பளிங்கு வானத்தில் ஒரு பகற் கனவு நாடகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 6, 2025
பார்வையிட்டோர்: 161 
 
 

உயிரோட்டமான சில வாழ்வியல் அனுபங்கள்வெறும் கனவல்ல நனவிலே விழித்தெழ அவ்வாறான பழைய அனுபவங்கள் குறித்து, சாந்தியின் புரிதல் குறித்துஎழுதி வைக்க வேண்டிய ஒரு கால பொங்கிஷமல்ல கடவுள் கொடுத்த வரமென்றே தோன்றும் அவளை ஒரு வேதமாக படித்துப் பார்த்தால், தான் இந்த உண்மை பிடிபடும். உண்மையும் உணர்வு மயமான விழிப்பு நிலையும் ஒருவர்க்கு எளிதில் வரக் கூடிய ஒன்றல்ல. ஆனல், சாந்தி அறிவு பூர்வமாக அவற்றை உணர்ந்து வாழ்வதில் தனக்கென ஒரு வெற்றி சாம்ராசியத்தையே நிறுவி களிப்படைந்து வாழ்வதை ஒரு நிஷ்டை கூடிய தவமாகவே, அவள் உணர நேர்ந்திருக்கிறது ஆனால் இந்த சமூகத்தை பொறுத்தவரை, அது வெறும் மூடு பொருள் தான்.

அவளைப் பார்த்து எள்ளிநகையாடவே இந்த சமூக சிந்தனை மழுங்கிப் போன பொறுப்பற்ற, மனிதர்கள் காத்துக் கொண்டிருப்பதாக அவள் உண்ர்ந்து விட்ட நிலையிலும் அதற்கு எதிர் வினையாற்றி, கேள்வி கேட்க அவள் ஒரு போதும் முன் வந்ததில்லை வாயடைத்த, சத்திய இருப்பு ஒன்றிலேயே அவள் ஒரு தபஸ்வினி போல வாழ நேர்ந்திருக்கிறது.

வாழ்வின் இறுதிக் கட்டம் இப்படி கொழும்பிலே வந்து கரை ஒதுங்க நேர்மென்று, யார் தான் நினைத்தார்கள். அது காலத்தின் விளையாட்டு.அவள் வாழ்வது கொழும்பு மாநகரிலுமல்ல அதற்கு ஒதுக்குப் புறமாக, இங்கு தெஹிவளையில் வந்து வாழத் தொடங்கி ஒரு யுகமே போய் விட்டது இப்போது ஒரு பிள்ளை கூட அவளோடு இல்லை,

மனநலம் பாதிக்கப்பட்ட மகளையும், காற்றோடு கரைந்து போக, விட்ட பின், ஒளியூற்றாய், உண்மையின் தரிசனமாக எதுவும் அவளுக்கு வரப் போவதில்லை பொய் விழுங்கிய இருட்டினிலே, அவள் இன்னும் சுயம்பிரகாசமாகத் தான் இருக்கிறாள் என்பது கூட, வெளிச்சத்தற்கு வராத ஒரு சங்கதியே பொய் உலகம் என்பது அறிவுக்கு வராத ஒன்று. இதை உள்ளபடி உணர்ந்தவர்க்கு வாழ்க்கையே ஒரு மாய விளையாட்டுத் தான், அவள் களமாடிக் க்ளிப்புற்று இருந்ததே, ஒரு கனவு மாதிரிப்பட்டது. இது கனவல்ல நிஜம் அவள் கண் மூடிய திரைக்குள்ளே, அது அடிக்கடி வந்து போதும். அவள் சிறுவயது ஞாபங்களை , மீட்டிப் பார்த்தாலே, அவளுயிர்த்தெழ, உண்மையின் பக்கம் நிற்க அது போதும்.

எது உண்மை?அன்பு மாறாமல் எது இருக்கிறதோ, அதையே உண்மை என்று நம்புகிற தரிசன பார்வை அவளுக்கு. ஜன்னல் கண்ணாடியை விலக்கிப் பார்க்கும் போது, அந்த ஆகாச வெளி இருப்புத் தான் தெரிந்தது.

அது இந்த நவீன உலகத்திற்கு அப்பாற்பட்ட , ஒரு தெய்வீக உலகம்.

அந்த சின்னஞ்சிறு வயதில் சிட்டுக்குருவியாய் அவள் பறந்த காலம் ஏழாலை மேற்கிலே தான் அவள், குடியிருந்த மாளிகை போன்ற பெரிய வீடு ஏழெட்டு அறைகள் கொண்ட நாற்ஸதுர வீடு. நடுவிலே அம்மா வடகம் ஊறுகாய் காய விட பெரிய முற்றம் அதைக் கூட்டிப் பெருக்கி சாணம் தெளிக்க திருவியம் தான் வர வேண்டியிருந்தது. அவள் யார்? எங்கிருந்து வருகிறாள்? பள்ளர் வகுப்பைச் சேர்ந்தவள் சாந்தி வீட்டிற்குப் பின்னாலேயே அவர்களின் குடியிருப்பு. அப்பா இதெல்லாம் தெரியாமலே வாங்கி இருப்பார்? போகட்டும் இது ஒரு நிழற் சங்கதி. அவருக்கும் அம்மாவுக்கும் இடையிலான முறுகல் நிலைகூட சாசுவதமானதே.

இதிலே கூட வானம் வெளுக்கவில்லையேயென்றால், எந்த உறவு தான் ஒட்டும்?
அவள் இது பற்றி நிரைய மனக் கிலேசம் கொண்டிருந்தாள், இதை மாற்ற வேண்டுமென்று தோன்றினாலும் அது முடியாது என்று உணர, ஒரு யுகமே பிடித்தது அதுவும் கல்யாணாத்திற்குப் பிறகு காட்சிக்கு வந்த, கோலங்கள்.

இன்று தான் எல்லாம் முடிந்து போனதே வாழ்க்கையுமில்லை மனிதர்களுமில்லை. அவள் இப்போது நினைக்கிறது. மனித புத்திக்கு எட்டாத ஒரு தனி உலகம் அதன் பளிங்கு வார்ப்பில் உயிர் தோய்ந்துஎழுகிற, இன்பலாகிரி சுழற்சியில் இப்போது அவள்> திடீரென்று டெலிபோன் ஒலித்ததுஅவள் நிஷ்டை கூடிய தவத்தை கலைக்க இடையூறே வந்த மாதிரி, டெலிபோனை எடுத்துக் காதில் பொருத்தினாள்.

எதிர்முனையிலிருந்து, மச்சாளின் அழைப்புகுரல் இறந்து போன சின்னண்ணனின் மனைவி ஒரு தங்கப் பதுமை அழகில் மட்டுமல்ல அன்பிலும் கூட பெயர் இந்திராணி, சாந்திக்கு இந்திரா என்றே, கூப்பிட்டுப் பழக்கம் அவள் ஏழாலை கிழக்கு மண்ணின் வாரிசு அண்ணனுக்கு கிடைத்த பெரும் சொத்து. ஒரு முறை வீட்டிற்கு யாசகம் பெறா வந்த வடக்கத்தியாள் ஒருவரிடம் கையைக் காட்டி அவர் சோதிடம் கேட்ட போது அவல் சொன்ன ஒரு சேதி, சிவப்பு நிற ரோசாப்பூவையே நீ மணம் முடிப்பாய் என்றாளே முதன் முதலில் இந்திராவைப் பார்த்த போது அது மெய் என்றே பட்டது.

அவள் குரலை போன் வழியாகக் கேட்டு புல்லரித்துப் போனாள் சாந்தி! முதுமையில் செத்துக் கொண்டிருக்கும் போது, அவ்வப்போது பேச்சுத் துணையாகவே அவள் அழைப்பு வரும் அதிலும் பசுமை மாறாத பழைய சுவடுகளைப் பற்றிப் பிடிக்க இது ஒரு தருணம்,

சொல்லு இந்திரா நான் எங்கேயோ போய் விட்டன் இருப்புக் கொள்ளேலை உன்னோடு பழங்கதை பேசினால் தான் பொழுது விடியும், அதைக் கேட்டு மறுமுனையிலிருந்து மென்மையாக சிரித்து விட்டு அவள் சொன்னாள்.

நான் எடுத்ததுஎன் கோவில் சங்கதிகளைப்பேச சாந்திக்கு திடீரென்று நினைப்பு வந்தது பாவம் இந்திரா. அவள் ஒற்றைப் புள்ளி புருஷன் இறாந்த பிறகு பிள்ளைக்கள் இல்லாததால் கோவில் தொண்டு செய்வதே அவளின் ஜீவாதாரம் , ஆனால், எனக்கு உறவு கிளைபிருந்து போன சமாதி நிஷ்டை நிலையில் நான் இப்ப ஒன்று மட்டும் எனக்கு ஞாபகம் நான் மீண்டும் உயிர்த்து உயிர் பெற எழும்ப வேண்டுமானால், இந்த பாலை வெளியைக் கடந்து பளிங்கு வானம் கண்டால் தான் உண்டு.

அதோ அந்த கிழக்கு வெளிச்ச சூரியன் அது இந்திராவி னன் முகச் சாயலோடு என்னை நெருங்குவதாய் உணர்கிறேன் நான் எப்படிப் பேசுவது?

நீண்ட மெளன இடைவெளிக்குப் பிறகு அவளே தொடர்ந்தாள்.

இந்திரா1 சின்ன வயதில் நான் நிலா குளிச்சு எழுந்த கதை தெரியுமோ உங்களுக்கு?
அதென்ன நிலா குளித்தல்?

உங்களுக்கு விளங்காது மச்சாள் இப்ப இருக்கிறது மறு துருவம் பாலை வெளி மனித வாடையே விட்டுப் போச்சு இந்தப் பிணம் தின்னும் காட்டிலே, இருளை வெறிச்சுக் கொண்டு இருக்க விசரே வந்திடும் எனக்கு . அப்ப வேறு விதமாய் வாழ்ந்திருக்கிறன்
ஓ! அதைச் சொல்ல வாறியளே?

ஓம் அங்கை அப்ப அந்தக் காலத்திலை ஆச்சி வீட்டிலைநான் இருந்த போதுபொழுது விடிந்ததேபொன் தகட்டில் பொறிச்சுத் தான் அது மட்டுமல்ல ஆச்சி மாட்டின் சாணி அள்ளி வந்து முத்தமெல்லாம் கூட்டிப் பெருக்கி கோலம் போடுற போது எனக்கு விழிப்பு வந்திடும். நான் முகம் கழுவின பிறகு மங்கிலை பால்தேத்தண்ணிவேறு ஊத்தித் தருமே ஆச்சி . அப்பவே எனக்கு சொர்க்கம் தான் உறவுகளெல்லாம் இனிக்கும் சொர்க்கமே என் காலடியில் கிடக்க எதுவுமே எனக்கு மறந்து போகேலே ஆச்சி வீட்டிலை குறுக்குக் கட்டோடைஒரு கிழவி வந்து அரிசி இடிக்குமே, அது ஆர்?

சுப்பம்மாவை சொல்லிறியள் போலை.

ஓம் அவ தான் இது அன்புப் பரிமாற்றம் வெறும் பண த்திற்காக ஆரும் வேஷம் போட்டுக் கொண்டு வாழேலை இப நினைச்சாலும், அந்த பளிங்கு உலகத்திலை எனக்குக் கிடைச்சது உயிரை விட மேலே. இப்ப்ப நான் எங்கை வந்து நிற்கிறன் இந்த பிணம் தின்னும் காட்டிலை என்னை சாகடிக்க வந்த அனுபங்களை நான் பேசினால், தர்மத்துக்கு விரோதமாய் நான் பேசிற மாதிரிபடும் எது உண்மை என்பதை, அறிவு பூர்வமாய் அறிஞ்சாலொழிய எல்லாம் வெற்று நிழல், தான்.

இதற்கு இந்திராவிடமிருந்துபதில் எதுவும் வரவில்லை. வெற்று நிழலில் குளித்துப் பார்த்தால் தான் இவள் போல் , வேதமே எனக்கு பிடிபடும். அதற்கு நான் ஆளில்லை என்ரு படும் போது, மெளனத்தை விட சிறந்த கவசம் இடத்தைக் காலி செய்வது தான் என்று படவே அவள் மூச்சு விட மறந்த அந்தத் தருணம் தன் கருத்தை சமன் செய்ய வந்த அரிய பொழுதாகவே தன் கண்களில் பளிங்குக் களை ஏறிய ஒரு காட்சிதெய்வமாக சாந்தியின் இருப்பு மாறாத தவத்தில் இருள் வந்தது கூடஒரு பொருட்டாகப்படவில்லை ஒளி மயமான அந்த உலகமே, இப்போதும் தன்னை ஆண்டு கொண்டிருப்பதாய், இப்போது அவள் பெருமையுடன் நினைவு கூர்ந்தாள்.

ஆனந்தி என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *