பிரச்சனைகளுக்கு தீர்வுகளும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 12, 2026
பார்வையிட்டோர்: 127 
 
 


சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை அதுபோல தீர்வு இல்லாத பிரச்சனைகளை இறைவன் அனுமதிப்பதில்லை.

ஒரு சிறிய கிராமத்தில் ஒரு சிறிய கல்லூரி இருந்தது. அந்த கல்லூரியில் (philosophy department) தத்துவத்துறை இருந்தது. அந்த தத்துவத்துறை வாத்தியார் பிள்ளைகளுக்கு சிறப்பான முறையில் மனதில் பதியும் வகையில் பாடம் எடுப்பார்

ஒரு நாள் பிரச்சனையைப் பற்றி பாடம் எடுத்தார் பிள்ளைகளைப் பார்த்து இங்கு எத்தனை பேர் பிரச்சனை இல்லாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டார் அதற்கு ஒருவரும் பதில் சொல்லவில்லை. அதற்கு வாத்தியார் எதிர்பார்த்த விஷயம் தான் சரி, நான் ஒரு சின்ன செயல்பாடு தருகிறேன் அதை செய்கிறீர்களா? என்று கேட்டார் பிள்ளைகள் அதற்கு சரி என்று கூறினார்கள்.

நான் ஒரு பாத்திரத்தை பதுக்கி வைத்திருக்கிறேன் அது இந்த வகுப்பில் தான் இருக்கிறது நீங்கள் அந்த பாத்திரத்தை தேட வேண்டும் என்று சொன்னார். பிள்ளைகள் ஆர்வத்துடன் தேடினார்கள் ஐயப்பா என்ற ஒரு மாணவன் அந்த பாத்திரத்தை கண்டுபிடித்து விட்டான் பிறகு வாத்தியார் அந்த பாத்திரத்தை வாங்கி டேபிளில் வைத்து விட்டு இதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்று கேட்டார், பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் சொன்னார்கள்.

வாத்தியார் பிள்ளைகளை பார்த்து நான் உங்களுக்கு கொடுத்த இந்த செயல்பாடு தான் ஒரு பிரச்சனை நீங்கள் கண்டுபிடித்த இந்த பாத்திரம் தான் தீர்வு இந்த தீர்வாகிய பாத்திரத்தை பதிக்கி வைத்தது நான்தான் செயல்பாடு என்ற பிரச்சனையை கொடுத்ததும் நான் தான். அதேபோல் தான் நம் வாழ்க்கையிலும் தீர்வு இல்லாத பிரச்சனையே கிடையாது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு செயல்பாடு என்ற பிரச்சனையை கொடுத்ததும் நான்தான் தீர்வு என்ற பாத்திரத்தை வைத்ததும் நான்தான் அதேபோல்

“சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை அதேபோல தீர்வு இல்லாத பிரச்சனைகளை இறைவன் அனுமதிப்பதில்லை”

எனவே பிரச்சினைகளை பார்த்து பயந்து விடாதீர்கள் தீர்வு இல்லாத பிரச்சனையே இல்லை என்று வாத்தியார் அருமையான முறையில் பிரச்சனையை பற்றி விளக்கி பாடம் எடுத்தார்.

– எழு (சிறுகதைகள்), மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com, மின்னூலாக்கம் – ஐஸ்வர்யா லெனின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *