நட்பு
கதையாசிரியர்: காசி ஆனந்தன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: August 15, 2025
பார்வையிட்டோர்: 537
(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடலோரத்தில் நண்டு நடந்து கொண்டிருந்தது. மணலில் பதிந்த நண்டின் கால்தடத்தை அலை அழித்துக் கொண்டே இருந்தது.
நண்டுக்கு ஒன்றும் புரியவில்லை.
ஒருநாள் நரி கடற்கரை ஓரம் நண்டின் கால்தடம் இருக்கிறதா என்று தேடி அலைந்தது.
வளைக்குள் இருந்து ஓரக் கண்ணால் எட்டிப் பார்த்த நண்டுக்கு அலை தன் கால் தடத்தை அழித்த காரணம் இப்போதுதான் தெளிவானது.
அலையின் நட்பை அடிமனத்தால் போற்றியது நண்டு. தனக்குள்ளேயே அது சொல்லிக்கொண்டது:-
‘முன்பே காப்பான்
அன்பே நட்பு’
– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.