கடமை தவறிய தகப்பன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 249 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சில வருடங்களுக்குமுன் அமெரிக்க ஐக்கிய மாகாணத்தில் ஒரு வாலிபன் கள்ளக்கையெழுத்திட்டு நீதிபதி முன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டான். குற்ற வாளி இன்னான் என்று நீதிபதிக்கு நன்றாய் தெரியும், குற்றவாளியின் தகப்பனார் அமெரிக்காவில் பேர்பெற்ற வக்கீல். பெரிய சட்டப் புத்தகம் எழுதிக்கொண்டிருந் சார். நீதிபதியும் குற்றவாளியின் தகப்பனாரும் இணை பிரியா தண்பர்கள்.

நீதிபதி குற்றவாளியை நோக்கி, உன் தகப்ப னுக்குப் பெரிய அவமானத்தை உண்டாக்கி விட்டாயே, நீ குற்றவாளியாக நிற்பது உன் தகப்பனாருக்குத் தெரியுமா? நீ அவரின் ஆலோசனையைக் கேட்பதுண்டா என்றார்.

குற்றவாளி தலைகுனிந்த வண்ணம் கூறினான்:-

“ஆலோசனைக்குப் போகும் போதெல்லாம் ‘மகனே நீ போ, இப்பொழுது மிக முக்கியமான வேலை செய்து கொண்டிருக்கிறேன். சட்டப் புத்தகம் எழுதி முடிக்க வேண்டும்.அப்புறம் வா’ என்று கூறி அனுப்பிவிடுவார். அவரும் சட்டப் புத்தகம் எழுதி முடித்தார். நானும் குற்றவாளியானேன்” என்றான்.

“பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து. அவன் முதிர் வயதிலும் அதை விடாதிருப்பான்.” (நீதி. 22:6)

“தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு மனக்கசப்பு உண்டாக்க வேண்டாம்; அப்படிச் செய்தால் அவர்கள் மனம் தளர்ந்து போகக்கூடும்”. [கொலோசேயர் 3:21]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *