கள்ளத்தனம்
கதையாசிரியர்: எஸ்.ரவீந்திரன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 26, 2026
பார்வையிட்டோர்: 1,298
இன்று ஞாயிற்றுக்கிழமை எனவே மிகவும் ஜாலியான மூடில் இருந்தான் அருண். வழக்கம் போல காலையிலேயே எழுந்து அவசரமாக குளித்து ஆபீசுக்கு கிளம்ப வேண்டியதில்லை. உற்சாகம் கரை புரண்டோட டி.வி. முன்னால் உட்கார்ந்தான்.அருணுக்கு திருமணமாகி 2 வருடங்களை நெருங்கி விட்டான். அனிதா அருமையான அழகான மனைவி. தனிக்குடித் தனம். தொந்தரவில்லாத வாழ்க்கை. காலையிலேயே அதிக வேலைகள் அனிதாவுக்கு பெரிய இம்சை தரும்.
இதற்காக ஒரு வேலைக்காரியை வைத்துக் கொண்டனர். அவள் பெயர் ஜானகி. வயது குறைவுதான். கிட்டத்தட்ட ஐந்து வீடுகளுக்கு அவள் வேலைக்காரி. இருபது வயது இளமை. அருணுக்கு அவ்வப்போது அவள் மீது ஒரு கண் உண்டு. இருந்தாலும் அனிதா அடிக்கடி நினைவுக்கு வர அதை மறந்து விடுவான்.
இப்படித்தான் ஒருநாள் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஜானகி உள்ளே நுழைய அருணுக்கு உடம்பெங்கும் முறுக்கேறியது.
ஆனால் ஜானகி ஓடி விட்டதால் எதுவும் நடக்கவில்லை. என்னதான் கிளி போன்ற மனைவி இருந்தாலும் குரங்கு மாதிரி பெண் ரோட்டில் சென்றாலும் பாழாய் போன மனது அலை பாய்கிறதே? என்று அருணுக்குள் ஒரு நினைப்பு வந்து போகும்.
இதுபோன்ற பல சந்தர்ப்பங் களில் நூலிழையில் ஜானகி அகன்று ஓடியிருக்கிறாள். ஆனா லும் மனதில் இருந்து கொண்டு ஒரு சாத்தான் அருணை பாடாய் படுத்தி வருகிறது.
விடுமுறை தினம் என்பதால் வீட்டை விட்டு அருண் அகல மாட்டான். காரணம் ஜானகி நடமாட்டத்தை ஓரக்கண்ணா லேயே ரசிப்பதற்குத்தான். மணி பத்தை தாண்டி விட்டது. அனிதா மார்க்கெட்டுக்கு கிளம் புவாள். இந்த சமயத்தில்தான் ஜானகி துணி துவைப்பது, பாத்திரங்கள் தேய்ப்பது என்று வேலையில் மூழ்கி இருப்பாள். இன்று எப்படியும் ஒரு கை பார்த்து விட வேண்டியது தான் என்று மனதில் அருண் நினைத்துக் கொண்டான்.
அவன் எதிர்பார்த்தபடியே அனிதா நடையை கட்டினாள்- “நான் மார்க்கெட் வரை போயிட்டு வர்றேன். ஜானகி வந்தா இந்த துணியை துவைக்க சொல்லுங்க” என்றவாறே புறப்பட்டாள்.
பதுங்கி இருந்த பூனை விழித்து பாய தொடங்கி விட்டது. அருணுக்கு இருப்பு கொள்ளவில்லை. அங்கும் இங்குமாக ஜானகி வரவுக்காக நடைபோட்டான்.
சரியாக ஜானகி வந்தாள்.
கதவை தட்டியதும் திறந்தான் அருண்.
“அம்மா எங்கே மார்க்கெட்டுக்கா?” என்றாள் ஜானகி.
ஆமாம் என்று கூறிய அருண் நாற்காலியில் அமர்ந்தான். ஜானகி சமையல் அறை. குளியல் அறை என்று அலைந்தாள்.
அவளிடம் துணிகளை துவைக்குமாறு கூறிய அருண நைசாக வாசல் பக்கம் வந்தான். நல்லவேளை யாரும் இல்லை. கதவை லேசாக சாத்தி விட்டு பாத்ரூமை நோக்கி பூனை போல நடந்து வந்தான்.
அங்கே – ஜானகி சேலையை முழங்காலுக்கு மேல் தூக்கி கட்டிக் கொண்டு வேலையில் மும்முரமாக இருந்தாள். வழவழ கால்கள் பளிச் என தெரிந்தன. மார்பு சேலை விலகி இருந்தது. இதை பார்த்த அருணுக்கு உள்ளுக்குள் என்னவோ செய்தது.
மெல்ல குளிக்க சென்றான். இடுப்பில் டவலுடன் உள்ளே நுழைந்து கதவை மூடினான். வெளியில் ஜானகி கவர்ச்சி நாயகி போல துணி துவைப்பதை கள்ளத்தனமாக பார்த்து ரசித்தான்.
திடீரென…”ஜானகி. ஜானகி” என்று கூப்பிட்டான்.
“என்ன வேணும் சார்?” என்றான்.
“வந்து.. வந்து.. சோப்பு மேஜை மேல இருக்கு. அதை கொஞ்சம் எடுத்து வாயேன்” என்றான்.
பாத்ரும் கதவை திறந்து வைத்து விட்டு அவளுக்காக காத்திருந்தான்.
சில நொடிகளில் ஜானகி.. சோப்பை எடுத்து வந்து பாத்ரூம் வாசலில் நின்று கொண்டு நீட்ட அடுத்த நிமிடம். அருணின் கை ஜானகியை வளைத்து உள்ளே இழுத்தது.
“சபாஷ் ரொம்ப நல்லாயிருக்கு.” என்றபடி வந்தாள் அனிதா. பதறி விட்டான் அருண்.
“உங்க நடவடிக்கை ஆரம்பத்தில் இருந்தே சரியில்லை. கையும் களவுமாக பிடிக்கணும்னு இருந்தேன். இன்னிக்கு புடிச்சிட்டேன். நான் மார்க்கெட் போகாம எல்லாத்தையும் கவனிச்சிட்டுதான் இருந்தேன். ஏன் இப்படி உங்க மனசுல அல்ப புத்தி வருது. கொஞ்சம் நல்லா பேசினா. உடனே கெட்ட நெனைப்பு வரலாமா?” – அனிதா கோபமாக பேசினாள்.
அருண், “மன்னிச்சிடு அனிதா.. இனிமே இந்த மாதிரி செய்ய மாட்டேன்” என்று நா தழுதழுக்க கூறினான்.
“சரி விடும்மா.. இனி எதுவும் நடக்காது” – என்று ஜானகி சாதாரணமாக கூறி விட்டு நடந்தாள்.
– 23-5-1998, மாலை மலர்-தேன் மலர்.