சக்தி பெற்ற சிட்டுக் குருவி
கதையாசிரியர்: நாரா.நாச்சியப்பன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 20, 2025
பார்வையிட்டோர்: 34
(1988ல் வெளியான சிறுவர் இலக்கியம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு புல்வெளி.
பசு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.
அந்த வழியாக ஒரு சிட்டுக் குருவி பறந்து சென்றது.
சிறிது நேரம் பசுவின் முதுகில் உட் கார்ந்து இளைப்பாறிச் செல்லலாம் என்று சிட்டுக் குருவி நினைத்தது.
உடனே கீழேஇறங்கிப் பசுவின் முதுகில் குந்தியது.
முதுகில் ஏதோ குத்துவது போல் உணர்ந்த பசு வாலைத் தூக்கி அடித்தது.
நல்ல அடி!
சிட்டுக் குருவி சுருண்டு விழுந்தது.
“ஐயோ அப்பா!” என்று அலறியது.
பசு திரும்பிப் பார்த்தது.
“நீயா, பாவம்! பார்க்காமல் அடித்து விட்டேன்” என்று சொல்லிக் கொண்டே நாக்கால் தடவிக் கொடுத்தது.
சிட்டுக் குருவியின் மேல் அதன் நாக்குப் பட்டதும், நாக்கில் இருந்த எச்சில் அதன்மேல் ஒட்டிக் கொண்டது. அதனால் அதன் சிறகு கள் நனைந்து ஒட்டிக் கொண்டன. சிறகு கள் ஒட்டிக் கொண்டதால் சிட்டுக் குருவி யால் பறக்க முடியவில்லை.
சிட்டுக் குருவியைக் கௌவுவதற்கு அந்த வழியாகச் சென்ற ஒரு பூனை பாய்ந்து வந்தது.
பூனையைப் பார்த்தவுடனே சிட்டுக்கு எங்கிருந்துதான் பலம் வந்ததோ! விருட்டென்று பாய்ந்து பறந்தது. ஒட்டியிருந்த சிறகுகள் விரிந்து கொண்டன.
சிட்டுக் குருவி தப்பிப் பிழைத்தது.
– பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1988, தமிழாலயம் வெளியீடு, சென்னை.
![]() |
நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க... |
