குருடன் கைவிளக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 16, 2025
பார்வையிட்டோர்: 119 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு நாள் இரவு ஒரு ருருடன் கையிலே விளக் கோடு தெருவிற் சென்று கொண்டிருந்தான். அப் போது எதிரே வந்த ஒரு மனிதன் குருடன் விளக் கோடு செல்வதைப் பார்த்து நகைத்து, ஓ குருடரே! உமக்குத்தான் ஒளியும் இருளும் ஒன்றா யிற்றே! அவ்வாறாக நீர் கையில் விளக்கையெடுத் துக்கொண்டு போவதனால் என்ன பயன்? கண் குருடானதோடு அறிவுகூடக் குருடாகி விட்டது போல் தெரிகிறதே” என்று சொன்னான். 

இதனைக் கேட்கவே குருடனுக்கு மிகுந்த சின முண்டாகிவிட்டது. அவன் தன்னோடு பேசிய அம் மனிதனைப் பார்த்து, “உனக்குக் கண் தெரிகிற தென்று குதிக்கிறாய்; ஆனாலும் என்ன இரவில் உனக்கும் கண் தெரியாதல்லவா? அறிவுக் கண் எனக்குக் குருடாகவில்லை. உனக்குத்தான் குரு டாகி விட்டது. என் கையிலே விளக்கிருந்தால் எதிரே வருபவர்கள் மேலே முட்டிவிடாமல் ஒதுங் கிப் போவதற்கு உதவியாக இருக்கும். இதற்கா கவே நான் விளக்கெடுத்துக்கொண்டு போகி றேன். உன் அறிவுக் கண் குருடாக இருப்பதனால் அன்றோ, இச்சிறிய செய்திகூட உனக்கு விளங்கா மற் போய்விட்டது ” என்றான். இதனைக் கேட்டு அம்மனிதன் இவனிடம் வாய் கொடுத்து மாட்டிக் கொண்டோமே என்று மிகுந்த நாணத்தோடு போய்விட்டான். 

– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *