மனிதன் மாறிவிட்டான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: November 2, 2025
பார்வையிட்டோர்: 298 
 
 

கண்களைத் திறந்த போது ஆனந்தனுக்கு  பெரும் அதிர்ச்சியாக இருந்தது .சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லாம் புதிதாக தெரிந்தன. என்ன இது ? நான் எங்கே இருக்கிறேன்? தேவலோகத்தில் இருக்கிற மாதிரி ஒரு உணர்வு. வீடு  கண்ணாடி போல் பளபளத்தன .  வெளியே பறக்கும் கார்கள் சத்தமில்லாமல் உலா வந்தன .பார்த்த மனிதர்களின் கைகள்  ஒளிர்ந்தன.  ஆனந்தனின்   குழப்பத்தை கண்ட ஒரு பெண் அவன் அருகில் வந்தாள்.  அவளது கண்கள் நீல நிறமாய் மின்னின. 

“உங்கள் முகத்தில் குழப்பம் தெரிகிறது. மன்னிக்க வேண்டும்.  நீங்கள் ஒரு  “ஆய்வு  பெட்டியில்” இருந்து வெளியே வந்திருக்கிறீர்கள். உங்கள்  நினைவுகள் இன்னும் பழைய காலத்தில்தான் இருக்கின்றன போல”என்றாள்.

ஆனந்தன்  அவளை வினோதமாகப் பார்த்தான். “நான் ஆய்வு பெட்டிக்குள் இருந்தேனா? நான் படுத்து தூங்கினேன். அவ்வளவுதான் தெரியும் .”

“ஆம் நீங்கள் உறங்கச் சென்றது 2025.  இப்போது 2075. உலகமே மாறிவிட்டது. மனிதர்கள் மாறிவிட்டார்கள்  என்ற அந்த பெண்,  தன்னை “புது உலகத் தேவதை”  என அறிமுகப்படுத்திக் கொண்டாள்.  அவளது வேலை பழைய காலத்தில் இருந்து வரும் மக்களை ,புதிய உலகத்திற்கு தயார் செய்வது .

நான்  50   ஆண்டுகள் தூங்கிவிட்டேனா.?   எனது குடும்பம் , எனது நண்பர்கள்  , எனது கைபேசி எங்கே…?  எல்லாமே ஒரு கனவு போல தோன்றியது. . 

“வாருங்கள் உங்கள்  புது உலகத்தை பாருங்கள் என்றாள் அந்த  “புது உலக தேவதை.”

ஆனந்தனை புதிய உலகத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கே மனிதர்கள் பேசிக் கொள்வதில்லை. தங்கள் மனதில் இருந்து நேரடியாக தகவல்களை பரிமாறிக் கொண்டனர். உணர்வுகள் இயந்திரத்தனமாய் இருந்தன. ஒரு மாத்திரை உண்டா அறுசுவை உணவின் சுவையை உணர முடிந்தது. குழந்தைகள் கூட ஆசிரியர்கள் இன்றி மூளையிலிருந்து நேரடியாக அறிவை பதிவிறக்கம் செய்து கொண்டனர். 

எங்கள் வாழ்வில் கஷ்டங்கள் இல்லை. நோய்கள் இல்லை. வறுமை இல்லை. நாங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம் என்றாள் புது உலக தேவதை.

“ஆனால் உணர்வுகளுக்கு என்ன ஆனது ? கோபம், தூக்கம், அன்பு இவை எல்லாம் எங்கே “என ஆனந்தன்  கேட்டான் .

அவை எல்லாம் தேவையில்லாத உணர்ச்சிகள். அவை தான் போர்களையும் துக்கங்களையும் உண்டாக்கின. நாங்கள் அவை அனைத்தையும் எங்கள் உடலில் இருந்து நீக்கிவிட்டோம். நாங்கள் ஒரு பரிபூரண நிம்மதியான சமூகம் என்றாள். 

ஆனந்தனுக்கு  தலைசுற்றியது. அவனது காதலியை நினைத்துப் பார்த்தான் . அவளை  பார்க்க ஏங்கியது . அவளுடன் , சண்டை போட்டது ,மீண்டும்  அவளுடன்.  சமாதானம் ஆனது அனைத்தும் அவனது மனதிற்கு நினைவு  வந்தது. அந்த பழைய உலகில் துன்பங்கள் இருந்தன .ஆனால் அன்பும் பாசமும் அதையும் விட பல மடங்கு இருந்தன. 

எனக்கு இந்த உலகம் பிடிக்கவில்லை என்றான் ஆனந்தன். திடீரென்று எனக்கு என் பழைய உலகம் வேண்டும் .அதில் கஷ்டங்கள் இருந்தாலும் நான் ஒரு மனிதனாக இருந்தேன். இங்கே நான் ஒரு இயந்திரம் போல் உணர்கிறேன். 

ஆனந்தனின் இந்த உணர்ச்சியை புரிந்து கொள்ள முடியாத‌‌ அந்த “புது உலக தேவதை”  ஒரு சிரிப்பை வெளியிட்டாள்.  அது ஒரு உண்மையான சிரிப்பாக தெரியவில்லை. கணினியில் உருவாக்கப்பட்ட ஒரு சிரிப்பாக தோன்றியது.

உங்கள் நினைவுகளை அழித்து விடுகிறேன் .நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்றாள். 

திடீரென்று ஆனந்தன் ஒரு முடிவெடுத்தான்.  அவனது விரலில் இருந்த ஒரு இரத்த குழாயை, உடைந்த கண்ணாடியின் விழும்பில் தேய்த்தான். ரத்தம் வலிய ஆரம்பித்தது . அலறினான். அவள் ஒரு மனிதன் வழியில் துடிப்பதை முதல் முறையாகப் பார்த்தாள். அவளது நீல கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. 

நான் ஒரு மனிதன். எனக்கு வலி இருக்கிறது.

இந்த காயம் உங்களை குழப்புகிறதா..? ஏனென்றால் உங்களுக்கு உணர்ச்சிகள் இல்லை என்று கத்தினான் .

ஆனந்தனின் அந்த செயல்  அந்த அமைதியான உணர்ச்சியற்ற சமூகத்தில் ஒரு பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. முதல் முறையாக அவர்கள் ஒரு மனிதனின் உண்மையான உணர்ச்சிகளையும் வலியையும் கண்டனர். அது அவர்களது மனதின் ஆழத்தில் ஜம்பது ஆண்டுகளாக உறங்கிக் கிடந்த ஒரு விந்தையான உணர்வைத் தட்டி எழுப்பியது. 

அப்போது அந்த புது உலக தேவதையின் கண்களில் ஒரு சிறிய கண்ணீர் துளி உருண்டது .அது எந்திர கண்ணீர் அல்ல .உண்மையானது .ஆனந்தனின்  வலி அவளது மனதின் ஆழத்தில் உறங்கிக் கிடந்த மனித உணர்வுகளை எழுப்பி இருந்தது. 

அவள் ஆனந்தனை பார்த்து மெல்லிய குரலில் ஒரு மனிதனாக வாழ்வது இவ்வளவு வலியுடன் இருக்குமா என்று கேட்டாள். 

அவள் கண்களில் இருந்த அந்த ஒரு துளி கண்ணீர் அவள் மாறிவிட்டாள் என்பதை காட்டியது .அந்த ஒரு நொடியில் ஆனந்தனுக்கு தெரிந்தது. தொழில்நுட்பத்தால் மனிதன் மாறலாம் .ஆனால் மனிதனின் உணர்ச்சிகள் ஒருபோதும் மாறாது .

அந்த கண்ணீர் துளி அவளின் அன்பையும் வேதனையையும் பறை சாற்றியது . அந்த ஒரு நொடியில் ஆனந்தன் அவளை அன்போடு பார்த்தான்.  அவளின் மனம் முழுவதும் இன்ப உணர்ச்சியால் நிரம்பியது. இருவரும் காதல் வயப்பட்டு ஆரத் தழுவிக் மகிழ்ச்சி பிரவாகத்தில் மூழ்கினர் .

அது அந்த புதிய உலகில், ஒரு புதிய விடியலுக்கு வழி வகுத்தது.

இரா.கலைச்செல்வி இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு  நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *