மயிரும் சாம்பலும் பிற அரசர்களுக்குக் கொடுத்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 19, 2025
பார்வையிட்டோர்: 72 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒருநாள் இராயர் அந்தப்புரத்திலே தன் பெண்சாதியைப் பார்த்துப் பக்கத்திலே வைத்துக்கொண்டு மயிருஞ் சாம்பலும் வைத்து இரண்டு பொட்டணங்களில் அவள் சிபாரிசு செய்யவன் கையில் ஒரு பொட்டணத்தைக் கொடுத்து, “கன்னட தேசத்து ராசா கையில் இதைக் கொடுத்துக் கண்டு கொண்டுவா’ என்று அனுப்பினார்.

மற்றொரு பொட்டணத்தை அப்பாச்சி கையில் கொடுத்து, தெலுங்கு தேசத்து ராசா கையில் கொடுத்துக் கண்டு கொண்டு வரச்சொல்லி அனுப்பினார்.

அதைச் சிபாரிசுக்காரன் கன்னட தேசத்துக்குப்போய் அதை அவ்வரசன் கையில் கொடுத்து, “இராயர் உமக்குக் கொடுத்துவரச் சொன்னார்” என்றான்.

அதை அந்த ராசா பிரித்துப் பார்த்து, ”இதுவென்ன?” என்று கேட்டான். “எங்கள் இராயர் எமது அரசாட்சிக்கு முன்னே நீயும் இராசாவென்று பேர் வைத்துக் கொண்டிருக்கிறதை விடச் சாம்பலைத் தொட்டுக் கொண்டு மயிரைப் பிடுங்கிச் சீவனம் செய்யலாகாதா என்று தெரிவிப்பதற்கு அடையாளமாக அனுப்பியது போலத் தோன்றுகின்றது” என்றான்.

அந்தச் சொல்லைக் கேட்ட மாத்திரத்திலே கோபம் பிறந்து கண்கள் சிவந்து அந்தக் கன்னட தேசத்தரசன் தன்னுடைய சேனைகளைக் கூட்டிக்கொண்டு சண்டைக்கு வந்தான். 

அப்பாச்சி அந்தப் பொட்டணத்தைப் பிரித்து பார்த்து இரத்தினமிழைத்த தங்கப்பேழையில் வைத்துப் பட்டுச்சீலை சாத்திப் பல்லக்கு மேல் வைத்து சத்திர சாமர நிர்த்த கீதவாத்தியத்துடன் கொண்டுபோய் தெலுங்கு தேசத்து இராசாவைக் கண்டு, “இராயவர்கள் ஒரு யக்ஞம் பண்ணி விபூதியும் யக்ஞ பசு ரோமமும் ஆகிய பிரசாதம் உம்முடைய க்ஷேமத்துக்கு அனுப்பினார்” என்றான்.

அதை அவன் வாங்கிகொண்டு சந்தோஷமடைந்து, அப்பாச்சிக்குச் சகல வெகுமதியும் செய்து இராயருக்கு அனேக வெகுமதிகளும் கொடுத்துத் தன்னுடைய ஆனை, சேனை பரிவாரங்களையும் கூட்டி அப்பாச்சியைக் கொண்டுபோய் இராயரிடத்தில் விட்டுவரச் சொல்லி அனுப்பினான்.

அப்பாச்சி வருகிறதற்கு முன்னே கன்னட தேசத்து ராசாவினுடைய தண்டு வந்து கோட்டையைச் சுற்றிக்கொண்டு சண்டைக்கு ஆரம்பித்தது.

இராயர் அந்தத் தருணத்தில் அப்பாச்சி இல்லையென்று எண்ணமிட்டுக் கொண்டு இருக்கையில் அப்பாச்சி வந்துவிட்டான். அவன் பின்னே வந்த சேனையும் தன் சேனையும் கூடிக்கொண்டு இராயர் சண்டை பண்ணிக் கன்னட தேசத்து இராசாவைத் துரத்திவிட்டார். 

இராயர் பெண்சாதி நடந்த வர்த்தமானங்களைக் கேட்டு வெட்கப்பட்டு இராயரைப் பார்த்து, “நான் ஒரு மூடனைக் குறித்து சிபாரிசு செய்த குற்றத்தை க்ஷமிக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டாள். 

– இராயர் அப்பாஜி கதைகள், இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2006, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.

இராயர் அப்பாஜி கதைகள் பதிப்பாசிரியரின் முகவுரை - செப்டம்பர் 2006 முன்னுரை :  மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், இராயர்-அப்பாஜி கதைகள் முதலியன வாய்மொழி இலக்கிய இயல்புகள் நிரம்பப் பெற்றவை. இலக்கிய அழகு மிகுந்த இவை மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்பவையாகும். குறிப்பாகச் சிறுவர்களை ஈர்க்கும் திறம்படைத்தவை இவை.  இவற்றில் மரியாதைராமன் கதைகள் ஏற்கனவே என்னால் பதிப்பிக்கப் பெற்றுச் சரசுவதி மகால் நூலக வெளியீடாக வெளிவந்துள்ளது. மரியாதைராமன் கதைகள் குறித்த நெடிய ஆய்வுக் கட்டுரையொன்று மகால்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *