வரங் கேட்டிறந்த நெசவாளி




(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நெசவாளி ஒருவன் இருந்தான். அவன் நெசவு செய்து கொண்டிருந்த தறிமரம் ஒரு நாள் முறிந்து விட்டது. அதற்குப் பதில் மரம் வெட்டிவரக் காட்டிற் குச் சென்றான். அங்கு வாகை மரம் ஒன்று இருந்தது. அதை வெட்ட அவன் முயலும்போது, அந்த வாகை மரத்தில் தங்கியிருந்த ஓர் இயக்கன், ‘இது என் இருப்பிடம், இதை வெட்டாதே! இதற்குப் பதில் நீ ஒரு வரம் கேள். தருகிறேன். என்று கூறினான்.

‘சரி, நாளை வருகிறேன்’, என்று கூறிவிட்டு நெசவாளி வந்து விட்டான். அன்றே தன் நண்பனான நாவிதன் ஒருவனை ‘என்ன வரம் கேட்கலாம்?’ என்று யோசனை கேட்டான், நீ ஓர் அரசனாக வரம் கேள். நான் உன் மந்திரியாக வந்து விடுகிறேன்’ என்றான் நாவிதன். அன்று இரவு தன் மனைவியிடம் இதைப் பற்றிச் சொன்னான்.
‘அரசனாக வந்தால் துன்பம் அதிகம். அதெல்லாம் நமக்கு வேண்டரம். இன்னும் ஒரு தலையும் இரண்டு கைகளும் பெற்றால் தினம் இரண்டு தறியில் நெய்து அதிகப் பணம் சேர்க்கலாம்’ என்று யோசனை கூறினாள், அவன் மனைவி.
நெசவாளியும் இதையே நல்ல யோசனை குயன்று தெர்ந்தேடுத்துக் கொண்டான்.
மறுநாள் இயக்கனிடம் சென்று வரம் கேட்டான். அவனும் மறுக்காமல் கொடுத்தான். வரம் பெற்றுத் தன் ஊருக்குத் திருப்பி வரும்போது அவனை மக்கள் பார்த்தார்கள். அவன் இரட்டைத் தலையையும் நான்கு கைகளையும் கண்டு இவன் யாரோ பெரிய அரக்கன் என்று நினைத்துக் கொண்டு ஊரில் இருந்தவர்கள் கல்லால் எறிந்து அவனைக் கொன்றுவிட்டார்கள்.
– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 5 – ஆராயாத செயல் தவிர்த்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.
![]() |
நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க... |