சந்தேகம் காதலின் சந்தோசத்துக்கு எதிரி




அன்று சுமதி சுந்தரை சந்தித்தாள்.
“சுந்தர் உன்னுடன் மிக முக்கிய விஷயம் ஒன்று பேச வேண்டியிருக்கிறது சில நேரம் எனக்கு ஒதுக்க முடியுமா”
“தாராளமாக”

“அப்படியானால் வா அந்த பெஞ்சில் போய் இருந்து பேசுவோம், அதுசரி உ னக்கு காப்பிக்கு சுகர் வேண்டுமா வேண்டாமா.:?
“வேண்டாம் , சின்ன கப் போதும் “
சுமதி கடைக்கு போய் விட்டாள் இருவருக்கும் காப்பி வாங்கி வர
என்ன பேசப் போகிறாரள் சுமதி என்ற சிந்தனை யுடன் சுந்தர் பெஞ்சில் போய் அமர்ந்தன் . அருகில் இருந்த மரத்தில் இருந்து மலர்கள் அவன் மேல் சொரிந்தன. அவன் தன் காதலியு மைதிலியுடன் அந்தப்
அந்தப் பூங்காவுக்கு பல தடவை வந்திருக்கலாம் இப்பொது அவன் அமர்ந்து இருக்கும் பெஞ்சில் இருந்து அவளுடன் நீண்ட நேரம் பேசியிருக்கிறான் , இருவரும் ஒன்ற்றாக இருந்து கோப்பி குடித்ருக்கிறார்கள். அவள் சற்று குடித்துவிட்டுஅவனிடம் குடிக்க கொடுப்பாள்.அவனும் அதே மாதிரி செய்வான் அது நினைவுக்கு வந்தது இன்று தான் முதல் தடவை அந்த பேச்சிலிருந்து சுமதியுடன் பேசப் போகிறான் அப்படி என்ன பேச இருக்கிறார் என்று யோசித்தான் சுந்தர்
அந்த நேரம் சுமதிய பக்கத்தில் இருந்த தேநீர் கடைக்குச் சென்று இரண்டு கப்களில் காப்பி வங்கிக் கொண்டு வந்து சுந்தர் அருகே நெருகம்மையை அமர்ந்தாள்.
ஒரு கப்பை சுந்தரடம் கொடுத்துவிட்டு சுமதி தன் கையில் இருந்த காப்பியை குடிக்க ஆரம்பித்தாள்.
“சுமதி நீ எதோ என்னோடு பேசவேண்டும் என்று சொன்னாயே, என்ன அப்படி என்ன முக்கிய விஷயம்?” சுந்தர் ஆவலுடான் கேட்டான்,
“நீ முதலில் காப்பியை குடி. நான் வியத்தை சொல்லுறன்”, சுமதி சொன்னாள்.
கப்பல் இருந்து கொஞ்சம் காப்பியை சுந்தர் பருகினான்.
“உனக்கு பிடித்துக் கொண்டதா”? சுமதி கேட்டாள்
“எதை சொல்லுகிறாய்?” சுந்தர் கேட்டான்.
“காப்பியை தான் சொல்லுகிறேன் .நீ சொன்ன மாதிரி சுகர் போடவில்லை அது தான் கேட்டேன்”.
“ம் பிடித்துக்கொண்டது சுமதிநீ என்னிடம் கேட்க வேண்டிய விஷயத்துக்கு வா”.
“அவசரப்படாதே சுந்தர். சொல்லுறன் கேள்.
இங்க பார் சுந்தர் நீயும் நானும் என் சினேகிதி மைதிலியும் ஒன்றாகப் படித்தவர்கள் நீண்டகாலம் பழகியவர்கள் நான் படிக்கும்போதே என் மனதுக்குள் உன்னைக் காதலிக்கத் தொடங்கிவிட்டேன் உன்னிடம் சொல்ல தயங்கினேன் ஏனென்றால் உன் மனதை நான் அறியவில்லை . ஒரு நாள் எனக்கு மற்றவர்கள் சொல்லி தெரியவந்தது நீ மைதிலியை காதலிக்கிறாய் என்று. அவளுக்கு முன் , நான் உன்னை காதலிக்கிறேன் காதலிக்கிறேன் என்று சொல்லாதது என் தவறுதான். இப்ப நீ என்ன சொல்லுகி\றாய்”?
“நான் மைதிலியை காதலிக்கிறேன் என்று அவளிடம் சொன்னபோது அவளும் தான் , என்னை காதலிப்பதாக சொன்னாள் . எனக்கு அவளின் ஒளிவு மறைவு இல்லாத பேச்சு பிடித்துக் கொண்டது . அதோடு என் பெற்றோருக்கு அவளின் பெற்றோரை தெரியும் “.
“அது தான் உன் காதலுக்கு முக்கிய காரணமா?”
“ஆமாம் அது தான் காரணம்?”
“இல்லை அதுவல்ல காரணம்”.
“என்ன நீ சொலுகிறாய் சுமதி?”
“அவளின் பெற்றோர் என் பெற்றோரை விட செல்வந்தர்கள் . அதோடு அவளின் அப்பா அரசில் உயர் பதவியில் இருகிறார் . அதன் மூலம் நீ நாள் உத்தியோகம் பெற வாய்ப்பு உண்டு“.
“என்ன விசர் கதை பேசுகிறாய் சுமதி .நீ அவளுக்கு முன் உன் மனதில் உளத்தை என்னகு சொலி இருந்தால் கூட நான் அவளை காதலித்து இருப்பேன் . நான் அவளை தவிர வேறு ஒரு ஒருத்திக்கும் என் மனதில் இடமில்லை”.
“சரி அது நான் செய்தது தவறுதான். இப்பொது நான் என் மனதை திறந்து சொல்கிறேன் , நான் உன்னை மனமார காதலிக்கிறேன் . நீ அவளின் காதலை மறந்து என்னை வேண்டாம் என்று சொல்லாமல் என் காதலை ஏற்றுக் கொள்வாயா?”
“ம்ம்ம் அது முடியாது சுமதி . அவளை நான் ஏமாமற்ற மாட்டேன். இது உறுதி . அவள் தன் காதலை அவளின் பெற்றோருக்கு சொல்லி அவர்களின் சம் மதத்தை பெற்று விட்டள். “
“இருக்கட்டுமே. சில வேளை அவள் உன்ன விட அழகானவன், படித்தவன், பணம் உள்ளவனை அவள் சந்தித்தால் அவள் மனம் மாறலாம் அல்லவா?”
“அது நடக்காது. ஏன் என்றால் மைதிலி அப்படி பட்டவள அல்ல”, சுந்தர் சொன்னான்.
“அப்ப உன் முடிவை மாற்ற மாட்டியா?”
“முடியாது. முடியாது சுமதி. என்னால் மைதிலியை ஏமாற்ற முடியாது“
“உண்மையை தான் சொல்லுகிறாயா?”
“நீ சுமதி இன்னும் எங்களை புரிந்து கொள்ளவில்லை, எங்கள் மனங்கள் இரண்டும் ஓன்று சேர்ந்து விட்டது“.
“உனக்கு அவளை விட படித்,த பணக்காரி, அழகி கிடைத்தால் நீ மனம் மாற மாட்டாயா?”
“இது என்ன கேள்வி சுமதி, நீ என்னை பற்றி இவ்வளவு தான் அறிந்து வைத்ருகிறாய்”.
“நான் இதை ஏன் கேட்டேன் என்றால்,
நான் என் சினேகிதி ஒருத்கி சொல்லி கேள்விப்பட்டேன் இந்த ஊர் அரசியல்வாதி ஒருவரின் மகளை நீ காதலிக்கிறாய் என்று. அவளும் உன்னை விரும்புகிறாள் என்று. அது உண்மையா?”
“இதெல்லாம் ஒரு வதந்தி . நீயும் அதை நம்புகிறாயா. என் காதலுக்கும், அரசியலுக்கு முடிச்சு போடாதே சுமதி”.
“சரி சுந்தர் நீ மனம் மாறி என்னை காதலிக்க மாட்டேன்என்று எனக்கு வாக்குறுதி கொடு நான் உன்னை மறந்து விடுகிறேன்”.
“அப்படி நான் சொல்வதை நீ நம்ப முடியவில்லை என்றால், நான் உன் தலையில் என் கை வைத்து சத்யம் செய்கிறேன் சரியா?” சுந்தர் சொன்னான்.
“சுந்தர், அது வேண்டாம். நான் உங்கள் காதலுக்கு தடையாக இருக்க விரும்பவில்லை“. சுமதி சொன்னாள்.
“நாம் இருவரும் பேசியதை மைதிலிக்கு சொல்லிவிடாதே “. சுமதி சொன்னாள்.
“நான் உன்னுடன் பேசியதை ஒரு போதும் சொல்ல மாட்டேன், அவள் அறிந்தால் கவலை படுவாள். தன் சினேகிதி என்னை காதலிக்கிறாள் என்று”.
“சரி சுந்தர் நான் மேலும் இதைப்பற்றி உன்னிடம் பேச விரும்பவில்லை ..நீயும் மைதிலியும் திருமணம் செய்து மன நிறைவுடன் நீண்ட காலம் வாழ்க”
“நன்றி சுமதி. உன்னுடைய வாழ்த்துக்களுக்கு எனக்கும் உனக்கும் இடையே நடந்த இந்த உரையாடலை பற்றி ஒருவருக்கும் சொல்ல வேண்டாம்”.
“நான் நிச்சயம் சொல்ல மாட்டேன் இது என் வாக்குறுதி“,என்றாள் சுமதி .
இது நடந்து மறு நாள் சுமதியும் மைதிலியும் சந்தித்றாக்கள்
“என்ன சுமதி சுந்தரை சந்தித்துப் பேசினாயா?”
“ம் பேசினேன்”
“சுமதி, நீ பேசிய பின் நான் அவர் மேல் வைத்து இருந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து விட்டாயா?”
“ஆமாம் நான் சுந்தரோடு பேசினேன். உனக்காக நான் அவனுக்கு பொய் சொல்ல வேண்டி வந்தது”
“என்ன பொய் சொன்னாய் சுமதி?”
“நான் சுந்தரை காதலிக்கிறேன் என்று பொய் சொன்னேன். உனக்குத் தெரியும்தானே நான் உன் அண்ணாவை நான் காதலிப்பது”
“சுந்தர் வேறு ஒருத்தியை காதலிப்பதாக எனக்கு தெரிந்தவள் ஒருத்தி எனக்கு சொன்னாள். அதனால் எனக்கு என் மனதில் பயம் வந்துவிட்டது. அதனால் தான் உன்னை நாடி நான் உதவி கேட்டேன். இல்லாவிட்டால் உன்னிடம் கேட்டு இருக்க மாட்டேன்”.
“ நீ அவர்கள் சொன்ன கதையை நம்பினாயா?”
“அதை முதலில் நான் நம்பவில்லை, என்றாலும் சுந்தரை பரீட்சித்துப் பார்க்கலாம் என்று முடிவு எடுத்ததேன், அதனால்தான் உன்னிடம் வந்தேன். நீ போய் அவனை காதலிப்பதாக சொல்லி ஒரு நாடகம் ஆடி அவள் மனது ஒரு உறுதியானது என்பதை அறிந்து வந்து எனக்கு சொன்னதுக்கு மிகவும் நன்றி”
“மைதிலி, நீ ஒரு சந்தேகப் பிராணி. காதலுக்கு சந்தேகம் ஒரு விஷம் போன்றது சந்தோசத்தை கெடுத்துவிடும். சுந்தர் ஒரு நல்லவன் நல்லவன் அவன் உன்னை உண்மையாக காதலிக்கிறான் இது நான் அவருடன் பேசியதிலிருந்து அறிய முடிந்தது. அவனுக்கு தெரியாது நான் உன் அண்ணனை காதலிக்கிறேன் என்று”
“அதனால் தான் நீ வெகு சீக்கிரம் என் அண்ணியாக போகிறாய் அதனால்ய் உன்னிடம் இந்த உதவிய கேட்டேன்” என்றாள் மைதிலி .
“நீ சரியான பொல்லாதவள் இந்தக் காரியத்தை செய்து முடித்து விட்டாய்”.
“ஒன்றும் யோசிக்காதே சுமதி .என் திருமணம் முடிந்த பின் உன் திருமணம் என் அண்ணனுடன் நிச்சயம் . நடக்கும் இது என் வாக்குறுதி நீ செய்த இந்த உதவிக்கு நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் எனக்கு தெரியும் சுந்தர் மனம் மாற கூடியவன் அல்ல என்று என்றாலும் சில வதந்திகள் என்னை நிலைகுழைய வைத்துவிட்டது”.
“சந்தேகம் வரக்கூடாது அப்படி வந்தால் அது நல்லது அல்ல நீங்கள் இருவரும் எந் விதத்திலும் சந்தேகம் வர இடம் கொடுக்காதே . சமூகாம் பலவிதமாக பேசும் அதை காதில் போட்டுக் கொள்ளாதே. உண்மையான காதலுக்கு
சந்தேகம் ஒரு வைரஸ் அதை நினைவில் வைத்துக் கொள் இதுபோன்ற உதவிகளை கேளாதே இது இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும்”, என்றாள் சுமதி.
“சுமதி என்னை மன்னித்துவிடு என் மனம் பேதலித்த மனம் என்பதை நான் உன்னிடம் கேட்ட உதவி மூலம் அறிந்து விட்டேன். இனி ஒருபோதும் நான் சுந்தரை சந்தேகப்பட மாட்டேன், இது உறுதி , என்றாரள் மைதிலி.
“ஒன்று மட்டும் சொல்கிறேன் மைதிலி ,நீண்ட காலம் உங்கள் காதல் நாடகத்தை நடத்த வேண்டாம் வெகுவிரைவில் உனது பெற்றோரினதும், சுந்தரின் பெற்றோரின் அழுவதும் ஆசி பெற்று திருமணத்தை நடத்தி விடுங்கள்
அதன்பின்தான் என் திருமணம் . நான் உன் அண்ணி ஆகிவிடுவேன் “என்றான் சிரித்தபடியே சுமதி
“போடி கள்ளி இந்த உதவியை செய்து விட்டு என் மூலம் உன் காதலுக்கு ஆதரவு பார்க்கிறாயா?”
“ஆமாடி மைதிலி நீ என் முதுகை சொரி நான் உன் முதுகை சொரிகிறேன், அவ்வளவுதான்” என்றாள் கண் சிமிட்டிய படியே சுமதி.
![]() |
பொன் குலேந்திரன் - Pon Kulendran - 12-June-2016 யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடாகக் கொண்டவர். யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று கொழும்பு பல்கலைகத்தில் பௌதிகத்துறையில சிறப்பு பட்டம் பெற்றவர். இலங்கை தபால் தந்தி திணைக்களத்தில் சிரேஷ்ட அத்தியட்சகராக கடமையாற்றி அதன் பின்னர் துபாய் அபுதாபி சார்ஜா இங்கிலாந்து அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொலை தொடர்பு (Telecommunications) துறையில் சிரேஷ்ட பொறியியலாளராக வேலை செய்தவர். பின்னர் கனடா “டெலஸ்”…மேலும் படிக்க... |