ஒரு நல்ல செய்தி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 27, 2019
பார்வையிட்டோர்: 14,886 
 

அந்த ஊரில் ஒரு வழக்கம் உண்டு.

யாராவது ஒருவர் நல்ல செய்தியொன்றைச் சொன்னால், அதற்காக அவர்களுக்கு பணம் வசூலித்து அன்பளிப்பாகக் கொடுப்பார்கள்.

அந்த வழக்கம் ஒருவிதமான மூடநம்பிக்கை என்பது முல்லாவின் கருத்து.

அந்த மக்களுக்குப் புத்தி கற்பிக்க வேண்டும் என்று முல்லா கருதினார்,

ஒருநாள் அவர் சந்தை கூடும் இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த ஒர் இடத்தில் நின்று கொண்டு, ”அன்பார்ந்த பொதுமக்களே! உங்களுக்குச் சொல்வதற்காக அருமையான நல்ல செய்தி ஒன்றை வைத்திருக்கிறேன். எனக்குப் பரிசு தருவதற்காக உடனே பணம் வசூலியுங்கள் ” என்று கூச்சல் போட்டார்.

முல்லா ஒரு செய்தியினைச் சொல்லுகிறார் என்றால் உண்மையிலேயே அது நல்ல செய்தியாகத் தான் இருக்கும் என்ற நம்பிய மக்கள் அவசர அவசரமாக பணம் வசூலித்து ஒரு கணிசமான தொகையை முல்லாவிடம் கொடுத்தனர்.

அந்த அன்பளிப்புத் தொகையை வாங்கி எண்ணி சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்ட முல்லா மக்களை நோக்கி, “அன்பார்ந்த பொதுக்களே! நான் கூற இருக்கும் நல்ல செய்தி இதுதான். இந்த முல்லா ஒரு மகனுக்குத் தந்தையாகியிருக்கிறார்”, என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *