விக்கிரகங்களைப் பரீக்ஷக்ஷித்தது
கதையாசிரியர்: இராயர்-அப்பாஜி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 19, 2025
பார்வையிட்டோர்: 73
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

டில்லி பாச்சா மறுபடியும் அப்பாச்சி வல்லமையை அறிதற் பொருட்டு ஒரேவிதமான மூன்று விக்கிரகங்களையும் இதுகளில் எதைப்போல இருக்கிறவன் உத்தமன், எதைப்போல இருக்கிறவன் மத்திமன், எதைப்போல இருக்கிறவன் அதமன். பரீக்ஷித்து அந்தந்த விக்கிரகத்தின் மேலே எழுதி அனுப்புகிறது என்று எழுதி ஒரு தாக்கீதையும் இராயருக்கு அனுப்பினான். இராயர் நிரூபத்தை வாசித்துப் பார்த்துச் சபையார்க்கெல்லாம் அந்த விக்கிரகங்களைக் காண்பித்துக் குணாகுணங்களைச் சோதிக்கச் சொன்னார்.
மூன்றும் ஒரே மாதிரியாயிருக்கிறபடியால் அதுகளவபேதம் கண்டுபிடிக்கமாட்டாமல் மயங்கினார்கள். அப்பாச்சி அந்த விக்கிரகங்களுடைய கரசரணாதி அவயவங்களை எல்லாம் உற்றுப் பார்த்துக் காதுகளிலே சிறு துளைகள் இருக்கின்றதை அறிந்து மெல்லியிறத்தை* அத்துளைகளிலே நுழைத்துப் பார்த்தான்.
நுழைத்துப் பார்க்கும் அளவில் அளித்தது வாய் வழியாகப் புறப்பட்டது. மற்றொன்றற்கு மற்றொரு காதில் வழியாகப் புறப்பட்டது. மற்றொன்றற்கு வழிப்படாமல் உள்ளே போய்விட்டது. உள்ளே போய்விட்டதைப் போலக் கேட்ட சமாசாரத்தை உள்ளடக்குகிறவன் உத்தமன் என்றும்,
*ஓலைச்சுவடியில் உள்ள இச்சொல் கொண்டுள்ள பொருள் புலப்படவில்லை. மெல்லிய இறகு அல்லது ஈர்க்கு என்பதைக் குறிக்கலாம்.
மற்றொரு காதின் வழியாகச் சென்றதைப் போல் தான் கேட்ட சேதியை மற்றொருவன் காதின் வழியாகச் செலுத்துகிறவன் மத்திமன் என்றும், வாயின் வழியாகப் புறப்பட்டதைப் போலத் தான் கேட்ட சங்கதியை அடக்காமல் வெளியே கொட்டிவிடுகிறவன் அதமனென்றும் நிச்சயித்து அந்தப்படியே அந்தந்தப் பதுமைகளுக்கு மேல் எழுதி அனுப்பிவிடச்சொன்னான்.
இராயர் அதிக சந்தோஷத்துடன் பாச்சா இடத்துக்கு அனுப்பிவிட்டார்.
– இராயர் அப்பாஜி கதைகள், இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2006, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
![]() |
பதிப்பாசிரியரின் முகவுரை - செப்டம்பர் 2006 முன்னுரை : மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், இராயர்-அப்பாஜி கதைகள் முதலியன வாய்மொழி இலக்கிய இயல்புகள் நிரம்பப் பெற்றவை. இலக்கிய அழகு மிகுந்த இவை மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்பவையாகும். குறிப்பாகச் சிறுவர்களை ஈர்க்கும் திறம்படைத்தவை இவை. இவற்றில் மரியாதைராமன் கதைகள் ஏற்கனவே என்னால் பதிப்பிக்கப் பெற்றுச் சரசுவதி மகால் நூலக வெளியீடாக வெளிவந்துள்ளது. மரியாதைராமன் கதைகள் குறித்த நெடிய ஆய்வுக் கட்டுரையொன்று மகால்…மேலும் படிக்க... |
