சுதாராஜ்

 

விபரக்குறிப்பு

இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்
புனைபெயர்: சுதாராஜ்
கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை.

தொடர்புகளுக்கு:
முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)
சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,
189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,
கொழும்பு 13, இலங்கை.

S.Rajasingham (Sutharaj)
Seacrest Appartment,
189/1, 6/1, Mahavithyalaya Mawatha,
Colombo 13, Srilanka.

தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)
தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா)

E mail: rajsiva50@gmail.com
rajasinghamsivasamy@yahoo.com

படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்)

சிறுகதைத் தொகுப்பு

  1. பலாத்காரம் – தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977
  2. கொடுத்தல் – சிரித்திரன் பிரசுரம் -1983
    (மறுபதிப்பு – மணிமேகலைப்பிரசுரம், சென்னை-2004)
  3. ஒரு நாளில் மறைந்த இரு மாலைப்பொழுதுகள் – மல்லிகைப்பந்தல் வெளியீடு -1989
    (மறுபதிப்பு – மணிமேகலைப்பிரசுரம், சென்னை-2004)
  4. தெரியாத பக்கங்கள் – மல்லிகைப்பந்தல் வெளியீடு -1997
    (மறுபதிப்பு – மணிமேகலைப்பிரசுரம், சென்னை-2005)
  5. சுதாராஜின் சிறுகதைகள் – தேனுகா பதிப்பக வெளியீடு -2000
  6. காற்றோடு போதல் – எம். டீ. குணசேன வெளியீடு -2002
    (மறுபதிப்பு – மணிமேகலைப்பிரசுரம், சென்னை-2005)
  7. மனித தரிசனங்கள் – மணிமேகலைப்பிரசுரம், சென்னை-2006
  8. மனைவி மகாத்மியம் – தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடு -2009
  9. உயிர்க்கசிவு (60 சிறுகதைகள் கொண்ட பெருந்தொகுப்பு)
    – நியூ சென்சரி புக் ஹவுஸ் வெளியீடு -சென்னை -2010

நாவல்

  1. இளமைக் கோலங்கள் – வீரகேசரிப் பிரசுரம் -1981
    (மறுபதிப்பு – மணிமேகலைப்பிரசுரம், சென்னை-2006)

சிறுவர் இலக்கியம்

  1. காட்டில் வாழும் கரடி நாட்டுக்கு வந்த கதை – தேனுகா பதிப்பக வெளியீடு -2001
    (அனுசரணை: இலங்கை தேசிய நூல் அபிவிருத்திச் சபை)
    (மறுபதிப்பு – மணிமேகலைப்பிரசுரம், சென்னை-2005)
    காட்டிலிருந்து நாட்டுக்கு வந்த கரடி – படப்பதிப்பு – இலக்கியன் வெளியீட்டகம் -2010
  2. பறக்கும் குடை – தேனுகா பதிப்பக வெளியீடு -2002
    (அனுசரணை: இலங்கை தேசிய நூல் அபிவிருத்திச் சபை)
  3. கோழி அம்மாவும் மயில்குஞ்சுகளும் – தேனுகா பதிப்பக வெளியீடு -2003
    (அனுசரணை: இலங்கை தேசிய நூல் அபிவிருத்திச் சபை)
  4. சுட்டிப்பையனும் கெட்டிக்காரக் குட்டிப்பூனையும்.
    -இலங்கை தேசிய கல்வி நிறுவன வெளியீடு -2003
    (அனுசரனை: பிருத்தானிய கவுன்சில் & யுனிசெஃப்)
  5. குட்டிவீரர்கள் -றூம் ரு றீட் (Room to Read) வெளியீடு -2009
    (மொழிபெயர்ப்பு; சிங்களத்திலிருந்து ஆங்கில மூலம் தமிழுக்கு)

தொகுப்பு நூல்கள்

  1. மகுடி (சிரித்திரன் சுந்தர் பதில்கள்) – தேனுகா பதிப்பக வெளியீடு -2004
  2. இலங்கை நாட்டுப்புறப் பாடல்கள் – மணிமேகலைப்பிரசுரம், சென்னை-2005

சிங்கள மொழிபெயர்ப்பு நூல்கள்

  1. காட்ட தொஸ் பவறமுத (சிறுகதைத் தொகுப்பு) – மல்லிகைப்பந்தல் வெளியீடு -1999
  2. நொபெனென பெதி (சிறுகதைத் தொகுப்பு) – கர்துறூ பிறகாசயகி -2006
  3. உத்தமாவி (சிறுகதைத் தொகுப்பு) – தொதென்ன பிரகாசன -2007
  4. கவிதாகே மல்வத்த (சிறுவர் கதை) – தொதென்ன பிரகாசன -2006
  5. நகரயட ஆ வலஸ்ஹாமி (சிறுவர் கதை) – தொதென்ன பிரகாசன -2006

கதைகள் சேர்க்கப்பட்டுள்ள ஏனைய நூல்கள்

  1. A Lankan Mosaic (Translations of Sinhala & Tamil short stories, Edited by : Ashely Halpe, M.A.Nuhman &Rajani Obeyesekara)
  2. மேற்குறிப்பிட்ட நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் -‘அசல்வசி அப்பி’
  3. ‘கலாவ லஸ்ஸனய’ – தமிழ் சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல், இலங்கை நூல் அபிவிருத்திச் சபையினால் வெளியிடப்பட்டது.
  4. Smiles from Srilanka (தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளில் வெளியான சிறுவர்கதை நூல்) யப்பானிய Surangani voluntary services அனுசரனையில் வெளியிடப்பட்டது.

விருதுகள்

  • கொடுத்தல், (1981- 1988) எட்டு ஆண்டு காலப்பகுதியில் வெளியான சிறந்த சிறுகதைத்தொகுப்புக்கான இலங்கை அரச சாகித்திய விருது.
  • இளமைக் கோலங்கள், நாவலுக்கு தமிழ்க் கதைஞர் வட்டம் வழங்கிய தகவம் விருது 1981.
  • தெரியாத பக்கங்கள்@ சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விபவி கலாசார மையம் வழங்கிய விருது 1997.
  • நொபெனென பெதி, சிறந்த சிங்கள மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்கான இலங்கை அரச சாகித்திய விருது 2006.
  • மனைவி மகாத்மியம், சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான இலங்கை அரச சாகித்திய விருது 2010. (2) சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான புதிய சிறகுகள் விருது 2010. (3) சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும் தமிழியல் விருது 2010.
  • “அடைக்கலம்“ சிறுகதை ஆனந்தவிகடன் வைர விழா சிறுகதைப் போட்டியில் பிராணிகளிடம் பரிவு எனும் பிரிவில் முதற் பரிசு பெற்றது.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2010 ஜுன் மாதம் வெளியிட்ட எனது ‘உயிர்க் கசிவு’ எனும் 60 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பில் பின் அட்டையிலுள்ள குறிப்பு:

மனித உணர்வுகளின் மறை பக்கங்களை ஆர்ப்பாட்டமில்லாத தன் எழுத்தினூடாக படம் பிடித்துக் காட்டுகிற படைப்பாளி சுதாராஜ். வாழ்வும் எழுத்தும் சம கோட்டில்தான் பயணப்படவேண்டுமென்பதில் அவதானமாக இருப்பவர். எழுத்து எதையெல்லாம் செய்யுமென்பதற்கு இவர் கொண்டிருக்கிற கருத்துகள் யதார்த்தமானவையும், தரம் வாய்ந்த பேனாக்காரனுக்கு இருக்கவேண்டிய உள முத்திரையுமாகும்.

எழுபதுக்களின் ஆரம்பத்தில் எழுத வந்தவர். நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை உள்ளடக்கிய எட்டு தொகுப்புகள், நான்கு சிறுவர் இலக்கிய நூல்கள், ஒரு நாவல் என சுதாராஜ் படைத்துள்ளவற்றின் பட்டியல் மிக நீளமானது. இந்நூல்கள் யாவும் இந்தியாவில் மறுபதிப்புப் பெற்றுள்ளன. இவரைக் கண்டெடுத்து, உருவாக்கி உயிரூட்டியவர் ‘சிரித்திரன்’ சிவஞானசுந்தரம். அவர்தான் இவரது முதற் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டவர். சுதாராஜின் சில சிறுகதைகள் ஆங்கில மொழியிலும், ஒரு சிறுகதை ரஷ்ய மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. சாஹித்ய மண்டல விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற இவர் உயிர்கள் யாவற்றையும் நேசிக்கும் மானிடநேயம் மிக்க எழுத்தாளர்.

பொறியியலாளரான இவர் பத்திற்கு மேற்பட்ட நாடுகளில் பணிபுரிந்திருக்கிறார். அங்கெல்லாம் சந்தித்த சில விந்தையான மனிதர்களுடனான அனுபவங்களை மிகை, குறைப்படுத்தாமல் ‘மனித தரிசனங்கள்’ என்ற நூலில் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *