புத்தி புகட்டிய நாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 228 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிரசங்கிகளின் ராஜன் எனப்டேர் பெற்ற ஸ்பர்ஜன் ஐயருக்குப் பூந்தோட்டம் அதிகப்பிரியம். அவருடைய தோட்டத்தின் ஒரு பாகத்தில் ரோஜாச்செடிகள் பூத்திருக்கின்றன. இன்னோர் பாகத்தில்—ரோஜாச் செடி பதியமிட்டிருக்கிற இடத்தில் அவருடைய நாய் படுத்துக்கொண்டு பதியக் குச்சிகளை வெளியே இழுத் துப் போட்டிருக்கிறதைப் பார்த்து விட்டார்.

ஐயரவர்களுக்குத் தாங்க முடியாத கோபம் வந்து விட்டது. தோட்டத்தின் ஒரு மூலையில கிடந்த தடிக் கம்பை எடுத்து எறிந்தார். கம்பு நாய்மீது படாமல் பக்கமாய் விழுந்திருக்கிறது. உடனே அந்த நாய் தடிக்கம்பை வாயில் கெளவி. வாலை ஆட்டிக்கொண்டு ஸ்பர்ஜன் ஐயர் இருந்த இடத்துக்குப் போய், தலையை தூக்கித் திரும்பவும் தடியை எடுத்து எறியுங்கள்’ என்று கெஞ்சிக் கேட்கும் பாவனையில் நின்றதாம்.

நாய் நிற்கிற பாங்கினைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டார் ஐயர். தடியைத் தூக்கி தூர எறிந் தார். பகுத்தறிவற்ற பிராணி என் கோபத்தை மாற்றி எனக்குப் புத்தியும் கற்பித்துவிட்டதே என்றுணர்ந்து நாயை அன்போடு வருடி சமையல் அறைக்குக்கொண்டு போய் நல்ல சாப்பாடு கொடுத்து அனுப்பினார்.

“மெதுவான பிரதியுத்தம் உக்கிரத்தை மாற்றுரம்; கடுஞ் சொற்களோ கோபத்தை எழுப்பும்” [நீதிமொழிகள் 15:1]

“நீங்கள் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக் கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக” (எபேசியர் 6:4)

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *