துரிதப்படுத்தினார் தர்மகர்த்தா தேவரங்கம். நூறு நூறு கிண் கிணி மணிகள் ஆர்த்தன, சிசர்களின் சிறுநகை போல, கண்ணாடிப் பட்டைகளும், ஜிகினாப் பூக்களும் இனவெயிலின் ஒளிபட்டு, கண் கூச மின்னின. கம்பீரமாய்


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியாயம்-14 | அத்தியாயம்-15 | அத்தியாயம்-16 லலிதா மாமி காமாக்ஷிக்கு மிகவும் அனுசரணையாக இருந்து வந்தாள்.காமாக்ஷிக்கு அம்மா இல்லாத குறையே தெரியாமல் சொந்தப் பெண்ணைப் போல பார்த்துக் கொண்டு வந்தாள்.காமாக்ஷி க்கு சின்ன,சின்ன ‘கை வைத்தியங்களும்’ பண்ணீக் கொடுத்துக் கொண்டு வந்தாள் லலிதா மாமி. காமாக்ஷி சந்தோஷமாய் இருந்து வந்தாள். இரவு படுத்துக் கொண்டதும் காமாக்ஷி தன் கணவரிடம் “நான் சொன்னா மாதிரி இந்த சமை யல் கார மாமி ரொம்ப நல்ல மாமியா இருக்கா.என்னே அவ


ஒரு பார்வை; ஒரு பயம்

 

 (1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “இந்த வீட்டில் யாருக்குப் பொறுப்பு இருக்கு எது நடந்தாலும் ஏன் என்னன்னு ஒரு கேள்வி இருக்கா? எனக்கு மட்டும் என்ன தல எழுத்து? எக்கேடோ கெடட்டும்னு நானும் போறேன். போங்க…” குழந்தைகள் மூன்றும் மிரண்டு போய் ஒருபுறம் நிற்க, தனக்கும் ஒன்றும் புரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள் பாத்திமா, “வீட்டில் பொம்பளைங்கன்னு எதுக்கு இருக்கிறது? அழகு பார்க்கவா? நல்லது கெட்டது பார்த்து நடந்துக்க


ஊர்மிளாவின் கனவு…

 

 ஊர்மிளா… அம்மா எனக்கு ஆசை ஆசையா வச்ச பேரு…. அம்மாவுக்கு எப்பிடி இந்த பேரு வைக்கணும்னு தோணிச்சு….??? அம்மா காவேரியும் அப்பா மதியும் பள்ளிக்கூட வாத்தியார்கள்.. அப்பா தமிழ் இலக்கியத்த கரச்சு குடிச்சவர்..அப்பாவோட படிப்புக்கு கல்லூரில வேல பாக்க வேண்டியவர்… ஆனா அவருக்கு பள்ளிக்கூட பசங்களுக்கு பாடம் சொல்லித்தரதிலதான் விருப்பம்… “சின்ன வயசுல தமிழ் மேல காதல் வராட்டிபோனா கல்லூரிலே எப்படி வரும்??? இந்த வயசுல சொல்லிக்குடுக்கும்போது கிடைக்கிற மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது….” இது அவர் பக்க


விடுகதை கவிதையாகிறது

 

 (1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குழந்தைகளின் தேவசபை கூடியிருக் கிறது. விடுகதைகளைத் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிருர்கள். அவர்க ஞடைய உலகத்திற்கு என்னையும் அழைக்கிறார்கள். ‘முள்ளு முள்ளு முள்ளு எல்லா இடத்திலும் இருக்குதென்று சொல்லு! கால்களிலே தைக்காது-ஆனால் கண்கண விட்டு வைக்காது’ என்றேன். குழந்தைகள் குழம்பிப் போனார்கள், “நீ விடுகதை போடவில்லை. ஏதோ பாட்டுச் சொல்லுகிறாய்”- என்று குற்றம் சாட்டினார்கள். “இல்லை விடுகதைதான்” என்று விவாதித்தேன், அவர்கள் அதை


சிக்கனம் – ஒரு பக்க கதை

 

 ரம்யாவிற்கு எரிச்சல்!! கணவன், மனைவி சம்பாதிக்கிறோம். இரண்டு பிள்ளைகள் வைத்திருக்கிறோம். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக இப்போதே வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிச் சேர்க்கலாம் என்றால் மாமனார் விடுவதில்லை. “இதென்ன.. கூட்டு, பொரியல் இல்லாமல் சாம்பார் ரசம்,.? “குதிப்பார். அவருக்கு வாரம் இரண்டு நாட்களாவது கறி, மீன், தினமும் முட்டை வேண்டும். இதில் கொஞ்சம் குறைந்தாலும்…. “வயசானக் காலத்துல என் பொண்டாட்டியும் நானும் வயிறார சாப்பிட்டு நிம்மதியாய்ப் போய்ச் சேரணுமில்லே..? என்று இந்த வாய் ருசிக்கு வக்காலத்துப் பேச்சு. கோணல்


அபூர்வ ராகம்

 

 வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக் கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால் ஸ்வர ஜாதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வ ராகம் ஜனிப்பது போல், அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமிலாது முளைத்தாள். இல்லாத சூரத்தனமெல்லாம் பண்ணி, கோட்டையைப் பிடித்து ராஜகுமாரியைப் பரிசிலாய் மணந்த ராஜ குமாரனைப்போல் நான் அவளை அடைந்து விடவில்லை. நாங்கள் சர்வசாதாரணமாய், பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு அவர்கள் மூன்று நாள் முன்னதாகவே வந்து நடத்திவைத்த முகூர்த்தத்தில் மணந்து கொண்டவர்கள் தாம். ஆகையால் இறுதி


வேடிக்கை மனிதர்கள் அல்லர்

 

 ஆஸ்பத்திரிச் சந்தியில் பஸ் வேகம் குறைத்து திரும்பியபோது டக்’ கென்று குதித்திறங்கி பஸ்ஸுடன் சற்றே முன்னாலோடி நிதானித்து நின்று கொண்டேன். ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்திறங்குவது கூடாது தான். அபாயகர மானது தான். என்றாலும் எனது அவசரம் அந்த அபாயத்தை ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கிறது. மணி அந்தா இந்தா என்று ஐந்து ஆகிக் கொண்டிருக்கிறது. கேட்டை மூடிக் கொண்டான் என்றால் அவனிடம் தலை சொரிய வேண்டும். மூடிய கைக்குள் குறைந்த பட்சம் நூறு ரூபாய் தாளாவது நீட்டிக் கொண்டிருக்க