ராஜனாகத் தகுதி
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 212
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பரோடா சமஸ்தானத்தை ஒரு சிறந்த ராணி ஆண்டு வந்தாள். அவளுக்குப் பிள்ளை இல்லை. தனக்குப் பின் கிரீடம் தரிக்க ஒருவனைத் தெரிந்துகொள்ள வேண்டி தன் பந்துக்களில் மூன்று சிறுவர்களைத் தெரிந்து கொள்ள மந்திரிக்கு உத்தரவிட்டாள். அப்படியே இரண்டு குடும்பத்திலிருந்து மூன்று பையன்களை கொண்டு வந்து ராணி முன் நிறுத்தினார் மந்திரி.
ராணி பையனிடம் “நீ ஏன் இங்கு வந்தாய்?” எனக்கேட்க, “மந்திரி என்னை அழைத்து வந்தார்” என்று சொன்னான், இரண்டாவது சிறுவனைப் பார்த்து ‘நீ ஏன் இங்கு வந்தாய்” என்று கேட்க, “நீங்கள் என்னை வரச்சொன்னீர்களாமே” எனச் சொன்னான். இறுதியாக மூன்றும் இளம் சிறுவனைப் பார்த்து, “நீ ஏன் இங்கு வந்தாய்” என்று கேட்ட மாத்திரத்தில்,
“நான் இந்த நாட்டுக்கு அரசனாகப் போகிறேன்” என்று தைரியமாகச் சொன்னான்.
ராணி அவனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு முத்தமிட்டு சுவிகாரப் புத்திரனாக்கி அவனுக்கு முடிசூட்டினாள்.
அந்தச் சிறுவனுக்கிருந்த நம்பிக்கையும், துணிவும் நமக்குண்டா?
“ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்”, [ஏசாயா. 11:6]
“தைரியமாய்க் கிருபாசனத் தண்டையிலே சேரக் கடவோம் (எபிரேயர் 4:16)
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
