(1980ல் வெளியான புத்தகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தமிழ்ச் சிறுகதைளில் முன்னிலை உத்தி
“முன்னிலை உத்தியின் தலையாய பயன் கதை மாந்தர்க்கும் வாசகர்க்கும் இடையே உள்ள இடை வெளியைக் குறைப்பதாகும்; இருவருக்கும் இடையே ஒரு தனிப்பட்ட உறவை ஏற்படுத்துவதாகும்.”
இரு வகை உத்திகள்
வாசகரை நேரடியாக விளித்துப் பேசுவது (Direct address to the reader) என்பது சிறுகதையில் அமையும் ஓர் உத்தி. ஹயாகாவா என்னும் அறிஞர் ர் இவ்வுத்தியை இரு வகையாகப் பாகுபாடு செய்கின்றார். ‘முன்னிலை உத்தி’ (You Device) என்பது ஒரு வகை இதில் ஆசிரியர் வாசகரை நேரடியாக விளித்துப் பேசுகின்றார்; கதையின் தொடக்கத்திலோ, இடையிலோ, முடிவிலோ வாசகரோடு தனிப்பட்ட முறையில் உறவாடுகின்றார் “நீங்கள் இரவு எட்டு மணிக்கு மேல் சென்னை மாநகரில் சுற்றிப் பார்த்திருக்கிறீர்களா? சுற்றியிருந்தால் நான் கீழே சொல்லும் விஷயம் உங்களுக்குப் பிரமிப்பை உண்டாக்காது”. புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ என்ற கதையில் இடம்பெற்றுள்ள இப்பகுதி முன்னிலை உத்திக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
‘தன்மைப் பன்மை உத்தி’ (We Device) என்பது மற்றொரு வகை. இதில் ஆசிரியர்,வாசகரையும் தம்மோடு சேர்த்துக் கொள்கின்றார்; தம்மையும் வாசகர்களுள் ஒருவராகக் கருதிக் காண்டு கதையை நடத்திச் செல்கின்றார். “இம் முக்- கட்சியினரின் வாதப் பிரதிவாதங்கள் ஒரு முடிவிற்கும் வந்து சேராததினால் அதில் நாமும் சிக்கிக் கொள்ளாமல் ஊர்ப்- பிள்ளைகள் மாதிரி அவனைப் ‘பூசணிக்காய்’ அம்பி என்று மட்டும் கூறி மகிழ்வோம்”; புதுமைப்பித்தனின் ‘பூசணிக்காய் அம்பி’ என்னும் கதையில் வரும் இப்பகுதி தன்மைப் பன்மை உத்திக்குத் தக்க சான்றாகும்.
சில கதைகளில் இரு வகையான உத்திகளும் கலந்து வருவதுண்டு. அகிலனின் ‘சினிமாக் கதை’ என்னும் கதை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும் சென்னை நகரத்தின் ஒரு பகுதியான கோடம்பாக்கத்தில் வாழும் திரைப்பட உலகத்தைச் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதும் இடத்தில் ஆசிரியர் இவ்வாறு எழுதுகின்றார்: …… பல வகைத் திரைப்பிரிவினர் அங்கே வாழ்கிறார்கள். வாழ்கிறார்கள் என்றால் எப்படி வாழ்கிறார்கள் என்று கேட்காதீர்கள். அவர்களுக்கு மத்தியில் போய் ஒரு மாதம் குடியிருந்து பார்த்தால் தான் அது உங்களுக்குத் தெரியும்… விட்டுத்தள்ளுங்கள்! மனிதரின் ஆசை, நம்பிக்கை, விதி இவற்றை அலசி ஆராய்ந்து கொண்டிருக்க நமக்கு இப்போது நேரம் இல்லை. நாழிகையாகிறது; இரவு மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது. கோடம்பாக்கம் சாலையில் சாரிசாரியாகக் கார்கள் ஏதோ ஒரு ஸ்டூடியோவை நோக்கி இழைந்து கொண்டிருக்கின்றன. நாமும் அவற்றுடன் சேர்ந்து கொள்- வோம். இப்பகுதியில் முன்னிலைச் சொற்களும் உளப்பாட்- டுத் தன்மைப் பன்மைச் சொற்களும் விரவி வந்துள்ளமையைக் காணலாம்.
அடிப்படையான கொள்கைகளைச் சாடும் போது
காலம் காலமாக, வாழையடி வாழையாக வழங்கி வரும் சில அடிப்படையான கொள்கைகளை கற்பு, நாகரிகம், பண்பாடு போன்றவற்றை – எதிர்த்தோ, சாடியோ எழுதப் பெறும் கதைகளில் முன்னிலை உத்தி இயல்பாக அமையக் காண்கிறோம். தனிப்பட்ட ஓர் எதிருணர்வோடும், விரைவு உணர்வோடும் கதை கூற விரும்பும் ஆசிரியர், தம்மையும் அறியாமல் அல்லது தம்மையும் மீறி வாசகரை நேரடியாக விளித்துப் பேசத் தொடங்குகின்றார். அவரது உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் ஆழ்ந்த உணர்வே அவரை இவ்வாறு விளித்துப் பேசத் தூண்டுகின்றது. புதுமைப்பித்தனின் ‘பொன்னகர’மும், ஜெயகாந்தனின் ‘சாளர’மும் இவ்வகை யில் சிறப்பாகக் குறிக்கத்தக்க கதைகள் ஆகும்.
புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் பெரும் விவாதத்திற்கு உள்ளான ஒரு கதை ‘பொன்னகரம்’. ‘பொன்னகரத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்களா? நமது பௌராணிகர்களின் கன- வைப் போல அங்கு ஒன்றுமில்லை. பூர்வ புண்ணியம் என்று சொல்லுகிறார்களே, அந்தத் தத்துவத்தைக் கொண்டு நியாயம் என்று சமாதானப் பட வேண்டிய விதிதான். ஒரு சில ‘மகாராஜர்’களுக்காக, இம்மையில் பயனைத் தேடிக் கொடுக்கக் கடமைப்பட்டு வசிக்கும் மனிதத் தேனீக்களுக்கு, உண்மையில் ஒரு பொன்நகரந்தான் அது”5 என்று கதையின் தொடக்கத்திலேயே ஆசிரியர் வாசகரை விளித்துப் பேசு- கின்றார்; தொடர்ந்து தம்மோடு வாசகரையும் அந்தத் ‘திவ்வியப் பிரதேசத்தைத் தரிசிக்க’அழைத்துச் செல்கின்றார்; பொன்னகரத்துப் பகுதிகளைச் சுற்றிக் காட்டுகின்றார்; பொன்னகரத்துக் குழந்தைகளைப் பற்றியும் பெண்களைப் பற்றியும் கூறுகின்றார்: ‘கழுத்தில் ஒரு கறுப்புக் கயிறு – வாழ்க்கைத் தொழுவின் அறிகுறி. அதைப் பற்றி அங்கு அதிகக் கவலை இல்லை. அது வேறு உலகம், ஐயா. அதன் தர்மங்களும் வேறு’ என்று பொன்னகரத்து மக்களின் வாழ்க் கை முறையினைப் பற்றிப் பேசுகின்றார். அடுத்து, ஆசிரியர் தம் கதைமாந்தரை அறிமுகப்படுத்துகின்றார். அம்மாளு ஒரு மில் கூலி அவளுடைய கணவன் ஜட்கா வண்டி வைத்திருக்கிறான்.
அம்மாளு, முருகேசன் (அவள் கணவன்). அவன் தாயார், தம்பி, முருகேசன் குதிரை ஆகிய ஐந்து பேரைக் கொண்டது அவர்கள் குடும்பம். கணவன், மனைவி இருவருடைய வரு- மானத்தில் தான் குடும்பம் நடக்கிறது. இந்த நிலையில் ஒரு நாள் முருகேசன் குடித்து விட்டு வண்டி ஓட்டுகிறான். வண்டியின் ஏர்க்கால் ஒடிகின்றது. முருகேசனுக்கு ஊமைக் காயம் படுகின்றது. அவன் பால் கஞ்சி சாப்பிட வேண்டும் என விரும்புகின்றான். அம்மாளுவுக்குக் கூலி போட இன்னும் இரண்டு நாள் இருக்கிறது. வீட்டில் காசு இல்லை. வேறு வழி இல்லாமல் அம்மாளு தன் கற்பை ஒருவனிடம் விலை பேசு- கிறாள்; தன் கணவனுக்குப் பால் கஞ்சி வார்க்க முக்கால் ரூபாய் சம்பாதித்து விடுகிறாள். “என்னமோ கற்பு, கற்பு என்று று கதைக்கிறீர்களே? இது தான் ஐயா, பொன்னகரம்!” என்னும் கூற்றோடு கதையை முடித்து விடுகின்றார் ஆசிரியர்.
புதுமைப்பித்தன் இக்கதையில் வறுமை மனித வாழ்க்- கையில் ஏற்படுத்தும் கொடிய புண்களை எடுத்துக் காட்டு- கின்றார்; தர்மம், நியாயம், கற்பு என்று கதைத்துக் கொண்டு திரியும் இந்த உலகத்தினைப் பார்த்து எள்ளி நகையாடுகின்றார். கொதிப்பு, கோபம், ஆத்திரம், ஆவேசம் போன்ற வலிய உணர்வுகளின் பிடியில் சிக்குண்டு இருக்கும் போது அவரால் கதையை அமைதியாகச் சொல்லிச் செல்ல முடியவில்லை; நான்கே நான்கு பக்கங்களாலான கதையில் நான்கு இடங்- களில் வாசகரை விளித்துப் பேசுகின்றார்; தம் மனக்குமுறலை எல்லாம் வாசகரிடம் வெளியிடுகின்றார்.
‘சாளரம்’ என்ற கதையில் ஜெயகாந்தன் மனித நாகரி கத்தையும், பண்பாட்டையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றார். ‘சாளரம்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் ஒரு வீட்டின் மாடியறையில் தங்கி இருக்கிறார். வீட்டில் இளைஞர் ஒருவரும், அவரது விதவைத் தங்கையும் வாழ்ந்து வருகின்றனர். ஒரு நண்பகற் பொழுதில் கதை எழுத வேண்டும் என்ற நினை- வோடு பத்திரிகை ஆசிரியர் வீட்டின் மொட்டை மாடிக்குச் செல்கிறார்; மூலையில் இருக்கும் சன்னலின் வழியே வீட்டின் முற்றத்தை அடுத்துள்ள அறையைப் பார்க்கிறார்; அங்கே வீட்டுக்கார இளைஞர் தன் தங்கையோடு உறவு கொண்டிருக்கும் காட்சியைக் காண்கிறார்; ‘மண்டை சிதறியது போல், கண்கள் குருடானது போல், உலகமே தலைகீழாய் உருள்வது போல், தேகாந்தமும் பற்றி எரிவது போல், செந் நெருப்பாய்க் காய்ச்சிய உலோகக் கம்பியைக் கண்களில் ஆழமாகச் சருகியது போல்’ உணர்ந்து கொதிக்கிறார். உலகம், நியதி, தர்மம், சாத்திரம் எல்லாம் அவருக்கு வெறும் கேலிக் கூத்துக்களாகப் படுகின்றன; ஆத்திரமும் ஆவேசமும், கொதிப்பும் கோபமும் கொண்டு தாம் கண்ட காட்சியை மையமாக வைத்து ‘மிருகம்’ என்ற தலைப்பில் ஒரு கதை எழுதுகிறார்; ‘அந்தத் திடலில் ஏன் காகமும் பருந்தும் வட்டமிடுகின்றன? என்ன கோரம்! தோலுரிந்து வெறும் மாமிச உருவில் ஒரு நாய் செத்து அழுகிக் கிடக்- கிறது. செத்துப் போன அந்த நாயை, உயிருள்ள இன்னொரு நாய் கடித்துக் குதறிப் பிய்த்துப் பிடுங்கித் தின்கின்றதே… என்னும் பின்னணி வருணனையின் வாயிலாக அண்ணன் – தங்கை உறவு நிலையைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறார். கதை, ஆசிரியரின் கூற்றோடு இவ்வாறு முடிகிறது: இதெல்லாம் என்ன? ஏன் இப்படி? உங்களுக்குப் புரிகிறதா? புரியா விட்டால் பாக்யவான்கள் தான் நீங்கள்! புரிந்தால் நான் என்ன செய்யட்டும்?”
தனிப்பட்ட முறையில் கதைமாந்தரை கதைமாந்தரை அறிமுகப்படுத்தும் போது
தனிப்பட்ட பண்புநலனையோ, குறிப்பிடத்தக்க உருவத் தோற்றத்தையோ கொண்ட தம் கதைமாந்தரை அறிமுகப் படுத்தும் சூழலிலும் ஓர் ஆசிரியர் முன்னிலை உத்தியைக் கையாளுகின்றார். இச்சூழலில் முன்னிலை உத்தி பரவலாகக் கையாளப் பெறுகின்றது. கதையில் இடம்பெறும் கற்பனை மாந்தர் உயிர்க்களையும் உண்மை வண்ணமும் பெறுவதற்கு இங்கு முன்னிலை உத்தி பயன்படுகின்றது. ஜெயகாந்தனின் ‘யந்திரம்’, ‘எது, எப்போது?’, அகிலனின்‘தணியுமா?”, “நந்திச் சித்தர்’, ‘வாழத் தெரிந்தவர்’, புதுமைப்பித்தனின் ‘பூசணிக்- காய்அம்பி’ ஆகிய கதைகள் இவ்வகையில் குறிக்கத்தக்கவை.
ஜெயகாந்தனின் ‘யந்திரம்’ என்னும் கதையில் வரும் முத்தாயி அறுபது வயதைக் கடந்த ஒரு முதுகிழவி. நாள்- தோறும் காலையில் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதும், மாலையில் பள்ளியிலிருந்து அழைத்து வருவதும் அவளுடைய வேலைகள். அவள் நடையில் எப்பொழுதும் ஒரு வேகம் இருக்கும். அவளைப் பார்த்தால் எதைப் பற்றி யும் சிந்திப்பவளாகத் தெரியாது. அவளைப் பார்க்கும் எவருக் கும் அவள் மேல் ஒரு வெறுப்பும், அவள் ஒரு யந்திரம் என்ற எண்ணமுமே எழும்.ஒரு நாள் முத்தாயி அழைத்துச் செல்லும் குழந்தைகளுள் ஒன்று நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றது. குழந்தையின் மரணச் செய்தியைக் கேட்ட முத்தாயி எதுவும் பேசாமல், கொட்டுகின்ற மழையில் மரமாய் நிற்கிறாள்; குழந்தையின் பிணத்தைத் தூக்கிக் கொண்டு செல்லும் வரையில் நின்று கொண்டே இருக்கிறாள். ஒரு குழந்தையின் மரணம் அவள் உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும் அன்பையும் ஆதரவையும், கனிவையும் பாசத்தை- யும் எடுத்துக் காட்டிவிடுகின்றது; அவள் யந்திரமல்லள் என்பதைப் புலப்படுத்துகின்றது. இத்தகைய தனிப்பட்ட பண்புநலனைக் கொண்ட முத்தாயியை ஆசிரியர் கதையின் தொடக்கத்தில் இவ்வாறு அறிமுகப் படுத்தியுள்ளார்: “முத்தாயியை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால் நீங்கள் எங்கள் காலனியில் வாழ்பவரல்ல; வாழ்ந்திருந்தாலும், அல்லது வாழ்ந்து கொண்டிருந்தாலும் உங்களுக்கு அவளைத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஐந்து வயதுக்கு மேல் பத்து வயதுக்குள் ஒரு மகன் அல்லது மகளிருந்தால் அந்தப் பிஞ்சு மனம் அவளைத் தெரிந்து வைத்திருக்கும்”
அகிலனின் புகழ்பெற்ற கதைகளுள் ஒன்று ‘தணியுமா?’ இதில் ஆசிரியர் கோஷி என்னும் மலையாளத்துச் சிறுவன் ஒருவனின் வாழ்க்கையைச் சொல்லோவியமாக்கியுள்ளார். அவனுக்குச் செங்கோட்டை சந்திப்பில் குடியிருப்பு; உணவும் உறைவிடமும் கூட அதே இடத்தில் தான்.ரயில் பிரயாணி – களுக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பது அவன் வேலை. பலருக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த அவன், இறுதியில் குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காமல் தவித்து, பட்டினியால் வாடி இறந்து போகிறான்.கதையின் தொடக்கத்தில் கோஷியை அறிமுகப்படுத்தும் போது ஆசிரி- யர் பின்வருமாறு எழுதியுள்ளார்? தோ பாருங்கள், இவன், தான் கோஷி: இடுப்பில் ஒரு சுத்தமான கிழிந்த வெள்ளைத் துண்டு; எண்ணெய் என்றாலே என்னவென்று கேட்கும் பரட்டைத் தலை; கையில் குவளை ஒன்று.’ கதைமாந்தரின் புறத்தோற்றத்தை வறிதே வருணித்துக்கொண்டே செல்- லாமல், ‘இதோ பாருங்கள்’ என்று வாசகரை நேரடியாக விளித்து, ‘இவன் தான் கோஷி’ என்று அவனது வறுமைக் கோலத்தை அறிமுகப்படுத்தும்போது, வாசகரின் முழுக்- கவனமும் கதைமாந்தரை நோக்கியதாக அமைகின்றது.
சமுதாய அவலங்களை எள்ளி நகையாடும் போது
சிறுகதை ஆசிரியர்கள், இன்றைய சமுதாயத்தில் காணப்படும் அவலங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் படம்- பிடித்துக் காட்டும் போது, சில வேளைகளில் வாசகர்களை வம்புக்கு இழுப்பது உண்டு. வாசகரும் இன்றைய சமுதாயத் தின் ஓர் உறுப்பினரே. சமுதாயத்தில் நிலவும் தீமைகளில் அவருக்கும் ஒரு பங்கு உண்டு. இந்த எண்ணம் உள்ளத்- தில் அலைமோதும் போது, சிறுகதை ஆசிரியர் வாசகரை வம்புக்கு இழுக்கிறார்; எள்ளி நகையாடுகிறார்; வாசகரிடம் குத்தலாகப் பேசுகிறார். இவ்வகையான எள்ளலும் குத்தலும் புதுமைப்பித்தன் கதைகளில் யல்பாய்க் காணப்பெறும்.
‘கவந்தனும் காமனும்’ என்ற கதையில் நடைபாதை- யில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் ஏழை எளியவர்களின் அவலங்களை எழுதி வரும் போது புதுமைப்பித்தன் ஒரு வகையான எள்ளல் குரலில் வாசகர்களோடு உரையாடு கிறார்: “அதோ மூலையில் சுவரின் அருகில் பார்த்தீர்களா? சிருஷ்டித் தொழில் நடக்கிறது. மனிதர்களா, மிருகங்களா? நீங்கள் போட்டிருக்கிறீர்களே பாப்லின் ஷர்ட்டு, உங்கள் ஷெல் பிரேம் கண்ணாடி – எல்லாம் அவர்கள் வயிற்றில் இருக்க வேண்டியதைத் திருடியது தான். ரொம்ப ஜம்பமாக நாஸுக்காகக் கண்ணை மூட வேண்டாம். எல்லாம் இந்த வயிற்றுக்காகத் தான்.”10 பொன்னகரம்’ என்ற கதையில் பொன்னகரத்து எளியவர்கள் பசியை மறப்பதற்காகக் குடிக்கிறார்கள் என்று கூறும்போதும் ஆசிரியடமிருந்து கூர்மையான சொல்லம்பு ஒன்று வாசகரை நோக்கி வேகமாகப் பாய்கின்றது: “பசி, ஐயா, பசி! ‘பத்தும் பசி வந்திடப் பறந்து போம்’ என்று வெகு ஒய்யாரமாக உடம்பில் பிடிக்காமல் பாடுகிறீரே! அங்கு நீர் ஒருநாள் இருந்தால், உமக்கு அடிவயிற்றிலிருந்து வரும் அதன் அர்த்தம்!”
தீர்வு காண முடியாத சிக்கலைச் சித்திரிக்கும் போது
தீர்வு காண முடியாத பிரச்சினை, பதில் கூறமுடியாத கேள்வி – இவற்றை மையமாகக் கொண்டு கதை புனையும் போது, தீர்வும் பதிலும் கூற வேண்டிய பொறுப்பைப் படிக்- கின்ற வாசகர்களுக்கே விட்டு விடும் வழக்கம் சிறுகதை ஆசிரியர்களிடம் சில வேளைகளில் காணப்படுகின்றது. ஜெயகாந்தனின் ‘நான் என்ன செய்யட்டும் சொல்லுங்- கோ?’, ‘நீ இன்னா ஸார் சொல்றே?’, அகிலனின் ‘யார் தியாகி?’, ‘குழந்தைகள் கேள்வி’ ஆகிய கதைகள் இவ்- வகையில் நினைவுகூரத்தக்கவை.
ஜெயகாந்தனின் ‘நான் என்ன செய்யட்டும் சொல்லுங் கோ?’ என்ற கதையில் வரும் ஒரு பெண் தன் கணவருக்குத் தெரியாமல் – ஏதோ ஒரு ஆசையில் விளையாட்டாக -லாட் டரிச் சீட்டு ஒன்றை வாங்குகிறாள். ஆனால் முதற் பரிசு சொல்லி வைத்தாற்போல் அவளுக்கே கிடைத்து விடுகிறது. அவள் செய்வது அறியாமல் கலங்குகிறாள் பணத்தின் அருமையும் பெருமையும் அவளைத் தடுமாறச் செய்கின்றன. கணவரோ லாட்டரிச் சீட்டைக் கிழித்து எறிந்து விடுமாறு கூறுகிறார். ஒரு முடிவு காண முடியாத சிக்கலான நிலையில் அந்தப் பெண் வாசகரிடமே கேட்கிறாள்: “நான் கையிலே சீட்டை வச்சுண்டு நிக்கறேன், கனக்கறது இதுக்கு நான் என்ன செய்யட்டும் – சொல்லுங்கோ?’
அகிலனின் ‘யார் தியாகி’ என்ற கதையில் வரும் சகுந்தலா விடுதலைப் போரில் பங்கு கொண்டதால் காவல் துறையினரால் தாக்கப்படுகிறாள்;மருத்துவ மனையில் சேர்க்கப் பெறுகிறாள். காயங்களின் தழும்புகள் நிறைந்து அவளது அழகு குன்றுகிறது. அதனால் அவளது காதல் முறிந்து விடுகிறது. அவளுடைய காதலன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். ஐந்து ஆண்டுகள் உருண்டு ஓடுகின்றன. சகுந்தலாவின் அழகு சிதைவதற்குக் காரண- மாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அருணாசலமே திரும்ப வந்து அவளைத் திருமணம் செய்து கொள்கிறார். நாட்டுக்- கொள்கிறார்.நாட்டுக்- காகச் சகுந்தலா சய்த தியாகம். சகுந்தலாவுக்காக அருணாசலம் செய்த தியாகம் – இரண்டில் எது சிறந்த தியாகம் என்று ஆசிரியரால் முடிவுக்கு வர முடியவில்லை: முடிவு செய்ய வேண்டிய பொறுப்பை வாசகரிடமே விட்டு விடுகிறார்: “உங்களிடம் சகுந்தலாவின் கதையைச் சொல் கிறேன். கேட்டு விட்டுத் தயவு செய்து உங்கள் முடிவைச் சொல்கிறீர்களா?” என்று வாசகரை விளித்துக் கதையைக் கூறத் தொடங்கிய ஆசிரியர், இறுதியில் கதையை இவ்வாறு முடிக்கிறார்: “இப்போது சொல்லுங்கள் : இந்த இருவரில் யாருடைய தியாகம் உயர்ந்ததென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நாட்டுக்காகச் சகுந்தலா செய்த தியாகமா? அல்லது அவளுக்காக அருணாசலம் செய்த தியாகமா?”
நம்புவதற்கரிய நிகழ்ச்சியின் அடிப்படையில் புனையும் போது
நம்புவதற்கரிய சில நிகழ்ச்சிகளைக் கருவாகக் கொண்டு படைக்கப் பெறும் போது தொடக்கத்தில் வாசகரை விளித்துப் பேசும் பண்பு சில சிறுகதைகளில் காணப்படுகின்றது. நம்பு- வதற்கரிய ஒன்றைக் கருவாகக் கொண்டு எழுதப்பெறும் கதையில் ஒரு நம்பகத் தன்மை (Reliability) விளங்க வேண்டும் என்பதற்காகவே ஆசிரியர் வாசகரை விளித்துப் பேசுகின்றார். அகிலனின் ‘பூச்சாண்டி’ என்ற கதை இதற்குத் தக்க எடுத்துக்காட்டு ஆகும். எத்தனை எத்தனையோ குற்றங் களைக் கூசாமல் செய்த கயவன் ஒருவனின் மனச்சான்றே நேரம் பார்த்திருந்து நள்ளிருளில் நடுக்காட்டில் பிணத் திற்குக் காவலாய்த் தனியே இருக்கும்போது பேயாக, பூத- கொள்ளிவாய்ப் பிசாசாக மாறி, அவனைக் கொன்று அழிப்பதை ஆசிரியர் இக் கதையில் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். “பேய் பிசாசுகளை நீங்கள் பார்த்திருக்- கிறீர்களா? நான் பார்த்ததில்லை. அவ்வளவு தூரம் எதற்கு? கடவுளைக் கூட நான் கண்டதில்லை! பூச்சாண்டிகளும் பயந்து நடுங்கக் கூடிய பயங்கரமான இருள்; பேய் பிசாசுகள் பேந்தப் பேந்த விழிக்கக் கூடிய அமாவாசை இருட்டு -நீங்கள் தாம் பிசாசுகளைப் பார்த்ததில்லையே என்று என்னைக் கேட்டு வைக்காதீர்கள்! நான் பார்த்ததில்லை, உண்மை. நம்பவில்லை என்று யார் சொன்னது?” என்பது அந்தக் கதையின் தொடக்கம் ஆகும்.
‘உயிர்த்தோழர்’ என்ற கதையில் அகிலன் லும் ஓருயிரும் போல்’ வாழும் அபூர்வமான இரு நண்பர்- களைப் படைத்துள்ளார்: அவர்களது வாழ்வில் நிகழும் அதி- சயமான சில நிகழ்ச்சிகளைப் படைத்துள்ளார். அந்தக் கதையை ஆசிரியர் பின்வருமாறு தொடங்கியுள்ளார்: “நீங்* கள் நம்பினால் நம்புங்கள், நம்பாவிட்டால் போங்கள். நானே முதலில் இதை நம்பவில்லை. ஆனாலும் உலகத்தில் அதிசயமான நிகழ்ச்சிகளும் நடக்கின்றன, அதிசயமான மனிதர்களும் வாழத்தான் செய்கிறார்கள்.
பண்பும் பயனும்
முன்னிலை உத்தியின் தலையாய பயன் கதைமாந்தர்க் கும் வாசகர்க்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப் பதாகும்; இருவருக்கும் இடையே ஒரு தனிப்பட்ட உறவை ஏற்படுத்துவதாகும். ஜெயகாந்தனின், ‘இது என்ன பெரிய விஷயம்?’, ‘நீ இன்னா ஸார் சொல்றே?’, ‘லவ் பண்ணுங்கோ ஸார்’, ‘நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?’ ஆகிய கதைகளைப் படித்தால் இவ்வுண்மை நன்கு விளங்கும்.இக் கதைகளின் தலைப்புக்களே வாசகராடு நேரடியாகப் பேசுவது போல் அமைந்திருத்தல் மனங்கொளத்தக்கது. இரண்டு நெ- ருங்கிய நண்பர்களுக்கு இடையே நிகழும் இயல்பான உரை யாடலில் காணப்படும் சொற்களும் தொடர்களும் இக்கதை- களில் பயின்று வரக் காண்கிறோம். சில சான்றுகள் இதோ:
‘அந்தப் பெரிய ஓட்டல்லே நீ இன்னாடா பண்றே பாண்டியான்னு கேப்பீங்க…’
‘அந்தக் கடுதாசியிலே ஒன்னை எடுத்துப் படிக்கிறேன் கேக்கிறியா சார்?’
‘நீங்க புதுமைப்பித்தனுடைய கடளும் கந்தசாமிப் பிள்ளையும் படிச்சிருக்கீங்களோ?’
‘இதுக்கு நான் என்ன செய்யலாம், சொல்லுங்கோ?’
‘என்ன நான் சொல்றது, மனசிலே ஆச்சா?’
‘ஒரு பத்து நாளைக்கி முன்னே பாருங்கோ…’
‘நம்ம காரியம், நம்ம வேலை, நம்ம பொறுப்பு யாருக்குப் புரியறது சொல்லுங்க…’
‘நீங்க என்ன சொல்றேள்?’
‘என்ன ஸார், நீங்க எதுக்காக்கும் கண் கலங்கறேள்?’
-இவ்வாறு கதைமாந்தரே இடையிடையே தம்மை நேரடியாக விளித்துப் பேசுவதால் வாசகருக்குக் கதையைப் படிப்பதில் தனி ஆர்வம் எழுகின்றது. தம்மையும் படைப்புலகத்- தைச் சார்ந்த ஒருவராகக் கருதிக் கொண்டு அவர் கதையைப் படிக்கின்றார்.
முடிவுரை
காலம் காலமாக வழங்கி வரும் சில அடிப்படையான காள்கைகளைச் சாடி எழுதும் போது; தனிப்பட்ட பண் நலனையோ, உருவத் தோற்றத்தையோ கொண்ட கதை மாந்தரை அறிமுகப்படுத்தும் போது; சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை எள்ளல் குறிப்போடு எடுத்துக்காட்டும் போது; தீர்வு காண முடியாத பிரச்சினையையோ, பதில் கூற முடியாத கேள்வியையோ மையமாகக் கொண்டு கதை புனை- யும் போது; நம்புவதற்கரிய ஏதேனும் ஒரு நிகழ்ச்சியின் அடிப்படையில் கதையைப் பின்னும் போது தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்கள் முன்னிலை உத்தியைக் கையாண்டுள்- ளனர். கதைமாந்தர்க்கும் வாசகர்க்கும் இடையே காணப் பெறும் இடைவெளியைக் குறைத்து, இருவருக்கும் இடையே தனிப்பட்ட, நெருக்கமான உறவை ஏற்படுத்துவது முன்னிலை உத்தியின் பண்பும் பயனும் ஆகும்.
குறிப்புக்கள்
1. புதுமைப்பித்தன் கதைகள் (மதுரை : மீனாட்சி புத்தக நிலையம், 1977), ப.143.
2. S.I. Hayakawa, Language in Thought and Action (London: George Allen & Unwin Ltd., 1973), pp. 120-121.
3. புதுமைப்பித்தன், புதிய ஒளி (மதுரை: மீனாட்சி புத்தக நிலையம், 1978), ப. 173.
4. அகிலன், ஒருவேளைச் சோறு (சென்னை: தமிழ் எழுத்- தாளர் கூட்டுறவுச் சங்கம் லிமிடெட், 1967), பக். 9-10.
5. புதுமைப்பித்தன் சிறுகதைகள் (புதுதில்லி: நேஷனல் புக் டிரஸ்ட், 1976), ப.80.
6. ப.82.
7. ஜெயகாந்தன், புதிய வார்ப்புகள் (மதுரை: மீனாட்சி புத்தக நிலையம், 1972), ப. 64.
8. தேவன் வருவாரா? (மதுரை: மீனாட்சி புத்தக நிலையம், 1973), ப. 137.
9. அகிலன், சக்திவேல் (சென்னை: பாரி புத்தகப்பண்ணை 1965), u. 145.
10. புதுமைப்பித்தன் கதைகள், ப. 144.
11. புதுமைப்பித்தன் சிறுகதைகள், ப.82.
12. ஜெயகாந்தன், இறந்த காலங்கள் (மதுரை: மீனாட்சி புத்தக நிலையம், 1974), ப. 142.
13. சகோதரர் அன்றோ? (சென்னை: தமிழ் எழுத் தாளர் கூட்டுறவுச் சங்கம் லிமிடெட், 1967), ப. 100.
14. ப. 111.
15. வழி பிறந்தது (சென்னை: பாரி புத்தகப் பண்ணை 1965), u.9.
16. நெல்லூர் அரிசி (சென்னை: பாரி புத்தகப் பண்ணை, 1971), u. 170.
– புனைகதைத் திறன், முதற் பதிப்பு: 1980, ஏரக வெளியீடு, மதுரை.