பொதுவான கேள்விகள்

சிறுகதைகள் இணையதளத்தின் செயல்பாடுகள், நோக்கங்கள், சிறப்பம்சங்கள் மற்றும் பிற பொதுவான விவரங்கள் தொடர்பாக வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிக்கடி கேட்கும் கேள்விகளுக்கான பதில்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

சிறுகதைகள் இணையதளத்தின் குறிக்கோள்கள் என்ன?

  • சிறுகதைகளுக்கென ஒரு தனித்தளத்தை உருவாக்குவது.
  • அனைவரும் படித்து மகிழும் வகையில் தரமான கதைகளை வழங்குவது.
  • எளிதான தேடல் வசதியை ஏற்படுத்துவது.
  • கதைகளைப் பல்வேறு வகைகளாகப் பிரித்து வாசகர்களுக்கு வழங்குவது.
  • அதிகமான வாசகர்களைச் சென்றடையும் வாய்ப்பை எழுத்தாளர்களுக்கு ஏற்படுத்துவது.

சிறுகதைகள் இணையதளத்தின் சிறப்புகள் என்ன?

  • எழுத்தாளர்களைப் பற்றி அறிந்துகொள்ளத் தனிப்பகுதி.
  • உங்கள் கதை சிறப்புக் கதைப் பகுதியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு.
  • கதைகளைச் சிறந்த முறையில் வகைப்படுத்தி வழங்குவதன் மூலம் அதிகமான வாசகர்களைச் சென்றடையும் வாய்ப்பு.
  • கதைகளை அச்சிட்டுப் படிக்கும் வசதி.
  • வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கதைகளை வரிசைப்படுத்தும் வசதி.
  • Facebook, Twitter, Telegram, Instagram, Threads, Tumblr போன்ற சமூக ஊடகங்கள் வழியாக வாசகர்களிடம் கதைகளைக் கொண்டு சேர்க்கும் வசதி.
  • செய்திமடல் வாயிலாக வாசகர்களுக்குக் கதைகளை அறிமுகப்படுத்தும் வசதி.
  • YouTube வழியாக உங்கள் கதைகளை ஒலிவடிவில் கேட்கும் வாய்ப்பு.
  • இவை தவிர இன்னும் பல சிறப்பம்சங்கள் உள்ளன.

சிறுகதைகள் இணையதளத்தை ஒரு நாளில் சராசரியாக 1,200 முதல் 1,600 வாசகர்கள் பார்வையிடுகின்றனர்.

சிறுகதைகள் இணையதளத்தைப் பற்றி விகடன் மற்றும் குங்குமம் இதழ்கள் பாராட்டி எழுதியுள்ளன.

பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகச் சிறுகதைகள் இணையதளத்தைப் பயன்படுத்துமாறு சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் பரிந்துரைக்கின்றன.

சிறுகதைகளை வெளியிடுவதற்கான நடைமுறை என்ன?

சிறுகதைகள் இணையதளத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை 10 கதைகள் வெளியிடப்படுகின்றன.

இந்த 10 கதைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு பின்வரும் நடைமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம்:

  • கதைகள் எங்களுக்குக் கிடைத்த தேதியின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுகின்றன.
  • சில எழுத்தாளர்கள் 10 முதல் 15 கதைகள் வரை அனுப்பியுள்ளனர். எனவே, அவர்களுடைய கதைகளிலிருந்து அவ்வப்போது ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம்.
  • புதிய எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.
  • பெண் எழுத்தாளர்களின் கதைகளுக்கு 1 முதல் 2 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
  • 1 முதல் 2 தொடர்கதைகளும் இடம்பெறும்.
  • பழைய கதைகளுக்கும் 1 முதல் 2 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

மேற்கண்ட அனைத்தையும் கருத்தில் கொண்டே கதைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம்.