லிப்ட் ப்ளீஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 13, 2025
பார்வையிட்டோர்: 129 
 
 

(1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அப்போ வேற வழியே இல்லைங்கறியா ரூபா?!” என்று கேட்டான் ரங்கதுரை எரிச்சலுடன்.

அப்போது அவர்கள் பிரயாணம் செய்து கொண்டிருந்த ஸ்கூட்டர் டிரைவ் – இன்னிலிருந்து வெளியே வந்து ஜெமினியில் திரும்பியது.

“அதான் சொல்லிட்டேனே துரை! மாமா ஒருத்தர்தான் நம்ம கல்யாணத்திற்கு இடைஞ்சல்னு நான் நெனைக்கிறேன். அம்மாவைக்கூட சரிக்கட்டலாம். இந்த மனுஷனை சம்மதிக்கவைக்கிறதுதான் கஷ்டம்.” என்ற தன் நிலைமையைக் குரலில் ஒரு கொஞ்சலுடன் தெரிவித்தாள் ரூபா – லேடி டைப்பிஸ்ட்.

ரங்கதுரை மவுண்ட்ரோடிலிருந்த ஒரு கம்பெனியின் மானேஜர். அவன ஆபீஸில் தான் ரூபா வேலை செய்து வந்தாள், ஆரம்ப முதலே ரூபாவிற்குப் பணக்காரர்களிடம் எரிச்சல். எங்கே தன் காதலை நிராகரித்து விடுவாளோ என்று பயந்து அட்ரஸை மாற்றிக்கொடுத்திருந்தான்.

ஆனால் உண்மையில் பொழுதுபோவதற்காக வேலைக்கு வந்தவன் ரங்கதுரை. ரூபாவிடம் தான் வயிற்றுப் பிழைப்பிற்காக வேலைக்கு வருபவன் என்று சொல்லிக்கொண்டான்.

ஸ்கூட்டர் ஸபையர் வாசலில் நின்றது. “எப்ப நீங்க என்னை உங்க வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போகப் போறீங்களாம்?” என்று சிணுங்கலுடன் குரலில் தேனைக் குழைத்துக்கொண்டே கேட்டாள் ரூபா.

“அதுக்கெல்லாம் நான் கூடிய சீக்கிரம் ஏற்பாடு பண்றேனே ரூப். ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நாள் ‘வெயிட்’ பண்ணு” என்று கெஞ்சலுடன் பதில் கூறினான் துரை.

படத்தில் இருவருக்குமே மனம் லயிக்க வில்லை. படம் முடியுமட்டும் காத்திராமல் பாதியிலேயே எழுந்து வந்து விட்டனர்.

“துரை இன்று மாதிரி நாளைக்கும் ஏமாத்திடாதீங்க. எத்தனை நேரம் ‘வெயிட்’ பண்ணினேன் தெரியுமா? அதனாலதான் இன்னிக்கு ஆபீஸுக்கு லேட்” என்று பொய்க்கோபத்துடன் கேட்டாள் ரூபா.

துரை அவளை லேசாக அணைத்துக் கொண்டே, “இப்படிக் கோவிச்சுக்கறியே டியர்? ப்ளீஸ் எக்ஸ்கியூஸ்மீ ! இன்னிக்கும் அந்த முன் போர்ஷனகாரர் லிப்ட் கேட்டு தொல்லை செய்தார். எத்தனையோ சாக்குச் சொன்னாலும் ஆள் அசரவிலலை. நம்ம மேட்டர் கூட அவருக்குத்தெரியும். அதனாலதான் கடனேன்னு அவரை ஆபீசில் இறக்கிவிட்டேன்” என்று பயப்படும் பாவனையில் கூறினான்.

“நான் ஒரு ஐடியா சொல்றேன். அது மாதிரி செய்தீங்கன்னா உங்க ஸ்கூட்டர் பக்கமே வராது அந்தக்கிழம்” என்று கூறிக் கொண்டே மெல்லிய உதடுகளால் துரையின் காதுகளில் ‘ரகசியம்’ பேசினாள் ரூபா.

“ம்! இப்பவே ‘ரகசியம் ‘ பேசறே என்னிடம் அப்புறம்?…” என்று சிரித்துக் கொண்டே கூறினான் துரை, சிரித்தாள். ஒரு டாடா.

அடுத்த நாள் ஸ்கூட்டரை ‘ஸ்டார்ட்’ செய்து கிளட்சில் கை வைத்தது தான் தாமதம்! பின்னாலிருந்து அவசர அவசரமாக ஓடி வந்தார் வேதாசலம். வேதாசலம் துரையின் அவுட்ஹவுஸில் குடியிருந்தார்.

“சார்! அவசரமாக நான் பாரிஸ் போகணும்! இன்னிக்கு மட்டும் பஸ்ஸில் போய் விடுங்களேன். பளீஸ்” கெஞ்சாத குறைதான் துரையா இப்படிக் கெஞ்சுகிறான்?

“உன் அவசரம் எனக்குத் தெரியாதாடா அந்த லேடிடைப்பிஸ்ட் ஒனககாக பஸ் ஸ்டாப்பில் தவம் கிடப்பாள். அதானே அவசரம்?” என்று தன் முழுக் குரலுடன் பேசினார் வேதாசலம்.

“சரி! சீக்கிரம் பின்னாலே உட்காருங்க சத்தம் போட்டுப் பேசினா அப்பா காதில் விழும்” என்று கூறிவிட்டு வண்டியின் ‘கியரை’ ‘சேஞ்ச்’ செய்தான துரை.

பீட்டர்ஸ் ரோடில் வண்டி போய்க் கொண்டிருந்தது. ரூபா சொன்ன ‘ரககியம்’ துரை மூலமாகச் செயல் படவாரம்பித்தது.

“சார்! இத்தனை நாளாத் தெரியாத ‘சர்ப்ரைஸ்’ நியூஸ் உங்களுக்குச் சொல்லப் போறேன்” என்று ஆரம்பித்தான்.

“அதென்னடா அது? பெரிய சர்ப்ரைஸ் லேடிடைப்பிஸ்டை திருட்டுத்தனமா கலியாணம் பண்ணிகிட்டயா?”

“சேச்சே! இது வேற விஷயம்! நான் ஸ்கூட்டர் ஓட்ட லைசென்சே எடுக்கலை தெரியுமோ?”

“என்னடா இது? ஏன் அப்படி”

“நாளுக்கு ஒரு ஆக்ஸிடென்ட் பண்ணறவனுக்கு எவன் லைசென்ஸ் குடுப்பான்?”

“அப்படியா சமாச்சாரம? என்னை இங்கேயே எறக்கி விட்டுடேன்!”

“இதோ தெரியறகே இங்கு ஒருநாளைக்கு சுமார் பத்து ஆகஸிடென்ட் நடக்கும்.”

“ஸ்பீடைக் குறையேண்டா!”

“இதோ இந்த நீயூகாலேஜ் பக்கத்திலே நேத்து ஒரு பெரிய ஆக்ஸிடென்ட். ஒரு ஸகூட்டரும் பஸ்ஸும் மோதிகிட்டு ஸ்கூட்டர் நசுங்கிப் போயிடுத்து, இதிலே ஒரு விசேஷம் என்னன்னா ஸ்கூட்டரை ஓட்டினவன் தப்பிச் சிட்டான். பிலியன்லே உக்காந்தவன் தான் ‘காஷுவாலிடி’யாயிட்டான்”.

“நல்லதா வேற ஏதாவது பேசேன்டா”

“ஆங்! இன்னென்று சொல்ல மறந்து விட்டேன். பாரிஸ் போகணும்னு சொன்னேனே அது ஸ்கூட்டர் பிரேக்கைச் சரி பண்ணத் தான திடீர் திடீர்னா பெயில் ஆயிடுது.”

“டேய் இங்கே எறங்கிக்கிறேன், நேரா பிரேக் ரிப்பேருக்கு வழியைப்பாரு. என் பஸ் வரும்” என்று அலறிக்கொண்டே இறங்கி ஓடி விட்டார் வேதாசலம்.

‘அப்பாடா! இனி மேல் மனுஷன் ஸ்கூட்டர் பக்கம் கூட எட்டிப் பார்க்க மாட்டான். என் செல்லக்கிளிக்கு அபார மூளைதான்’ என்று சொல்லிக் கொண்டே மவுண்ட்ரோடை அடைந்தான்.

”ரூபா! உன்னை மானேஜர் கூப்பிடுகிறார்” என்று ஒரு விதக் குறும்புச் சிரிப்புடன் கூறினாள் மாலா, பர்ஸனல் அஸிஸ்டென்ட் மானேஜர்.

ரூபா இருந்த நிலையைக் கண்டதுமேயே துரை பதறிப் போனான்- இருந்தாலும் தன் வீரப் பிரதாபம் அவளை சிரிக்க வைக்கும் என்ற நம்பிக்கையில் அளந்தான்.

“உனக்கு இணை நீ தான். உன் ஐடியாவினாலே அவன் இனிமே என் ஸ்கூட்டர் பக்கமே திரும்ப மாட்டான்” என்று ‘குஷி’யாகச் சொல்லிக் கொண்டே போனவனைத் தடுத்தாள் ரூபா.

“போதும் நீங்களும் உங்க பிரதாபமும். நிறுத்துங்க” என்று கோபமாய்க் கூறினாள்.

”என்ன ரூபா? என்ன விஷயம்? ஏன் இப்படிப் பதற்றம்?” என்று தன் சீட்டிலிருந்து எழுந்தான் துரை.

“உங்க ‘அட்றஸை’ – உண்மையான அட்றஸைக் கண்டுபிடித்துவிட்டேன். பழைய ரிஜிஸ்டரிலிருந்து”

“அவ்வளவுதானே? இதை நானே இன்னிக்குச் சொல்லலாம்னு இருந்தேன். ஆமா! அதுக்கு ஏன் இப்படிக் கோப்படறே?”

“உங்க அட்ரஸ் கிடைச்சதாலதான் எனக்குக் கவலை”

“ஏன்? என்ன காரணம்” அதிர்ச்சியுடன் கேட்டான் துரை.

“நீங்க இனிமே என்னைக் கல்யாணம் செய்துக்கறதைக் கனவில் கூட பார்க்க முடியாது” என்று ‘குண்டை’த் தூக்கிப் போட்டாள் ரூபா.

“என்னது?” பேயறைந்தவன் போல சன்னக் குரலில் கேட்டான் துரை.

“உங்க வீட்டில் குடியிருக்கிறவர் பெயர் என்ன? அதாவது உங்க வீட்டுக்காரர்னு சொன்னீங்களே அவர் பெயர் என்ன?”

“அவன் பெயரெல்லாம் உனக்கென்னத்துக்கு?”

“இஷ்டமானாச் சொல்லுங்க”

“வேதாசலம். இப்பத்தான் அவனை பீட்டர்ஸ் ரோடிலே இறக்கிவிட்டுட்டு வந்தேன்” என்று ‘குஷி’யாகச் சொன்னான் துரை.

“அதுதான் புதிய பிரச்சினைக்கு முக்கிய காரணம. உங்க வீட்டுக்காரர் – அதாவது உண்மையில் உங்க விட்டில் குடியிருப்பவர் தா – நீங்கள் என்னைக் கல்யாணம் செய்து கொள்ளப் ‘பர்மிஷன்’ கொடுக்க வேண்டியவர் அதாவது என் மாமா. முன்னாலேயே நீங்க உங்க உண்மை அட்ரஸைக் கொடுத்திருந்தா இந்த நிலைமை வந்திருக்காதல்லா?…” என்று துக்கத்துடன் பொரிந்து தள்ளிக் கொண்டே போனாள்.

ரூபா பேசின எதுவும் துரையின் காதுகளில் விழுந்ததாகத் தோன்றவில்லை, அவன் பிரமை பிடித்த மாதிரி அப்படியே ‘சேரில்’ சாய்ந்து விட்டான.

வேதாசலம் அவனுக்குத் தன் தங்கை மகளைக்கல்யாணம் செய்துகொடுக்கத் தீர்மானித்திருந்ததும், அதனால்தான் இவர்கள் காதலை ஆதரித்ததும் அவனுக்கும் ரூபாவுக்கும் எங்கே தெரிய போகிறது?

– மாணவரிஸம், ஜூலை 1972.

என்.சந்திரசேகரன் சந்திரசேகரன் (நரசிம்மன்) அவர்கள் புகழ்பெற்ற தென்னிந்திய இந்து பிராமண வழக்கறிஞர்கள் குடும்பத்தில் அரியலூரில் பிறந்தார். மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம்(1976) பெற்று சமூக விஞ்ஞானி ஆவதற்குத் தொடர்ந்தார். கல்லூரியின் சிறந்த ஆல்ரவுண்ட் மாணவருக்கான டாக்டர்.எம்.நஞ்சுண்டராவ் தங்கப் பதக்கம் வென்றார். பார்வை: நான் என்னை ஒரு தலைவர், வழிகாட்டி, ஆலோசகர், வழி கண்டுபிடிப்பாளர், பிரச்சனை தீர்வு காண்பவர், பேச்சுவார்த்தை நடத்துபவர், ஆராய்ச்சியாளர், பொருளாதார…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *