சேற்றில் மலர்ந்த செந்தாமரை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 24, 2019
பார்வையிட்டோர்: 7,377 
 

அத்தியாயம்-18 | அத்தியாயம்-19 | அத்தியாயம்-20

இரவு பூராவும் தூக்கம் வராமல் கஷ்டப் பட்டுக் கொண்டு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் புரண்டு புரண்டுப் படுத்தாள் கமலா.காதில் மசூதியில் இருந்து அல்லா பாட்டு கேட்டது கமலாவுக்கு. தன் கண்களை தேய்த்து கொண்டே மெலல எழுந்து .பெட் ரூமை விட்டு வெளியே வந்தாள். கமலா வின் கண்களைப் பார்த்த தேவி ”என்ன கமலா ரா பூரா நீதூங்கவே இல்லையா.உன் கண்ணு ரெண்டு இப்படி கோவைப் பழம் போல சிவந்து கிடக்குதே.ஏன் கமலா என்ன ஆச்சு.உன் உடம்பு சரி இல்லை யா என்ன.இல்லாட்டி உனக்கு ராப் பூரா தூக்கம் வராத அளவுக்கு அப்படி ராணி உன் கிட்டே என்ன சொன்னா” என்று கமலாவை நிக்க வச்சுக் கேட்டாள்.தேவி.“அம்மா அவ என் கிட்டே ‘அம்மா,நானே உங்க கிட்டே சொல்லலாம்ன்னு தான் இருந்தேம்மா.சூப்பர் மார்கெட் டிலே நான் வேலை செஞ்சு வர ‘செக்ஷன் சூப்பர்வைசரை’ நான் ரொம்ப காதலிக்கிரேம்மா.அவரும் என்னை ரொம்ப காதலிக்கிறார்மா. நீங்க சித்திக் கிட்டே கொஞ்சம் எனக்காக சொல்லி அவரை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடி யுமாம்மா’ன்னு கேட்டாம்மா” என்று ராணீ சொன்ன எல்லா விவரத்தையும் சொன்னாள் கமலா. “என்ன ராணீ,ஒரு கிருஸ்தவப் பையனையா காதலிக்கிறா” என்று கோவத்துடன் கேட்டாள் தேவி “நானும் அவ சொன்னதைக் கேட்டு திடுக்கிட்டுப் போனேம்மா” என்று ராணீ சொன்ன எல்லா விஷயத்தையும் ஒன்னு விடாம சொன்னாள் கமலா.“என்ன செந்தாமு,நானும் கமலாவும் இத்தனை நேரமா பேசக்கிட்டு இருக்கோம்.நீ என்னடான்னா எல்லாத்தையும் கேட்டு கிட்டு சும்மா குந்தி க்கின்னு இருக்கே”என்று உரக்க கத்தினாள் தேவி.செந்தாமரை அமைதியாக “அம்மா, ராணீஅந்த கிருஸ்தவப் பையனை கல்யாணம் பண்ணிக் கொள்ள ரொம்ப ஆசைப் படறா.நாம அந்தப் பையன் வேணாம்ன்னு சொன்னா அவ அவன் கூட ஓடிப் போய் கல்யாணம் கட்டி கிட்டு சந்தோஷமா இருந்து வருவேன்னு வேறே சொல்றாம்மா.நமக்கு அவ சந்தோஷம் தாம்மா இப்ப முக்கியம்.அப்பா வேறே ராணீ கல்யா¡ணத்தைப் பார்க்கணுன்னு சொல்றாரு.அதனால்லெ நான் என்ன சொல்றேன்னா,ராணீ கல்யாணத்துக்கு நாம சம்மதம் சொல்றதாலே அவ கல்யாணமும் நடந்தா மாதி¡¢ இருக்கும்.அப்பா ஆசையையும் நிறைவேறும்மா.அதனால்லே அவ எழு ந்து வந்தவுடன் நாம எல்லோரும் அவ கிட்டே ‘ராணீ அந்த கிருஸ்தவப் பையனன கல்யாணம் பண்ணிக் கொள்றதிலே எங்களுக்கு பூரண சம்மதம். அதனால் நீ அந்த கிருஸ்தவ பையனை சந்திச்சு அவங்க அம்மா அப்பாவை நம்ம வீட்டுக்கு வந்து பெண் கேக்கச் சொல்லு.நாங்க பெரியவங்க எல்லாம் கூடிப் பேசி உங்க ரெண்டு பேர் கல்யாணத்தை முடிச்சு வைக்ககிறோ¡ம்ன்னு சொல்லி அந்த டேவிட் அம்மா அப்பாவுடன் நாம எல்லாரும் கலந்து பேசி கல்யாணத்தை செஞ்சு முடிச்சிடலாம்மா. இப்படி பண்றதாலெ ராணீயும் சந்தோஷமா இருந்து வருவா.நம்ம அப்பாவின் ஆசையும் நிறைவேறு ம்மா” என்று சொன்னாள்.உடனே தேவி “என்னமோ போ செந்தாமு. என்ன காதலோ கத்தி¡¢க்காயோ” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது நேரம் ஆகி விடவே ராணீ மெல்ல எழுந்து வந்தாள். செந்தாமரை ராணீயைப் பர்த்து “ராணீ,அம்மா எல்லா விவரமும் சொன்னாங்க நீ அந்த கிருஸ்தவ பையணை கல்யாணம் கட்டிக்க பூரண சம்மதம் தரோம். ஆனா ஒரு ‘கண்டிஷன்’ ராணீ.நீ அந்த கிருஸ்தவப் பையனை சந்திச்சு,அவங்க அம்மா அப்பாவை நம்ப வீட்டுக்கு வந்து ‘பொண்னு கேக்க’ச் சொல்லு.நாங்க பெரிய வங்க கூடிப் பேசி உங்க கல்யாணத் தை நடத்தி வைக்கிறோம்”என்று சொன் னவுடன் ராணீ “சரி சித்தி,நான் இன்னைக்கே அவரை சந்தி ச்சு அவங்க அப்பா அம்மாவை நம்ப வீட்டுக்கு வந்து ‘பொண்ணு கேக்க’ச் சொல்றேன்”என்று சொல்லி விட்டு சந்தோஷத்துடன் பல் தேய்க்கப் போனாள்.
‘சூப்பர் மார்கெட்டுக்கு’ வேலைக்கு வந்த ராணீசூப்பர் மார்கெட் பூராவும் தேடி முதல் வேலை யா தனியாக டேவிடை சந்தித்தாள்.அவள் டேவிட்டிடம் தன் கட்டை விரலை உயர்த்தி காட்டி ”நாம ஜெயிச்சோட்ம் டேவிட். நம்ப காதல் ‘சக்ஸஸ்’.எங்க வீட்டிலெ நம்ப கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டாங்க.ஆனா கூடவே ஒரு ‘கண்டிஷன்’ போட்டு இருக்காங்க டேவிட்.நான் உனக்கு முன்னமெ சொல்லி இருக்கேனே டேவிட்.எங்க வீட்டிலே எங்க சித்தி தான் எல்லாம்ன்னு. அவங்க தான் இந்த கல்யாணத்தை முன் நிந்து செஞ்சு வைக்கப் போறாங்க.அவங்க போட்ட கண்டிஷன் இது தான். அதன் படி உங்க அம்மா அப்பாவை எங்க வீட்டுக்கு வந்து ‘பொண்னு கேக்க வரச் சொல்லி விட்டா ங்க.பொண்ணு பாத்த பிறவு,அப்புறமா பெரியவங்க எல்லாம் கூடி, பேசி நம்ப கல்யா ணத்தை நடத்தி வக்கிறாதா சொல்லி இருக்காங்க.அதனால்லே நீங்க தயவு செஞ்சி உங்க அம்மா அப்பாவை எங்க வீட்டுக்கு வந்து ‘பொண்ணு கேக்க’ச் சொல்ல முடியுமா” என்று டேவிடின் கைகளைப் பிடித்து கெஞ்சி னாள்.உடனே டேவிட்”அப்படியா ராணீ.சரி நான் இன்னைக்கெ எங்க அம்மா அப்பா கிட்டே இதை சொல்லி அவங்களை உங்க வீட்டுக்கு வந்து ‘பொண்ணு கேக்க’ச் சொல்றேன். உங்க வீட்டு ‘அடரஸ் ஸை’ கொஞ்சம் குடு ராணீ” என்று கேட்டான்.உடனே ராணீ தன் விட்டு ‘அட்ரஸ்ஸை’ டேவிடம் எழுதி கொடுத்தாள்.ராணீ கொடுத்த ‘அடரஸ்ஸை’ வாங்கிக் கொண்டு ராணிக்கு ‘தாங்க்ஸ்’ சொல்லி விட்டு ‘சூப்பர் மார்கெட்’ வேலையை கவனிக்கப் போய் விட்டான் டேவிட்.ராணீயும் டேவிட்டுக்கு ‘தாங்க்ஸ்’ சொல்லி விட்டு சந்தோஷத்துடன் தன் வேலையை கவனிக்க போய் விட்டாள்.

அன்று சாயந்திரமே டேவிட் தன் வீட்டுக்குப் போய் அவன் அம்மா அப்பா மூடு எப்படி இருக்கிறது என்று வேவு பார்த்தான்.டேவிட் அப்பா சோபாவில் உட்கார்ந்துக் கொண்டு ‘பைபிளை’ வைத்துக் கொண்டு படித்துக் கொண்டு இருந்தார்.அம்மா டீ.வீயில் வரும் சீ¡¢யலைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். டேவிட் வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்த அவன் அம்மா டேவிட் ‘காபி’ சாப்பிடுகிறாயா,இல்லே நேரே ‘டின்னரா’ “ என்று கேட்டாள். உடனே டேவிட் ”நான் ‘காபி’ குடிச் சிட்டு வந்து இருக்கேன்.இப்ப நேரே ‘டின்னர்’ தாம்மா.ஆனா அதுக்கு முன்னாடி நான் உங்க ரெண்டு பேர் கிட்டேயும் நான் கொஞ்சம் பேசணுமா” என்று தயங்கிக் கொண்டே சொன்னான். “அப்படியா டேவிட்.என்ன சமாசாரம்ப்பா.ரொம்ப முக்கியமானதா.உன் வேலை சம்பந்தப் பட்டதா சொல் லப்பா” என்று கவலையுடன் கேட்டாள் ஜென்னி.அம்மா பிள்ளை ரெண்டு பேரும் பேசி கொண்டு இருந்தது அவர் காதில் விழவே தாமஸ் ‘பைப்பிளை’ மூடி வைத்து விட்டு டேவிட் என்ன சொல்லப் போகிறான் என்று க்ற்ட்க ஆரம்பித்தார்.” அம்மா,நான் என் ‘செக்ஷனில்’ வேலை செஞ்சு வரும் ராணீ என்கிற ஒரு பெண்ணை ஆறு மாசமா காதலிச்சு வறேம்மா.எங்க காதலை அவ வீட்டிலே சொல்லி இருக்காம்மா அவங்க வீட்டிலெ எங்க காதலுக்கு சம்மதம் சொல்லி,உங்க ரெண்டு பேரையும் அவங்க வீட்டுக்கு ‘பொண்ணுப் பார்க்கவும்’ பேசவும் வரச் சொன்னாங்களாம்மா.நாம மூனு பேரும் அவங்க வீட்டுக்கு ப் போய் ராணீயைப் பார்க்கலாம்மா.உங்களுக்கு ராணீயையும்,அவங்க பெரியவங்களையும் பிடிச்சி இருந்தா எங்க ரெண்டு பேருடைய கல்யாணத்தை ‘பிக்ஸ்’ பண்ண முடியுமாம்மா” என்று தயங்கி தயங்கிக் கேட்டான்.

“என்ன டேவிட்,நீ ஆறு மாசமா அந்த பொண்ணை காதலிக்கிறே ன்னு சொல்றே, ஆனா இது வரைக்கும் எங்க கிட்டே மூச்சே விடலே.அந்தப் பொண்ணு ராணீ நம்ம கிருஸ்தவ பொண்ணு தானே” என்று கேட்டார் தாமஸ்.ரெண்டு நிமிஷம் ஆனதும் டேவிட் பயந்துக் கொண்டே “இல்லேப்பா ராணீ ஒரு இந்துப் பொண்ணுப்பா” என்று சொன்னான்.தாமஸ் உடனே “ஏன் டேவிட்,நீ ஒரு இந்துப் பொண் ணையா காதலிக்கிறே.அவங்க கடவுள் வேறே நம்ப கடவுள் வேறே.நாம சர்ச்சில் ‘ஹோலி பாதர்’ ‘பைப்பிளை’ப் படிச்சு உங்க ரெண்டு பேரையும் கணவன் மணைவியாக சொல்லி கல்யாணத்தை எல் லார் முன்னிலையிலும் செஞ்சு வப்பாரு.ஆனா அவங்க ஒரு ஐயரை வச்சு கல்யாணத்தை செய்வாங்க. நாம கல்யாண பொண்ணுக்கு மோதிரம் போடுவோம்.ஆனா அவங்க பொண்ணுக்குத் தாலி கட்டுவா ங்க.அவங்க வழக்கமே வேறே.நம்ம வழக்கமே வேறே ஆச்சே டேவிட். எப்படி நாம அந்த இந்துப் பொண்ணே உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க முடியும்” என்று ஒரு பெரிய ‘லெக்சரே’ அடித்தார். டேவிட்டுக்கு உலகமே இருண்டு விட்டது போல இருந்தது.அவன் தன் தலையைத் தொங்கப் போட்டு கொண்டு சும்மா இருந்தான்.தாமஸ் மறுபடியும் ‘பைப்பிளை’ எடுத்து வைத்துக் கொண்டு படிக்க ஆரம் பித்தார். ஜென்னி மெல்ல பேச்சை ஆரம்பி த்தாள்.“ஏங்க,டேவிட் அந்த பொண்ணை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன்னு சொல்றான்.அந்தப் பொண்ணும் நம்ப டேவிடை உயிருக்கு உயிரா காதலிக்கிறாளாம்.நாம வீணா அவங்க காதலை ஜாதி பேரைச் சொல்லி, அவங்களை பி¡¢ச்சு வக்கக் கூடாதுங்க.நமக்கு இருப்பதோ டேவிட் ஒரே பையன் தாங்க.அவன் சந் தோஷம் நமக்கு முக்கியம் இல்லியா சொல்லுங்க” என்று டேவிட் காதல் விஷயத்தை பேச ஆரம்பித் தாள் ஜென்னி. உடனே தாமஸ்’ பைப்பிளில்’ இருந்து தன் கண்களை வெளியே எடுத்து ஜென்னி யைப் பார்த்து “ஜென்னி, எனக்கு மட்டும் டேவிட் சந்தோஷம் முக்கியம் இல்லையா சொல்லு. நான் அவன் கிட்டே ‘இந்த இந்துப் பொண்ணு வேணாம் டேவிட் ஒரு ஒரு கிருஸ்தவப் பொண்ணாப் பாத்து நீ காதலிப்பா.இந்த ஜாதி வேறுபாடு இல்லாம.நீ இருக்கும்’ன்னு தானே சொன்னேன்.இதிலெ என்ன தப்பு ஜென்னி” என்று எதிர் கேள்வி போட்டார். “நீங்க சொல்றது ரொம்ப சரி தாங்க.நான் இல்லீன்னு சொல்லலேங்க. அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சு, விருப்பம் தொ¢விச்சு,காதல் செய்ய ஆரம்பி க்கும் போது, ஒருத்தர் மத்தவர் ஜாதியை பத்தி கேட்டு விட்டாங்க காதல் செய்ய ஆரம்பிப்பாங்க.தவிர அவங்க ரெண்டு சின்னவங்களுக்கும் இந்த ஜாதி பேதமே இருக்காதுங்களே சொல்லுங்க.அவங்க மனசு ரெண்டும் ஒத்து போய் தானே காதலிக்க ஆரம்பிச்சு இருப்பாங்க சொல்லுங்க” என்று கேட்டாள் ஜென்னி.

“அது சரி,ஜென்னி.நான் இல்லேன்னு சொல்லலே.இந்த ஜாதி விட்டு ஜாதியிலே கல்யாணம் கட்டிக்கிறதிலே நிறைய’ ப்ராப்லெம்’ ங்க இருக்கே.அதை எல்லாம் நீ யோஜனை பண்ணி பாத்தியா ஜென்னி” என்று எதிர் கேள்வி கேட்டார் தாமஸ்.“இது எல்லாம் நம்ப காலத்திலெ தாங்க இருந்திச்சி. இப்போ எல்லாம் யாருங்க இந்த ஜாதி மத வேறுபாட்டை எல்லாம் கவனிக்கிறாங்க.நாம பெரியவங்க எல்லாம் ரொம்ப இந்த ஜாதிக்கும்,மதத்து க்கும்,முக்கியத்துவம் கொடுத்து வந்தோம்ன்னா சின்னவங்க அதைப் பத்தி எல்லாம் கவலைப் படாம, அவங்க இஷ்டப் பட்டவங்களை கூட பெரியவ ங்களுக்குத் தொ¢யாம ஓடி போய் கல்யாணம் கட்டிக்க தயங்க மாட்டாங்க. அவங்களுக்கு காதல் தாங்க முக்கியமாப் படுங்க.இந்த வயசிலே இந்த ஜாதி மத பேதமே அவங்க கண்களுக்குத் தொ¢யாதேங்க” என்று சொன் னாள் ஜென்னி.தன் பையன் சந்தோஷம் தான் முக்கியம் என்று ஜென்னி சொன்னது தாமஸ் காதில் ¡£ங்காரம் பண்ணிக் கொண்டு இருந்தது.கொஞ்ச நேரம் ஆனதும்” சரி,ஜென்னி,டேவிட் நமக்கு ஒரே பையன் அவன் சந்தோஷம் தான் நமக்கு ரொம்ப முக்கியம்.இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன். நாம அவங்க வீட்டுக்கு போய் பொண்ணு கேக்கலாம்” என்று சொல்லி ஒத்துக் கொண்டார்.உடனே டேவிட் தன் அப்பாவையும்,அம்மாவையும் ‘தாங்க்’ பண்ணினான்.தன் பெட் ரூமுக்கு வந்த தாம்ஸ்” ஜென்னி,நீ காலையிலே எழுந்ததும் டேவிட் கிட்டே,நாம பொண்ணு பாத்து பிடிச்சப்புறம், அவங்க ஜாதி வழக்கப்படி கல்யாணத்தை முடிச்ச பிறகு,அந்த பொண்ணை நம்ம வழக்கப்படி அவ பேரை மாத்தி ‘சர்ச்சிலே’’ பாதர்’ முன்னாடி மோதிரம் மாத்தி கொள்ள சொல்லலாம்” என்று விடாமல் சொன் னார்.”சரிங்க,நான் டேவிட் கிட்ட வேலைக்கு போறதுக்கு முன்னாடி இதே சொல்றேங்க” என்று ஜென்னி சொன்ன பிறகு தான் தாம்ஸ் நிம்மதியாக துங்க ஆரம்பித்தார்.

காலையில் டேவிட் எழுந்து பல் தேய்த்து காபி குடிக்க வந்த போது ஜென்னி அவனுக்கு காபியை குடுத்துக் கொண்டே “டேவிட்,நீ இன்னைக்கு அந்த பொண்ணு ராணியை பார்த்ததும் அவ கிட்டே’ராணி,எங்க அவங்க அம்மா நம்ம கல்யாணத்துக்கு ஒத்து கிட்டாங்க.ஆனா கூடவே அவங் களும் ஒரு ‘கண்டிஷன்’ போட்டு இருக்காங்க.அதன் படி,உங்க சித்தி,அம்மா அப்பா மூனு பேரும் நம்ம கல்யாணத்தை உங்க ஜாதி வழக்கப் படி ஒரு கோவிலிலே செஞ்ச பிறகு, எங்க அம்மா, அப்பா, உன் பேரை ஒரு கிருஸ்தவப் பொண்ணு பெயரா மாத்தி விட்டு,அப்புறமா நம்ம கல்யாணத்தை எங்க ஜாதி வழக்கப்படி ஒரு ‘சர்ச்சில்’ செய்ய ஆசைப் படறாங்க’ன்னு சொல்லு” என்று சொன்னாள். ”சரிம் மா, நான் ராணீ கிட்ட இந்த ‘கண்டிஷனை’ சொல்றேன்ம்மா” என்று சொல்லி விட்டு வேலைக்குக் கிள்ம்பினான்.‘சூப்பர் மார்கெட்டில்’ ராணியை சந்தித்த டேவிட் அவளை தனியாக அழைத்து போய் ரகசியமா ”ராணி,நான் என் வீட்டிலெ நம்ம காதலைப் பத்தி சொன்னேன்.ரொம்ப நேரம் கழிச்சு ஒரு வழியாக ஒத்து கிட்டாங்க.ஆனா கூடவே ஒரு ‘கண்டிஷனை’ போட்டு இருக்காங்க ராணி.அதன் படி எல்லோருக்கும் மனசு ஒத்துப் போனா, உங்க சித்தி,அம்மா அப்பா மூனு பேரும் நம்ம கல்யாணத்தை உங்க ஜாதி வழக்கப் படி ஒரு கோவிலி லே செஞ்ச பிறகு,உன்னை எங்க வீட்டு க்கு இட்டு கிட்டு வந்து,எங்க அம்மாவும் அப்பாவும்,உன் பேரை ஒரு கிருஸ்தவ பொண்ணு பேரா மாத்தி விட்டு, அப்புறமா மறுபடியும் நம்ம கல்யாணத்தை எங்க ஜாதி வழக்கப் படி ஒரு ‘சர்ச்சில்’ செய்ய ஆசைப் படறாங்க.அதனால்லே எப்படியாவது நீ உங்க சித்தி,அம்மா, அப்பா மூனு பேரும் இந்த ‘கண்டிஷனு க்கு’ ஒத்து கொள்ள சொல்லு ராணி” என்று ராணீயை கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான் டேவிட்.உடனே ராணீ “கவலைப் படாதே டேவிட்.எல்லாம் நல்ல படியா முடிஞ்சு நாம கல்யாணம் கட்டி கிட்டு சந்தோஷமா இருந்து வரலாம்” என்று சொல்லி விட்டு ராணீ தன் வேலையை கவனிக்கப் போனாள்.

வீட்டில் அம்மா,ஆயா,சித்தி, மூவரும் ஏதோ சி¡¢ச்சு பேசி கிட்டு இருந்தார்கள்.அவர்களை பார்த்ததும் ராணிக்கு சந்தோஷமாக இருந்தது.‘இது தான் நல்ல சந்தர்ப்பம்.மெல்ல நாம சாப்பிட்டு விட்டு அம்மா, ஆயா, சித்தி, கிட்டே டேவிட் அப்பா சொன்ன ‘கண்டிஷனை’ சொல்லி அவங்க சம்ம தத்தை வாங்கணும்’ என்று நினைத்து தன் செருப்பை கழட்டி வைத்து விட்டு தன் கை கால்களைக் கழுவிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள் ராணீ.ராணீ சாப்பிட்டு முடிந்ததும் “அம்மா,சித்தி நான் டேவிட் கிட்டேநீங்க சொன்னதை சொன்னேம்மா.டேவிட் அம்மா அப்பா நம்ம வீட்டுக்கு வந்து பொண்ணு கேக்க சம்மதம் சொல்லி இருக்காங்களாம்.ஆனா கூடவே அவங்க பெரியவங்க எல்லாம் கூடி பேசின பிறகு எல்லாருக்கும் பிடிச்சு இருந்தா எங்க கல்யாணத்தை நம்ப இந்து முறைப்படி செஞ்ச பிறகு,நான் அவங்க வீட்டுக்குப் போனவுடன் அவங்க என் பேரை ஒரு கிருஸ்தவப் பெண் பேரா மாத்தி, அவங்க கிருஸ்தவ வழக்கப் படி என்னை டேவிடுட்ன் மாதா கோவிலில் கல்யாணம் செய்யணும்ன்னு ஆசை படறாங்களாம் இந்த ‘கண்டிஷனுக்கு’ நாம ஒத்துக் கொள்ளுவாங்களான்னு கேட்டு வரச் சொன்னாரும்மா” என்று பயந்தபடி கேட்டாள்.“என்ன செந்தாமு,அவங்க சொன்ன கண்டிஷனுக்கு நாம் எப்படி ஒத்துக் கொள்ள முடியும் சொல்லு.நீயும் அப்படித் தானே நினைக்கிறே” என்று செந்தாமரையைப் பார்த்து கேட்டாள் தேவி.செந்தாமரை நிதானமாக “அம்மா,.நீ ஒன்னை நல்லா கவனிக்கணும்மா.அந்தப் பையன் அம்மா,அப்பா, நம்ம ராணீயைப் பொண்னு பாக்க வரும் போது இந்த ‘கண்டிஷனை’ சொன்னா நாம என்ன செஞ்சு இருபோம்ம்மா.அதை விட அவங்க பொண்ணு பார்க்க வர முன்னாடியே சொல்லி இருக்காங்க.நீ சொன்னா மாதி¡¢ நாம பதில் சொல்லி விட்டா என்ன ஆகும்ன்னு யோஜனைப் பண்ணீயாம்மா.ராணீ கல்யாணம் நின்னுப் போவும்.அப்போ அப்பா ஆசையை நாம எப்படிம்மா நிறைவேத்தப் போறோ¡ம்மா.ராணீ சொன்னா மாதி¡¢ ஒரு நாள் அவ இந்த வீட்டை விட்டு ஓடிப் போய் அந்தக் கிருஸ்தவப் பையனை கல்யாணம் கட்டிக்கப் போறா. ஆனா அப்படி அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் கட்டி கிட்டா,நாம எப்படிம்மா அப்பா ஆசையை எப்படிம்மா நிறை வேத்த போறோம்..அவர் சொன்னதை மறந்துட்டாயாமா” என்று அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.தேவி உடனே “செந்தாமு,நீ என்ன அவங்க சொன்ன ‘கண் டிஷனை’ நாம ஏத்துக் கிடணூம்ன்னு சொல்றயா”என்று கோவமாகக் கேட்டாள்.செந்தாமரை நிதான மாக ”அம்மா ராணிக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னா,அதுக்கு அப்புறமா அவ அந்த ‘குடும்ப சொத்து. ராணீக்கு கல்யாணம் ஆன பிறகு நாம அவங்க வீட்டுக்குப் போய் ‘ராணீயை இப்படி வச்சுக்குங்க, அப்படி வச்சுக்குங்க,ராணிக்கு இதை குடுங்க,அதை குடுங்கன்னு’ எல்லாம் சொல்ல முடியாதும்மா. நாம பேசாம அவங்க சொன்ன ‘கண்டிஷனுக்கு’ ஒத்துக் கிட்டு ராணி கல்யாணத்தை செஞ்சி முடிச்சி அப்பா ஆசையையும் நிறை வேத்தறது தாம்மா நல்லது.நாம அவங்க சொல்ற ‘கண்டிஷனுக்கு’ பேசாம ஒத்துக்கலாம்மா” என்று அம்மாவின் கையைப் பிடித்து சொன்னாள் செந்தாமரை.

கொஞ்ச நேரம் ஆனதும் செந்தாமரை ராணீயைப் பார்த்து “ராணீ,நீ அந்தப் பையன் கிட்டே அவங்க சொன்ன ‘கண்டிஷனுக்கு’ நாங்க ஒத்துக்குகிறோம்ன்னு சொல்லிடு. அவங்களை உடனே பொண்ணு பார்க்க வரச் சொல்லு ராணீ” என்று சொல்லி விட்டு தன் வேலையைக் கவனிக்கப் போனாள் செந்தாமரை.“ரொம்ப தாங்க்ஸ் சித்தி” என்று சொல்லி தன் சித்தியின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னாள். ராணீ மனது இப்போது ரொம்ப மிகவும் சந்தோஷப் பட்டது.’ஒரு வழியாக செந்தாமரை அம்மாவின் மனசை மெல்ல மாத்தி ராணீ கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சாளே’ன்னு நினைத்து மனதுக்குள் சந்தோஷப் பட்டாள் கமலா.அன்று இரவு கமாலாவும் ராணீயும் நிம்மதியாகத் தூங்கினார்கள்.அடுத்த நாள் ‘சூப்ப்ர் மார்கெட்டில்’ டேவிடைப் பார்த்ததும் சந்தோஷத்துடன் “டேவிட், எங்க அம்மாவும், ஆயாவும், சித்தியும்,உங்க வீட்டிலெ சொன்ன ‘கண்டிஷனுக்கு’ ஒத்துகிட்டாங்க. உங்க வீட்டிலெ இதை சொல்லி,நீ அவங்களை எங்க வீட்டுக்கு உடனே வந்து என்னை பொண்ணு பார்க்க சொல்லுங்க” என்று சொன்னவுடன் டேவிட் ராணீயின் கைகளைப் பிடித்துக் கொண்டு “ரொம்ப ‘தாங்க்ஸ்’ ராணீ.நான் இன்னைகே எங்க வீட்டிலெ இந்த சந்தோஷ சமாசாரத்தை சொல்லி என் அம்மா அப்பாவை உடனே உங்க வீட்டுக்கு வந்து பொண்ணுப் பார்த்து விட்டு மத்த சமாசாரங் களை எல்லாம் பேசி முடிக்க சொல்றேன் ராணீ” என்று சந்தோஷத்துடன் சொன்னான் டேவிட். அன்று இரவே டேவிட் ‘சூப்பர் மார்கெட்’ வேலையை விட்டு தன் வீட்டுக்கு வந்து ராணீ சொன்னதை தன் அம்மாவிடமும் அப்பாவிடமும் சந்தோஷத்துடன் சொன்னான்.ஜென்னியும் தாமஸ¤ம் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

“ரொம்ப சந்தோஷமா இருக்கு டேவிட்.இந்த சண்டே சாயங்காலம் ஒரு நாலு மணிக்கா, நாம அவங்க வீட்டுக்குப் போய் அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டு வரலாம் நீ அந்தப் பெண்ணை பார்த்து நாம பொண்ணு பாக்க வர சங்கதியை அவங்க வீட்டிலே சொல்லி விடச் சொல்லு” என்று ஜென்னி சொன்னாள்.அடுத்த நாளே டேவிட் சூப்பர் மார் கெட்டில்’ ராணீயை சந்தித்து “ராணீ,என் அம்மா அப்பா உங்க வீட்டுக்கு ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் நாலு மணி வாக்கில் உன்னை ‘பொண்ணு பாக்க’ வரோம்.உங்க வீட்டிலே சொல்லி நீ எல்லோரையும் தயாரா இருக்க சொல்லு” என்று சந்தோஷத்துடன் சொன்னான்.ராணீ மிகவும் சந் தோஷப் பட்டு “ரொம்ப ‘தாங்க்ஸ்’ டேவிட்.நான் எங்க வீட்டிலெ சொல்லி,அவங்களே தயாரா இருக்கச் சொல்றேன்.நீங்க உங்க அம்மா அப்பாவை இட்டுக் கிட்டு தவ றாம வாங்க” என்று சொல்லி விட்டு தன் வேலையை கவனிக்கப் போனாள்.டேவிட் தன் வேலையை சந் தோஷமாக செய்து வந்தான்.அதே போல் ராணீசந்தோஷமாக வேலை செய்து வந்தாள்.அன்று இரவு ராணீ வீட்டுக்கு வந்ததும் வராத ததும் சித்தியைப் பார்த்து ”சித்தி, டேவிட் அப்பா வும்,அம்மாவும், இந்த ஞாயித்துக் கிழமை சாயங் காலம் ஒரு நாலு மணிக்கா நம்ம வீட்டுக்கு வருவதா இருக்காங்களாம்.இந்த சமாசாரத்தை டேவிட் என் கிட்டே காத்தாலே சொல்லி வீட்டிலே சொல்ல சொன்னாரு”என்று சந்தோஷத்துடன் சொன்னாள் “சரி,ராணீஅவங்க வந்து உன்னை பொண்ணு பாக்கட்டும்.நாங்க பெரியவங்க மீதீ விஷயங்களை எல்லாம் பேசி கல்யாணத்தை முடிச்சு வக்கிறோம்.நீ சந்தோஷமா இருந்து வா ராணீ” என்று சொன்னாள் செந்தாமரை.

அன்று ஞாயிற்றுக் கிழமை. கமலா மூனு மணிக்கு டேவிட் வீட்டிலெ இருந்து வரவங்களுக்கு பலகாரம் செய்ய ஆரம்பித்தாள். பலகாரம் செஞ்சு முடிச்சதும்ம் கமலா ராணீக்கு ஒரு புது புடவையை அழகாகக் கட்டி அலங்காரம் பண்ணி தலை நிறைய மல்லிகைப் பூவையும் வைத்து, அவளுக்கு நகை எல்லாம் போட்டு அலங்கா¢த்தாள்.பிறகு அவளும் ஒரு நல்ல புடவையைக் கட்டிக் கொண்டு தன்னை தயார் பண்ணிக் கொண்டாள்.ஜென்னியும்,தாமஸ¤ம், டேவிடும் அவர்கள் வீட்டை விட்டு கிளம்பி ஒரு ‘கால் டாக்ஸி’ வைத்துக் கொண்டு ராணீ வீட்டுக்கு வந்தார்கள்.சரியாக நாலு மணிக்கு ‘காலிங்க் பெல்’ அடித்தது. செந் தாமரை எழுந்து போய் வாசல் கதவைத் திறந்து வந்தவர்களுக்கு வணக்கம் சொல்லி அவர்களை உள் ளே வரவேற்று அவர்களை சோபாவில் உட்கார சொன்னார்கள்.அவர்கள் சோபாவில் உட்காட்ந்துக் கொண்ட பிறகு செந்தாமரை அவர்களைப் பார்த்து “நான் தான் ராணீக்கு சித்தி.என் பேர் செந்தா மரை.நான் நுங்கம்பாக்கம் உயர்நிலைப் பள்ளி கூடத்தில் கணக்கு வாத்தியாரா வேலைப் பாத்து வறே ங்க.இது என் அம்மா தேவி.இது ராணீயின் அம்மா கமலா.இவர் என் அப்பா காளி.இப்ப சில மாசமா உடம்பு சரி இல்லாம படுத்து இருக்காருங்க” என்று தன் குடும்பத்தில் இருந்த வர்களை அறிமுகம் செய்து வைத்தாள்.செந்தாமரை சொல்லி முடித்ததும் ஜென்னி “அப்படியாங்க. நீங்க பாக்க ரொம்ப அழகா இருக்கீங்க.உங்களுக்கு கல்யாணம் ஆயிடிச்சாங்க.நீங்க என்ன படிச்சு இருக்கீங்க” என்று கேட்டாள் ஜென்னி.உடனே செந்தாமரை “இல்லிங்க,நான் கல்யாணம் பண்ணிக் கலீங்க.நான் எட்டாவதிலே பள்ளிகூடத்திலே முதலாவதாக ‘பாஸ்’ பண்ணினத்தைப் பார்த்து, எங்க கணக்கு வாத்தியார் என்னை அவர் குடும்ப நன்பர் ஒருவா¢டம் சிபா¡¢சு பண்ணி நுங்கம்பாக்கம் பள்ளி க்கூடத்திலெ அவர் செலவிலே என்னை,ஒன்பதாவது,பத்தாவது படிக்க வைத்தார்.நான் ரெண்டு ‘க்லாசிலும்’ சென்னை மாநிலத்திலெயே முதலாவதாக ‘பாஸ்’ பண்ணினேன்.என் கணக்கு அறிவை பார்த்து சந்தோஷப் பட்ட ஒரு நல்ல மனிதர் என்னை மதுரைக்கு அழைச்சுப் போய் அவர் செலவில் என்னை பதினோறாவது,பன்னாடவது படிக்க வச்சார்.இந்த ரெண்டு ‘க்ளாசிலும்’நான் சென்னை மாநிலத்திலேயே முதலாவதாக ‘பாஸ்’ பண்ணினேன்.இதைக் கேள்விப் பட்ட சுந்தரம் நிறுவனத்தார் எனக்கு ‘ஸ்காலர்ஷிப்’ குடுத்து,என்னை BSc Maths,M.Sc, Maths படிக்க வைத்தார்கள்.நான் இந்த ரெண்டிலும் சென்னை மாநிலத்திலேயே முதலாவதாக ‘பாஸ்’ பண்ணினேன்.அந்த நிறுவனம் எனக்கு அவங்க நிறுவனத்திலே ஒரு பெரிய ஆபீஸர் வேலை ‘ஆபர்’ பண்ணினாங்க.நான் அந்த வேலை யை எடுத்துக்காம, நான் படித்த நுங்கம்பாக்கம் பள்ளிகூடத்தி லே ஒரு கணக்கு வாத்தியார் வேலை யை தேடிகிட்டு,என் அம்மா,அப்பா,அக்கா அவங்க பொண்ணு ங்களை என் கூட இட்டுகிட்டு வந்து, அவங்க எல்லாருக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு குடுத்து விட்டு,நிறைய ஏழைக் குழந்தை களுக்கு இலவசமா கணக்கு சொல்லி குடுத்து வறேனுங்க.இந்த ரெண்டும் தாங்க என் வாழ்க்கையின் லட்சியங்க” என்று சொல்லி நிறுத்தினாள். ”அப்படியாங்க,கேகக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. நீங்க உண்மையிலேயே ரொம்ப ‘க்றெட்டுங்க” என்று சொன்னார் தாம்ஸ்.ஆச்சரியப் பட்டுக் கொண்டு இருந்தாள் ஜென்னி.

கமலா ராணி யின் கைகளில் ஐஞ்சு பலகாரத் தட்டுகளில் தான் செய்த பலகாரத்தையும், கடையில் இருந்து வாங்கி வந்த இருந்த லட்டுவையும் ஒரு ‘ட்ரேயில்’ வைத்து வந்தவர்களுக்கும் சித்திக்கும், ஆயாவுக்கும் கொடுக்க சொன்னாள்.ராணியும் மெல்ல அன்ன நடை போட்டுக் கொண்டு தான் கொண்டு வந்த பலகாரத் தட்டுக ளை ஜென்னி,தாமஸ், டேவிட், மூனு பேர் கிட்டேயும் பவ் யமாக கொடுத்து விட்டு,மீதி ரெண்டு தட்டுகளில் ஒன்றை சித்திக்கும், மற்றொன்றை ஆயாவு க்கும் கொடுத்து விட்டு எதிரே போட்டு இருந்த ஒரு சோ¢ல் மெல்ல உட்கார்ந்துக் கொண்டாள். எல்லோரும் பலகாரத்தையும் இனிப்பையும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.அவர்கள் சாப்பிட்டு முடிஞ்சதும் ராணி எழுந்து போய் அவர்கள் இடத்தில் இருந்து காலித் தட்டுகளை வாங்கிக்கொண்டு சமையல் ரூமில் வைத்து விட்டு,மறுபடியும் வந்து உட்கார்ந்துக் கொண்டாள்.செந்தாமரை ”இப்ப ராணீ உடம்பிலெ ஐஞ்சு சவரன் நகை போட்டு இருக்கோமுங்க.நாங்க அவளுக்கு இன்னும் பத்து சவரனுக்கு நகைப் போட்டு அவ கல்யாணத்தை வட பழனி கோவிலிலே செஞ்சு முடிச்சு,பக்கத்திலே இருக்கிற சரவண பவனில் கல்யாண சாப்பாட்டை போடறோமுங்க.அப்புறமா நீங்க ராணீயை உங்க வீட்டுக்கு இட்டுக் கிட்டுப் போய் நீங்க ஆசைப் பட்டா மாதி¡¢ அவ பேரை ஒரு கிருஸ்தவப் பேரா மாத்தி,உங்க ஜாதி வழ க்கப் படி அவங்க கல்யாணத்தை செஞ்சு முடிச்சு அவங்களை சந்தோஷமா வாழ வையுங்க.ஆசைப் பட்ட அந்த ரெண்டு இளம் உள்ளங்களும் சந்தோஷமா இருந்து வரட்டுங்க”என்று சொன்னாள். அவள் கண்களில் நீர் துளித்தது.ஜென்னியும் தாமஸ¤ம் ”ரொம்ப சந்தோஷங்க. எங்களுக்கும் காதலி ச்ச அந்த ரெண்டு உள்ளங்களும் ஒன்னா சேந்து வாழணும்ன்னு தாங்க ரொம்பஆசை” என்று ‘கோர ஸாக’ச் சொன்னார்கள்.உடனே செந்தாமரை “ரொம்ப சந்தோஷங்க.நாங்க ராணீ நகை எல்லாம் வாங்கிப் போட்டு அவ கல்யாணத் தேதியையும் ராணீ கிட்டேசொல்றோமுங்க.நீங்க மூனு பேரும் உங்க உறவுக்காரங்களையும், ‘ப்ரெண்ட்ஸ்களையும்’ அழைச்சுக் கிட்டு வடபழனி கோவிலுக்கு வந்து ராணீ டேவிட் கல்யாணத்தை முடிச்சு குடுங்க” என்று தன் கையை கூப்பி கேட்டுக் கொண்டாள்.

உடனே ஜென்னியும் தாமஸ¤ம்” நிச்சியமாங்க.அவசியம் நாங்க எல்லோரும் வடபழனி கோவிலுக்கு வந்து டேவிட் ராணீ£ கல்யாணத்தை முடிச்சு விட்டு,சரவண பவனில் கல்யாண சாப்பாட் டை சாப்பிட்டு விட்டு, ராணீ எங்க கூட அழைச்சிக் கிட்டுப் போறோமுங்க”என்று சொல்லி எழுந்துக் கொண்டார்கள்.பிறகு கமலாவும் செந்தாமரையும் அவர்கள் மூனு பேர் கூட வாசலுக்கு வந்து அவர்க ளை ‘கால் டாக்ஸி யில்’ ஏற்றி வழி அனுப்பி விட்டு வந்தார்கள்.வீட்டுக்குள்ளே வந்த செந்தாமரை ராணீயைப் பார்த்து” இப்ப சந்தோஷம் தானே ராணீ” என்று சொல்லி அவள் கையைப் பிடித்து குலுக்கி சொன்னாள். ராணீயும் உடனே செந்தாமரையின் காலைத் தொட்டு தன் கண்களில் ஒத்திக் கொண்டு “சித்தி, உங்க ளுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே எனக்குப் பு¡¢யலே.குடிசையிலெ வாழ்ந்து வந்த என்னை இந்த மாதி¡¢ ஒரு நல்ல வீட்டுக்கு இட்டுக் கிட்டு வந்து படிக்க வச்சு,நான் ஆசைப் பட்டவரு க்கே எனக்கு பத்து சவரனுக்கு நகையும் போட்டு,எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு சொல்லி இருக்கீங்க.நீங்க எனக்கு ஒரு சித்தி மட்டும் இல்லே.நீங்க என்னை வாழ வைத்த தெய்வங்க. என்று சொல்லி செந்தாமரையின் கைகளைப் பிடித்து கண்ணீர் மல்க சொன்னாள்.செந்தாமரையின் கைகள் மேலே ராணியின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகள் விழுந்தது. செந்தாமரை அந்த கண்ணீர் துளிகளைத் துடைத்துக் கொண்டு “ராணீ நீ என்னை தெய்வம்ன்னு எல்லாம் சொல்லி புகழாதே. நமக்கு எல்லோருக்கும் தெய்வம் மேலே இருக்காரு ராணீ”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது கமலா செந்தாமரை கைகளைப் பிடித்துக் கொண்டு “செந்தாமு, ராணீ சொன்னது ரொம்ப சரி.நான் புருஷன் இல்லாம ரெண்டு பொட்டை புள்ளைங்களை வச்சுகிட்டு, ஒரு வேளை சோத்துக்கு கஷ்டப் பட்டு வந்து வந்துக்கிட்டு இருந்தேன்.அப்போ நீ அம்மா குடிசைக்கு வந்து என்னையும் என் ரெண்டு பொட்டை புள்ளைங்களையும் இந்த நல்ல வீட்டுக்கு இட்டுக் கிட்டு வந்து,இந்த நல்ல வாழக்கையை கொடுத்து இருக்கே.ராணீ வேலைக்குப் போய் இந்த வீட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காம இருந்தும்,நீ இப்ப ராணீக்கு பத்து சவரன் நகையைப் போட்டு,அவ ஆசைப் பட்டவருடன் அவளுக்கு கல்லாணமும் பண்ணி வைக்க ஒத்து கிட்டு இருக்கே.நீ தான் உண்மை யிலே எங்களை வாழவச்ச தெய்வம் தான் செந்தாமு” என்று சொல்லி கண்களில் கண்ணீர் விட்டாள். செந்தாமரை கம்லா கையைப் பிடித்துக் கொண்டு ”அழாதேக்கா,நான் யாரோ இல்லெக்கா .உன் கூட பிறந்தவ. ராணீ உனக்கு எப்படி ஒரு பொண்ணோ அப்படித் தான் எனக்கும் அவ ஒரு பொண்ணு. நான் என் பொண்ணுக்கு அவ ஆசை பட்டவரோடு கல்யாணம் பண்ண யோஜனைப் பண்ணுவேனா சொல்லு” என்று பதில் சொன்னதும் கமலா ”செந்தாமு,நீ நிறைய படிப்பு படிச்சவ.உன் கிட்டே என் னால் பேசி ஜெயிக்க முடியாது.இருந்தாலும் நீ எங்களுக்கு ஒரு தெய்வம் தான்.நீ என்ன சொன்னா லும் நான் அதை ஒத்துக்க மாட்டேன்” என்று சொலல்¢ செந்தமரையின் கைகளைப் பிடித்து சொன் னாள் கமலா.தன் ரெண்டு பெண்களும் பேசி கொண்டு இருந்ததைப் பார்த்து சந்தோஷப் பட்டார்காள் தேவியும் ராஜ்ஜும்.

அடுத்த நாளில் இருந்து செந்தாமரை தனக்கு நேரம் கிடைக்கும் போது கமலாவையும், தேவி யையும்,ராணீயையும் நகைக் கடைக்கு அழைத்துக் கொண்டு போய் அவளுக்கு பிடிச்ச ‘டிஸைனில்’ பத்து சவரனுக்கு நகைகள் வாங்கி கொடுத்தாள்.சம்பளம் வந்ததும் எல்லோருக்கும் ராணீ கல்யாண த்துக்கு ஜவுளி எடுத்தாள் செந்தாமரை.அடுத்து ராணீக்கு கல்யாண புடவை,’ப்லவுஸ்’, தாலி, மாப் பிள்ளை பையனுக்கு பட்டு வேஷ்டி, நல்ல ‘ஷர்ட்டும்’ வாங்கினாள். எல்லாவற்றையும் பார்த்து தேவி யும்,கமலாவும்,ராணீயும் காளியும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.ராஜ் “செந்தாமு,நீ மட்டும் அந்த கம்பனியிலே வேலை வாங்கிக் கொண்டு மதுரையிலேயே உன் வழியைப் பாத்துக் கிட்டு போய் இருந் தேன்னா,எங்களுக்கு இந்த நல்ல வாழக்கையோ,ராணிக்கு இப்படி ஆடம்பரமா ஒரு கல்லாணமோ கிடைச்சே இருக்காதும்மா.நீ உன் வாழக்கையிலே ஒரு கல்லாணத்தையும் பண்ணிக்காம,ஒரு சுகத் தையும் தேடிக்காம எங்களுக்காகவே வாழ்ந்து கிட்டு இருக்கேம்மா.உன்னை எங்க பெண்ணாப் பெத்த துக்கு நானும் தேவியும் ரொம்ப பெருமைப் படறேம்மா.கமலாவும் ராணீயும் சொன்னா மாதி¡¢ நீ இந்த குடுமபத்துக்கு ஒரு தெய்வம் தாம்மா” என்று சொல்லி கண்ணீர் விட்டார்.செந்தாமரை உடனே தன் அப்பா கையைப் பிடித்துக் கொண்டு “அப்பா,நீங்க அழாதீங்கப்பா.நீங்க அழக்கூடாதுப்பா.நீங்க என் னை தெய்வம்ன்னு எல்லாம் சொல்லாதீங்க. என்னைக்கும் நான் உங்க செந்தாமுப்பா,உங்க பொண் ணுப்பா” என்று சொல்லி அப்பாவின் கண்களைத் துடைத்தாள்.தேவியும் தன் கணகளில் வழிந்த கன்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

அடுத்த நாளே செந்தாமரை வடபழனி கோவிலுக்குப் போய் அங்கு இருந்த குருக்களைப் பார்த்து ராணீ டேவிட் கல்யாணத்துக்கு நாள் குறித்து வாங்கிக் கொ ண்டு கோவில் ஆபீஸில் அந்த தேதியில் கல்யாணம் பணண பணம் கட்டி ரசீது வாங்கிக் கொ ண்டு விட்டு அப்படியே சரவண பவனுக்குப் போய் ஒரு ஐம்பது பேருக்கு கல்யாண சாப்பாட்டுக்கு ‘அடவா ன்ஸ்’ பணமும் கட்டி விட்டு வந்தாள்.வீட்டு வந்து அம்மாவிடமும், அக்காவிடமும், அப்பா விடமும் சந்தோஷத்துடன் தான் பண்ணீ இருக்கும் கல்யாண ஏற்பாடுகளை எல்லாம் விவரமாக சொன்னாள். ராணீ வேலை விட்டு வீட்டுக்கு வந்ததும் செந்தாமரை ராணியை பார்த்து ‘ராணீ உங்க கல்யாணத்துக்கு தேதி குறிச்சி வந்து,அந்த நாள்ளே நான் வட பழனி கோவிலிலே கல்யாணம் பண்ண நான் பணமும் கட்டி ரசீது வாங்கி வந்து இருக்கேன் இந்த ஞாயித்துக் கிழமை சாயங்காலம் ஒரு நாலு மணிக்கா நீ,நான்,அம்மா,ஆயா எல்லோரும் டேவிட் வீட்டுக்குப் போய் இந்த சந்தோஷ சமாசாரத்தை சொல்லி, அவங்களை கல்யாணத்துக்கு அழைச்சு விட்டு வரலாம்” என்று சொன்னாள்.

ஞாயித்துக் கிழமை சாயங்காலம் ஒரு மூனு மணிக்கா செந்தாமரை ராணியையும்,அக்கா வையும்,அம்மாவையும்,அழைத்துக் கொண்டு டேவிட் வீட்டுக்குப் போய் டேவிடுக்கு வாங்கின பட்டு வேஷ்டி,’ஷர்ட்’ எல்லாவற்றையும் கொடுத்து விட்டு,டேவிட் அம்மா அப்பாவைப் பார்த்து தான் கல்யா ணத்திற்கு செய்து இருக்கும் ஏற்பாட்டை சொ¡ல்லி விட்டு,அவர்களை உறவினர்களையும், நண்பர் களையும் அழைத்துக் கொண்டு வட பழனி கோவிலுக்கு வந்து கல்யாணத்தை நடத்திக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டாள். அவர்களும் சந்தோஷப் பட்டு “நாங்க நிச்சியமா எங்க உறவுக்காரங்களை யும் ‘ப்ரென்ட்ஸ்களையும்’ அழைச்சுக் கிட்டு வட பழனி கோவிலுக்கு வந்து கல்யாணத்தை நடத்திக் குடுக்குகிறோம்.நீங்க நிம்மதியா மத்த கல்யாண வேலைங்களை எல்லாம் கவனிச்சு வாங்க” என்று சொல்லி விட்டு வந்தவர்களுக்கு பலகாரமும் ‘காபியும்’ கொடுதார்கள்.செந்தாமரையும், கமலாவும், தேவியும் அவர்கள் கொடுத்த பலகாரத்தை சாப்பிட்டு விட்டு,காபியையும் குடித்து விட்டு,அவர்க ளுக்கு தங்கள் மனமார்ந்த நன்றியையும் சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *