நிஜமும் நடிப்பும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 15, 2025
பார்வையிட்டோர்: 1,491 
 
 

படப்பிடிப்பிற்கு புறப்பட்டு கொண்டிருந்தான் அபிஜித்.

 அப்பொழுது அவனுக்குசெல்போனில் ஒரு அழைப்பு வந்தது.

 ஊரிலிருந்து அவன் நண்பன் சந்துரு பேசினான்

“அபி! நம்ம  வாத்தியார் கந்தசாமி மாரடைப்பில் இறந்து போயிட்டார்” என்றான் வருத்தமான குரலில்.

கேட்டதும் அபிஜித்திற்கு கண் கலங்கிப் போனது

சிறுவயதில் சேலம் அருகே ஒரு கிராமத்தில் பள்ளிக்கூடத்தில் படித்த போது அங்கு அபிஜித்திற்கு தமிழ் வாத்தியாராக இருந்தவர் கந்தசாமி.

இன்றைக்கு திரை உலகில் அபிஜித் மறைந்த நடிகர் சிவாஜியைப்போல தெளிவாக தமிழில் வசனம் பேசுவதை எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் கந்தசாமி வாத்தியார் தான்

‘நல்ல குணங்களே நம்மிடைஅமரர் பதங்களாம் ‘என்ற பாரதியின் வாக்குப்படி ஒருவருக்கு நல்ல குணம் தான் முக்கியம் என்பதை வகுப்பில் கந்தசாமி அபி ஜில்போதித்திறந்தார்.

இன்றும் நான்கு வெற்றி படங்களில் நடித்து நல்ல புகழ் பெற்றும் தன்னடக்கமுடன் குணவானாக அபிஜித் இருப்பதற்கு கந்தசாமி தான் காரணம் என்பதை அவன் மறப்பதே இல்லை.

தன்னை பேட்டி எடுப்பவர்களிடம் எல்லாம் கந்தசாமியை பற்றி கூற தவறுவதே இல்லை தனது குரு தனது தெய்வம் என்று கந்தசாமியை புகழ்வான்.

ஒவ்வொரு படம் வெளியானதும் கந்தசாமியை ஊரில் போய் பார்த்து வருவான். அவரும் நல்ல குடும்ப படங்களில் நீ நடித்து நல்ல கருத்துக்களை சொல்வது மிகவும் நல்லது. திரை உலகில் உன்னால் ஒரு பெரும் மாற்றமே நடந்திருக்கிறது என்று அவனை ஆசிர்வதித்து அனுப்புவார்.

இப்போது கந்தசாமி இறந்த செய்தியைக் கேட்டது காரில் ஊருக்கு விரைந்தான் அபிஜித்.

சந்துரு நண்பனை கண்டதும் கட்டிக் கொண்டு அழுதான் ஏனென்றால் அவனுக்கும் அபிஜித்தைப் போல கந்தசாமி பாடம் நடத்திய வாத்தியார் தான் அதைவிட அவன் ஊரிலேயே விவசாயத்தில் நாட்டம் கொண்டு இப்பதான் அதை கவனிப்பதால் சந்துருவிடமும் கந்தசாமிக்கு பாசம் உண்டு.

கந்தசாமி கூடத்தில் கிடைத்திருந்தார்கள்.

70 வயதிற்கு அந்த சாந்தமான முகம் அதிக பரமன் இல்லாத உடம்பு பார்க்கும்போது அவர் தூங்குவது போல் தான் இருந்தது.

அபிஜத்திற்கு துக்கம் தாங்கவில்லை அவர் அருகில் அமர்ந்து சிறிது நேரம் அவரையே பார்க்கும் போது அவன் வந்த விஷயம் எப்படியோ ஊருக்கும் அருகிலுள்ள டவுனுக்கும் தெரியுது கூட்டம் கூடி விட்டது.

சந்துரு அவர்களே எவ்வளவோ விரட்டியும் போகவில்லை.

அபிஜித் வேதனை தாங்காமல் துக்கம் தாங்காமல் கந்தசாமி என் உடலைப் பார்த்து குலுங்கி குலுங்கி அழுதான்.

அரை மணி பிறகு அவன் கந்தசாமியின் குடும்பத்தாரிடம் விடைபெற்று வாசலுக்கு வந்தபோது ரசிகர் பட்டாளம் அவனை மதித்தது மொய்த்தது சுற்றி சூழ்ந்து கொண்டது.

அபிஜித் இடம் ஒருவன், ”அப்படியே சிவாஜி கணேசன் மாதிரியே உங்க நடிப்பு எல்லா படத்திலும் சூப்பருங்க அதுவும் கத்தி குத்து என்று இல்லாமல் குடும்பப்பாங்கான படத்தில் நீங்க அந்த கதாபாத்திரமாவே ஆகிடுறீங்க” என்று புகழ்ந்தான்.

அபிஜித்திற்கு துக்கம் கேட்க வந்த இடத்தில் இதெல்லாம் ரசிக்கும்படி இல்லை.
காரில் ஏற இருந்தவனே இன்னொருவன் குறிப்பிட்டு,”இப்ப இங்க வாத்தியார பாத்து நீங்க கதறி அழுகிறது அப்படியே சமீபத்தில் வந்த வாழலாம் வா படத்தில் உங்க அப்பாவ நடிச்ச அவரை பாத்து அவர் இறந்தப்ப நீங்க அழுத மாதிரியே இருந்தது நல்ல நடிப்பு சார்” என்று சொன்னான்.

அபிஜித் முகம் மாறி போனான் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *