கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: March 31, 2019
பார்வையிட்டோர்: 7,363 
 

நினைவுகளை இரை மீட்பதற்காக எழுதிய தொடர்.

அத்தியாயம் ஒன்று | அத்தியாயம் இரண்டு

அராலிக்கூடாகச் செல்கிற பிரதான வீதியிலிருந்து மேற்குப் புறமாக வேலியில்லாமல் திறந்த ‘ட’னா வடிவில் முருகமூர்த்திக் கோவில் வளவு, மண்பாதையுடன் செல்கிறது.. வீதியை விட்டு இறங்கியவுடன் சிறிய கோவில்,அதில் யார் இருக்கிறார்கள்?பிள்ளையாரா?துர்க்கை அம்மனா?வைரவரா? யாரோ ஒருவர் செகிருட்டி போல இருக்கிறார்.பனை மரங்களுடன் எதிர்ரா போல் இருக்கிற அமெரிக்கன் மிசன் தமிழ்க்கலவன் பாடசாலைக் காணி முருகமூர்த்தி வளவை ‘ட‌’னாவாக்கியிருக்கிறது. அந்த வளவையும் சேர்த்து விட்டால் அது வளவு,சதுர வளவு தான். ஒரு புண்ணியவான், தன் வளவை கோவிலுக்கும் கொடுத்து,முன்னால் சிறிய துண்டை பள்ளிக்கூடத்திற்கும் கொடுத்திருக்கிற வேண்டும். அந்த காலத்தில், யாரோ ஒருவர்? மதசார்ப்பற்ற ,உயர்ந்த மனிதராக இருந்திருக்கிறார்! அவர் யார்? தேடினால் அறிய முடியும். அந்த கிராமம் சைக்கிளால் அளந்து விடக் கூடிய தூரம் தான். அராலியும் எல்லா கிராமங்களைப் போல‌ மறைவாக முற்போக்குத் தன்மையையும் கொண்டு தானிருக்கிறது.இவர்களைப் போல,பள்ளிக்கூடத்தில் ஏற்படுற‌ நட்பு தான் அதை வளர்த்துக் கொண்டு வருகிறதோ, என்னவோ பிழை இருக்கிறது?என்கிற மாதிரி கிடக்கிற குழப்பங்கள் எல்லாம் எமக்கென்று ஒரு சுயராட்சியம் ஏற்பட்டவுடன் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடுமோ?

பல பிரச்சனைகளிற்கு பெரும் பெரும் பாறைகளை உருட்டி விட்டு தடை படுத்திக் கொண்டிருக்கிறது போல இருக்கிற‌ பூதங்கள்,ஒரு நாள், இல்லாவிட்டால் ஒரு நாள் தோற்றுப் பின் வாங்கவே போகின்றன. ஏனெனில் ‘தர்மம்’ நம்மவர்களின்(தமிழர்களின்) பக்கமே கிடக்கிறது. இப்படி, நகுலனின் சிந்தனைகள் ஓடுகின்றன‌. ஒன்றை யோசிக்கத் தொடங்கினால்,அதிலே மட்டும் நில்லாமல் மனம் போன போக்கில் எங்கையோ போய் விடுகிறான். ‘இப்படி இருக்கிறதாலேதான் கிராமத்தின் வரலாறும் சரியாக‌ தெரியாதவனாக கிடக்கிறேனே !’ அவன், தன்னையே சலித்துக் கொண்டான் . .

பிழைகள், அவனிடம் மட்டுமல்ல‌ ,வெளியிலேயும், சமூகத்திலும் கிடக்கின்றன‌. தேவையற்ற லண்டனின் தேம்ஸ் நதியைப்பற்றியும்,அமெரிக்காவில் ஆதிக் குடிகள் கொடுமையாகக் கொல்லப்பட்டதைப் பற்றியும் தான் தெரிகிறது படிக்கிறது எல்லாம் ….சுய கல்வி முறை துப்பரவாக கை விடப்பட்டிருக்கிறது. தாவரங்களைப் பற்றி படித்தாலும் சரி, விலங்குகள் பற்றி படித்தாலும் சரி, இங்குள்ள எல்லாற்கும் அழகான‌ பழந்தமிழ்ப் பெயர்களும் இருக்கின்றன. வேறு மொழிப் பெயர்களாகப் படித்து, அதை நினைவில் வைத்திருப்பதிலேயே பாதிப்பேர் தவறி விடுகிறார்கள் என்று படுகிறது. இப்படியே எல்லாத்தையும் அந்நிய‌ம் புக‌ விட்டு… அந்நிய‌ப்படுத்தி யே விட்டிருக்கிறோம்.

அரசகாலத்தில் வெளிநாட்டு மருத்துவம் இங்கிருக்கவில்லை. ஜெர்மனி, சீனாவில்…எல்லாம் இந்திய ஆயுள்வேதத்தின் தொடர்ச்சி இருப்பதாக சொல்லப்படுகிறது. சுதந்திரமடைந்த நாம் ஏன் நம் மொழியிலேயே படிக்கக் கூடாது. இவை தானே ‘ஏ.லெவலி’லே தாவரவியல் ,விலங்கியல் ‌ பாடங்களையே சலிப்பேற்றுகின்றன. மற்றவர் படுக்கையறையில் நுழைய அதிகாரம் இல்லாத மாதிரி, மற்றவர் உரிமைகளிலும் நுழைய எவருக்குமே உரிமையும் இல்லை. முட்டாள் தனமாய், சிறிலங்கா அரசு எல்லாத்திலும் மூக்கை நுழைத்து, நுழைத்து அமைதியை கெடுத்துக் கொண்டே இருக்கிறது.

சுதந்திரத்தின் அருமையைத் அறியாத பெரும்பான்மையினர், இனவாத, துவேசக் கொள்கைகளை பின் பற்றி,வன்முறைகளை வளர விட்டு கொண்டே போகிறார்கள்.

அவர்களிற்கு நாட்டை சரியாய் ஆளவேத் தெரியவில்லை. சமஸ்டித் தன்மையை ஏற்படுத்துவது ஜனநாயகம் …என்பது புரியவே இல்லை. சுதந்திரம் அடைந்த பிறகும் காலனி முறையிலேயே மூழ்கி ருசி கண்டவர்கள் போல் கிடக்கிறார்கள். மறுபக்கத்தில், மாகாண அரசு சுதாரித்துக் கொண்டு ,எப்ப தான் சுயமாக‌ ‘கல்வி’யை தன் கையில் எடுத்து மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறதோ? என்பதும் தெரியவில்லை. தொடர்ந்து… ஒவ்வொன்றாக கவனத்தில் எடுத்து…. ‘ஒரு புரட்சி அல்லவா நடக்க‌ வேண்டி இருக்கிறது ?

இளைஞர்கள், விடுதலைப் போராட்டம் என ஈடுபட்டு நிறைய குளறுபடிகளை செய்து கொண்டே போகிறார்கள். இளம் கன்று பயம் அறியாதது என்பதில்லை,அறிவின் கொள்ளளவு பத்தாதது

ஒரு ‘காலக்கப்பல்’ கிடைத்தால் பல‌ வருசங்களைக் கடந்து பின்னாடி போகக் கூடியதாக இருந்தால்…எவ்வளவு நல்லாய்யிருக்கும்? விடுதலைக்காய் போராடிய குழுக்கள் தாம் விட்ட பல பிழைகளையும் எல்லாம் களைந்து , மறுபடி நிதானமாகப் போராடி…. ராஜிவ்காந்தியையும் சாகடிக்காமல் கற்பனை எவ்வளவு சுக‌மாய்யிருக்கின்றன!

சூரியா, இருபத்திநாலு என்ற திரைபடத்தை தேவையில்லாமல் எடுத்து, அதில் கடிகாரம் பின்னோக்கி சுற்றுகிறது. “மிஸ்டர்,படத்தை எடுத்தால் மட்டும் போதாது,அதை நிஜமாக்கவும் வேண்டும்.” எதுவுமே மாறப் போவதில்லை. நாம் கோவிலைப் பார்ப்போம்.

கோவில் ..பார்வைக்கு மறைவாகவே இருக்கிற து.எல்லாக் கோவிலைப் போலவே அதுவும் மதில் சூழவே கட்டப்பட்டிருக்கிறது.தேர்த் திருவிழாவின் போது,உள் வீதியால் (பிரகாரம்) பிள்ளைத் தண்டில் …சுற்றி வார சுவாமி, தேர்முட்டிக்கு வந்து தேரில் ஏறி ,வெளி பிரகாரத்தால் சுற்றி வருவது கண் கொள்ளாக் காட்சி. கடவுள் மட்டும் அதிகாரத்தை இழக்காதவராக இருக்கிறார். புதிதாய் தேரைச் செய்தவர்கள் எல்லாரும் சுவாமியை தேரில் ஏற்றுவதற்காக படிகளுடன்,உயரத்தில் தளத்துடன் ஒரு மேடையையும் விரைவிலே கட்டி விடுகிறார்கள்.எல்லாச் சாமியும் தேரிலே தான் செல்வது வழக்கம்.அந்தக்கால அரசர் பழக்கம் ,கோயில்களிலே தான் தொடர்கின்றன. உண்மையான ஜனநாயக ஆட்சிமுறை ஏற்பட்டாலும் அவ்வவ்விடங்களில் இருக்கிற சாமிகள் தான் அந்தந்த மக்களிற்கு அரசர்கள் .

பார்வைக்கு எட்டியவரைக்கும் வயல்கள் விரிந்து கிடக்கின்றன.

தேர்முட்டியிலிருந்த நகுல னுள் சிந்தனை ஒன்று ஓடியது அந்தப் பெரியவர் , தன்னுடைய‌ விவசாயக் காணி ஒன்றைத் தான் அப்படிக் கொடுத்திருக்கிறார். இதற்குப் பக்கத்திலே, சிவன் கோவில்க் காணிகள் 2,3 பரப்புக்கு மேலே கிடக்கின்றன‌.அவையும் குத்தகைக்கு எடுத்து காலகாலமாக நெற்செய்கை பண்ணப்பட்ட பள்ளக் காணிகள். தற்போது, அதில் வறிய மக்கள் குடியேறி,குடியேறி..சிறிய குடியிருப்பாய்யே மாறி விட்டது..

அங்கே, பனைமரத்தில் ஏறி தொழில் செய்கிற சமூகமே இருந்தாலும் எல்லாரும் அந்த தொழில் செய்பவரில்லை.அது ஒரு கலவை.பல்வேறிடத்திலிருந்து. வந்தவர்கள் ,மலையகத்திலிருந்து வந்தவர்கள் கூட மணமுடித்து இருக்கிறார்கள்.அதனால், சிறிதளவு படித்து முன்னேற்றம் அடைகிற போக்கும் காணப்படுகிறது. நகுலனோடு தேர்முட்டியில் இருக்கிற குஞ்சன் அக்குடியிருப்பிலே இருக்கிறவன்.

குஞ்சனுக்கு வட்டமுகம்.அதில் தாடியும் கிடக்கும் சிலவேளைகளில் பீடி, சிகரட் பிடிப்பதால் .உதடு சிறிது கறுத்துக் கிடக்கிறது.ஆனால் அவனுள் ஒரு கலைஞன் இருக்கிறான்.சினிமாப் பாடலை ‘லயம்’ மாறாமல் பாட வல்லவன்.எடுத்தவாக்கிலே எல்லாம் பாடி அசத்த மாட்டான். பாடிப் பாடி பயிற்சி எடுத்தே கடைசியில் பாடி விடுபவன்.அந்த பாட்டுக்கு மேசையில் மேளமும் தட்டக்கூடியவன்.

இவன் முகத்திலிருந்து எதையும் படிப்பது கஸ்டம்.’ தாடி’ அரைவாசியை மறைத்து விடுகிறது

அவனுக்கு பக்கத்திலே இருக்கிறவன் வாப்பா. .வாப்பாவிற்கு அவனுடைய அம்மாவைப் போல நீள முகம். ‘நீள முகத்தவர்கள்’ சிந்திக்கிற பேர்வழிகளாம்..ரேடியோ திருத்துறவன்.அவன் ஆழ்ந்து யோசிக்கிற போது அவன் முகத்திலிருந்து கொஞ்சத்தை படிக்கலாம்..

நகுலன்,சித்திரா ஆசிரியையின் … அருந்தவப்புதல்வர்களில் ஒருவன்.அவனுக்கு அண்ணன்,அக்கா,தங்கச்சி..எல்லாம் இருக்கிறார்கள். குஞ்சனுக்கு ஒரு அண்ணன் மட்டும் தான்.வாப்பாவிற்கு நகுலனை விட ஏகப்பட்ட சகோதரங்கள். ஆசிரியையின் பிள்ளைகள், படிப்பை முடித்து விட்டால் ஆசிரியர் வேலையைப் போல..ஒரு விதமான‌ கெளரவமான வேலையில் செருகிக் கொள்றது என்ற மாதிரியை உடையவர்கள்.

விடுதலை அமைப்புகள் ஆயுதப் போராட்டத்தை தெரிவு செய்த பிறகு சிங்கள அரசு, இனவாதத்தை அதிகரித்துக் கொண்டு செல்வதால் முந்தியவர்களைப் போல இவர்களால் வேலைகளை துப்பரவாகவே எடுக்க முடியாத‌ நிலமை ஏற்பட‌ நகுலனின் ஒரு நண்பன் ரஞ்சன், ஆசிரியரின் புத்திரனான அவன், கடைசியில், வெளிநாடு…ஒன்றுக்குச் சென்று விட்டான். இந்த அரசு, இவர்களை வெளிநாடுகளிற்கு துரத்துவதையே விரும்புகிறது. இவனுக்கு போக எல்லாம் விருப்பமில்லை, இங்குள்ள படிப்பில்… இங்கேயே ஒரு வேலை எடுப்தையே விரும்புகிறான்.

“சொந்த நாடு இல்லை என்றால்….,ஏன் தான் பையித்தியம் பிடித்து அலைகிறோமோ? தெரியவில்லை. இங்கே ‌விவசாயம் செய்ய முடியாதா? மீன் பிடிக்க முடியாதா? என்ன‌??? அவற்றின் கழுத்தையும் பிடித்து சட்டங்களால் நசுக்கிற அரசியல்’ நிலவுறது… சோர்வடையச் செய்கிறது தான். இனவாதம் மட்டுமில்லை, எங்கடயவரின் பிற்போக்கு சிந்தனைகளாலும் தள்ளப்படுகிறோம்.

அவர்களில் காப்பற‌ பிழை என்றால், எங்கடயவர்கள் பலவீனமானவர்களாக இருக்கிறார்கள் என்பதும் உண்மை. தவிர‌ , அவர் தம் கொள்கைகளை எம்முள்ளும் புகுத்தி(திணித்து) தள்ளி எம்மையும் சோடைகளாக்கி(2ம் பிரஜைகளாக்கி) விட்டிருக்கிறார்கள் . பகுதி அடிமைகள். இதிலிருந்து நாம் விடுபடவே வேண்டும். எம்மை ஆட்டிப் படைத்து ,ஆட்டம் போடுறவர்களும் நானூறு,ஐய்னூறு ஆண்டுகாலம் …நம்முடைய நிலையில் இருந்தவர்கள் தான். எங்கடப் பக்கத்திலிருந்தும் கைமுனுக்கள் எழுவார்கள் தான்.பாடம் படிப்பிப்பார்கள் தான் , அப்பத் தான் இந்த ஜென்மங்களிற்கு சுரணையே வரும். தர்மவாவேச நெருப்பு எம்முள் அணையாமல் எரிந்து கொண்டே இருக்கப் போகிறது.

நகுலனுக்கு சே!”என்றிருந்தது. முதலில், நம் அரசியல்வாதிகளிற்கு ஏன் இந்த விசாயத்தையும், மீன் பிடியையும் ஜனரஞ்சப்படுத்தனும் என்று தோன்றவில்லை . அவை பொதுவான‌ பொருளாதாரதுறை களாயிற்றே ! அனைவரும் செய்யக் கூடிய வேலைகளாக்கப் பட‌ வேண்டியது அவசியம் என ஏன் தோன்றவில்லை .கொஞ்சம் ஆழமாக, யோசித்தால் வழிகள் இருக்கவே செய்கின்றன. முயன்றால் முடியாதது ஒன்றுமேயில்லை!

நிலத்தை ஆமிக்காரன் பறித்து வைத்திருக்கிறான்;கடல் புறத்தையும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறான் என்பது உண்மை தான்.ஆனால், சொல்லுறது போல விடுதலைப் போராட்டமும் லேசானதும் இல்லை. அது புதைகுழிகள் மலிந்தவை. பெரிய கழுகு, அதில், நம்மைப் பிடித்து தள்ளி விடவே பார்க்கிறது. நம் அவலத்தை ரசிக்கிறது.

ஆனால், நாம், இன்னமும் முழுமையாக‌ அடிமையாகி விடவில்லையே, காந்திய வழிகளும் இருக்கின்றனவே! காந்தியம் என்றுமே தோற்றுப் போவதில்லையே.ஆனால் நாம் தாம் நம்பிக்கை இழந்து சோர்ந்து போய் நிற்கிறோம். பொதுவாக நாடுகளில் எல்லாம் மூன்று அரசாங்கங்களே இருக்கும்.பயங்கரவாத பூச்சாண்டி காட்ட வெளிக்கிட்ட நாடுகளில் மட்டும் நாலாவது அரசாங்கமும் கிடக்கிறது.

அது இராணுவ ஆட்சி. !

சிறிலங்காவிலும், இதே கதை தான்.தமிழரின் மாகாணங்களில் எல்லாம் கொண்டு போய்… இராணுவத்தை .குவித்து விட்டார்கள். தவறான சட்டங்களால் தமிழர்கள் தினம், தினம் கழுவேற்றப்படுகிறார்கள். இனத்துவேசப் போரை முடிவுக்கு கொண்டு வர வந்த இந்திய தரப்பு, சிமார்ட்டாக இருக்காமல் போனதன் காரணம் தான் புரியவில்லை.பிரித்தானிய,அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்த கலப்பு அரசியல் நிலமையைப் பேண விரும்புகிறதா?

எல்லாருக்குமே மனித வாழ்வே துயரம் நிறைந்தது தான்,எமக்கு அது கொஞ்சம் அதிகமாக பட்டிருக்கிறது. களமும்,வாய்ப்புகளும் இழக்கப்படுற நிலமையில் எங்கை சுற்றி வந்தாலும், சிந்தனை கடைசியில் ஆயுதப் போராட்டமே மாற்றங்களை கொண்டுவர வாய்ப்பானவை என்றதிலே வந்து நிற்கிறது.

ஆனால், ஆயுதங்களை எங்கிருந்து பெறப் போகிறார்களாம்?

மேலே, கூறப்பட்ட நாடுகளின் கறுப்புச் சந்தையிலிருந்து தானே!சிறிலங்காவில் இனமோதல்கள் இல்லா விட்டால் கூட, இந்த நாடுகள்,ராணுவத்திற்குப் பயிற்சி அளித்தல்,கூட்டு பயிற்சி,நவீனப் படுத்தல்…என ராணுவத்தினுள் கலந்து விடவே செய்வார்கள்.அரசாங்கத்தை விட இங்கே,இவர்களின் பிடி அதனுள் அதிகரிக்கப்படும்..

இவர்களின் பேச்சைக் கேளாத சிங்கள கதாநாயகர்கள் வருகிற போது,அவர்களது அரசாங்கம் கவிழ்க்கப்படும். இயக்கங்கள் தோன்றியதும் ஒன்றும் பிழையும் இல்லை. ஆனால், அதில் விவேகமுள்ள அரசியலை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இருந்தது. தொடக்கத்திலேயே நம் இளைஞர்கள் அதைத் தவற விட்டு விட்டார்கள்.ஃபெயில்.!

எம்மை துன்பப் படுத்துற அவர்கள் கூட‌ என்ன,‌ சுய‌ துயரங்களிலிருந்து விடுபட்டு விடவாப் போகிறார்கள்.. அவரவர் வாழ்க்கையில் என்ன என்ன துயரங்களை அடைய இருக்கிறார்களோ ? அவர்களிற்கே தெரியாது. மரண தண்டனை முறையைக் கூட ஐ.நா.சபையிலே வலியுறுத்துகிறார்கள்.”வாள் எடுத்தவன் வாளாலே மடிவான்.”.என்பது பழமொழி.அதிலே அவர்களில் கணிசமானவர்களை விதி தொங்க வைக்கப் போகிறது. தப்பிக்க‌ அவர்களிற்கு கொம்பு ஒன்றும் முளைத்து விட ப் போவதில்லை . கொம்பு சீவுறதை அவர்கள் கை விட்டு விடுறதே நல்லது.

இவன், சதா சலிப்படைந்து கொண்டே கிடக்கிற‌ ‌வாழ்க்கை யை சுவாரசியமாக்க ‌யாழ்பொது நூலகத்தில் இருந்து மொழிபெயர்ப்பு நாவல்கள்,கதைகளை… எடுத்து வாசிப்பதிலும் சிறிது நாட்டம் செழுத்தினான்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *