புதுவருட டைரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 11, 2025
பார்வையிட்டோர்: 279 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பளிங்கு நெற்றி, சித்திரச் சிற்பம், பட்டுக் கன்னங்கள், பச்சிளம் பதினாறு வயது, மருத்துவ மனையில் உள்ளிருப்பு நோயாளி.

ஹலோ கவீ,

குட்மானிங் டாக்டர், எப்பத்தான் என்னை டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு நினைக்கிறீங்க?

இப்ப, என்னம்மா அவரசம்?

அவசரமா? வந்து ஒரு மாசமாச்சி. அநாதை விடுதியில் என் சிநேகிதிகள் என்னைத் தேடுவாங்க.

கவீ, கிறிஸ்மஸ் அன்று, கண்டிப்பா உன்னை டிஸ்சார்ஜ் பண்ணி விடுவேன், ஓ.கே..!

டாக்டரிடமும், வக்கீலிடமும் பொய் சொல்லக் கூடாதுதான், ஆனா அவங்க பொய் சொல்வாங்க, இல்லியா டாக்டர்?

இளமை ததும்பும் முப்பது வயது டாக்டரின் முகம் சிவந்தது. இரத்தப் புற்றுநோய்ச் சிலுவையில் அறையுண்டு தவிக்கும் எந்த நோயாளியிடந் தான் உண்மையைச் சொல்ல முடியும்?

டாக்டர் கிறிஸ்மஸ்க்கு இன்னும் ஐந்து நாட்களே இருக்கு.

அடுத்த நாள் வார்டு ரவுண்ட்ஸ்க்கு நுழைந்தபோது கவிதாவின் படுக்கை அருகே நர்ஸ் நின்று கொண்டிருந்தாள். டாக்டரைக் காணவும் எதிர்கொண்டு விரைந்து வந்தாள்.

பாருங்க டாக்டர், மெடிக்கல் சார்ட்டில் கண்டதையும் கிறுக்கி வைத்திருக்கிறாள், சார்ட்டை நீட்டினாள்.

“இதோ
எல்லா ஜனத்துக்கும்
மிகுந்த சந்தோஷம்,
குடும்பத் தலைவர்களைத் தவிர.”

கவீ, இதென்ன?

என்னை மன்னிச்சிருங்க டாக்டர்

நீயோ வித்தியாசமான பிள்ளை

கவிதாவின் இமைகள் சிறகடித்தன, முகம் எழிலோவியமானது.

மறுநாள் காலை

கிளினிக்கில் மீட்டிங் முடிந்து தன் அறைக்குத் திரும்பிய டாக்டரின் கண்களில் அந்த கிறிஸ்துமஸ் வாழத்துமடல் பட்டது.

அதைப் பிரித்தார்.

“ஸ்டாம்பு, கார்டு, கவர்
விலை ஏற்றம்
ஏசிக்கொண்டே
அனுப்பிடும்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்”

புல்லரித்துப் போனார் டாக்டர்.

மறுநாள், அதென்ன கூட்டம்?

“கவிதா, இதோ வர்றேன்” ஓடினார் டாக்டர்.

அங்கே கவிதாவின் படுக்கையைச் சுற்றி நர்ஸ்களும், ட்யூட்டி டாக்டரும் போராடிக் கொண்டிருந்தனர். டாக்டர் ராஜேஷ் வந்ததும் அனைவரும் வழி விட்டனர்.

கவிதா துடித்துக் கொண்டிருந்தாள்.

கவிதா டாக்டரின் கையை பலமாகப் பிடித்துக் கொண்டாள்

டாக்டர் விறு விறுவென மருத்துவக் குறிப்புகளைக் கட்டளையிட்டார். நர்ஸ்களும், ட்யூட்டி டாக்டரும் கால்களில் சக்கரம் மாட்டிக் கொண்டு செயல்பட்டனர். சூறாவளிச் சூழ்நிலை.

ஒரு மணிநேரம் கழித்தே கவிதா அரைச் சிரிப்பை அவிழ்த்தாள்.

கவிக்குயிலே, கொஞ்ச நேரத்தில் பயங்காட்டிட்டியே?

டாக்டர், பயமா இருக்கு?

பயப்படாதேம்மா, இன்னிக்கு நம்ம ஆஸ்பத்திரியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை.

மருத்துவமனை அலங்காரம் பூண ஆரம்பித்தது.

நட்சத்திரங்கள், ஜிகினா தோரணங்கள், பலூன்கள்… என கண் கொள்ளாக் காட்சி. அன்று கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு கொடுக்க வரப்போகிறாராம்.

கவிதாதான் நோட்டீஸ்களை வினியோகித்தாள்.

மதிய உணவுக்குப் பின் பைக்குள் கையைவிட்ட டாக்டர் நோட்டீஸ் ஒன்று தட்டுப்படவே அதை எடுத்துப் பிரித்தார்.

கவிதா கொடுத்த நோட்டீஸ்தான் அது. நோட்டீசின் பின்பக்கம் ஏதோ எழுதி இருந்தது டாக்டரின் கண்களில் பட்டது.

“கிறிஸ்மஸ் தாத்தாவுக்குக்
கிடைக்கும்
வரவேற்பு கூட
கிறிஸ்துமஸ் குழந்தைக்கு
இல்லையே”!

டாக்டர் பிரமிப்புடன் படித்தார், பெருமூச்சு விட்டார்.

இரவில் கவிதாவை டாக்டர் சந்தித்தபோது அவள் கையில் ஒரு டைரி இருந்தது.

“கிறிஸ்துமஸ் தாத்தா எனக்குத் தந்த பரிசு இந்த டைரி”.

”நீ கவிதை எழுதறது தெரிஞ்சே கிறிஸ்துமஸ் தாத்தா உனக்கு சரியான பரிசு கொடுத்திருக்கார்”

“டாக்டர் ஒன்று சொல்லட்டுமா?”

”என்ன சொல்லப்போறே”

”ஜனவரி ஒண்ணை நான் தொட்டுட்டேன்னா, இந்த டைரியை, எடுத்துக் கொள்கிறேன். இல்லேன்னா இதை நீங்களே என் நினை எடுத்துக்குவீங்களா?”

வீணா, உளறாதே

கிறிஸ்துமஸிற்கு முந்திய நாள் மீண்டும் கவிதாவிற்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது.

“டாக்டர் நான் பிழைப்பேனா?”

”நீ பிழைக்கணும்.”

எழுந்து உட்கார்ந்தாள். டாக்டர் கையிலிருந்த பேனாவை எடுத்து அவரின் உள்ளங்கையில் எழுதினாள்.

“வருடா வருடம்
எம் ஆலயத்தில்
கிறிஸ்துமஸ் பிறக்கின்றன…
கிறிஸ்துதான் இன்னும்
பிறக்கவேயில்லை”

டாக்டர் நெகிழ்ந்து போனார்

“கவிக்குட்டி, நிம்மதியா தூங்கு, குட்நைட்”

கிறிஸ்துமஸ் ஆராதனையின் பாதி வேளையில் வார்டு பாய் வந்து காதில் போட்ட செய்தியைக் கேட்ட டாக்டர் சரேலென வெளியேறி ஓடினார்.

கவிதா அடங்கிப் போனாள்.

டாக்டரின் வயிற்றுக்குள் ஒரு ராட்சஸப் புயல்

”கவீ..” டாக்டரின் உள்ளம் ஓலமிட்டது.

டாக்டர் மெல்ல எழுந்தார். அவர் கண்களில் பட்டது புதுவருட டைரி.

அதை எடுத்துப் புரட்டினார்

“குட் பை டாக்டர்”

குறிப்பு : எம் இலக்கிய மாணவர் ராஜ்கமல் எழுதிய பெரியதோர் சிறுகதையின் சுருக்கம். ‘விழியே விழியேன்’ என்ற நூலிலிருந்து…

– ஆர்‌.எஸ்‌.ஜேக்கப்‌ சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ், பாளை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *