குறிப்பிற் சொன்னவைகளை வெளிப்படுத்தியது
கதையாசிரியர்: இராயர்-அப்பாஜி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 19, 2025
பார்வையிட்டோர்: 681
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இராயரும் அப்பாச்சியும் ஒருநாள் வழியில் போகிக் கொண்டிருக்கும்போது ஒருவன் உழுது கொண்டிருந்தான்.
கழனியைப் பார்த்து மூன்று ஸ்திரீகளில் ஒருத்தி, “இது முகத்துக்காமெ”ன்றாள். மற்றொருத்தி, “இது வாயிக்காமெ”ன்றாள். மற்றொருத்தி, “இது பிள்ளைக்காமெ”ன்றாள்.
“இவர்கள் இப்படிச் சொன்னதுகளின் வயனமென்ன?” என்று அப்பாச்சியைக் கேட்க, அப்பாச்சி, முகத்துக் காமென்றது மஞ்சள் பயிரிடுவதற்கான நிலமென்று, வாயிக்காமென்றது வெற்றிலைக் கொடி, நடுகிறதற்கான நிலமென்றும் சொன்னதுகளாம்” என்றும் சொன்னான்.
(ஒன்றிற்கான விளக்கம் சுவடியில் விடுபட்டுள்ளது. பதிப்பாசிரியன்) அதைக்கேட்டு இராயர், அந்த ஸ்திரீகள் மூன்று பேரையும் அழைப்பித்து அவர்கள் வாய்ப்பேச்சையும் விசாரித்து அறிந்து மிகவும் மனம் மகிழ்ந்தார்.
– இராயர் அப்பாஜி கதைகள், இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2006, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
![]() |
பதிப்பாசிரியரின் முகவுரை - செப்டம்பர் 2006 முன்னுரை : மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், இராயர்-அப்பாஜி கதைகள் முதலியன வாய்மொழி இலக்கிய இயல்புகள் நிரம்பப் பெற்றவை. இலக்கிய அழகு மிகுந்த இவை மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்பவையாகும். குறிப்பாகச் சிறுவர்களை ஈர்க்கும் திறம்படைத்தவை இவை. இவற்றில் மரியாதைராமன் கதைகள் ஏற்கனவே என்னால் பதிப்பிக்கப் பெற்றுச் சரசுவதி மகால் நூலக வெளியீடாக வெளிவந்துள்ளது. மரியாதைராமன் கதைகள் குறித்த நெடிய ஆய்வுக் கட்டுரையொன்று மகால்…மேலும் படிக்க... |
