சிலுவை சுமத்தல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 189 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு வாலிபப் பெண் அமெரிக்க ஐக்கிய மாகாணத் திலுள்ள ஓகியோ பட்டணத்தை விட்டுப் புறதேசப் பெண் மிஷனரியாக இந்தியாவுக்கு வந்தாள். கான்பூர் பட்டணத்தில் ஆறு ஆண்டுகள் ஊழியம் செய்து, அதன் பிறகு வியாதிப்பட்டு அமெரிக்கா திரும்ப வேண்டியதாயிற்று. வைத்திய நிபுணர்கள் பரிசோதித்த போது குஷ்டரோக வியாதி அணுகி இருக்கிறதாகக் கண்டு பிடத்தார்கள். இந்தியாவில குஷ்டரோகிகளின் மத்தியில் ஊழியம் செய்தமையால் அவ்வியாதி இந்த அம்மாளையும் பற்றிக்கொண்டது.

அப்பொழுது அப்பெண் உடனே ஒரு முடிவு எடுத்தாள்.

“இந்தியாவுக்குச் சென்று குஷ்டரோகிகளின் மத்தி யில் முன்பு போலவே வாசஞ்செய்து அவர்களுக்கே உதவியும் ஊழியமும் செய்யப்போகிறேன்” என்று கூறி அனுமதி பெற்றுப் பூரிப்புடன் புறப்பட்டாள்,

பெற்றோர், உற்றார் கூடித் தடுத்தார்கள். அவள் சொன்னாள்: எனக்கு வந்திருப்பது தொற்று வியாதி; நான் இனி உங்களுக்கு முத்தம் கூடக் கொடுக்க முடியாது, என்று கனிவுடன் கூறி விடை பெற்றுச் சென்றாள். மீண்டும் குஷ்டரோகிகள் மத்தியில் குதூகலத்துடன் ஊழியம் செய்தாள்.

இவ்வாலிபப் பெண் தனது துன்பமாகிய சிலுவை யைச் சாந்தத்தோடு ஏற்றுச் சுமந்தாள்.

“நன்மை செய்யப் படியுங்கள்”. [ஏசாயா 1:17].

“ஒருவன் என் பின்னே வரவிரும்பினால் அவன் தன்னைத் தான் வெறுத்து தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.” [லூக்கா 9:23]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *